Friday, February 26, 2010

ரயிலோசையில் கிடுகிடுக்கும் வீடு


(picture by cc license thanks DariusLighting)

ட்டரைக்கு சேது எக்ஸ்பிரஸ்.

ட்லியோ தயிர் சாதமோ
கட்டிக் கொண்டிருப்பாள்
இவனுக்கும் குழந்தைகளுக்கும்.

வேலையெல்லாம் ஓஞ்சு
சற்று கட்டையை சாய்க்க
பேன் சுட்சு தட்டும் போது
மதியம் ரெண்டரை எனக் கூவும்
ராமேஸ்வரம் பாசஞ்சர்.

கொல்லம் எக்ஸ்பிரஸ் வந்தால்
அரை மணி நேரத்தில் இவன் வருவான்.

குழந்தைகள் தூங்கி
இவனும் இறங்கிப் படுக்கும் போது
போய்க் கொண்டிருக்கும்

ருவாடு வாசனை மணக்கும்
இவளுக்கும் பிடித்தமான
ரெண்டுமணி கூட்ஸ் வண்டி.

Wednesday, February 24, 2010

வாய்க்கால் வெட்டும் திட்டம்


(picture by cc license thanks Orin Zebest)

Pantene shampoo நல்லாருக்குப்பா
என்கிறாள் மகா.

Jergens body lotion பிடிச்சிருக்கு
போல சசிக்கு.

Bigen hair டை
தீர்ந்திருக்கிறது லதாவிற்கு.
(big பெண் தலை என்பதால் இருக்கலாம்தான்)

ப்பா இருந்தால்
பேரீச்சம்பளம் கேட்டிருப்பார்.
அப்பா நினைவாய்
அம்மாவிற்கு தரலாம்.

கோதரிகள் எதுவும் கேட்பதில்லை.
நானாக தந்தால்
வேணாம் என்பதும் இல்லை.

ரக்கு கொண்டு போகலைன்னா
கழுவில் ஏற்றுவார்கள் நண்பர்கள்.

ராசாராமா,
உன் மாங்கொழுந்து வெயிலும்
மரிக்கொழுந்து வாசனையும் அங்கிருக்கு.

ங்கிருந்து எதுவும் கொண்டு போக
கிறுக்கா உனக்கு?

Monday, February 22, 2010

பதின்ம வயதும் பாரா டைரி குறிப்பும்


(picture by cc license thanks SubZeroConsciousness)


ச்சுவர் ஏறிக் குதிப்பது
மிக எளிது.

ண்ணாடிச் சில்கள்
பதிந்திருக்கவில்லை.

கால் பதித்து ஏற
செங்கலொன்று உதிர்ந்திருந்தது.

னிதக்காலில் ஏறி
பூனைக்காலில் குதித்தால் போதும்
பறிக்கலாம்

பால்யத்தில் மாங்காயும்
பருவத்தில் விருப்பத்தையும்.

பூனைக்காலில் ஏறி
மனிதக் காலில் குதித்ததால்
பறித்தேன்

பால்யத்தில் விருப்பத்தையும்
பருவத்தில் மாங்காயும்.



Friday, February 19, 2010

பதின்ம வயதும் மீனாக்கா டைரி குறிப்பும்

தின்ம வயதுகளில் பெருபாலும் நான் பழைய டைரிகளையே பார்க்க நேர்ந்திருக்கிறது. அதுவும் வண்ணான் கணக்கு எழுதுகிற அம்மாவின் டைரியாக இருக்கும். ஒரே ஒரு சிவப்பு நிற டைரி மட்டும் புதுசு. என்னவோ, எதுவுமே எழுத தோணலை அதில்..ரொம்ப நாட்கள் பத்திரமாக வைத்திருந்த டைரி அது. மனிதர்களே தொலைகிறபோது டைரி எம்மாத்திரம்?

ன்றாலும் முல்லையின் இந்த தொடர் விளையாட்டும், இந்த தலைப்பும் ரொம்ப பிடிச்சிருந்தது. கடந்த வாரம் முழுக்க வேலைகளுக்கிடையே இந்த நினைப்பாகவே ஊறிக் கொண்டிருந்தேன். டைரி தொலைந்தால், பதின்ம வயது நினைவும், கிளர்வும் தொலையுமா என்ன? எல்லோரையும் போல் என்னையும் திரும்பி பார்க்க வைத்த முல்லைக்கு வந்தனம். அழைத்த ராகவனுக்கு நன்றி.

