Wednesday, February 24, 2010

வாய்க்கால் வெட்டும் திட்டம்


(picture by cc license thanks Orin Zebest)

Pantene shampoo நல்லாருக்குப்பா
என்கிறாள் மகா.

Jergens body lotion பிடிச்சிருக்கு
போல சசிக்கு.

Bigen hair டை
தீர்ந்திருக்கிறது லதாவிற்கு.
(big பெண் தலை என்பதால் இருக்கலாம்தான்)

ப்பா இருந்தால்
பேரீச்சம்பளம் கேட்டிருப்பார்.
அப்பா நினைவாய்
அம்மாவிற்கு தரலாம்.

கோதரிகள் எதுவும் கேட்பதில்லை.
நானாக தந்தால்
வேணாம் என்பதும் இல்லை.

ரக்கு கொண்டு போகலைன்னா
கழுவில் ஏற்றுவார்கள் நண்பர்கள்.

ராசாராமா,
உன் மாங்கொழுந்து வெயிலும்
மரிக்கொழுந்து வாசனையும் அங்கிருக்கு.

ங்கிருந்து எதுவும் கொண்டு போக
கிறுக்கா உனக்கு?

36 comments:

க ரா said...

நல்ல கவிதை சார்.

ப்ரியமுடன் வசந்த் said...

//(big பெண் தலை என்பதால் இருக்கலாம்தான்)//

மிட் நைட் காமெடி

சத்தமா சிரிச்சுட்டேன்....

:)))

ப்ரியமுடன் வசந்த் said...

ஊருக்கு பொருள் வாங்கிட்டு போறதை கூட கவிதையா எழுத உங்களால மட்டும் தான் முடியும்...

Chitra said...

உன் மாங்கொழுந்து வெயிலும்
மரிக்கொழுந்து வாசனையும் அங்கிருக்கு.

.........அருமை. அழகு. உண்மை.

Romeoboy said...

நல்ல இருக்கு தலைவரே.

நசரேயன் said...

//இங்கிருந்து எதுவும் கொண்டு போக
கிறுக்கா உனக்கு?//

இதுவரைக்கும் இல்லை

நட்புடன் ஜமால் said...

அப்பா இருந்தால்
பேரீச்சம்பளம் கேட்டிருப்பார்.
அப்பா நினைவாய்
அம்மாவிற்கு தரலாம்.]]


நெகிழ வைத்துட்டீங்க மக்கா

Ramesh said...

//ராசாராமா,
உன் மாங்கொழுந்து வெயிலும்
மரிக்கொழுந்து வாசனையும் அங்கிருக்கு.///
:)))
கவிதை அருமை.

ஓஓஓ ஊருக்கு போகிறேன்.. நினைவுகளின் நிஜங்களில் மண்வாசனைதேடி....

சைவகொத்துப்பரோட்டா said...

இனிய பயண வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

இங்கும் கவிதை...எங்கும் கவிதை..

taaru said...

கலக்கல். ... உங்கள!!!!!! என்ன பண்றது பா.ரா சார்... வரும் போது அந்த வலது கை photocopy! with all fingers [including ur pen]... பார்சல்....

உயிரோடை said...

இந்தியாவுக்கு ப‌ய‌ண‌மா டெல்லி ப‌க்க‌ம் வ‌ருவீங்க‌ளா அண்ணா?

vasu balaji said...

வாங்க வாங்க!

Vidhoosh said...

:) அண்ணனுக்கு செண்ட கொட்டு கொட்டி வரவேற்பு அளிக்கிறேன்.

அன்பேசிவம் said...

யெஸ், வெல்கம் மகாப்பா....

எனக்கும் எதுவும் வேண்டாம், அப்ப நான் யார்?

Ashok D said...

சித்தப்ஸ் உஷாரு தான்... ஒன்னும் வாங்கிட்டுவரமுடியாதுன்னு கவிதையா சொல்லிட்டீங்களே.. நடத்துங்க :)

ஈரோடு கதிர் said...

தலைப்பு ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகவே இருக்கு

ஜெனோவா said...

டியர் பா.ரா,
எப்போ ?எப்போ? எப்போ வாரிங்க ;-)
இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள் !

அம்பிகா said...

\\உன் மாங்கொழுந்து வெயிலும்
மரிக்கொழுந்து வாசனையும் அங்கிருக்கு.\\
அது எங்கேயும் கிடைக்காது.
கவிதை அருமை.

க.பாலாசி said...

கவிதை நல்லாருக்குங்க... ரசித்தேன்...

SUFFIX said...

கடைக்கு போனாலும் கவிதையா, நல்லா இருக்கு அண்ணா.

gulf-tamilan said...

கவிதை அருமை.ஊருக்கு போறீங்களா???எப்ப?

Rajan said...

