Wednesday, February 10, 2010
மிஸ் யூ புள்ளை
(picture by cc license thanks rx_kamakshi)
அங்கே:
"கடுகு டப்பாவில்
போட்ட சில்லரையை
எடுத்தீங்களாப்பா?"
"எடுக்கலையே சில்லரை"
"என்ன சொன்னீங்க இப்ப?"
"என்ன சொன்னேன்?"
"என்ன..சொன்னே..இப்போ?"
என்னடா சொன்னே இப்போ
என்பதற்கு முன்பாக...
"எடுக்கலையே புள்ளைன்னு சொன்னேன்"
**
இங்கே:
"யார்ட்ட பேசிக்கிட்டு இருந்தீங்க
நம்பர் பிசின்னு வந்துச்சு"
"காதலி...புதுசா"
"வெட்டிப்புடுவேன்..வெட்டி"
"காதலியவா...என்னையவா?"
"மூணையும்"
கப்சிப் கதவடை.
காரூபாய்க்கு மூணு வடை.
**
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
சிரிச்சு புரையேறி
நல்லா இருக்குண்ணா
arumai
அடடா... காமடிக்கவிதை...
வேணும் ... வேணும் நல்ல வேணும்
//"காதலியவா...என்னையவா?"
"மூணையும்"//
புள்ளைக்கு அரபு தேசமோ? :))
அஹா :) :) :)
:-)))))))))))))))))))
சில்லரையா சில்லறையா?
//"காதலி...புதுசா"
"வெட்டிப்புடுவேன்..வெட்டி"
"காதலியவா...என்னையவா?"
"மூணையும்"//
Superrrrrrr.......
//"காதலியவா...என்னையவா?"
"மூணையும்"//
ஜுப்பருங்கோ.......
என்னதிது? வர வர கொட்டம் அதிகமாயிடுச்சு :)
அனுஜன்யா
அய்யோ சிரிச்சி மாளலை பா.ரா. அருமை.:))
சிரிச்சு முடியல..
என்னா தலைவரே இப்படிக் கிளம்பீட்டிங்க?
////என்னதிது? வர வர கொட்டம் அதிகமாயிடுச்சு :)
////
repeat
அசத்தல்...
//கப்சிப் கதவடை.
காரூபாய்க்கு மூணு வடை.//
அதேதான் ! பிரிச்சு மேயுங்க
இதுக்குத்தான் ரெண்டு வேணும்கிறது!!
பாரா,
அருமை..
உங்கள் இடுகைகளை படிக்கும் போது நிச்சயம் ஊர் ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை...இதில் "கடுகு டப்பாவில் போட்ட சில்லரை"
ஒவ்வொன்றும் ஒருவித அனுபவம்...
வாழ்த்துக்கள் !
/"மூணையும்/
:)))
ஆஹா! குழந்தை இல்லாத வீட்டுல.... துள்ளிகுதிச்ச கதையா இருக்கு வர வர :))))
என்னதான் ஆச்சுன்னு தெரியல எங்க பாத்தாலும் ஒரே கலர்ல தெரியுது. காமலைக்கண் மாதிரி. ராகவன்,மாது .சிரிச்சு முடியல.லூசு மனுசா லூசு மனுசா.
அந்த பயம் இருக்கட்டும்
அது சரி எப்பவுமே இப்பிடிதானா
:)
அப்புறம் இந்த படம் ...
சக்கை போடு !!!
//கப்சிப் கதவடை.
காரூபாய்க்கு மூணு வடை//
அப்டியே மூக்கொழுகி டவுசர மேல தூக்கி விட்டுகிட்டேன்...
சைவகொத்துப்பரோட்டா said...
//"காதலியவா...என்னையவா?"
"மூணையும்"//
புள்ளைக்கு அரபு தேசமோ? :))///
அறை முழுதும் சிரிப்பு... கட்டிலடங்கா சிரிப்பு..
pudichiruku!!!
வட போச்சே..:))))
செம காமெடி தலைவரே
:-)
சிரிப்பான கவிதையில் கூட பிரிவின் தாக்கம் அப்பட்டமாக தெரிவதை உணர முடிகிறது
இப்படியே தொடருங்கள்....
