(picture by cc license thanks rx_kamakshi)
எதற்கும் இருக்கட்டுமென
எப்பவும் மாற்று மருந்தொன்று
இருக்கும் அம்மாவிடம்.
சாம்பார்.
இல்லைன்னா
புளிக் குழம்பு.
கேசவன் பலசரக்கு.
தரலைன்னா
சந்திரன் மளிகை.
வட்டி மாமி.
கொடுக்காட்டி
சீட்டுக்காரர்.
டைஜின்.
கிடைக்காட்டி
ஜெலுசில் mps.
அப்பாவையும் கூட
இரண்டு இடங்களில்
மாட்டியிருக்கிறாள்.
ஹாலில்
வெறுமனே அப்பாவாக.
பூஜையறையில்
பொட்டு வைத்த சாமியாக.
எப்பவும் மாற்று மருந்தொன்று
இருக்கும் அம்மாவிடம்.
சாம்பார்.
இல்லைன்னா
புளிக் குழம்பு.
கேசவன் பலசரக்கு.
தரலைன்னா
சந்திரன் மளிகை.
வட்டி மாமி.
கொடுக்காட்டி
சீட்டுக்காரர்.
டைஜின்.
கிடைக்காட்டி
ஜெலுசில் mps.
அப்பாவையும் கூட
இரண்டு இடங்களில்
மாட்டியிருக்கிறாள்.
ஹாலில்
வெறுமனே அப்பாவாக.
பூஜையறையில்
பொட்டு வைத்த சாமியாக.
82 comments:
சரிதான் இன்னிக்கு மனசு சரியாகிடலாம்னு பார்த்தா விடமாட்டீங்க போல ..:( ரொம்ப ஆழங்க..
இந்த கவிதை சொல்லும் வாழ்வியலும்
அந்த வாழ்வின் வழி வரும் வரிகளும்
அபாரம் பா.ரா.
தலைவரே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இப்படி எத்தனை !!!!!!! ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?
நேத்துதான் ஒரு பதிவரோட உங்கள பத்தி பேசிட்ருந்தேன்
குச்சி கவிதைல மொத்தமே 18 வார்த்தைகள் தான்.ஆனா எப்படி ஃபீல் கொண்டு வர முடிஞ்சதுன்னு..
இன்னிக்கும் அதே மாதிரி....ரகம்...
மிகமிகமிகமிகமிக பிடித்திருந்தது..வார்த்தைகள் அத்தனையும்.
//ஹாலில்
வெறுமனே அப்பாவாக.
பூஜையறையில்
பொட்டு வைத்த சாமியாக.//
என்ன சொல்லன்னு தெரியல.
அருமை.
கவிதை ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றதைத்தவிர மாற்று ஏதும் அகப்படமாட்டேங்குதே...
மிக ரசித்தேன்.
//ஹாலில்
வெறுமனே அப்பாவாக.
பூஜையறையில்
பொட்டு வைத்த சாமியாக.//
அற்புதம் கவிஞரே!!!
நேற்று சிவராமன் இடுகையை படித்தபின் இந்த கவிதையை எழுதினீர்களா ராசா?
வார்த்தைகள் அத்தனையும் அருமை.
வாசித்து முடிக்கையில் உண்டான உணர்வுகளை என்னவென்று சொல்வது... அருமையான கவிதை.
அற்புதம் அண்ணா.
//ஹாலில்
வெறுமனே அப்பாவாக.
பூஜையறையில்
பொட்டு வைத்த சாமியாக.//
மனதை தொட்டது உங்கள் கவிதை...
அற்புதம் பாரா
ஏன் இப்படி மனச வதைக்கிறீங்க பா.ரா. சோர்ந்து போகுது சந்தோஷமா:((
:( யாரும் தேறவிடமாட்டீங்கபோல...
நண்பா. அழகு அற்புதம்
எல்லாவற்றுக்கும் மாற்று உண்டு...அம்மா தவிர...!
அருமை அண்ணா
நல்ல ஆழமான கவி வரிகள் உணர்வை பிரதிபலிக்கிறது .
மனதுக்கு நெருக்கமான எழுத்து
எப்டி பா.ரா..
இவ்ளோ எளிமையா அவ்ளோ ஆழமா எழுதறீங்க??
அருமையா இருக்கு.
இவ்ளோ சுருக்கமா... அழகான ஒரு வாழ்வியல் சொல்ல உங்களால முடியுது பா.ரா.
beautiful as usual..!
beautiful as usual..!
கடைசி வரிகளில் அசத்தி விட்டீர்கள் ராஜா. நடத்துங்கள்.
