Thursday, January 13, 2011

பயணக் கட்டுரை


(Picture by cc licence, Thanks indi.ca)

நாலு பத்து வண்டிக்கு
நாலு மணிக்கு கிளம்பினால்
போதாதா என்றாள்.

நாலு பத்துக்கு வந்த போது
நாலு பத்து வண்டி
நாலு மணிக்கே போனதாம்.

நாலு மணி வண்டியை
நாலு பத்து வண்டியாக சொன்னேனென
அஞ்சு முப்பது வரையில்
பேசிக் கொண்டிருந்தாள்.

ஞ்சு நாப்பது வண்டியை
அஞ்சு முப்பதுக்குதான் இனி
வண்டியென சொல்ல
அனுபவம்தான் கற்றுத் தந்தது.

போக,

ஞ்சு முப்பதிலிருந்து அஞ்சு நாப்பது வரையில்
இவள் பேசாமல் இருந்ததும்
அஞ்சு நாப்பது வண்டி அஞ்சு நாப்பதுக்கே வந்ததும்
ஆச்சரியமாக வேறு இருந்தது.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!




30 comments:

க ரா said...

ennatha solla.. kalaila vikatan padichathulentu sirichute iruken mams.. pinringa :)

Mahi_Granny said...

விகடன்ல படிச்ச போதே சந்தோசமா இருந்தது.

ராஜவம்சம் said...

வாழ்த்துக்கள்
{பதினோறு மணிக்கு சொல்லலாம்னு இருந்தேன் பதினொன்று ஐம்பத்தியாறு ஆகிவிட்டது}

Chitra said...

அருமை.....வாழ்த்துக்கள்! அந்த படமும் சூப்பர்!

ஹேமா said...

அண்ணா...படம் அழகாயிருக்கு.என்னமோ கணக்குச் சொல்றீங்க கவிதைல.
வாழ்த்துகள் அண்ணா!

காமராஜ் said...

இந்தக்கணக்குபரீட்சையில் மட்டும் தோற்றால்கிடைப்பது அதிக மதிப்பெண்.

கே. பி. ஜனா... said...

சரியான நேரத்துக்கு வந்த வண்டி மாதிரி மகிழ்வித்தது கவிதை!
இந்தக் கவிதையை படிக்கும்போது காலை மணி அஞ்சு முப்பது. அஞ்சு நாப்பது வரை சும்மா அப்படியே இருக்க வைத்தது.

கவி அழகன் said...

அனுபவங்கள் எப்பொழுதும் ஒன்றாய் இருப்பதில்லை

பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணாச்சி

நசரேயன் said...

அஞ்சரைக்குள்ள வண்டி ?

ராமலக்ஷ்மி said...

முதலில் நிஜம்மாவே பயணக் ‘கட்டுரை’ போலிருக்கு என நினைத்து வந்தேன்:)! நல்லாயிருக்கு பயணக் ‘கவிதை’!!!

வாழ்த்துக்கள் பா ரா.

vinthaimanithan said...

ஹை! சித்தப்பூ :)))))))

Unknown said...

பெருசா இருக்கும்போல் நினைச்சி வந்தா அழகா இருக்குது கவிதை

Unknown said...

பெருசா இருக்கும்போல் நினைச்சி வந்தா அழகா இருக்குது கவிதை

ராகவன் said...

அன்பு பாரா,

அழகான கவிதை இது... விகடன் இன்னும் படிக்கலை...

எவ்வளவு கத்துக்கறோம் இல்லை... இது போல...

ரொம்ப பிடித்திருந்தது.

அன்புடன்
ராகவன்

vasu balaji said...

/இந்தக்கணக்குபரீட்சையில் மட்டும் தோற்றால்கிடைப்பது அதிக மதிப்பெண். /

இத விடவா?

/நசரேயன் said...

அஞ்சரைக்குள்ள வண்டி ?/

இந்த அலஞ்சான் திருந்தவே திருந்தாது:))))

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Ha ha haa. Super Rajaram. கணக்குச் சொல்றீங்க கவிதைல.

