Monday, November 9, 2009

புரை ஏறும் மனிதர்கள் - ஒன்று

"ரம் பார்க்க ஒரு ஜென்மம் போதாது" என்று நண்பன் குமார்ஜி சொல்வான். எனக்கு மனிதர்கள்!...

நான் சந்தித்த மனிதர்களை இந்த தலைப்பின் கீழ் பதியலாம் என்பதாக யோசனை. கை எட்டும் தூரத்தில் இம்மனிதர்களை அடுக்கி வைத்துக்கொண்டு, சாய்வு நாற்காலி காலங்களில் இவர்களை தட்டி எடுத்து பார்த்துக்கொண்டோ, இவர்களுடன் இருந்த காலங்களை அசை போட்டபடி கண்மூட எதுவாக இருக்கலாம் எனக்கு. இதை என் பார்வைக்கு எனவே தயார் செய்கிறேன். இவர்களை நீங்களும் அறிவீர்கள் எனில் எனக்கு ஒரு குறையும் இல்லை.

வுதியின் என் அடர்த்தியான நிகழ்வுகளில் இருந்து எனக்கென ஒரு சாளரத்தை திறந்து தந்தார்கள், ரமேஷும் கண்ணனும். பெயர் கருவேலநிழல் என்றாக்கிக்கொண்டேன். இச்சாளரம் வழியாக நான் என் முதல் மனிதனை தேடி எடுத்து கொண்டேன். அவர்..

முதல் நிழல் என்ற S.A.நவாசுதீன்!

பின்னூட்டம் வழியாக அறிமுகமாகி, அலை பேசி மூலமென அடிக்கடி பேசிவருகிற நண்பர்கள், இந்த நவாஸ், ரவுத்திரன், தமிழன் கறுப்பி, சரவணா என ஒரு குட்டி உலகத்தை நான் இங்கு ஸ்ரிஷ்டித்து கொண்டேன். பெரும்பாலும் இவர்கள் எல்லோருமே ஜெத்தாவில்தான் இருக்கிறார்கள். சரவணா மட்டும் இங்கு. ஜெத்தா இங்கிருந்து 1300.கி.மீ. எனக்கு இளவரசர் ஒருவருக்கு பசியாற்றுகிற வேலை. முதலாளி எங்கு போனாலும் நானும் போகவேணும். அப்படி ஜெத்தா போக நேரிட்ட போது...

ஜெத்தா இறங்கி அறை அடைந்ததும் நவாஸை தொடர்பு கொண்டேன். "நாளை மாலை என்னுடன் தங்கும்படி உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்" என்றார் நவாஸ். அவர் சொன்ன நாளை மாலையும் வந்தது. குரல் வழியாக தடவி ஏற்றுக்கொண்ட மனிதனின் முகம் பார்க்க போகிற உற்சாகம் எனக்கு. அலை பேசியில், எங்கு சந்திக்கலாம் என திட்டம் வகுத்து தந்திருந்தார் நவாஸ்.

"புறப்பட்டேன், வந்துகொண்டு இருக்கிறேன், கிளம்புங்கள், சரியாக இருக்கும்" என என்னை நகர்த்திக்கொண்டே இருந்தது அவர் குரல். என்னுடன் பணி புரிகின்ற ராதா சேட்டா, இந்த கதைகளை எல்லாம் கேட்டு நம்ப முடியாத சுவராசியத்துடன் "நானும் வரவா ராஜா?" என்றார். "வாங்களேன்" என கூட்டிக்கொண்டேன். நவாஸ் குறிப்பிட்ட இடத்தை நானும் ராதா சேட்டாவும் நெருங்கிகொண்டிருந்தோம். மீண்டும் அலை மணி.."கோடு போட்ட டீ ஷர்ட்டா நீங்கள்?" என்று துணுக்காக தூக்கினார்."வலது புறம் திரும்புங்கள்" இதுதான் கடைசியாக அலைவழி குரல் அவருடையது. திரும்பினால், கார் நின்று கொண்டு இருந்தது. அருகில் கை உயர்த்திய நவாஸ்!

றக்க தொடங்கினேன் நான். காரைவிட்டு வேக, வேகமாக நடந்து வந்த அவரும் ஒரு புள்ளியாக கட்டி இறுக்கிக்கொண்டார்..முதல் சந்திப்பில் இவ்வளவு நெருக்கமான ஒரு தழுவுதலை உணர்ந்த நாள் இதுதான். அப்படி ஒரு சிரிப்பும் தளும்புதலும் நவாசிடம்! குரல் வழியாக எனக்குள் இருந்த நவாசின் சித்திரத்துடன் செய்து வைத்தது போல் பொருந்திக்கொண்டார், எதிரில் நின்ற நவாசும்!. பத்து நூறு வருடம் பழகியது போல் அப்படி ஒரு வாஞ்சை.

