Monday, February 15, 2010

இவனே திரையிடும் இவன் படம்


(picture by cc license thanks Nesster)

த்தக்கா பித்தக்காவென
ஓடி வருகிற குழந்தையொன்று
நடந்து போய்க் கொண்டிருப்பவனின்
காலை கட்டிக் கொள்கிறது.

சோற்று கிண்ணத்துடன்
விரட்டி வருகிற அம்மாக்காரி
ஸ்தம்பித்து நிற்கிறாள்.

குனிந்து
குழந்தையை தூக்கிக் கொள்கிறான் இவன்.

கீச் கீச் என கத்தியபடி
கழுத்தை இறுக்குகிற குழந்தை
பிடித்திருக்கிறது இவனுக்கு.

பிச்சு பறிக்க இயலாமல்
புன் முறுவலில் இருந்து
வாய் விட்டும் சிரிக்கிறாள் அம்மாக்காரி.

யந்து பேசி குழந்தையை
பிரிக்கிறான் இவனிடமிருந்து.

பிறகு
பஸ்ஸ்டாண்ட் வந்து விடுகிறது.

வ்வொருவராய் இறங்கி
தான் இறங்க தாமதமாகுமே என
உள்ளதிலேயே சிறிய வேறொரு
கூடா விருப்பை ஓட விடுகிறான்.

தில்,
இவனுடன் பஸ்ஸில் வந்த சுடிதார்காரி
"டைம் என்ன சார்?"
என தொடங்குகிறாள்.

47 comments:

Paleo God said...

ஒரு குறும்படமாவது எடுத்து போட்டுறுங்க..:) எங்க காட்சிகளில் அவ்வளவு கவித்துவமா இருக்காது..:))

சிநேகிதன் அக்பர் said...

இங்கே யாரும் டைம் கேட்க மாட்டேங்கிறாங்க. :)

அருமை அண்ணா.

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த படத்துக்கு இசை யாரு :))

அகநாழிகை said...

அருமை ராஜாராம்.

Ashok D said...

ரைட்.. ரைட்... பஸு கிளம்பிடிச்சு

மணிஜி said...

”பாரா”முகம் காண ஆசை!

Rajan said...

//”பாரா”முகம் காண ஆசை!//

அதேதான் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை பாரா

செ.சரவணக்குமார் said...

அருமை பா.ரா அண்ணா.

க.பாலாசி said...

ரசிக்கவைத்த கவிதை.... மனதில் பதிந்தது....

vasu balaji said...

தூங்கி எழுந்ததும் கட்டிப்போடும் ஒரு கவிதை வரும்னு யாரு வரம் கொடுத்தா உங்களுக்கு பா.ரா.?

பிரபாகர் said...

அருமை பாரா. கவித்துவமாய் ஒரு குறும்படம் பார்த்த உணர்வு... கலக்குங்கள்...

பிரபாகர்.

அன்பேசிவம் said...

மகாப்பா சத்தமா சொல்றேன் தப்பு எங்கிட்டதான், எனக்கு முழுவீச்சு புரியலை, விளக்கவும் ப்ளீஸ்
murli03@gmail.com

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்கு ராஜாராம்.

gulf-tamilan said...

நல்லா இருக்கு கவிதை!!!

Vidhoosh said...

படம் பிரம்மாண்டம்.

//தண்டோரா ...... said...

”பாரா”முகம் காண ஆசை!//

அப்டியே சீரோட தங்கச்சி வீட்டுக்கும் வந்துடுங்க.:))

rvelkannan said...

அட்டகாசம் பா.ரா

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் அருமை.

நந்தாகுமாரன் said...

wow ... what a visual ...

ஹேமா said...

அண்ணா....அண்ணா....
அண்ணாதான்.
அன்பு முத்தங்கள்.

taaru said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
மகாப்பா சத்தமா சொல்றேன் தப்பு எங்கிட்டதான், எனக்கு முழுவீச்சு புரியலை, விளக்கவும் ப்ளீஸ்//
நேக்கும் ஒரு காப்பி ப்ளீஸ்.....
api.gates@gmail.com

Unknown said...

சுடிதார் என்ன கலருங்க

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல கவிதை!!!
அருமை.

Deepa said...

////முரளிகுமார் பத்மநாபன் said...
மகாப்பா சத்தமா சொல்றேன் தப்பு எங்கிட்டதான், எனக்கு முழுவீச்சு புரியலை, விளக்கவும் ப்ளீஸ்////

enakkum :(

புலவன் புலிகேசி said...

ஒரு இயல்பான நிகழ்வுக் கவிதை..

Thenammai Lakshmanan said...

உறவுகளும் உணர்வுகளும் தொடர்கதைதான் பாரா...

Chitra said...

கவிதையில் ஒரு குறும்படம். அருமை.

கே. பி. ஜனா... said...