ர்ல உள்ள வெயிலெல்லாம் எம்புள்ளை தலையில்தான்" என்று தலையை தொட்டு பார்க்கிற அம்மாவின் கைகள் ஓய்ந்திருந்தது. அப்பாவிடம்,"நானே குளிசுக்கிறேன்ப்பா"என்று தொடங்கியிருந்தேன். பெயர் சொல்லி அழைக்கிற நண்பர்களை எல்லாம் "மாப்ள" போட தொடங்கி இருந்தேன். மாப்ளைகளும், "மாப்ள"எனும் போது பெருமையாக உணர்ந்தேன். இரண்டு அக்கா, இரண்டு தங்கைகள். ஒண்ணு, மண்ணா தூங்கிய காலங்கள் முடிவிற்கு வந்திருந்தது.

க்காக்கள் இருவரும் குசு,குசுவென பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள். நான் போனதும் நிறுத்திவிடுவார்கள். சோமு மாமா வங்கித் தந்த மர்பி ரேடியோவில் இருந்து "கோயில் மணி ஓசை தன்னை செய்ததாரோ" பாட்டு வந்ததும் அடுப்படியில் இருந்து குடுகுடுவென ஓடி வருகிற அக்காக்களை பார்க்கையில் எரிச்சலாக வரும்.

க்காக்கள் செய்கிற எரிச்சல்களை எல்லாம் மட்டுப் படுத்தியது மீனாக்காதான். "மாப்ள" சீனிவாசனின் அக்காதான் மீனாக்கா. சீனு போலவே நானும் மீனாக்கா என்றாலும் எனக்கு தனி வெளிச்சமாக இருந்தார்கள். கும்பிட தோன்றும் அழகுடன் இருப்பார்கள் மீனாக்கா. அவ்வளவு பெரிய நெற்றியில் பொட்டு எங்கு வைத்தாலும் நேர்த்தியாகவே இருக்கும்.
புருவ மத்தி, மூக்கு தொடங்கும் இடம் என எப்படித்தான் அளக்கிறார்களோ என்று இருக்கும்.

காத்தோட்டமான வெளித் திண்ணையில் வந்தாலும் சரி, பெருமாள் உற்சவ கூட்டத்தில் அக்கா நெருங்கினாலும் சரி, சொல்லி வைத்தது போல் மருதாணி வாசனை வரும். இப்பவும் மருதாணி வாசனை எங்கிருந்து வந்தாலும், "மீனாக்கா" என்றழைக்க முடியும். சதா நேரமும் மீனாக்கா வீட்டிலேயே கிடப்பேன். ராம்நகர் தெருவிற்கும் ரெட்டை அக்ரஹாரத்திற்கும் தூரம்தான். ஆனாலும் எட்டி நடக்க மீனாக்காதான் காரணம்.சீனுவை விட.

சீனு இப்பவும் என் நண்பன். மாப்ள. போன பயணத்தில் இருவருமாக தண்ணி அடித்த போது சீனுவின் முகத்தில் மீனாக்காவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். சரி. விலக வேண்டாம்..

மீனாக்காவும் சீனுவைவிட என் மேல் ப்ரியமாய் இருப்பார்கள். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். காரணம் இருக்கு...
என்னிடம் ஒரு கடிதம் கொடுத்து, முகவரி கொடுத்து சேர்க்க சொன்னார்கள். அப்போ செல் போன் இல்லாத காலங்கள். லெட்டரை கொடுத்து வாங்குவதற்குள் தாவு தீர்ந்து போகும். ஆளை எங்கு சந்திப்பது, எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்பதெல்லாம் சொல்லி தந்திருந்தார்கள்.

முகவரி, நாட்டரசன்கோட்டை. சிவகங்கையில் இருந்து சற்றேறக்குறைய ஏழு கி.மீ. வாடகை சைக்கிள் எடுத்துப் போய் தனியாக அவரை பார்த்தேன். இதை அந்த வயதில் எழுதி இருந்தால் அவனை பார்த்தேன் என்று எழுதி இருக்கலாம் நான். அவ்வளவு பிடிக்காத கண் கொண்டுதான் பார்த்தேன் அவரை. நெடு,நெடுவென சிகரெட் போல இருந்தாலும் குழந்தை முகம். (அப்ப பிடிக்காமல் இருந்தது. யோசிக்கையில் இப்ப பிடிச்சிருக்கு).

