Thursday, April 22, 2010

அவரவர் பா(ட்)டு


(Picture by cc license Thanks itchys )

"னியனே,
விருந்து சொல்ல
உனக்கு வேறு வீடா கிடைக்கலை?"
என இரைந்து கொண்டிருந்தாள்
வெஞ்சனத்துக்கு
முருங்கை ஒடித்துக் கொண்டிருந்தவள்.

"பார்த்துடி,
முட்டை இருக்கு"
என கரைந்து கொண்டிருந்தது
ஓட்டுத்தாவர காகம்.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


58 comments:

பிரேமா மகள் said...

ஹீம்.. சூப்பர்..
ஆனந்த விகடனில் பிரிண்ட் வந்த உடனே பார்த்திட்டேன்...

கலக்கறீங்க... போன வாரமும் பார்த்தேன்... அருமையான கவிதை...

RaGhaV said...

வாழ்த்துக்கள் பா.ரா. :-)

Paleo God said...

"அவரவர் பா(ட்)டு"//

ஆஹா!!

சிநேகிதன் அக்பர் said...

அருமை பா.ரா அண்ணே.

விகடனால் உங்களுக்கு பெருமை.

போலவே

உங்கள் கவிதையால் விகடனுக்கும் பெருமை.

விஜய் said...

கவிதையின் கருவே
காக்கையின் கருவாக

வாழ்த்துக்கள் மக்கா

விஜய்

சத்ரியன் said...

தலைப்பு.. அவரவர்க்கு...!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

க ரா said...

அருமை பா.ரா. சார்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை பா.ரா சார்.. வாழ்த்துக்கள்

மின்மினி RS said...

அருமையான கவிதை பா.ரா சார். விகடனில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

AkashSankar said...

காகத்துடைய உணர்வ கவிதையா வடிச்சுட்டீங்க

Unknown said...

விகடனிலேயே படித்தேன்.
நல்ல கவிதை பா.ரா.

கவிதன் said...

அருமை... வாழ்த்துக்கள் பா.ரா அண்ணா!

Romeoboy said...

super boss...

சைவகொத்துப்பரோட்டா said...

காக கவிதை, அட போட வைக்குது,
அருமை!!!

க.பாலாசி said...

நன்றாக ரசித்தேன்... காக மொழியினை....

ராஜவம்சம் said...

அன்புள்ள சித்தப்புக்கு

உங்கள் கவிதையில் எப்போதும் என் பொன்ற நடுத்தரமக்களின் வாழ்க்கையை வரிகலாகி எங்கள் வலியை எல்லோறையும் உணரச்செய்கிறீர்கள்

வாழ்த்துக்கல்

sathishsangkavi.blogspot.com said...

அழமான, அழகான வரிகள்....

Radhakrishnan said...

பா. ரா என உங்களுக்கென்ற ஒரு தனித்துவம் அமைந்திருப்பது குறித்து பாராட்டுகள்.

செ.சரவணக்குமார் said...

அருமை பா.ரா அண்ணா. வாழ்த்துக்கள்.

இரசிகை said...

ada...(thalaippukkum serththu).....!

vazhthukkal...rajaram sir:)

நேசமித்ரன் said...

அருமை பா.ரா வாழ்த்துகள்.

ஒட்டுத்தாவர காகம் இந்தச் சொல்லில் திருப்பி அடிக்கிறது கவிதை

அம்பிகா said...

காகம் கரைந்தால் இப்படி சலித்து கொள்பவர்கள் நிறைய பேர்..
அருமையா இருக்கு கவிதை

அம்பிகா said...

காகம் கரைந்தால் இப்படி சலித்து கொள்பவர்கள் நிறைய பேர்..
அருமையா இருக்கு கவிதை

விநாயக முருகன் said...

வாழ்த்துகள் பா.ரா. :-)

பெருநகரில் வசிப்பவர்களுக்கு காகம் ஒரு வசீகர பொருள். இதை படித்து எனக்கும் ஒரு கவிதை பிறந்தது. பதிவு செய்கிறேன்

விநாயக முருகன் said...

