பண்பலை நிகழ்ச்சிக்கு
தொலைபேசி
அழைப்பு வந்தது
பழகிய பெண்
மாசமாகிவிட்டதாகவும்
கருவை
என்ன செய்வதென்று
தெரியாமல்
குழம்புவதாகவும்
சொன்னானொருவன்
கலவரமாகி அழைப்பைத்
துண்டித்த அந்த
இளம் தொகுப்பாளினி
அடுத்த பாட்டை
ஒலிபரப்பினாள்
யாருக்கும் டெடிகேட்
செய்யாமல்.
***
சுத்தம் சுகாதாரம்
நன்றாக
மென்று தந்த
வெற்றிலை
எலும்பில்
உறிஞ்சி எடுத்த
மஜ்ஜை
கடித்துப்
பங்கிட்ட
கடலையுருண்டை
பாதி முடித்தபின்
தந்த
பால் ஐஸ்
குடும்பத்திலும்,
நட்பிலும்
நெருக்கமாக
இருந்த
பொழுதுகள் அவை.
**
தோற்கும் முயற்சிகள்
நெரிசலில் சிக்கிய
ஆம்புலன்ஸ்
பெரிய துணிக்கடையில்
தனியே அழும்
சிறுவன்
வேலையில்லாமல்
இருக்கும் பழைய
நண்பன்
பிரச்னையால் மூடப்பட்ட
தொழிற்சாலை
பணக் கவலையோடு
ஐசியு வாசலில் வருந்தும்
மகன் / மகள்
இவைகளைப் பார்த்தும்
எதுவும் செய்யமுடியாமல்
கவனம் திருப்பும்
என் முயற்சிகள்
அத்தனையும் கண்டிப்பாக
தோற்கும்.
**
இது அவரின் சில பருக்கைகள். படையல் வேணும் எனில் அவர் தளம்தான் போகணும்.தளம் இது...
http://roughnot.blogspot.com/
அறிமுகத்திற்கு நன்றி கணேஷ் கோபாலசுப்பிரமணியன்!
யாம் பெற்றேன் இன்பம்! இன்பம் தொடரலாம்...
47 comments:
நல்ல அறிமுகம்.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..
me the second
உங்களது பிடித்த வரிகள் பத்தியில் கொஞ்சநாளைக்கு முன் இவரோட வரிகள்
ஆயிரம் காலத்து பயிர்
இன்னும் எத்தனை காலத்துக்கு
அவர் தானே
அறிமுகத்துக்கும் நன்றி அண்ணா
சூப்பர் கவிதைகள்... இப்படியும் எழுதலாமோ? அறிமுகத்திற்கு நன்றி பாரா,சார்,
நல்ல அறிமுகம் தலைவரே. அப்புறம் அற்புதமாக வந்திருக்கு கருவேல நிழல். கூடிய சீக்கிரம் ஓர் இடுகை வரும் அந்த புத்தகத்தைப் பற்றி!!!....
நன்றிங்க...
நல்லாருக்கு கவிதைகள் பா.ரா சார் ,
அறிமுகம் கொடுத்ததுக்கு மிக்க நன்றி
nalla arimukam . super . ithu ponru marainthirukkum idukaikalai velikondu vaanka naanbaa.
அருமை பா.ரா. அண்ணா.
அறிமுகத்திற்கு நன்றி.
நன்றி அண்ணா.
பார்த்தேன்.பிடிச்சிருக்கு.
பகிர்வுக்கு நன்றி மக்கா
மிக்க சந்தோஷம்
அறிமுகத்துக்கு நன்றி
ரெண்டும், மூனும், ஒங்க மொழியில் கிளாஸ் பாரா.
நல்ல கவிதைகளை நல்ல மனிதன் அறிமுகம் செய்வதுதானே இயல்பு.வாழ்த்துக்கள் பாரா வார இறுதி சிறக்கணும்.
அழகிய அறிமுகத்திற்கு நன்றி.
நல்ல அறிமுகம்..
பகிர்வுக்கு நன்றிண்ணே..:))
ஸார்.. நெஞ்சார்ந்த நன்றின்னு வெறுமனே சொல்லிடமுடியாது இதுக்கு. உங்க அன்பு ரொம்ப திகைக்க வைக்குது பா.ரா.
-Toto
நீங்க இரசிச்சி சொல்லியிருக்கீங்கன்னா சும்மாவா மக்கா
தொடருவோம் ...
கணேஷ் கோபாலசுப்பிரமணியனுக்கும் ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
-Toto
நீங்க சொன்னீங்கன்னா மறுபேச்சு ஏது மக்கா.
மத்தபடி பகிர்ந்துகொண்ட கவிதைகளும் அருமையா இருக்கு.
நல்ல அறிமுகம்
நன்றி பகிர்வுக்கு:)
அறிமுகம் நன்றி.... வரிகள் அழகு...