டிதத்தை நேர்மையாக சேர்த்த பிறகு அக்கா மிக நெருங்கினார்கள். "உனக்கு பிடிசிருக்காடா?" என்று கேட்டபோது, "சூப்பரா இருக்கார்க்கா" என்று சொன்னது அப்ப பிடிக்காமல் இருந்தது. இப்ப பிடிச்சிருக்கு.

க்கா வீடு, தலை வாசல் ஒரு தெருவில் இருக்கும். பின் வாசல் மற்றொரு தெருவில் இருக்கும். கொல்லையில்,கிணறை ஒட்டிய துவைக்கிற கல்லில்அக்காஅமர்ந்த படி,"டேய்..குட்டை" (என்னை,நண்பர்கள் அழைக்கிற பெயர்) என்று தொடங்கி "சிகரெட்" பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். என்னவோ எரிச்சலாக இருக்கும். என்னவோ சந்தோசமாகவும் இருக்கும்.

குட்டையா, வரலையா? பெருமாள் கோயில் பொட்டலுக்கு கிரிக்கெட் விளையாட போறோம்"என்று வருகிற சீனுவைக் கூட. "போடா", அவன் வரமாட்டான், அவனாவது படிக்கட்டும்" என்று இறுத்தி கொள்வார்கள்.

கொல்லையில் ஒரு சிறிய அறை இருக்கும். கட்டை, கட்டையான பைண்ட் செய்யப்பட்ட கதை புத்தகங்களுடன் அக்கா அங்கு அமர்ந்திருப்பார்கள். அறை வாசலில் ஒரு உலக்கை குறுக்க கிடக்கும். கும்பிட தோன்றும் அழகுடன் இருப்பார்கள் அக்கா என்று முன்பே சொல்லி இருக்கேன் இல்லையா? அது இந்த அறையில் அக்காவை பார்க்கிற போதுதான் ரொம்ப தோன்றும். அந்த அறை கற்ப கிரகம் போலவும், அக்கா தெய்வம் போலவும் இருப்பார்கள். என்னை பார்த்ததும் அப்படி ஒரு சிரிப்பு சிரிப்பார்கள்.

பார்த்ததும் கேட்பார்கள்,"அம்மா எதுனா சொன்னாளா?"

சொன்னாங்கக்கா. போமான்னு வந்துட்டேன்" என்பேன். அறை எதிரே உள்ள கல் திறுக்கையில் அமர்வேன். காப்பி ஆத்திகொண்டே வருகிற அம்மா, "சொன்னா கேட்க்கிறானாடி.கடங்காரன்" என்பார்கள். எல்லாத்துக்கும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள் மீனாக்கா. அம்மாவிடமிருது காப்பி டவராவை வாங்கி, ரெண்டு ஆத்து ஆத்தி டம்ளரை அக்கா எடுத்துக் கொண்டு டவராவை எனெக்கென அறை வாசலில் வைப்பார்கள்.

சீனு சட்டை, சீனு மாமாவோட பேன்ட் எல்லாம் போட்டு, திருப்பி திருப்பி காட்டி, "நல்லாருக்காடா குட்டையா?" என்று மீனாக்கா என்னிடம் விசாரிக்கிற தருணம் பெரும்பாலும் அந்த அறையில் இருக்கும் போதாகத்தான் இருக்கும். சிகரெட் பற்றி அதிகம் பேசுவதும் அப்பவே. மீனாக்கா பற்றி பேசுவது என்றால் பேசிக் கொண்டே இருப்பேன்.

காலம் ஒரே மாதிரியாகவா போகிறது?

வேறொரு மனுஷனை திருமணம் செய்து கொண்டு மீனாக்கா சந்தோசமாகவே இருக்கிறாள். கடைசியாக மீனாக்காவை பார்த்தது போன வருடத்து தேர் திருவிழாவில்தான். அப்பா இறந்ததால் "வருடம் திரும்பாமல் வடம் பிடிக்க கூடாது" என்று சொல்லி அனுப்பிய மனுஷிக்காக நானும், சசியும் தெரு ஓரத்தில் ஒதுங்கி இருந்தோம்.