சிநேகிதன் அக்பர் said...

இப்படி நடக்கப்போய்தாண்ணே அண்ணிக்கு உங்க வீட்டு கல்யாணத்துக்கு லேட்டா வந்தேன் :)

RaGhaV said...

அழகான கவிதை.. வாழ்த்துக்கள்.. :-))

விஜய் said...

பங்கு மனசுக்குள்ள விசு வேற இருக்காரா !!!!

விகட வாழ்த்துக்கள் பங்கு

விஜய்

கோநா said...

பா.ரா அவர்களுக்கு, தங்களின் இந்த கவிதையை விகடனில் தான் முதலில் வாசித்தேன், இரட்டிப்பு மகிழ்ச்சி, தங்களின் கவிதை வந்ததுக்கும், எனது கவிதை வந்ததுக்கும். வலைப் பூவில் படிப்பதற்கு இடைவெளிகளுடன் இன்னும் அழகாய் இருக்கிறது கவிதை. வாழ்த்துக்கள்.
தங்கள் அருகில் இடம் கொடுத்து இவ்விலக்கிய சிறுவனுக்கு பெருமை அளித்த விகடனுக்கும் எனது நன்றிகள்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பொங்கல் வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்.

ஹ ர ணி said...

எத்தனை ஆனந்தம் இந்த கவிதை வாசிக்கையில். உயிரோட்டமுள்ள எதார்த்த நதி பொங்கிப் பெருகியோடும் கவிதை. வாழ்த்துக்கள்.

Ashok D said...

இது ’காதல் கட்டுரை’ மாதிரியல்லவா தெரிகிறது :)

Santhini said...

Cute ! :)

rvelkannan said...

இந்த விகடனை பார்த்து இரு முறை நெகிழ்ந்தேன்
ஒன்று : கலாப்ரியாவின் கட்டுரை தொகுப்புக்கு விருது
இரண்டு : இந்த கவிதை

ராம்ஜி_யாஹூ said...

This is the copy of the English poem, let me give the link wait

உயிரோடை said...

விகடனின் பர்மெண்ட் ஆகிடீங்க அண்ணா வாழ்த்துகள்

Vidhoosh said...

:))))) எல்லோருக்கும் கவிஞன்...

பா.ராஜாராம் said...

மாப்ஸ்,

மஹிக்கா,

மகன்ஸ், :-)

சித்ரா,

ஹேமா,

காமு, அனுபவஸ்தன் ஓய்! :-)

ஜனா,

யாதவன்,பொங்கள் வாழ்த்துகளும் மக்கா!

நசர், ரௌடி.. :-)

சகா,

ஹாய் மகன்ஸ், ;-)

நந்தா ஆண்டாள் மகன்,

ராகவன்,

பாலாண்ணா, :-)

ஜெஸ் மக்கா,

அக்பர்ஜி,

ராகவ்,

பங்கு,

கோநா,

பொங்கள் வாழ்த்துகளும் ஸ்ரீ,

குமார் மகன்ஸ்,

ஹரணி, வாங்க மக்கா!

மகன் அசோக், (பின்னே? :-))

நானும் என் கடவுளும், வாங்க மக்கா,

வேல்கண்ணா,

ராம்ஜி, ( முதலில் ஆங்கிலம் அவ்வளாக தெரியாது ஜி. காப்பி அடிக்க தெரியும். அது b.sc.,பாஸ் பண்ணும் வரையில் உதவியது..நீங்கள் நிறைய வாசிப்பவர் என்பதால், "ராம்ஜியை குழப்பும் அளவு அல்லது ஒரு ஆங்கில கவிதை அளவு யோசனை வந்திருக்கு போலயே ராஜா மக்கா உனக்கு" என கெத்தா காலரை தூக்கி விட்டுக் கொள்கிறேன்) :-) இருந்தாலும் லிங்க் அனுப்புங்களேன். தடவி வாசித்துவிடலாம்.

லாவண்யா,

வித்யா,

எல்லோருக்கும் மிகுந்த அன்பும் நன்றியும் மக்களே!