வுதி வந்து இந்த ஏழெட்டு வருடத்தில் முற்றிலும் ஒரு புதிய நாளை, முற்றிலும் பசுமையான மரத்தில் இருந்து பறித்து வைத்திருந்தார் நவாஸ் அன்று! சல,சல,வென பேசியபடி அவர் வீடடைந்தோம். பெரிய வீடு அது. மொட்டை மாடியில் இவர் அறை. விசாலமான தனி அறை. அறைக்கு வெளியே,பெரிய செட், நிழலுக்கு, வெயிலுக்கு என...எனக்கு அந்த அறை ரொம்ப பிடிச்சு இருந்தது. கண்விழித்ததும் பார்க்கும் படியாக குழந்தைகளின் புகைபடம் மாட்டி இருக்கிறார். படுக்கையில் இருந்தபடி நீட்டுகிற அப்பாவின் கரங்களுக்கு தாவ தயாராக நிற்கிறார்கள் நதீமும் நூராவும்!

ண்பர்களுக்கு தன் வாழ்வில் பெரிய இடம் வைத்திருக்கிறார் நவாஸ்! புகை படங்களை காட்டி நண்பர்கள் பற்றி பேசும் போது முகத்தில் வெளிச்சம் பரவுகிறது. ஜமால், அபுஅப்சர், பாலா, சபிக்ஸ், செய்யது, தமிழரசி என நிறைய வலை உலக நண்பர்களை நெருக்கமாக வைத்திருக்கிறார். இவர்களை பற்றி பேசும் போது இவர்களை அப்படியே நமக்குள்ளும் இறக்குகிறார். கிட்டத்தட்ட ஏழுமணிநேரம் என்னென்னவோ பேசிக்கொண்டு இருந்தோம்.

டையில் ராதா சேட்டா என்கிற ஒரு மனிதர் இருப்பதையே மறந்து போனேன் நான். நவாஸ்தான் அவரையும் காபந்து பண்ணிக்கொண்டார். சரளமாக மலையாளம் பேசுகிறார் நவாஸ். "சுத்தமான மலையாளம் ராஜா" என இப்பவும் புலம்புகிறார் ராதா சேட்டா! எங்களை காண வரும் போதே உணவுகளையும் தயாராக வாங்கி வந்திருந்தார். மனசு நிறைந்து இருக்கும் போது உணவும் வாசனையாக இருக்கிறது. நன்கு ருசித்து பசியாறிக்கொண்டேன். நாங்கள் கிளம்ப வேண்டிய சாயல் பார்த்ததும் "எங்க கிளம்புறீங்க...தங்கிட்டுதான் போறீங்க... விளையாடுறீங்களா...?" என்கிற குழந்தை தனத்தையும் கொண்டு இருக்கிறது அவர் முகம்!

"வீட்ல வந்து கொஞ்ச நாள் இருந்தாங்க ராஜா”, நம்ம வேலையா போறோம், எப்ப திரும்புறோம் என சொல்ல முடியாது. நாலு சுவத்துக்குள்ளேயே கிடப்பாங்க. நம்ம சுயநலத்துக்காக அவுங்களையும் இப்படி அடைக்க மனசு வரலை" என்று பேசுகிற, யோசிக்கிற மனசை வைத்திருக்கிறார் மனுஷன். அதாவது மனிதன்!

வாஸ் மக்கா...

ங்களை, அவ்வீட்டை, நண்பர் ரம்ஜானை, அந்த மொட்டை மாடியை, இது வீடுதான் என உணர்த்தவென ஒரு தட்டில் காய்ந்து கொண்டிருந்த மீந்த சோற்றை, தலையுரசி பறந்த விமானங்களை, வாசலை, பக்கத்து வீட்டில் நின்று கொண்டிருந்த காய்க்காத அந்த மாமரத்தை பொதிந்து வைக்கிறேன். இதை இங்கு இப்படி பொதிய இந்த மாமரமே காரணமாகிறது.

"நான் வந்த காலம் தொட்டு இந்த மரம் காய்க்கவே இல்லை"என்று வாசலில் வைத்து சொன்னீர்கள் நினைவு இருக்கா? அந்த ஒரு வார்த்தை, அந்த தருணம் அங்கிருந்து நான் இன்னொரு வீடடைந்தேன். அங்குதான் இருக்கிறார்கள், என் மீனா அத்தையும் சின்னப்பன் மாமாவும். அந்திமகாலம் வரையில் தன் குழந்தை வாசனை முகராத மீனா அத்தையும்,சின்னப்பன் மாமாவும்!

