Sunday, April 25, 2010
நண்பர்கள்@ஆண்டிமடம்.காம்
(picture by cc licence, thanks Procsilas)
எப்ப தொடங்கப் போகிறாய்?
என்றுதான் தொடங்கினார்கள்.
தொடக்கத்தில் மலைப்பாக இருக்கும்.
பிறகு அதுபாட்டுக்கு போய்க் கொண்டிருக்கும்
என்று ஊக்கினார்கள்.
ஆளாளுக்கு எதையாவது சொல்வார்கள்.
இந்தக் காதில் வாங்கி
அந்தக் காதில் விடுவது நல்லது
என்று வேறு ஆற்றுப் படுத்தினார்கள்.
செய்வது என
முடிவு செய்து விட்டால்
முட்டித் தூக்கணும் போல.
உங்களிடம் சொல்ல
ஒன்று விட்டுப் போயிற்று
முன்னதாக,
எதையாவது தொடங்கணும்.
எதை தொடங்கலாம்?
என்று கேட்டதற்குத்தான்...
எப்ப தொடங்கப் போகிறாய்?
என்று தொடங்கினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
முட்டித் தூக்கனும்போல ...
//எதையாவது தொடங்கணும்.
எதை தொடங்கலாம்?
என்று கேட்டதற்குத்தான்.//
ரைட்டு ! நான் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல
நான் பொறவு வாரேன் :)
எப்ப தொடங்க ?
அதப்பத்திதான் சொல்றீங்களோன்னு நினைச்சேன் ;)
ஹா........ஹா........
சீக்கிரம் எதையாவது தொடங்குங்க :))
தொடங்கிடீங்க...
எதை ???
தொடங்கீட்டாங்களா? அப்ப தொடங்கீருவீங்க:))
ஆஹா, தொடங்கீட்டீங்களே உங்க அட்டகாசத்தை. கவிதையின் தலைப்பை மிக ரசித்தேன்.
தொடக்கம் நல்லாத்தான் இருக்கு.
yenna kaaranam ippadi thodangeetteenga?........!!
[ragasiyam...ushhhhhhhhh...yaarukkum sollaatheenga."aandi madaththai aunty madam nu vaasichchutten thappaaaaaaaaaaaaa...........sorry raja ram sir:("......]
ஒரு 5 லட்சமிருந்த ட்ரெடீங் ஆரம்பிச்சடலாம் :)
பா.ரா.சார் தொடங்கிடீங்க
இப்பவே கண்ணா கட்டுதே....
எப்ப தொடங்கப் போகிறாய்?
என்று தொடங்கினார்கள்.
.....கவிதை முடிவிலும் ஒரு தொடக்கம். :-)
தொடங்கியாச்சா... ரைட்டு...
மரியாதையா என்னையும் சேத்துகிடுங்க
:))
அண்ணா எப்போ தொடங்கப்போறீங்க.
இன்னுமாங்க தொடங்கல....
சரிதான்....
நான் ரெடி...
தெளிவாக குழப்பாமல் தொடங்கியதை முடித்து மீண்டும் தொடங்கி இப்படியாக வாழ்க்கை என்று சொல்றீங்களா அண்ணா
அதாங்க..இந்த பஸ் கிளம்பறதுக்கு சொல்வாங்களே!!!!!!!
கல்யாணப் பேச்சுதானே !
தொடங்குங்க ம(க்)கா
இதுவே லேட்டு
( ஹலோ யாருய்யா அது உமா கமா னுகிட்டு )
:)
புத்தம் சரணம் கச்சாமி...!
சொல்ல விட்டுப் போனது :)
அருமை பா. ரா. கவிதையின் கரு ஒரு நிமிடம் உறைய வைக்கிறது. மனிதர்கள் இப்படித்தான் தள்ளாடுகிறார்கள்.
சரி மக்கா
எப்போ ...
//நேசமித்ரன் said...
( ஹலோ யாருய்யா அது உமா கமா னுகிட்டு )
:)//
இது வேறயா, சொல்லவேயில்ல.
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நான் ரெடி...//
ஹல்லோ பாஸு, அவருதான் இன்னும் ஆரம்பிக்கவேயில்லையில்ல, அதுக்குள்ள ரெடிங்குறீங்க. ஒரு கோப்பாத்தான்யா அலையிறீங்க.
அண்ணீ.... தொடங்கிட்டாங்களாமாம்..
ஒரு குரூப்பாத்தான் திரியுறாங்க.
அண்ணே, சாக்கிரதை..
முன்ன பஜாஜ் வண்டி ஒன்னு இருந்திச்சு, அது வருஷக் கணக்கா ஓடி ஓடி ஸ்டார்டிங் ப்ரோப்ளம் கொடுக்க ஆரம்பிச்சிருச்சு. அப்போ இப்படித்தான் ஆகும், 'இத்தனை நாள் இல்லாம, இப்போ என்ன வந்துச்சு'ன்னு சொல்லிகிட்டே ரெண்டு "கொடு" கொடுத்தா சர்ர்னு கிளம்பிடும். :))
அண்ணனுக்கு ஸ்டார்டிங் தான் ப்ராபளம், அதுக்கப்புறம் நாலு ஆறா அடிச்சி ஐநூறு அடிச்சாலும் அவுட்டாக மாட்டாரு
விஜய்
ஆண்டி மடம்னா சும்மாவா?? நமக்கு அது எவ்ளோ சொல்லித்தரும் தெரியுமா :-)
தொடங்குங்க வாரோம்
மிக்க மகிழ்ச்சி!
ரைட்டு.
பார்த்து பா,ரா,
ஆண்டி எல்லாம் கூடி மடம் கட்டின மாதிரி தான் என்று சொல்வார்கள்.
காலா காலத்தில் தொடங்குங்கள்.
அண்ணா எப்போன்னு சொல்லுங்க.அஷோக் ரெடியா இருக்கார் !ச்ச....நானும்தான் !
கிளாஸ் என்னன்னவோ ஞாபகப் படுத்துது.
கவிதை அருமை பா.ரா. சார்.
இப்படித்தான் எல்லாத் தொடக்கத்துக்கும் தொடங்கும் முன்னரே பல தொடக்கங்கள்.
ஆரம்பமும் முடிவும் அமர்க்களம்.
என்ன அண்ணா இப்படி பண்ணிட்டீங்க. நான் உட்கார்ந்து தனிய சிரிச்சுட்டிருக்கரத பார்த்து இணைய தள மையத்தில இருந்த பொண்ணு பயந்திடுச்சு. ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. அண்ணியை கேட்டதாசொல்லுங்க.
தலைப்பு அருமை
கவிதையும் அருமை.
என்ன தொடங்கியாச்சா..?
//ஹேமா said...
அண்ணா எப்போன்னு சொல்லுங்க.அஷோக் ரெடியா இருக்கார் !ச்ச....நானும்தான் ! //
hello ஒரு பத்துலட்சமிருந்தான் கூட சேத்துப்போம்..... ஓக்கேவா
பிள்ளையார் சுழி போட்டாச்சா!
நல்ல நாள் பார்த்துக் கொண்டு இருக்காப் போல!
அட உங்களுக்கு இதுவும் வருமா? அசத்தல்.
தலைப்பே கவிதை மக்கா எப்ப்பிடி இப்படி எல்லாம் ...மிக நீண்ட நாட்களாகிவிட்டது ...உங்களை எல்லாம் பார்த்து ,,சந்தோசம் மக்கா
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
நிறைய அன்பும் நன்றியும் மக்கள்ஸ்!
Post a Comment