Tuesday, February 9, 2010
அவன்
(picture by cc license thanks rx_kamakshi)
முப்பத்தைந்து வருடம்
வாழ்ந்த வீட்டை தோற்ற மனிதன்
நண்பனின் ஆறுதலுக்கென பேசுகிறான்.
"its gone. போச்சு. போயே போயிந்தி"
குலுங்கிய என்னை
அல்லது
என்னைப் போன்ற ஒருவனை
தேற்றுகிறான்.
சுரக்கும் கருணை மடுவில் முட்டுகிறேன்.
பைத்தியக்காரனை போன்று.
காம்பிலிருந்து சொட்டுகிறது
பசுவின் இறுதிச் சொட்டு.
பாலின் நிறம்
சிவப்பாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
60 comments:
'அவன்' :(!
:((
seconda
no fourth
வழக்கமான பா.ரா. இல்லை. அப்புறம் நன்றி..
சித்தப்ஸ் நானா...
நீங்க வருத்தப்படுவீங்கன்னுதான் சொல்லல உங்ககிட்ட... சந்தோஷமாதான் இருக்கேன் சித்தப்பஸ் நிஜமா... விட்டத பிடிச்சுடுவேன்... Dont worry Mustafa :)))
கவித சூப்பரு சித்தப்ஸ்.. நடத்துங்க
:((
கவிதையோடு சேர்ந்து படமும் அழகு.
:'((
நான் அவன் இல்லை பார்ட் II
:((
பாரம்
ரொம்ப பிடிச்சிருக்கு பா.ரா அண்ணே.
//காம்பிலிருந்து சொட்டுகிறது
பசுவின் இறுதிச் சொட்டு//
கவிதை அழகு....
கனமா இருக்கு பா.ரா.
இப்போ தான் உங்கள் பின்னூட்டம் படிச்சுட்டு சந்தோஷமா தளம் வந்தா இப்படி அழ வைக்கிறீங்க.
:((
//சுரக்கும் கருணை மடுவில் முட்டுகிறேன்.//
மடியில் ?
கடைசி வரிகளில் மனதில் ரணம்!
வாழ்க்கை சில சமயம் இப்படி நேர்ந்துவிடுகிறது .கண்ணீரும் அந்த பசுவின் பாலை போல் சிவப்பாகத்தான் ஆகிறது
அந்த பதிவிலேயே அவர் சொன்னது கஷ்டமாதான் இருந்தது..:(
இப்ப நீங்க கவிதையா சொன்னது..:(
எல்லாம் சரியாகி மகிழ்ச்சி திரும்பட்டும்.
எங்கே இறக்கி வைக்க:(
@நேசன்
அது மடுதான் நேசா.மிக்க நன்றி மக்கா!
@அசோக்
//சந்தோஷமாதான் இருக்கேன் சித்தப்பஸ் நிஜமா... விட்டத பிடிச்சுடுவேன்... Dont worry Mustafa :)))//
ஆகட்டும் மகனே.நம்பிக்கையே வாழ்க்கை.வலிமையும்.
எனக்கும் நம்பிக்கை இருக்கு உங்கமேல.
விருப்பமும்,வேண்டுதலும் அதுவே.
:-)
அன்பு பாரா,
பாராவைத் தேடுகிறேன் இந்த கவிதையில், கிடைக்கவில்லை. விரித்த கைகளும், பிதுக்கிய உதடுகளும் உங்களை கிடைக்காததற்கு கட்டியம். யார் உங்கள் மூளையின் உள்ளங்கை மடிப்புகளை தொட்டு தடவி உருவியது?
எப்போதும் போல இல்லாத ஒரு பின்னூட்டம் எழுத உடண்பாடு இல்லை. இது வித்யாசமான மொழி ஆளுமை என்றால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. பாரா இல்லாத பாராவின் கவிதை பாராவினுடையது இல்லை என்றே படுகிறது.
உங்களை தொடர்பதிவு ஒன்றுக்கு அழைத்திருக்கிறேன், உங்கள் நேரம் கிடைக்கும்போது தொடரலாம்.
அன்புடன்
ராகவன்
படித்து முடித்தவுடன் இதயம் துடித்தது!!
என்ன சொல்லவென்று தெரியாமல் திகைத்து நின்றேன்.
ராகவனின் பின்னூட்டத்தை வழிமொழிந்து போகிறேன்.
அனுபவித்தவர்களுக்கு தெரியும் இந்த வலி..
மிக கனமான வரிகள் - சோகம் :(
adadaa adadaa maams
hai veery nice
//அனுபவித்தவர்களுக்கு தெரியும் இந்த வலி..//
அண்ணாமலையான் :)
நல்லாருக்கு ..
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
//பாரா இல்லாத பாராவின் கவிதை பாராவினுடையது இல்லை என்றே படுகிறது //
ராகவன்.. பாராவின் கவிதைகள் அனைத்துமே அடுத்தவன் மேல் உள்ள அன்பையே(எதிர்பார்ப்பே இல்லாத) சொல்லும்.
நெகிழ்ச்சி.
பாரா... ஒரு கதவு மூட இன்னொன்று விரியும்.
தேற்றவென இல்லை.
எதுவெனினும் வாழ்கையே.
எல்லாவற்றையும் தூக்கி
விழுங்குகிற மொழி,கவிதை
அதைச் செய்யும் கர்த்தாவெனும் காலாரைத் தூக்கிவிடுங்கள்.