பாராட்ட வார்த்தை இல்லை பா. ரா, என்னிடம்! உயர்ந்த கவிதை.
கூடா விருப்பு: நல்ல வார்த்தை, கை கூடாத ஆசைக்கு...
--கே.பி.ஜனார்த்தனன்

பத்மா said...

கூடாவிருப்பு லிஸ்ட் இருக்கா பாரா சார் ?கனவு கனவு அதும் இனிமை தான்
மற்றொன்று நீங்க பாரா தானே ..உங்க கவிதை ரொம்ப பிடிக்கும் ன்னு ஆரம்பிக்குமோ?
dhool

Toto said...

குறும்ப‌ட‌ம் இனிமை.

-Toto

Romeoboy said...

பாதி புரியுது மீதி புரியல :(

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அட்டகாசமாகப் படம் காட்டிறீங்க பா. ரா.

பா.ராஜாராம் said...

@ஷங்கர்
ரொம்ப நன்றி ஷங்கர்! :-)

@அக்பர்
:-) நன்றி அக்பர் மக்கா!

@சைவ கொத்துப்பரோட்டா
நீங்கதான் எஸ்.கே.பி. -) நன்றி மக்கா!

@வாசு
மிக்க நன்றி வாசு!

@அசோக்
குசும்பு மகனே.. :-) நன்றி மக்கா!

@தண்டோரா
மணிஜி முகம் இன்று கண்டேன்.பிரமாண்டம்!நன்றி மக்கா!

@ராஜன்
பார்த்துருவோம் ராஜன்.எனக்கும் அதேதான்.நன்றி மக்கா!

@டி.வி.ஆர்.
ரொம்ப நன்றி டிவிஆர்!

@சரவனா
மிக்க நன்றி மக்கா!

@பாலாஜி
ரொம்ப நன்றி பாலாஜி!

@பாலா சார்
:-) ரொம்ப நன்றி பாலா சார்!

@பிராபாகர்
மிக்க நன்றி மக்கா!

@முரளி
:-) மிக்க நன்றி முரளி!

@சுந்தரா
நன்றி சுந்தரா!

@gulf-tamilan
நன்றி மதார்!

@வித்யா
அவசியம் வித்யா.வராம?சீரும் சிறப்புமாய் வந்துட்டாப் போச்சு. :-)நன்றி வித்யா!

@வேல்கண்ணா
ரொம்ப நன்றி வேல்கண்ணா!

@உழவன்
மிக்க நன்றி உழவரே!

@நந்தா
ரொம்ப நன்றி நந்தா!

@ஹேமா
நன்றிடா குட்டீஸ்!

@taaru
:-)மிக்க நன்றி பெரும்படை ஐயனார்!

@பேனா மூடி
பிளாக் அண்ட் ஒயிட் சுடிதார் மக்கா.மிக்க நன்றி பி.எம்!

@தீபா
மின் முகவரி தெரிவியுங்களேன் தீபா..rajaram.b.krishnan@gmail.com
நன்றி மக்கா!

@புலவன் புலிகேசி
நன்றி புலவரே!

@தேனு
ஆம் தேனு.மிக்க நன்றி மக்கா!

@இயற்கை
ரொம்ப நன்றி இயற்கை!

@சித்ரா
ரொம்ப நன்றி சித்ரா!

@ஜனா
மிக்க நன்றி ஜனா!

@பத்மா
நல்லாருங்கப்பா. :-) நன்றி பத்மா!

@toto
நன்றி டோடோ!

@ரோமியோ
தீபா இடத்தில் மின் முகவரி இருக்கு மக்கா.விரும்பினால் பேசுவோம்.நன்றி ரோமியோ!

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணா முகமா அது?

ஸ்ரீராம். said...

ரசித்தேன்...

செந்தில் நாதன் Senthil Nathan said...

அஞ்சாவது தடவ படிச்சப்போ புரிஞ்சுது...:)

அருமை...

உயிரோடை said...

நிறைய‌ முறை ப‌டிச்சும் புரிய‌லை. :(

மாதவராஜ் said...

அவன் படத்தை அவனேத்தான் திரையிட முடியும்.
நல்லாயிருக்கு மக்கா!

ராகவன் said...

அன்பு பாரா,

வாழ்த்துக்கள்.
எல்லோரும் குறும்படம் என்று பாராட்டுகிறார்கள். இதில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் ஒரு கிரியாஉக்கியாகி எல்லோருக்குள்ளும் ஒரு கலைஞனை உருவாக்குகிறது. மாதவராஜ் சொல்வது போல ஒரு சொற்சித்திரம் இது.
சதுர ஓட்டையாய் இருந்தாலும் வட்டமாய் விழும் ஒளி போல எப்படி, எந்த வடிவத்தில் இருந்தாலும், வாழ்க்கையை கிறுக்கிச் செல்கிறது எப்போதும் உங்கள் கவிதைகள்.