னி, அவர்களை காணும் போது இந்த மாமரத்தையும் நினைத்து கொள்வேன்...எனில், இந்த அனுபவம் தந்த உங்களையும்!

தீம், நூராவுக்கு என் அன்பு நிறைய!

39 comments:

சந்தான சங்கர் said...

//பறக்க தொடங்கினேன் நான். காரைவிட்டு வேக, வேகமாக நடந்து வந்த அவரும் ஒரு புள்ளியாக கட்டி இறுக்கிக்கொண்டார்..முதல் சந்திப்பில் இவ்வளவு நெருக்கமான ஒரு தழுவுதலை உணர்ந்த நாள் இதுதான். அப்படி ஒரு சிரிப்பும் தளும்புதலும் நவாசிடம்! குரல் வழியாக எனக்குள் இருந்த நவாசின் சித்திரத்துடன் செய்து வைத்தது போல் பொருந்திக்கொண்டார், எதிரில் நின்ற நவாசும்!. பத்து நூறு வருடம் பழகியது போல் அப்படி ஒரு வாஞ்சை.//


நெஞ்சை வருடும் நெகிழ்ச்சி

நவாஸ், பா.ரா , விஜய், நேசன்...

ஏன் இந்த பத்தி போதாது எங்களுக்கும்

நண்பர்களை பார்க்க தூண்டும் ஆவல் நிறைய

பாராய் பா.ரா.

Ashok D said...

சித்தப்ஸு ரைய்டு.. சொந்தகாரன்னு என் பேர உட்டுபுட்டுயே நைனா...

என்ன வயசாயிடுச்சு உங்களுக்கு .. அதுக்குள்ள இது மாதிரி நெகிழ்வுபதிவு?

யாத்ரா said...

இந்த வாழ்க்கை தான் எவ்வளவு அற்புதமானது இல்லையா, ரொம்ப நெகிழ்வாயிருக்கிறது.

இன்றைய கவிதை said...

அழகான பதிவு , நவாஸையும் தங்கள் நட்பையும் அனுபவித்தேன் இப்படி ஒரு வலை நண்பரா என வியந்தேன் ...நன்றி பாரா

ஹேமா said...

அண்ணா பொறாமையா இருக்கு.
அன்பைத் தவிர வேறு என்ன கண்டோம்.நவாஸின் அன்பு பின்னூட்டங்கள் எப்போதும் சொல்லிகொண்டுதானே இருக்கிறது.

Prasanna said...

நல்ல அனுபவம்.. பொறாமையா இருக்கு :))

பா.ராஜாராம் said...

@சங்கர்
நன்றி சங்கர்.எங்கே போய்விட போகிறது காலங்கள்..பாத்துரலாம் சங்கர். கட்டி இறுக்கிக் கொள்வோம்!

@அசோக்
மகனே,நான்,சவுதிக்குள்ளாக என்பதைத்தான் இங்கு என குறிப்பிடுகிறேன்.வலை உலகம் தந்த, தருகிற,தர போகிற நண்பர்கள்/மனிதர்கள் குறித்து பதிய,எனக்கு ஒரு முன்னூறு வயசு கேட்டுருக்கிறேன் "மேற்படியார்ட்ட"...நீங்களும் ரெகமண்ட் பண்ணுங்க.நன்றி மகனே..

@யாத்ரா
பார்க்க ஏங்கும் மற்றொரு முகம் இந்த யாத்ரா,மகன்ஸ்.ஊர் வரும்போது கொண்டுபோய் காட்டுங்க.நன்றி யாத்ரா!

@இன்றைய கவிதை
நன்றி மக்கள்ஸ்!

@ஹேமா
வாஸ்த்தவம்டா ஹேமா.நன்றி மக்கா!

@பிரசன்னா குமார்
வாங்க குமார்.சந்தோசம்.நன்றி மக்கா!

கவிதாசிவகுமார் said...

தோழமைக்காக மிக நெகிழ்வான பதிவு. எழுத்தில் நட்பும் அன்பும் மேலோங்கி நிற்கிறது. நல்லாருக்குப்பா.

ரோஸ்விக் said...

நல்ல நண்பர்கள் கிடைப்பது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம். உங்களை அன்போடு வரவேற்ற நண்பர்களுக்கு என் வாழ்த்துக்களும், நன்றிகளும்!

vasu balaji said...

ஆஹா. நவாசுதீனின் அறிமுகம் பிரமாதம் ராஜாராம். நன்றி.