மிகமிகமிகமிகமிக நல்லாருக்கு ப்ரிய மாம்ம்ஸ்..
மனச தொட்டுட்டீங்க...
அருமை.
அற்புதம்...சார்...
:-(.... :-(
முதலில் லேசாக்கி, கடைசி இரண்டு வரிகளில் பெரிய பாரத்தை வைத்து விட்டீர்கள்.
உணர்வுகளை எழுத்துகளிலும் உணரவைக்கும் பாங்கு உங்களுக்கு அத்துப்படி மக்கா ( என் உறவினர் இப்படித்தான் எல்லோரையும் அழைப்பார்). நீங்களும் அவ்வாறே அழைக்கிறீர்கள். நானும் உங்களை அழைத்துக் கொள்கிறேன்.
//ஹாலில்
வெறுமனே அப்பாவாக.
பூஜையறையில்
பொட்டு வைத்த சாமியாக.//
fantastic makkaa...
nalama ....
எத்தனையோ விஷயங்களைச்
சுருக்கி நறுக்குன்னு சொல்ல
பா.ரா அண்ணாதான்.
/////அப்பாவையும் கூட
இரண்டு இடங்களில்
மாட்டியிருக்கிறாள்.
ஹாலில்
வெறுமனே அப்பாவாக.
பூஜையறையில்
பொட்டு வைத்த சாமியாக./////
என்ன மக்கா சொல்ல. உங்களால்தான் முடியும் இதெல்லாம்.
ஒண்ணும் சொல்ல முடியல...நலலாருக்கு....
அருமை பா.ரா.
அம்மா ..இந்த வார்த்தையே கவிதை தான்.நல்லாருக்குங்க :)
அற்புதம். எதற்கும் மாற்று உண்டு. அம்மாவைத் தவிர.
அப்பா....
இப்படிக்கு அம்மாவுக்கு....பெரிய பூங்கொத்து!
உணர்ச்சியற்ற தொனியிலும், வார்த்தைகளிலும் சொல்வதைப்போல் விலகி நின்று சொல்லப்பட்டிருந்தாலும், எப்படி ஆழமாக தைக்கிறது.!!!!
ரொம்ப நல்லாருக்குது.simply superb.
கவிதை அபாரம்
மனதில் ஏற்றிவிட்டீர் பாரம்
மனதை நெகிழவைத்த கவிதை.
ரேகா ராகவன்.
கொல்லுறீங்க...
குருவே இப்படி எழுதற உங்க கைய காட்டுங்க
அம்மாவுக்கு மாற்றாக தெய்வம் கூட வரமுடியாதே
மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்
விஜய்
அன்பின் பா.ரா..
அற்புதம். அருமை..வேறு என்ன சொல்ல..நீங்கள் கவிதைக்கு எடுத்துக்கொள்ளும் விஷயங்களும், அதை சிறு சிறு வார்த்தைகளில் கவிதையாக்கி காட்டுவதும்..என்ன சொல்ல..வாழ்த்துக்கள்..வணக்கம் தங்கள் கவி ஞானத்திற்கு..நண்பராக கிடைத்தது என் பெரிய பாக்கியம்
வார்த்தைகளின் ஜுகல்பந்தி ஜோர்.. முடிவில் தெறிக்கிறது.. ரசனையின் உச்சம்
நல்லாயிருக்கு மக்கா!
kavithai padicha thirupthi irukku nanbare..
ம்ம் பதிவுலகின் ஜாம்பவான்கள் எல்லோரையும் விட என்ன சொல்லி விட போகிறேன் மக்கா
சலங்கை ஒலி படத்தில் அந்த போட்டோக்கார சிறுவன் சொல்லுவானே ”இது காமிரா”
அது போல இது கவிதை
:)
naala maarru sinthanai . nanru.
அடப்போங்க..ச்சும்மா திரும்ப திரும்ப எல்லாம் சொல்லிட்டு இருக்க முடியாது..;)
ரொம்ப பிடிச்சுருக்கு மனசை விடாது போல வாழ்ந்து பார்த்தவனிடம்தான் கற்றுகொள்ளவேண்டும் நான் உங்களிடம் கற்றுகொள்கிறேன் வாழ்வியலை...
