(Picture by cc licence, Thanks Mckaysavage)
ஒன்று
"நெனைக்கிற மாதிரியெல்லாம்
இப்ப இல்லை சார்.
எடத்துக்குதான் காசு
வீட்ல ஒண்ணுமில்லை"
வெட்டொன்று துண்டு ரெண்டாக
பேசிக் கொண்டிருந்தார்.
துடித்து விழுந்தன
இந்த பக்கம் வீடும்
அந்த பக்கம் அவனென்ற அதுவும்.
(picture by cc licence, thanks Halloween)
இப்ப இல்லை சார்.
எடத்துக்குதான் காசு
வீட்ல ஒண்ணுமில்லை"
வெட்டொன்று துண்டு ரெண்டாக
பேசிக் கொண்டிருந்தார்.
துடித்து விழுந்தன
இந்த பக்கம் வீடும்
அந்த பக்கம் அவனென்ற அதுவும்.
(picture by cc licence, thanks Halloween)
இரண்டு
தைரியம்
புருஷ லட்சணமெல்லாம்
அப்பாவிடமிருந்து வந்தது.
நானாக எடுக்கவில்லையென
தானாகத் தந்தார்.
அதை அப்படியே
எடுத்துக் கொண்டான் மகன்.
அப்படி பார்க்காதீர்கள்...
நானாகத் தரவில்லை,
தானாக எடுத்துக் கொண்டான்.
புருஷ லட்சணமெல்லாம்
அப்பாவிடமிருந்து வந்தது.
நானாக எடுக்கவில்லையென
தானாகத் தந்தார்.
அதை அப்படியே
எடுத்துக் கொண்டான் மகன்.
அப்படி பார்க்காதீர்கள்...
நானாகத் தரவில்லை,
தானாக எடுத்துக் கொண்டான்.
38 comments:
:)
அவன் அதுவான கதைகள்
அது- இந்த சொல் கவிதையாக்குகிறதா மீத சொற்களை எல்லாம்
முதல் கவிதை....
அஃறினை..... உயர்தினையாக
உயதினை.... அஃறினையாக......
காட்ட்டபடும் விதம் நன்று.
( என் புரிதல் இப்படியே)
ஆஹா இந்த புலர் பொழுதில்
நீ, நான், நேசன்.
காலை வணக்கம் பாரா.
காலை வணக்கம் நேசன்,
கலைவனக்கம் கருணாகரசு.
இங்கே கரிச்சான் குருவி கூவிக் கூவி விரட்டுகிறது இருளை.
நன்று
அண்ணா....!
இரண்டும் ஒன்றும் நன்று.
இரண்டுமே நிரம்ப
பிடிச்சிருக்கு மனுசனை
எனக்கும்
அப்படி பார்க்காதீர்கள்...
நானாகத் தரவில்லை,
தானாக எடுத்துக் கொண்டான்.
ஆஹா.. சபாஷ்.. கை கொடுங்கள்..
அருமை.
தைரியம்......:))
:))
அருமை. வாழ்த்துக்கள்
ரெண்டு குறும்படம்..! (மனதில் ஓடுகிறது)
பிறன் மேல் சாற்றுவதே ’இன்றைய’ வாழ்வு மாமா.
’தானே பொறுப்பு’- என ஏற்றுக்கொள்ளும் “தைரியம்” இப்போ எங்கே இருக்குது?
நல்லாச் சொன்னீங்க.
வீட்டுக்கும் உயிர் உண்டு. பலசமயங்களில் மனிதர்கள்தான் அஃறிணைகள்.செறிவான கவிதை.
manithan mathikavivum nesikkavum aarambichchuttaal.....yethaiyum jeevanullathaa maaththeedalaam...
kavithai nesippirkuriyathaagave irukkirathu:)
vaazhthukal rajaram sir!!
மாமு........ உங்க கவிதைகள் ஏதாவது ஒன்று ஞாபகபடுத்தி கொண்டே இருக்கிறது... வாழ்த்துக்கள். :)
இரண்டு அப்படியே உலுக்குகிறது. க்ளாசிக் பா.ரா.
அருமையான உணர்வுப்பூர்வமான கவிதை..
படித்து சிந்திக்கவைத்துவிடுவது உங்கள் சிறப்பு அண்ணே.
//வானம்பாடிகள் said...
இரண்டு அப்படியே உலுக்குகிறது. க்ளாசிக் பா.ரா.//
ஆமாம் பா.ரா. அருமை!!
//துடித்து விழுந்தன
இந்த பக்கம் வீடும்
அந்த பக்கம் அவனென்ற அதுவும்.//
பாலா சார் சொன்னதுபோல உலுக்குகிறது பா.ரா.
ராகவனுக்காக வெயிட்டிங்.
காலை வணக்கம் காமு சார்
காலை வணக்கம் கருணாகரசு சார்
வார்த்தைகளை
நீங்கள் கோர்க்க.
கவிதை எப்படி
அதுவாக..
தானாக மலர்ந்தது?
உங்கள் கவிதையில் வீடும் பேசும்!
இப்படியெல்லாம் என்னால எழுதமுடியாதே.. ஏன்னா நாங்கல்லாம் யூத்து...
சுமாரா இருக்கு சித்தப்ஸ் :)))
///சுமாரா இருக்கு சித்தப்ஸ் :))) ///
:)
புரிந்தும் புரியாமல்!!!!
.
அருமை
kavithai nalla irukkirathu!
kavithai nalla irunthathu!
kavithai nalla irukkum!
பங்காளியின் வாழ்த்துக்கள்
விஜய்
என்னமோ சுளீர்னு இருக்கு... பழைய சோத்துக்கு பச்சமொளகாய கடிச்ச மாதிரி...
இப்படித்தான் எழுதணுமோ கவிதையை!!! ம்ம்ம். பொறாமையா இருக்கு
வீட்ட வித்து போட்டீங்களா? சொல்லி அனுப்பவே இல்ல.. சரி! பாத்து தங்கச்சி பங்குக்கு உண்டானதை தாய்மாமன் சீராவே செய்ஞ்சு போட்டுடுங்க.. :))
///நானாகத் தரவில்லை,
தானாக எடுத்துக் கொண்டான். ////
சட்டை பையில் சில்லற வைக்காதீங்கன்னு சொன்னாக் கேட்டாத்தானே?
நம்ம அப்பா எவ்ளோ சூதனமா இருந்தாரு பாருங்கண்ணே!
சிறப்பானவை.
பெருங்கதைகளை சொல்லிக்கொண்டே இருக்கின்றன மக்கா.
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
வீட்டை விலைபேசினால் துடிப்பதென்ன செத்தே விழும் அவனும் அதுவும் கூட
நல்லா இருக்குங்க பா ரா சார்
வெட்டு ஒன்னு துண்டு இரண்டா கவிதை நல்லா இருக்கு அண்ணா
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
நிறைய அன்பும் நன்றியும் மக்கள்ஸ்!
Post a Comment