முடியலையா எடுங்க போனை நாங்கள் இருக்கிறோம்.
பாராவின் பெரும்பகுதி அடுத்தவர்களுக்காக உருகி உருகியே நம்மையும் உணர வைக்கிறது ராகவன்
//அனுபவித்தவர்களுக்கு தெரியும் இந்த வலி.//
வழிமொழிகிறேன் :-((
முழு வலி.
அயயோ என கத்தத் தோன்றுகிறது.
//பசுவின் இறுதிச் சொட்டு.//
தாங்க முடியவில்லை மக்கா....
vali unarththa valu serkkum varikal arputham. kadaisi vari arumai.
வாழ்ந்த வீட்டையும், நாட்டையும் பிரிவதென்பது கஷ்டமான காரியம்தான் பா.ரா. அண்ணா.
அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,
அன்பு மணைவி அல்லது அன்பு அம்மா யாரு சமைத்தாலும் சப்பு கொட்டி திண்ணும் எனக்கு, ஒரு நாள் கொஞ்சம் உப்போ, காரமோ, புளியோ கூட அல்லது குறைய என்னம்மா, இன்னைக்கு சொதப்பிட்டன்னு சொல்றா மாதிரி தான் தோனுச்சு, அதனால் தான் இத எழுதினேன். இத்தனை பேர் வரிந்து கட்டி சண்டைக்கு வரும்போது, இதை தனியாக சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் சொல்லாமல் விடுவது சரியா என்றும் சொல்ல முடியவில்லை. மேற்சென்று இடித்தற் நட்பில்லையா, அதீத அன்பு இல்லையா, நான் தான் குழப்பமா என்று புரியவில்லை.
பாரா எழுதியதைப் பற்றி பேசியது யாருக்காவது வருத்தமாய் இருந்தால், என் அன்பும், மன்னிப்பும்.
அன்புடன்
ராகவன்
உணர முடிகிறது.
அவன் ! :((
அண்ணா எனக்கு விளங்கிடிச்சு.
மகனின் உணர்வை அப்படியே வார்த்தைகள் கோர்த்து கவிதையாக்கிட்டீங்க.நிச்சயம் உங்க அணைப்புத் தேவை அவருக்கு.
ஐயோ என்ன ராகவன் நீங்க..
உங்கள் முதல் பின்னூட்டம் வேலைக்கு கிளம்புமுன் பார்த்தேன்.பதில் சொல்ல அவகாசம் இல்லை.
இது ஒரு sittuvation song என எடுக்கலாம் மக்கா.சிவராமனின்(பைத்தியக்காரன்) "சமர்ப்பணம்"பதிவு பார்த்து,சோர்ந்து, பின்னூட்டம் போனால் அங்கு அசோக்கின் பின்னூட்டம் கிட்டத்தட்ட அதே அதிர்வை ஏற்படுத்தியது.நண்பனை தேற்ற ஆயிரம் மொழி வைத்திருக்கிறான் மனிதன்.ஆனால் அவனின் அந்தரங்கத்தை அவிழ்த்து நண்பனை தேற்றுகிறான்.அந்த மனிதனை பிடித்திருந்தது.அவனை பாட வேணும் போல் இருந்தது.
அந்த தருணத்தில் எழுதிய கவிதை இது.அவ்வளவுதான்.
சமிக்ஜையாக என் உணர்வை பிரதிபலிக்க விரும்பினேன்.
மேலும் ராகவன்,
என் எல்லா கவிதைகளும் உங்களுக்கு பிடிக்க வேனுமா என்ன?உங்கள் கருத்தை நேர்மையாக பதிவதில்தானே இருக்கிறது அன்பு.இதை தனியாக சொல்லி இருந்தால் அது எப்படி இந்த கவிதைக்கான விமர்சனம் ஆகும் மக்கா?
இதற்க்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டதுதான் சோர்வு ஏற்படுத்துகிறது.
காலையில் பக்ரைன் பயணம்.வெள்ளி திரும்புவேன் போல் தெரிகிறது.அவசியம் நீங்கள் அழைத்த தொடரை தொடர்வேன்.நேரம் வாய்க்கட்டும் மக்கா...
:(((
வேற சொல்லத் தெரியல..
மற்ற என் நண்பர்களுக்கு,
காலையில் பஹ்ரைன் பயணம்.வெள்ளி திரும்புவேன்.தனி தனியாக நன்றி சொல்லணும்.வந்து சொல்லலாம்.எல்லாம் நம் செல்ல ராஸ்கல்கள்தானே!
பொறுப்பீர்கள்.
:-)
எல்லாம் நேரம்...
:(
ம்ம்ம்
கொஞ்சம் புரியாதது போல இருக்கே அண்ணா?
பாலின் நிறம் சிவப்பு
வலியின் நிறம்?
:-( ம்ம்ம்
மிக கனமான வரிகள்
ரொம்ப நல்லா இருக்குங்க..,
ரொம்ப நல்லா இருக்குங்க..,
கடைசிலே வெச்சிருக்கீங்க ட்விஸ்ட்
ரசித்தேன்
கனமான வரிகள்.. nice
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
உங்கள் அணைவரின் பின்னூட்டங்களுக்கு மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா!
:(
Post a Comment