அன்பு பாரா,
வீட்டில் காசு திருடுவது எல்லோருக்கும் வாய்க்குமா என்று தெரியவில்லை. எனக்கு வாய்த்திருக்கிறது, என் அப்பாவும் அம்மாவும் திருப்பதிக்கு போறதுக்கு சேர்த்து வைத்த ஸ்டேட் பாங்க் உண்டியலில் இருந்து பின் பக்கம் ஒர் ஹேர்பின்னை வைத்து லகுவாக நகர்த்த பொல பொல வென்று காசு கொட்டுவதை கண்டவுடன், தொடர்ந்து எடுக்க, சிகரெட்டுக்கும், டீத்தண்ணீக்கும் தோதாய் இருக்க யாருக்கும் அறியாமல் தொடர்ந்தேன், நிறைய சில்லரை இருக்கு, யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டேன், புத்திசாலித்தனமாக. அப்பா ஒரு முறை உண்டியல தூக்கி பார்த்துட்டு என்ன கனம் குறையுதே, என்னடி ஆச்சு, காசு எதும் எடுத்தியா, என்று கேட்க இல்லையே, அவன் எடுத்திருப்பான், உங்க பிள்ளையாண்டன். அப்பா, அவன் எடுத்திருக்க மாட்டான், அப்படியே எடுத்தாலும் போகுது, எடத்த மட்டும் மாத்தி வைச்சுடு இனிமே என்று போய் விட்டார். அம்மா என்னிடம் இது பற்றி கேட்க நான் இல்லை என்று மறுக்க, பதினொன்னாம் வகுப்பு படிக்கும் போது அம்மா போட்ட தோசைக்கரண்டி காம்பு சூட்டுத்தடம் இன்னும் தடவ தடவ சுகமாய் இருக்கிறது.
யார்ட்ட பேசிட்டு இருந்தீங்க, என்று எப்போதும் கேட்கும் மனைவியிடம், உன் சக்களத்தி என்று சொல்ல, அர்த்தம் புரியாமல் என்ன என்று கேட்பாள், ஒன்றுமில்லை என்று மழுப்புவேன், ஆனாலும் உனக்கு அதுக்கெல்லாம் சாமர்த்தியம் கிடையாது, என்று சிரித்து விட்டு நகர்வாள் ஒவ்வொரு முறையும், நானும் தீவிரமா தேடிகிட்டு இருக்கேன், ஒரு சக்களத்திய. சிக்க மாட்டேங்கிறா... என்ன செய்ய பாரா...
எள்ளல் துள்ளுகிறது, சலப் சலப் என்று சரவணப்பொய்கையில் பொரி பொட்டலம் போட்டவுடன் வந்து மொய்க்கும் மீன்களைப் போல.
அன்புடன்
ராகவன்
ஹையோ அமித்து அம்மா!
நான் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டே கீழே வந்தால் அதே வரிகளை நீங்கள்...!
:-)) என்ன ஒரு தாட் சிங்கிங் :-)
//என்னதிது? வர வர கொட்டம் அதிகமாயிடுச்சு :)
அனுஜன்யா//
Repeeeeet. Super.
அட்டகாசம் பன்றீங்க... கலக்குங்க
vetti puttingka super vettu. sillarai illai ithu pana muuttai. arputham. thotarnthu asaththunka
//கப்சிப் கதவடை.
காரூபாய்க்கு மூணு வடை//
அடடா.... என்னதிது!!!சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு :-))))
நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்கள்.
கவிதை நல்லாயிருக்குங்க பா.ரா.
-Toto
Roughnot.blogspot.com
//நேசமித்ரன் said...
அந்த பயம் இருக்கட்டும்
அது சரி எப்பவுமே இப்பிடிதானா
:)//
ஹாஹாஹா என்ன மக்கா இது ...!!!
யார் அந்தப் புள்ள மக்கா
படமே கதை சொல்லுது
நல்லாருக்கு பா.ரா.
நீங்க கொறஞ்ச வார்த்தையில கவிதை எழுதறீங்களேன்னு நினைச்சேன்.
இப்படி ராகவன வச்சி,ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு பதிவெழுத வக்கிறீங்களே !!!
உங்க உள்குத்து புரிஞ்சிரிச்சி !!!! கவிதை வ போ க...
சித்தப்பா... எங்கம்மாவும் கடுகு டப்பவுலதான் காச வைப்பாங்க... இதத்தான் கடுகு போல சேக்குரதுன்னு சொல்லுவாய்ங்களோ?? :-))
மூனும் பத்திரமா இருக்கட்டும் சித்தப்பு... இதுக்குத் தான் இந்த விஷயத்தை எலாம் வெளிய தெரியப்படுத்தக் கூடாது... (நான் சொன்னது அந்த காதலியை)
:-)))
அண்ணா கவிதை எழுதுங்க...
:)
அப்படித்தானுங்க, மேல நின்னும் பார்க்கணும். கவிதைன்னா சீரியஸா இருக்கணும்னு யாரு சொன்னது?
பின்னூட்ட ராகவனும் நல்லா எழுதுறாரு.
கப்சிப் கதவடை.
காரூபாய்க்கு மூணு வடை
அட்றா சக்கை...அட்றா சக்கை
சிரிப்புக் கவிதை ரொம்ப நாள் கழிச்சு
congrats ....kaathal vikatanla onga kavithai thane ? romba santhoshama irukku.
ha,ha,ha,ha.....
//"மூணையும்"
இதுக்கும் இந்த படத்துக்கும் ரொம்பப் பொருத்தமா இருக்கு...
அருமை பா.ரா
:-)))
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
உங்கள் அணைவரின் பின்னூட்டங்களுக்கு மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா!
:)
Post a Comment