மண்குதிரை said...

nekizhssiyaa irukkiRathu anney

விஜய் said...

சங்கர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.

திரைகடலோடித் திரவியம் தேடப் போனதில், அதனினும் அதிகமான, ஆழமான
சொத்தான நட்பை சம்பாதிருக்கிறீர்கள் பா.ரா.

வாழ்த்துக்கள் இருவருக்கும்

S.A. நவாஸுதீன் said...

மக்கா! இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா கொடுப்பீங்க.

உங்க அன்பு கிடைத்ததற்கு நானல்லவோ பாக்கியவான்.

அலைபேசியில் அன்பொழுகப் பேசும் அந்த மந்திரக் குரலின் சொந்தக்காரனை ஆவலோடு காண வந்ததும், இரட்டிப்பு சந்தோசம் நிறைந்த உங்கள் முகம் காணக்கிடைத்தது எனக்கல்லவோ மகிழ்ச்சியை பன்மடங்காக்கியது.

இப்படி அன்பும், பன்பும், பாசமும் நிறைந்த ஒரு உயரிய நட்பைக் கொடுத்த இந்த வலையுலகிற்கு எப்படி நன்றிக்கடனாற்றுவது.

மீண்டும் வெகுவிரைவில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டட்டும். (அப்பொழுதாவது ஓரிருநாள் தங்கும் தயார்நிலையோடு வாங்க மக்கா!)

ராதா சேட்டனையும் விசாரித்ததாக சொல்லவும்.

நிறைய அன்புடன் (கண்ணு கழங்கவச்சிட்டியளே மக்கா!)

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி

க.பாலாசி said...

நவாஸ்சை அறிமுகப்படுத்தியவிதமும் தங்களின் அனுபவமும் ரசித்தேன்....

புலவன் புலிகேசி said...
This comment has been removed by the author.
புலவன் புலிகேசி said...

நட்பு அறிமுகம் நன்று....நெகிழ்வுபதிவு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் நட்பு அனுபவங்களை பகிர்ந்ததில் மகிழ்ச்சி. கொஞ்சம் பொறாமை என்றும் தான் சொல்ல வேண்டும் ராஜா.

கல்யாணி சுரேஷ் said...

நெகிழ்ச்சியான பதிவு. நிகழ்வுகளை கண் முன்னாடி நிறுத்திட்டீங்கண்ணா. உங்களுக்கு பல நண்பர்களை கொடுத்த இந்த வலை உலகம் எனக்கு ஒரு சகோதரனை கொடுத்திருக்கு. கடவுளுக்குநன்றிண்ணா.

ஆரூரன் விசுவநாதன் said...

மனதைத் தொடும் பதிவு, நண்பர் நவாஸைப் பற்றி அரிய ஒரு வாய்ப்பு....


அருமை பா.ரா.

நேசமித்ரன் said...

எலும்பு தோல் மாமிசத்திலும் இலக்கமிட்டிருக்குமோ

என்ற சித்தர் பாடல் நினைவுக்கு வருகிறது மக்கா

நமக்கான தோள்களில் நமக்கான எண்கள்

உணரக் கொடுக்கும் இந்த வெளி
காதலுக்கு உரியது

கன்றின் நடை துவஙுகும் துள்ளல்
குழம்பு பாவுவதா பிரதானம்

அந்த நிமிடம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் பசுவின் கண்களை

பாலா said...

நான் என்ன இங்க புதுசா பின்னூட்டம் போட்டு கிழிக்க போறேன்
எல்லாந்தான் மேல இருக்கே

Anonymous said...

ஆம் நவாஸ் ஒரு அன்பான ராட்ஸசன்

gayathri said...

annana pathi azaka pativu

பூங்குன்றன்.வே said...

நல்ல பதிவு.என்னை போன்ற புதியவர்களுக்கு இந்த பதிவின் எழுத்து நடை பிரமிக்கிறது.

Karthikeyan G said...

Arumai, romba arumai..

rvelkannan said...

'புரை ஏறும் மனிதர்கள் '
எவ்வளவு அருமையான தலைப்பு
அந்த மனிதர்களை அன்புமிக்கவராக
காட்டுவதற்கு இந்த தலைப்பு மட்டுமே
போதுமே. உங்களை தந்த வலைப்பதிவுக்கு நன்றி

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ராகவன் said...

அன்பு பாரா,

கைய பிடிக்கும்போதே கண்ணீர் வருது பாரா! நவாஸ் நிச்சயமாய் பாக்கியவான்.