குட்டையா" என்கிற பழைய கூவலில் விழித்துக் கொண்டு, "அக்கா" என்றேன். வெகுவாக மாறி இருந்தார்கள். கையில் மகள் வயிற்றுப் பேரன். சந்தோஷ்டா, புவனா பையன்" என்றார்கள். சந்தோசின் கை பற்றினேன். சின்ன சின்னதாக, பிஞ்சு பிஞ்சாக இருந்தது.

ராகவன், இந்த தொடரை எழுத சொல்லி கூப்பிட்டப்போ, மீனாக்காதான் கதவு தட்டினார்கள். இப்ப திறந்திருக்கிற இந்த கதவை...

ன்னும் நிறைய பதின்ம வயது நினைவு இருக்கு. டைரியில் எல்லாம் எழுதலை. தொலைஞ்சும் போகலை. சிவப்பு டைரி தொலைஞ்சு போச்சு. ஆனா,தொலைஞ்சா போச்சு? அது போல.

த்தொடரை தொடர இவர்களை அழைக்க விரும்புகிறேன்.

1.வித்யா
2.விக்னேஸ்வரி
3.பத்மா
4.பாலா சார்
5.அ.மு.செய்யது
6.ப்ரியமுடன் வசந்த்

Wednesday, February 17, 2010

விளக்கில் விசும்பும் பூதம்


(picture by cc license thanks millicent_bystander )

ன்னிடமும்
ஒரு விளக்கு இருந்தது.

தேய்த்தால் போதும்.
பூதம் வரும்.
தேவைகளை செய்து தரும்.

ரொம்ப நாளான தேவை
ஒன்றிற்காக தேய்த்தேன்.

"முதலாளி"
என வந்தது.

தேய்த்துக் கொண்டே இருந்தேன்.

"முதலாளி"
"முதலாளி"
"முதலாளி"


Monday, February 15, 2010

இவனே திரையிடும் இவன் படம்


(picture by cc license thanks Nesster)

த்தக்கா பித்தக்காவென
ஓடி வருகிற குழந்தையொன்று
நடந்து போய்க் கொண்டிருப்பவனின்
காலை கட்டிக் கொள்கிறது.

சோற்று கிண்ணத்துடன்
விரட்டி வருகிற அம்மாக்காரி
ஸ்தம்பித்து நிற்கிறாள்.

குனிந்து
குழந்தையை தூக்கிக் கொள்கிறான் இவன்.

கீச் கீச் என கத்தியபடி
கழுத்தை இறுக்குகிற குழந்தை
பிடித்திருக்கிறது இவனுக்கு.

பிச்சு பறிக்க இயலாமல்
புன் முறுவலில் இருந்து
வாய் விட்டும் சிரிக்கிறாள் அம்மாக்காரி.

யந்து பேசி குழந்தையை
பிரிக்கிறான் இவனிடமிருந்து.

பிறகு
பஸ்ஸ்டாண்ட் வந்து விடுகிறது.

வ்வொருவராய் இறங்கி
தான் இறங்க தாமதமாகுமே என
உள்ளதிலேயே சிறிய வேறொரு
கூடா விருப்பை ஓட விடுகிறான்.

தில்,
இவனுடன் பஸ்ஸில் வந்த சுடிதார்காரி
"டைம் என்ன சார்?"
என தொடங்குகிறாள்.

Saturday, February 13, 2010

ஆறுமுக காதல்


(picture by cc license thanks kyz )

ஒன்று

போகிற போக்கில்
மின்னல் எறிந்து போனாள்.
அனிச்சையாக சொல்லிக்கொண்டான்
"அர்ச்சுனன் பெயர் பத்து"

இரண்டு

சும்மா சும்மா
கேட்காதீர்கள்.
அவளுக்கும்
அவள் என்றே பெயர்.

மூன்று

மட்டும் எழுதியிருந்த
டைரி ஒன்று எழுதப்படாமலே இருந்தது.
ஏன் என்பதில் எழுதி இருந்தது
யார் கொடுத்தது என்பது.

நான்கு

ச்சை குத்திக்கொண்ட போது
வலி இல்லை.
பத்திரிக்கை நீட்டினாள்
பெயர் இல்லை.

ஐந்து

குடித்துக் குடித்து
நினைவு தப்பி இருந்தான்.
sms வந்தது
"வழி அனுப்பவாவது வருவியா?"