சில சமயம் வார்தைகள் ஆற்றை விட்டு வெளியே ......வந்து விடுகின்றன மீனை போல
அந்த கணத்தில்
உள்ள
மீனை
போல
இருக்கிறது
இந்த பதிவு
பா.ரா அண்ணா! இந்தக்கவித நல்லாப்புரியுதுங்க.கூட எங்க அப்பா,அம்மா ஞாபகமும்.அருமை.அது தான் ஓட்டோட,பின்னூட்டமும்
கவிதை நல்லா இருக்கு பா.ரா அண்ணா. அம்மா நினைவு வருது
கைகளைக் கொடுங்க அய்யா!! கோடி ரூபாய்க்கு Insure செய்ய வேண்டியவைகள் அவை.. ஆழமான வார்த்தைகள்... நன்றிகள் பா.ரா அய்யா...
நச்.
கவிதை அருமை,பா.ரா.
”அம்மா:”-மற்றவர் நலத்திற்காக எப்போதும் யோசித்துக்கொண்டு இருக்கும் தெய்வம்.
கையைக் கொடுங்கள் ராஜாராம். பிடித்துக் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன்.
எளிய வார்த்தைகள். அது உணர்த்தும் பெரிய கடின அர்த்தங்கள். அம்மா !!
//அப்பாவையும் கூட
இரண்டு இடங்களில்
மாட்டியிருக்கிறாள்.
ஹாலில்
வெறுமனே அப்பாவாக.
பூஜையறையில்
பொட்டு வைத்த சாமியாக.//
மாம்ஸ்,
என்ன சொல்லி வாழ்த்தட்டும் இந்த வரிகளை...?
சொல்லிப் புரியாது போ.
அசத்தி விட்டீர்கள்!!
கவிதையில் கரைந்தேன்.
ரசித்தேன்.
2009 ல் தகப்பனாக இருப்பது...
2010 ல் இப்படிக்கு அம்மா...
மறக்க முடியாத கவிதைகள் அண்ணா.
குறுகத் தரித்த குறளினைப் போல சிறுகத் தரித்த கவிதைகள். யாவும் மிக்க அருமை நண்பரே. அறிமுகப் படுத்திய நண்பன் ஜோவுக்கு மிக்க நன்றி.
சூப்பர் கவிதை தலைவரே ..
அன்பு பாரா,
இப்படிக்கு அம்மா... எப்போதும் ஒரு மாற்று ஏற்பாடு இருந்து கொண்டு தான் இருக்கிறது எல்லோருக்கும். அம்மா பெரிய மாமனிடம் பேசாத போது சின்ன மாமன் இருந்தார், தாய் மாமன் உறவுக்கு.
மண்ணெண்ணெய் தீர்ந்து விட்டால் விறகடுப்பு, என்று சமையலிலும் சுணக்கம் ஏற்படாத வண்ணம் பார்த்துகொள்வாள்.
நிறைய எழுததான் ஆசை, நிறைய பேர் இப்பெல்லாம் அடிக்க வர்ராய்ங்க!
அன்புடன்
ராகவன்
மாற்றுக்குறையாத வார்த்தைகள்..!
எழுதினா கவிதை
இல்லைன்னா(லும்)
கவிதைதான்!
பின்றீங்க பாஸ். வாழ்த்துகள்.
//ஜெலுசில் mps.//
பாஸ். அது எம்டிஎஸ் (mts). மெக்னீசியம் டிரைசிலிகேட்தானே!
உருக்கம் பா ரா!
//எதற்கும் இருக்கட்டுமென
எப்பவும் மாற்று மருந்தொன்று
இருக்கும் அம்மாவிடம்.//
மாற்று மருந்துகள் இப்படியாக ஏராளம். சிந்தனை அருமை.
நல்ல சிந்தனை..
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
இடையறாத வேலை,கடந்த வாரம் தொடங்கி இன்று வரையில்.
சற்று முன்பு சவுதியின் பிடித்த வாசஸ்தலமான என் அறை திரும்பி இருக்கிறேன்.
இந்த கவிதைக்கு கிடைத்த உங்கள் எல்லோரின் வரவேற்ப்பு அளப் பெரியது.மறக்க இயலாதது.யாருக்குத்தான் பிடிக்காமல் போகும் அம்மாவை!
உங்கள் எல்லோருக்கும் நிறைந்த அன்பும் நன்றியும்!
ஹாலில்
வெறுமனே அப்பாவாக.
பூஜையறையில்
பொட்டு வைத்த சாமியாக.
..............மனதை தொட்ட வரிகள்.
ம்ம்ம்ம்...ஆழம்
remba late-aa vanthu solluren......
saahadikkireengale rajaram sir..
:)
remba late-aa vanthu solluren......
saahadikkireengale rajaram sir..
:)
அம்மா, அப்பா இரண்டு பேரையும் இன்று பொட்டு வைத்த சாமியாக பார்க்கும் நிலைமை தான்.
நெகிழவைக்கிறது
Post a Comment