உறவுகளில் கண்ணீர் விட்டு பிசைந்து வனைகிறது உங்கள் பிரியமான நெட்டி பொம்மைகள், வர்ணப்பூச்சு ஏதுமில்லாமலும் தகதகக்கிறது அதன் பொலிவான இயல்பு வர்ணத்தில். இப்படி வாய்க்கப்பெற்றிருக்கும் நீங்களும் ஒரு அதிர்ஷ்டக்காரர் பாரா. விதைக்கப்பெற்றவர், அறுக்கப்பெறுவதும் அதே பிரியமும், அன்பும் தானே பாரா.

உங்கள் நண்பர்கள் பட்டியல் உங்கள் அன்பைச் சொல்கிறது, உங்கள் ஆதூரத்தையும் இன்ன பிற எல்லா நல்லதனங்களையும் சொல்கிறது பாரா.

நவாஸுக்கு வாழ்த்துக்கள், உங்களுக்கும்.

அன்புடன்
ராகவன்

SUFFIX said...

தாமதத்திற்கு மன்னிக்கவும் பா.ரா. தங்களது ஜெத்தா பயணம் குறித்து அழகிய பதிவு, அதிலும் நண்பர் நவாஸ் பற்றி எழுதியதில் மிக்க மகிழ்ச்சி, நானும் நவாஸும் ஒரே ஊர் தான் இருந்தாலும் வலை உலகின் மூலமே அவரை அவராக சந்தித்தேன், நாம் இருவருக்கும் அவரது அறிமுகம் ஒரே மாதிரி தான் போல, என்னை வலைக்கு இழுத்துப்போட்டவரே அவர் தான். நல்ல மனிதர். எனது பெயரையும் தங்களது பட்டியலில் கண்டு மகிழ்ச்சி, நட்புலகம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. அடுத்த முறை தாங்கள் ஜெத்தா வரும்போது கண்டிப்பாக நாம் சந்திக்க வேண்டும்.

இரசிகை said...

pullarikkuthu........!

இரசிகை said...

inthak kulaththil kal yerinthavarkal...........!!!

:)

"உழவன்" "Uzhavan" said...

மிக நெகிழ்வான பதிவு. இருவருக்கும் வாழ்த்துக்கள் :-)

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் ..
சங்கர்,
அசோக்,
யாத்ரா,
கேயார் மற்றும் மூவர்,
ஹேமா,
பிரசன்னா,
உதிரா குட்டி,
ரோஸ்விக்
வானம்பாடிகள்,
மண்குதிரை,
விஜய்,
அமித்தம்மா,
நவாஸ், :-))
சேகர்,
பாலாஜி,
புலவரே,
ஜெஸ்,
கல்யாணி,
விஸ்வா,
நேசா,!!!
பாலா,
தமிழ் :-)))
காயத்ரி,நல்வரவு காயத்ரி!
குன்றா,நல்வரவு குன்றா!
கார்த்திஜி,
வேல்கண்ணா,
ஸ்ரீ மக்கா,
ராகவன்(என்ன சொல்லட்டும் ராகவன்..)
சபிக்ஸ்,அவசியம் மக்கா.
புல்லரிக்கிற ரசிகை,(ஆம்.அதுவே!)
உழவரே,

யாவருக்கும் நவாஸை,என் நவாஸ் என காட்டி தந்ததில் மிகுதி சந்தோசம்.என், உங்கள் எல்லோரையும்...நம் நவாசுக்கும்!
மிகுந்த நன்றியும் அன்பும் மக்கள்ஸ்!

CS. Mohan Kumar said...

அற்புதமான பதிவு. நெகிழ்வாய் உள்ளது இந்த எழுத்து. தங்களுடன் இன்று பேசியதில் பெரும் மகிழ்ச்சி. தங்களுக்கு வலை உலகம் மூலம் உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. காலம் என்னென்ன விந்தையெல்லாம் செய்கிறது!! உங்களுக்கு 2009 ஒரு மறக்க முடியாத வருடமாக இருக்கும். எத்தனை அன்பை இந்த வருடம் சம்பாதித்து விட்டீர்கள். இதனை இந்த வருட துவக்கத்தில் நினைதிருப்பீர்களா!! வாழ்கை பல்வேறு ஆச்சரியங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது !!

அன்புடன் அருணா said...

ஆழமான நடபை அழகாகப் படம் பிடித்துக் காட்டியது உங்கள் பதிவு...பூங்கொத்து!

பா.ராஜாராம் said...

மிக்க நன்றி,மோகன்,அருணா.

Radhakrishnan said...

மனதை வருடும் எழுத்துகள், அதுவும் கடைசி வரிகள் மனதில் ஒரு அழுத்தம் தந்தது.