ஆறு

செத்தாலும் பார்க்கக்கூடாது
என்றிருக்கிறான்.
"ஏன் சாகனும்?"
என்றவளை.

Friday, February 12, 2010

நன்றி வாசு, சுகுணா, விகடன்!

சற்றேறக்குறைய பதினைந்து நாட்களுக்கு முன்பு அகநாழிகை வாசுவிடம் அழை பேசியபோது,"சுகுணாதிவாகர்" உங்கள் அழை எண் கேட்டார். கொடுத்துருக்கேன். ஆ.வி.யில் காதலர் தினத்திற்கு கவிதைகள் எழுதி அனுப்ப சொன்னார்" என்றார்.

சுகுணாவை தொடர்பு கொண்டேன். திங்கள் கிழமைக்குள் எழுதி அனுப்பி தாருங்கள் என்றார். அனுப்பி இருந்தேன். ஐந்து கவிதைகள் தேர்வு. மிகுந்த சந்தோசம். அதில் ஒரு கவிதை அட்டையிலும்.

காதல் குறித்து எழுத யாருக்குத்தான் விருப்பம் இருக்காது! மகள் கல்யாணத்திற்கு நிற்கிற காலத்திலும் காதல் குறித்து எழுத வாய்த்திருக்கிறது. அவ்வளவு உன்னதம் இந்த காதல்!

காதல் அங்கேயேதான் இருக்கிறது. போட்டது போட்டபடி, நாம்தான் நகர்ந்து விடுகிறோம். இல்லையா..?

மிகுந்த நன்றியும் அன்பும் வாசு,சுகுணா,விகடன்!

இனி பிரசுரமான கவிதைகள்.

அட்டையின் கவிதை...

நீ விரும்பி விளையாடும் பொம்மை என்பதால்
பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்னை.

உள்ளே..

நீ நடந்த தடங்களின் அடியில் தான்
கிடக்கிறது நம் மணல்
மணல் என்றால் மணல்
மனசென்றால் மனசு!

ன்னல் வழியாக
பார்த்துக் கொண்டிருந்தாள்
காலைக் கோலத்தில் சிந்திய
சைக்கிள் மணிச் சத்தத்தை!

கொஞ்சூண்டு தான் இருந்தாள்
யாருக்கும் தர முடியாத
காதலாக இருந்தாள்!

காதலுக்கு அர்த்தம் கேட்டார்
கடவுள்
என்னைக் காட்டினேன்
காரணம் கேட்டார்
உன்னைக் காட்டினேன்.

Wednesday, February 10, 2010

மிஸ் யூ புள்ளை


(picture by cc license thanks rx_kamakshi)

அங்கே:

"டுகு டப்பாவில்
போட்ட சில்லரையை
எடுத்தீங்களாப்பா?"

"டுக்கலையே சில்லரை"

"ன்ன சொன்னீங்க இப்ப?"

"ன்ன சொன்னேன்?"

"ன்ன..சொன்னே..இப்போ?"

ன்னடா சொன்னே இப்போ
என்பதற்கு முன்பாக...

"டுக்கலையே புள்ளைன்னு சொன்னேன்"

**

இங்கே:


"யார்ட்ட பேசிக்கிட்டு இருந்தீங்க
நம்பர் பிசின்னு வந்துச்சு"

"காதலி...புதுசா"

"வெட்டிப்புடுவேன்..வெட்டி"

"காதலியவா...என்னையவா?"

"மூணையும்"

ப்சிப் கதவடை.
காரூபாய்க்கு மூணு வடை.

**

Tuesday, February 9, 2010

அவன்


(picture by cc license thanks rx_kamakshi)

முப்பத்தைந்து வருடம்
வாழ்ந்த வீட்டை தோற்ற மனிதன்
நண்பனின் ஆறுதலுக்கென பேசுகிறான்.

"its gone. போச்சு. போயே போயிந்தி"

குலுங்கிய என்னை
அல்லது
என்னைப் போன்ற ஒருவனை
தேற்றுகிறான்.

சுரக்கும் கருணை மடுவில் முட்டுகிறேன்.
பைத்தியக்காரனை போன்று.

காம்பிலிருந்து சொட்டுகிறது
பசுவின் இறுதிச் சொட்டு.

பாலின் நிறம்
சிவப்பாக இருந்தது.