பா.ரா எனது மின்னஞ்சலிற்கு (navina14@hotmail.com) தங்கள் அலை பேசி எண்ணை பகிர்ந்துக்கொள்ள முடியுமா?

நாடோடி இலக்கியன் said...

பா.ராவுக்கு பாராட்டு.

இனியும் உங்கள் படைப்புகளை பாராமல் போவேனோ..

அருமை பா.ரா. ஸார்.

இளமுருகன் said...

இதெல்லாம் கவிஞன் கண்ணில் மட்டும்தான் படுகிறது!!!

வாழ்த்துக்கள்

இளமுருகன்
நைஜீரியா

Chitra said...

பாராட்டுக்கள்! தொடர்ந்து அசத்துறீங்க. வாழ்த்துக்கள்!

கே. பி. ஜனா... said...

பார்ரா, அப்படியே அந்த உணர்வு!ஒரு வார்த்தை அதிகமில்லை கவிதையில். சபாஷ் பா.ரா!

ஹேமா said...

குட்டிக் கரு >>>> குட்டிக் கதை
>>>> குட்டிக் கவிதை !

அன்பேசிவம் said...

மகாப்பா விகடன்ல இந்த ஒட்டுத்தாவர ங்கிற வார்த்தையை படித்த மாதிரி தெரியலையே?

வழக்கம்போல
கலக்கல்தான் !

நல்லா இருக்கிங்களா?

காமராஜ் said...

என்னமோ நடத்துங்கப்பா.
மனுஷா எப்டீருக்கே.ஞாயிற்றுக்கிழமைகளையும் கவனி.

உயிரோடை said...

ச‌னிய‌ன் நாம‌ம் முத்ல் வ‌ரியில்

அவ‌ர் வாக‌ன‌ம் இர‌ண்டாம் வ‌ரியில்

க‌ல‌க்க‌ல் அண்ணா வாழ்த்துக‌ள்

Vidhoosh said...

கா......வ்

அட... "வாவ்"னு சொல்ல வந்தேன்.

ஜெனோவா said...

நல்லாயிருக்கு பா.ரா , வாழ்த்துக்கள் !

சாந்தி மாரியப்பன் said...

அவரவர் பாடு அருமை... போன வார விகடனில் வந்ததும் சூப்பர்.

சாந்தி மாரியப்பன் said...
This comment has been removed by the author.
rvelkannan said...

நல்லாயிருக்கு பா.ரா ,

Nathanjagk said...

அருமை ராஜா! வாழ்த்துக்கள்!!!

Vidhoosh said...

ராகவன் வந்து காக்கா கதை சொல்லுவார்னு பாக்கிறேன், ஆளைக் காணோமே??

Athisha said...

ஓட்டுத்தாவர காகம்னா என்ன?

Rajan said...

விகடனில் வாரவாரம் உங்களைத் தேட வைத்து விட்டீர்கள் பா.ரா !

vasan said...

நாங்க‌ள், அப்ப்ப்போ, ந‌ம்ம‌ வீட்டுக்கு
விருந்தாளிக‌ வ‌ர‌மாட்டாகளாண்னு?
காத்திருந்த‌து நினைவில்.
அம்மா, அப்பா அப்போ,
அப்ப‌டித்தான் இருந்த‌ங்க‌ளா?
இல்லை இப்ப‌டித்தானா?
தெரிய‌லை. தெரிய‌ வேண்டாம் பா ரா.

ராகவன் said...

அன்பு ராஜாராம்,

எப்படி இருக்கீங்க!!! நல்ல கவிதை... இந்த காகம்... நேசமித்திரன் ஒட்டு தாவரம்னு சொல்றாரே இது ஒட்டு தாவரமா இல்லை ஓட்டு தாவரமா?
இரண்டுக்கும் வேறு வேறு அர்த்தங்கள் இருக்குன்னு நினைக்கிறேன்... சரி கவிதை... ரொம்ப நல்லாயிருந்தது...