என்னத்த சொல்ல ! இங்க வந்தா சொல்லுங்க ...... பூங்கொத்தோட ம்ம்ம்ம் மாங்கொத்தோட வரேன் !

ரோஸ்விக் said...

வாங்க சித்தப்பு... வாங்க... வாய்ப்பு வாய்த்தால், நாம் ஊரில் வாய்க்கால் வெட்டுவோம் :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல கவிதை --வாங்க வாங்க

சாந்தி மாரியப்பன் said...

//இங்கிருந்து எதுவும் கொண்டு போக
கிறுக்கா உனக்கு?//

அடடா!!! ஒண்ணும் வாங்கிட்டு வரப்போறதில்லைங்கிறதை இப்படியும் கவிதையா சொல்ல முடியுமா!! :-))))

அன்புடன் அருணா said...

அடடா!!!

Unknown said...

ஆஹா ஆஹா.. அவ்ளோ அருமையா இருக்கு..

உங்க பயணம் இனிதாய் அமையட்டும்.

Thenammai Lakshmanan said...

எதுவுமே வேண்டாம் மக்கா எல்லாம் இங்கேயே கிடைக்குது ஏன் அங்கேருந்து வாய்க்காலை கஷ்டப்பட்டு வெட்டிக்கிட்டு இருக்கீங்க தென்னங்கீற்றூம் நிலவொளியும் விட்டுட்டீங்களே இங்கே

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஊருக்குப் போறீர்களா? ராஜாராம். சொல்லவே இல்லையே.
நகைச் சுவை கொட்டுகிறது உங்கள் வலையத்தில் இப்போ.

முரட்டு சிங்கம் said...

ஒவ்வொருவருடைய பார்வையும் வேறுபட்டவை. நமக்காக 4000 மைல் தொலைவிலிருப்பவர் சிந்தனை எப்படியிருக்கும்?.... இப்படித்தான்......
அழகாயிருக்கு நண்பா.

வாழ்த்துக்கள்...

ராகவன் said...

அன்பு பாரா,

அழகாய் இருக்குது இந்த கவிதை... உற்சாக குவியலாய் வந்திறக்கும் பொருளில் விரியும் சந்தோஷங்கள் எழுதி வைத்துக் கொள்ள வேண்டியவை...
சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது சுகமான விஷயம், அந்த பொருட்களை கடையில் பார்க்கும் போது உறவுகளின் முகங்களை தரிசிக்க முடியும், தொலை தூரத்தில் இருந்தாலும்.
வந்து பொழப்புக்கு திரும்பும் போது வீட்டில் கொடுத்து விடும், முறுக்கும், சீடையும், ஊறுகாயும், பருப்புப் பொடியும், உப்புக்கண்டமும் உடன் இருப்பவர்களுக்கு கொடுத்து விட்டு, நல்லாயிருந்துச்சுமா, எனும் போதும், ஊரில் இருந்து வந்தவுடன், என்னய்யா கொண்டு வந்திருக்கே எனும் போது பொட்டலம் பொட்டலமாய் பிரிப்பதில் இருக்கும் பெருந்தன்மையும், ஊதாரித்தனமும் வேண்டும் தானே ரெண்டு பக்கமும்.
அங்க கிடைக்காததா... கிறுக்கா பிடிச்சிருக்கு இங்க இருந்து கொண்டு போறன்னு யாரும் கேட்பதில்லை தானே...
இது அவர்களுக்கும் பொருந்தும் பாரா...
சலசலன்னு ஒரு வற்றாத சிறுஓடை மாதிரி சிரித்துக் கொண்டே ஓடுகிறது ஒரு கிளையாறு... உங்களை அறிந்தது பாக்கியம் பாரா... இருபத்திரண்டு வருஷம் முன்னாடி செய்த கவிதை, என்னென்னமோ பேசுது அன்பாய்... ஆயுள் முழுக்க கூட வரணும்னு வீரசின்னம்மாள வேண்டிக்கிறேன்.

அன்புடன்
ராகவன்

சிநேகிதன் அக்பர் said...

நெகிழ வச்சுட்டிங்கண்ணே.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

இந்த வருட இறுதியில்தான் நாடு திரும்பனும்.

ஒவ்வொரு நாள் இரவும்,"விடிஞ்சா பயணம்.சமர்த்தா தூங்குடா மக்கா " என்பது மாதிரி மனசை சமன் செய்து கொண்டு நாட் காட்டித்தாளை கிழித்து வருகிறோம்,நானும் என் போன்ற வெளியில் இருக்கும் நண்பர்களும்.

வருட இறுதி சீக்கிரம் வரட்டும். :-)

அணைவருக்கும் மிகுந்த அன்பும் நன்றியும் மக்களே!

இரசிகை said...

nallaayirukku......:)

நேசமித்ரன் said...

வருட இறுதி சீக்கிரம் வரட்டும். :-)