ஒற்றை வார்த்தையில் அருமை என்று சொல்ல வேண்டும் என்று தான் ஒவ்வொரு முறை பின்னூட்டம் எழுத வரும்போதும் நினைக்கிறேன். நினைக்கிறது என்னைக்கு நடக்கப் போகிறதோ தெரியவில்லை.

மௌனமாய் ஒரு பீங்கான் பாத்திரம் போல சில பூக்களைமட்டும் சொருகிக் கொண்டு இருக்க விழையும் மனசு, சத்தத்தை பரீட்சித்து பார்க்க, லேசாய் அசைத்து தள்ளிவிடுகிறது, உடைந்து கிலீர் என்று சிதறுகையில் மௌனம் உடைந்து விடுகிறது. ஆனால் சொருகிய பூக்களுக்கு கீழே வேர் பிடித்து இருக்கிறது இப்போது.

ரொம்ப நாளாச்சு பாரா உங்களுடன் சம்பாஷித்து, ஆனால் பெரிய வருத்தம் இல்லை, என்ன தோன்றுகிறதோ எழுதமுடிகிறது, நேரில் பேசுவது போல.

அன்புடன்
ராகவன்

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு..!

பா.ராஜாராம் said...

@ஜெஸ்
ரொம்ப நன்றி மக்கா!

@ப்ரியமுடன் வசந்த்
ஆம் வசந்த்.இவனின் முகம்!மிக்க நன்றி மக்கா!

@ஸ்ரீராம்
மிக்க நன்றி ஸ்ரீராம்!

@செந்தில் நாதன்
ரொம்ப நன்றி செந்தி!

@லாவண்யா
விடு.கடைசியா விளக்கம் கொடுத்திரலாம் மக்கா.நன்றிடா!

@மாது
இல்லையா மாது? :-)
மிக்க நன்றி மக்கா!

@ராகவன்
சதுர ஓட்டையாய் இருந்தாலும் வட்டமாய் விழும் ஒளி போல என யோசிக்க,பேச,எழுத உங்களால்தான் முடியும் ராகவன்.சதுப்பு நிலம் ராகவன் நீங்கள்!எனக்கும் தேவையாகத்தான் இருக்கு.நாளையாவது அழைக்க இயலுமா என பார்க்கலாம்.மிக்க நன்றி மக்கா!இன்னும் மேற்படியாரை காணோம். :-)

@குமார்
ரொம்ப நன்றி குமார்!

பா.ராஜாராம் said...

நிறைய நண்பர்கள்,முக்கியமாய் முதல் வாசகனான கண்ணன் முதற்கொண்டு கவிதை புரியவில்லை என்பதால்,இந்த விளக்கம்..

"இவன்" யாராலும் கவனிக்கபடாத ஒருவனாக இருக்கிறான்.இந்த இழப்பை அவனுக்கு பிடித்தமாதிரியான கற்பனையில் நிறைவு செய்து கொள்கிறான்.ஒரு பயணத்தில்,பயண அலுப்பு தெரியாதபடிக்கு ஒரு படம் ஓட விடுகிறான்.அது,அந்த குழந்தையும் அம்மாக் காரியும்.

பஸ்டாண்ட் வரவும் அப்படம் பாதியிலேயே முடிகிறது.கூட்டமெல்லாம் இறங்கி,தான் இறங்க தாமதமாகும் மற்றொரு சிறிய நேர காத்திருப்பிற்கு மற்றொரு சிறுபடம்.அது அந்த சுடிதார்க்காரி.அவ்வளவே மக்கா.

இதெல்லாம் சரி...

கவிதை என்பது புரியத்தான் வேணுமா?

பிடிச்ச கவிதை ஒன்னு.இப்ப வரையில் புரியவே இல்லை.உங்களுக்கே தெரியும்.. :-)

செந்தில் நாதன் Senthil Nathan said...

//பிடிச்ச கவிதை ஒன்னு.இப்ப வரையில் புரியவே இல்லை.உங்களுக்கே தெரியும்.. :-)//

புரிஞ்சுருதால் புடிசுருக்காதோ?..ஹி ஹி..

மெல்லினமே மெல்லினமே said...

romba arumaiyana kavithai annae!

கே. பி. ஜனா... said...

கொசுறு: அசத்தல்! --கே.பி.ஜனா

பா.ராஜாராம் said...

@செந்தி
:-)) ரொம்ப நன்றி செந்தி!

@மெல்லினமே மெல்லினமே
மிக்க நன்றி எம்.எம்!

@ஜனா
ரொம்ப நன்றி ஜனா!

இன்றைய கவிதை said...

நிழலோட்டமாய் அழகாய் இருக்கிறது பதில் பின்னூட்டத்தில் ஒரு சின்ன கவிதை வேறு அசத்தரீங்க சார்

நன்றி

ஜேகே