வேப்பமரங்களும் காக்கைகளும்னு ஒரு பெரிய கதையே எழுதலாம்... பள்ளிகூடத்தில படிக்கும் போது நிறைய கருப்பான விஷயங்கள் தான் வசீகரமாய் இருந்திருக்கிறது... கரும்பலகை, சிலேடு, கல்குச்சி, காக்கா, தங்கதாயி மிஸ்சுன்னு எல்லாமே பள்ளி செல்வதற்கான காரணங்களை ஐந்து வருஷம் வரை நீட்டிக்க செய்தது என்று தைர்யமாக சொல்வேன்... அதுவும் தங்கதாயி மிஸ்ஸு அப்படி ஒரு கருப்பு... பளீர்னு சிரிச்சா வர்ற வெளிச்சம் பால் பொங்குறா மாதிரி இருக்கும்... கையில் ஒரு அடிக்குச்சியுடன் (ஸ்கேல்) ஒற்றை காலை ஆட்டி கொண்டே அவங்க பாடம் எடுக்குறது அழகா இருக்கும்... நிற்க வைச்ச கரும்பலகையும், அவர்களின் எழுத்தும் அவங்கள போலவே ஒரு எடுப்ப இருக்கும், அதுவும் அவங்க கிளாசுல படிக்கும் போது வாரத்திற்கு ஒரு முறை முறை வெள்ளிக்கிழமை, கரியும் ஊமத்தங்காய் போட்டு அரைச்சு, கரும்பலகையில் அப்பி, அதை கழுவும் போது கிடைக்கும் வாசனை, மருதாணி விரல்களை விட கிறக்கமாய் இருக்கும்...
மரத்தடி பள்ளிக்கூடத்தில் அம்மா கொண்டு வந்து கொடுக்கும் சாம்பாரும் உருளைக்கிழங்கு பொன் வருவலுக்கும்... நீளும் கைகளில் காக்கைகளின் கரைதல்களும் ஒன்றாய் இருந்திருக்கிறது, ராஜேஸ்வரிக்கு காக்கையை கண்டாலே பிடிக்காது... அவ fair and lovely தான் எப்போதும்... அதனால் என்னை கூட பிடிக்காது... தங்கதாயி மிஸ்ஸு என்னிடம் ஒட்டுவதும் கொஞ்சுவதும்,கூட அவளுக்கு பிடிக்காது... தன்னோட ஜிமிக்கிய எங்கேயோ தொலைச்சுட்டு, அவ தங்கதாய் மிஸ்ஸு தான் எடுத்தாங்கன்னு பொய் சொல்லிட்டா... correspondent ஜான் தங்கத்தாய் மிஸ்ஸ வீட்டுக்கு அனுப்பிட்டாரு... அவங்க அழுதுட்டே வீட்டுக்கு போனது இன்னும் ஞாபம் இருக்கு... சினிமா கற்பிதங்களின் வழியாக, தங்கத்தை மிஸ்ஸு ஓடுற மாதிரியும் ஜான் சார் துரத்திற மாதிரியும் நினைப்பு வந்து போகும், அவங்க அழுகைய பார்த்தா...

(1)

ராகவன் said...

(2)
வேப்பம் பழங்கள் திண்ணும் காக்கை கொண்டு வந்து போடும் எலிகள், மீன் அல்லது கருவாடு எங்களுக்கு உயிரியலின் நிறைய கேள்விகளுக்கு விடையா இருந்திருக்கிறது... சுந்தர ராமசாமியின் காகங்கள் பற்றிய சிறுகதை ஒன்று காலச்சுவடின் ஆண்டு மலரில் படித்த ஞாபகம் வருகிறது... நினைவூக்கிகளாய் நிரம்பி வழியும் இது போன்ற கவிதைகள் திறக்கும் கதவுகள் அநேகம் பாரா...அமெரிக்காவில் நம்ம ஊரில் இருப்பது போன்ற சாம்பல் நிற காக்கைகள் இல்லையாம், raven எனப்படும் அண்டங்காக்கைகள் மட்டுமே உண்டு என்று சொல்ல கேட்டிருக்கிறேன்...