Saturday, February 6, 2010

இவரை பார்க்கணும் மக்கா நீங்க

க‌ட‌லை நேர‌ம்

ப‌ண்ப‌லை நிக‌ழ்ச்சிக்கு
தொலைபேசி
அழைப்பு வ‌ந்த‌து

ப‌ழ‌கிய‌ பெண்
மாசமாகிவிட்ட‌தாக‌வும்
கருவை
என்ன‌ செய்வ‌தென்று
தெரியாம‌ல்
குழ‌ம்புவ‌தாக‌வும்
சொன்னானொருவ‌ன்

லவரமாகி அழைப்பைத்
துண்டித்த அந்த
இள‌ம் தொகுப்பாளினி
அடுத்த‌ பாட்டை
ஒலிப‌ர‌ப்பினாள்

யாருக்கும் டெடிகேட்
செய்யாம‌ல்.

***
சுத்த‌ம் சுகாதார‌ம்

ந‌ன்றாக‌
மென்று த‌ந்த‌
வெற்றிலை

லும்பில்
உறிஞ்சி எடுத்த‌
ம‌ஜ்ஜை

‌டித்துப்
ப‌ங்கிட்ட‌
க‌ட‌லையுருண்டை

பாதி முடித்த‌பின்
த‌ந்த‌
பால் ஐஸ்

குடும்பத்திலும்,
ந‌ட்பிலும்
நெருக்க‌மாக‌
இருந்த‌
பொழுதுக‌ள் அவை.

**

தோற்கும் முயற்சிகள்

நெரிசலில் சிக்கிய
ஆம்புலன்ஸ்

பெரிய துணிக்கடையில்
தனியே அழும்
சிறுவன்

வேலையில்லாமல்
இருக்கும் பழைய
நண்பன்

பிரச்னையால் மூடப்பட்ட
தொழிற்சாலை

ப‌ண‌க் க‌வ‌லையோடு
ஐசியு வாசலில் வருந்தும்
மகன் / ம‌க‌ள்

வைகளைப் பார்த்தும்
எதுவும் செய்ய‌முடியாம‌ல்
கவனம் திருப்பும்
என் முயற்சிகள்
அத்தனையும் கண்டிப்பாக
தோற்கும்.

**

இது அவரின் சில பருக்கைகள். படையல் வேணும் எனில் அவர் தளம்தான் போகணும்.தளம் இது...

http://roughnot.blogspot.com/

அறிமுகத்திற்கு நன்றி கணேஷ் கோபாலசுப்பிரமணியன்!

யாம் பெற்றேன் இன்பம்! இன்பம் தொடரலாம்...

Wednesday, February 3, 2010

சிதறு தேங்காய்


(picture by cc license thanks mckaysavage)

ரட்டும் வாங்க.
இனிமேல் பிறக்கவா போறோம்?"
பேசிக் கொண்டு போகிறார்
ஒருவர் மற்றவரிடம்.

தையோ இழந்திருக்க வேணும்
யாரிடமோ.

ந்த யாரோ ஒருவர்
கூடப் பிறந்தவராகவும் இருக்கலாம்.
இல்லாமலும் இருக்கலாம்.

தோற்றதை தேற்றும் பொருட்டு
தனக்கோ மற்றவருக்கோ
சொல்லிச் செல்பவராக இருக்கலாம்.
இல்லாமலும் இருக்கலாம்.

ருவேளை எனக்குத்தான்
சொல்லித் தொலைத்தாரோ என்னவோ?

ன்ன எழவோ வாங்க.
பிறக்கவா போறோம் இனிமேல்?

Monday, February 1, 2010

இப்படிக்கு அம்மா


(picture by cc license thanks rx_kamakshi)

தற்கும் இருக்கட்டுமென
எப்பவும் மாற்று மருந்தொன்று
இருக்கும் அம்மாவிடம்.

சாம்பார்.
இல்லைன்னா
புளிக் குழம்பு.

கேசவன் பலசரக்கு.
தரலைன்னா
சந்திரன் மளிகை.

ட்டி மாமி.
கொடுக்காட்டி
சீட்டுக்காரர்.

டைஜின்.
கிடைக்காட்டி
ஜெலுசில் mps.

ப்பாவையும் கூட
இரண்டு இடங்களில்
மாட்டியிருக்கிறாள்.

ஹாலில்
வெறுமனே அப்பாவாக.

பூஜையறையில்
பொட்டு வைத்த சாமியாக.