நண்பர் Toto பற்றிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி அண்ணா. சினிமா பற்றிய அவரது ஆங்கிலப் பதிவுகள் அருமையாக இருக்கும். தமிழில் எழுதச் சொன்ன போது 'தமிழில் டைப் செய்வது சிரமமாக இருக்கிறது' என்று சொன்னார். இத்தனை அருமையான கவிஞராகவும் இருப்பார் என்று தெரியாது. இனி அவரையும் தொடர்வோம்.
நல்ல அறிமுகம் சித்தப்ஸ் :)
அனைத்தும் அருமை, அறிமுகத்திற்கு நன்றி.
பதிவுக்கும்,பகிர்வுக்குமாக ரெண்டு பூங்கொத்து!
பண்பலை நிகழ்ச்சிக்கு தொலைபேசி
அழைப்பு வந்தது. பழகிய பெண்
மாசமாகிவிட்டதாகவும் கருவை என்ன செய்வதென்று தெரியாமல்
குழம்புவதாகவும் சொன்னானொருவன்
கலவரமாகி அழைப்பைத் துண்டித்த அந்த இளம் தொகுப்பாளினி அடுத்த பாட்டை ஒலிபரப்பினாள் யாருக்கும் டெடிகேட் செய்யாமல்.
- தலைவரே,
இப்ப படிங்க நல்லா இருக்குல்ல கவிதை
நல்ல படையல்..
நல்ல கவிதைகள். நல்ல அறிமுகம்.
நன்றி.
அழகிய கவிதையுடன்,அழகான அறிமுகம்.
அறிமுகமே அமர்க்களம் என்றால் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.
வாழ்த்துக்கள்.
நல்ல அறிமுகம்
பகிர்வுக்கு நன்றி மக்கா.
நல்ல அறிமுகம்.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..
இவர் நிச்சயம் உங்கள் அண்ணனாகவே இருக்கணும்.. :) கலக்கல் பகிர்வுகள்.
Dear Pa.Ra.,
Thank you for the introductory note and the 3rd one is really good.
Congrats!
Regards,
Ragavan
அறிமுகத்திற்கு நன்றி அண்ணா
நல்ல அறிமுகம்.. பகிர்வுக்கு நன்றிண்ணே
அறிமுகத்துக்கு நன்றி மக்கா
சுத்தம் சுகாதாரம் அருமை
பகிர்வுக்கு நன்றி பா.ரா.
//குடும்பத்திலும்,
நட்பிலும்
நெருக்கமாக
இருந்த
பொழுதுகள் அவை.
//
பாரா,
இயல்பான கவிதைகளை உங்களால் மிகச் சிறப்பாக எழுத முடிகிறது. பாராட்டுகள்.
உங்கள் கவிதைபற்றி சிங்கை பதிவர் நண்பர் ரவிச்சந்திரன் மிகவும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தார்.
//இது அவரின் சில பருக்கைகள். படையல் வேணும் எனில் அவர் தளம்தான் போகணும்.தளம் இது...
http://roughnot.blogspot.com///
இந்த கவிதையை எழுதிய அவருக்கும் (Toto) பாராட்டுகள். சிறப்பாக இருக்கிறது கவித்துணுக்குகள்
நன்றி தலைவரே... எனது அலைவரிசையில் மேலும் ஒரு பண்பலையை ட்யூன் செய்து விட்டதற்கு.,..
கண்டிப்பா பார்க்கிறேன்
ஒரு நிமிசம் நீங்களே தான்னு நெனைச்சிட்டேன், கடைசில சுட்டியை கொடுத்து கனவை கலைச்சிட்டீங்களே :))
பகிர்வுக்கு நன்றி பா.ரா.
முதல் கவிதை :)
@கார்த்திகைப் பாண்டியன்
ரொம்ப நன்றி k.p!
@அசோக்
நன்றி மகனே!
@ஜோதி
அந்த கவிதையை எழுதியவர் கணேஷ் கோபாலசும்ரமனியன்.அவர்தான் இவரை மின் மடலில் அறிமுகம் செய்தார்.நன்றி மக்கா!
@நாஞ்சில் பிரதாப்
ரொம்ப நன்றி பிரதாப்!
@காவிரி
ஆகா!காத்திருக்கிறேன்.நன்றி காவிரி!
@அண்ணாமலை
அதே நன்றியும் அண்ணாமலை!
@staarjan
ரொம்ப நன்றி மக்கா!
@மதுரை சரவணன்
ஆகட்டும் சரவணன்.செய்யலாம்.மிக்க நன்றி சரவணன்!-சிவகங்கை ராஜாராம். :-)
@அக்பர்
ரொம்ப நன்றி அக்பர்!
@ஹேமா
நன்றிடா ஹேமா!
@நேசன்
நன்றி மக்கா! :-)
@ஸ்ரீராம்
ரொம்ப நன்றி ஸ்ரீராம்!
@காமராஜ்
நன்றி மக்கா!
தொடர இயலவில்லை நண்பர்காள்.
வேலை.நெருக்கடி.மன்னியுங்கள்.
எல்லோருக்கும் அன்பும் நன்றியும் மக்களே.
nallaayirukku....:)
Post a Comment