அகத்தியர் கமண்டலத்தில் அடக்கிய காவிரியை தட்டி விட்ட காக்கைக்கும் இது போல சம்பிரதாய செய்திசொல்லித்தனம் இருந்திருக்கிறது... காக்கை கரவா கரைந்துண்ணும்... மனுஷங்களும் அதுபோல எல்லோரையும் கூப்பிட்டு ஒண்ணா சாப்பிடுவாங்க என்ற தப்பு கணக்கில் இது போல விருந்தினர்கள் வருவதை ஒரு சம்பிரதாய அறிவித்தலை சொல்கிறது என்று நினைக்கிறேன்... என்னை காக்கா என்று நேற்று வரை சொன்னவர்கள் இருக்கிறார்கள்... கருவண்டு, காக்கா, black mouth ன்னு சொல்றவங்க இருந்தார்கள் எனக்கு... கருப்பா இருக்கோமே என்று கவலையா இருக்கும்... சுவாமிநாதனும், சுரேந்த்ரனும் சிவப்பாய் இருப்பதால் எனக்கு கடுப்பாய் வரும், இன்னொரு காரணம் அவனுங்க முதல் ரேங்க், ரெண்டாம் ரேன்க் எடுப்பதால் கூட இருக்கலாம்... நீ கருப்பு தங்கம் வைரம் என்று அம்மாவும், கௌசல்யா அக்காவும் சொல்லும்போது கூட... காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்லும் பெரியப்பா மீது கோபம் வரும்...

எனக்கு எங்க ஊர்ல இருக்கிற ராமர் சித்தப்பாவ பார்த்த காக்கா ஞாபகம் வரும், அவரு கருப்பு இல்லை ஆனாலும் அவர் தலைய சாய்த்து பார்க்கிற தினுசும், உங்க வீட்டுக்கு விருதாளி வர்ரைங்கடான்னு சொல்லும்போதும அவரு காக்காய் போல இருப்பாதாய் தோன்றும், அந்த தெருவுக்கே அவர் தான் இது போல ஒரு செய்தி சொல்லி. அம்மாவுக்கு அவர பார்த்தாலே அடிவயத்துல புளிய கரைக்கும்... யார்ரா வர்றா இன்னைக்கு என்று அவனுடன் வெளியே வந்து பார்ப்பாள்...சண்டைக்கு வர்ரவனா இருந்தாலும், சந்தோசமா வர்ரவனா இருந்தாலும் அவனுக்கு ஒன்று தான்... யாராயிருந்தாலும் விருந்தாளி தான்... ஒரு முறை தம்பி யாரிடமோ வம்பிழுத்து வர அவர்கள் ஆட்களுடன் வந்து தம்பியை அடித்ததும், அவருக்கு விருந்தாளியாய் தான் தெரிந்தார்கள்... அவங்க வீட்டு சொந்தம்னா... வாயெல்லாம் பல்லாய் போகும் அம்மாவுக்கு... அப்பா வழி சொந்தம்னா... போனா வாரம் தானே வந்துட்டு போனாய்ங்க அதுக்குள்ளே என்னவாம் என்று வாங்கன்னு முந்தானியில் கையை துடைத்து கொண்டே... ரா தம்பு காபி தாகேவா... என்பாள்...

கோத்தி பிட்லு, எந்துக்கு ஒச்சினாடு போய் அடுக்கி ரா என்று என்னை ஏவிவிட்டு அடுக்களைக்குள் புகுந்து கொள்வாள்... நான் என்ன பாவா எப்படி இருக்கீங்க... என்று பேசி முடிக்கும் போது... கையில் கொண்டு வந்த பால்கோவாவை கொடுத்ததும்... எனக்கு பாவா போல ஒரு நல்ல மனுஷன் இல்லை என்று தோன்றும்... அம்மா உள்ள வேலையா இருக்காங்க... காப்பி கொண்டு வரவா... என்றால் இல்லடா மாமா வரட்டும்... என்றவுடன் நான் நைனாவ பார்க்கனுமா... என்பேன்... சரி ஆணியில தொங்குற மஞ்சப்பைய எடுத்துட்டு வா... என்று ஒரு படி அரிசிய அளந்து போடுவாள்... எத்திக்கோ தம்பு... மாமா ஒச்சித்த செப்பெனு என்றவுடன் அவன் நேனு உண்டி சூசிடி போய்யேனு என்பான்... அப்பா வந்தவுடன் கொஞ்சம் காசும்... காக்கி டவுசருத்துணியையும் வாங்கிட்டு போவார் பாவா... குழந்தைகளுக்கு ஒன்னும் வாங்கிட்டு வரது இல்லை, அக்கா பையன் வந்துட்டானம், துறை கையில இருக்கிறதுல எல்லா எடுத்து குடுத்துடுவாரு... என்று முனங்குவாள்... குழந்தைங்க கையில இருந்தாலும் புடுங்கி தின்ற காக்கா பயலுக... அதான் தடிமாடு மாதிரி வளந்த பின்னாடியும் வேலைக்கு போகாமா... தண்டமா சுத்திகிட்டு இருக்காய்ங்க... என்று தொடங்கி விடுவாள்... அப்பா துணிய மாத்திட்டு, நாலு முழ வேட்டியும், குற்றால துண்டுமாய் திண்ணையில் வந்து உட்காருவார்... ஓட்டின் மேலிருந்து ஒரு காக்கா கத்தும்... இப்ப யாரு... சனியன் எப்ப பார்த்தாலும் இங்க வந்தே கத்துது பாரேன்... என்று விரட்டுவாள்... காக்கா ஏய்ப்பு காட்டிக்கொண்டே தத்தும்...கத்திக் கொண்டே...
அட ஸ்ரீவித்யாவுக்கு கதை சொல்லிட்டேன் போல...

அன்புடன்
ராகவன்

பத்மா said...

நாலைஞ்சு முறை வந்து படிச்சுட்டு போனேன். காக்கா பத்தி ஒரு அரை மணி நேரம் நண்பர்களிடம் கதைத்தேன் .இருப்பினும் இது மாறி சின்ன வரிகளில் கருத்தை சொல்லும் பிரமிப்பிலிருந்து மீளவே இல்லை

'பரிவை' சே.குமார் said...

அருமை பா.ரா. சார்.

வாழ்த்துக்கள்.

Dr. Srjith. said...

அருமை நண்பரே வாழ்த்துகள் ...

Ashok D said...

வாழத்துகள் சித்தப்ஸ்... :)

"உழவன்" "Uzhavan" said...

:-)

நட்புடன் ஜமால் said...

பிரிண்ட்லையா

வாழ்த்துகள் மக்கா - அவசியம் வாங்கி பார்க்கிறேன் ...

ராமலக்ஷ்மி said...

அவரவர் பாடும் பாட்டும்.. அருமை:)!

வாழ்த்துக்கள் பா ரா.

ரிஷபன் said...

உங்களுக்கு மட்டுமே சாத்தியம்.. இம்மாதிரி கவிதைக்கதைகள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஆஹா!!காக மொழியினை நன்றாக ரசித்தேன்.

suryesh said...

http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html

மறக்காம ஓட்டு போடுங்க

Vidhoosh said...

அட.. இங்க பாருங்க ராகவன் கதையா... இனிமே, கருவேல நிழல்களின் பின்னூட்டத்தை மட்டும் ஈமெயில் சப்ஸ்கிரிப்ஷன் போட்டிட வேண்டியதுதான்.

ராகவா... கா கா ..... கா கா

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

நிறைய அன்பும் நன்றியும் மக்கள்ஸ்!