Tuesday, May 11, 2010
மிஸ்டு கால்கள்
ஒன்று
சொன்னது மூணு டீ
வந்ததும் அதுவே.
சும்மா வந்த நாலாவது டீ தாங்கியில்
என்னவோ சொன்னான் சிறுவன்.
இரண்டு
பறந்து பறந்து பார்க்கிறான்
பட்டாம் பூச்சி போல.
இடுப்பில் பிணைந்த
கயிறின் பெயரோ
தாத்தா போல.
மூன்று
பர்சில் இருந்த
(திருடிய) புத்திசாலி அட்டைகளை
திருடியவனுக்கு எழுதுகிற கடிதம்
நன்றி, நன்றியரிய ஆவல்
என தொடங்குகிறது...
நான்கு
வெளிர் நீலம் ஊதினேன்
மூங்கில் கடந்த நீர் முட்டையோ
மாநிறம் ஊதியது.
ஐந்து
காகம் சோறெடுத்த பிறகு
சாப்பிடுகிறாள் அம்மா.
முன்பும் அப்பா சாப்பிட்ட பிறகே
ஆறு
ஒரு மிஸ் கால் வந்தால், ஹாய்.
ரெண்டு வந்தால், தூங்கப் போறேன்.சரியா?"
சொல்லிப் போனாள்.
தூங்கப் போறாளா, ரெண்டு ஹாயா?
குழம்பினான்-தூக்கம் வராதவன்.
**
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
நல்லா இருக்கு பா.ரா. சார்.
நம்ம அறிவுக்கு ஐந்தும் ஆறும் ஓகே.
5 ம் 6 ம் என்னாடோ சாய்ஸ்ங்க... அருமை......
மிஸ்டு!
இந்த கால் படுத்தும் பாடு இருக்கிறதே .கலியுக அவஸ்தை .
அதும் தேவையாய் இருக்கிறதே ? இல்லையா பா ரா சார்
எல்லாமே நல்லாருக்கு.
ஒன்னு
இரண்டு
மூனு
நாலு
ஐந்து
ஆறு
மணியடிச்சா சோறு
என்ன முழிக்கிறீங்க.. மேல இருக்கறது நம்ம கவித.. இப்டிதான் எழுதனும் சித்தப்ஸ்.. :)
முதல் கவிதையிலிருந்து மீளாமலேயே இன்னும் கிடக்கிறேன்.
ஒன்று -
இரண்டு-
மூன்று -
நான்கு -
ம்ஹூம் இன்னும் புரியவே இல்லை..
ஐந்து - சொன்னது கதையும் அதோடு ஒரு வலியும்
ஆறு - கலக்கல்....
அனைத்தும் நல்லாயிருக்கு .
2 வதுக்கு முதல் மதிப்பெண் .
ரெண்டு,அஞ்சு,நாலு,மூணு, ஆறு, ஒண்ணு..திருவிழா ஜவ்வு மிட்டாயில செஞ்ச கடிகாரம், பெரிய முள்ளு, சின்ன முள்ளு, சாவி, பட்டி, கடிகாரம்னு குழந்தைங்க ருசிச்சி சாப்பிடறா மாதிரிதான்.
கவிதையின் நினைவில் இன்னும் இருக்கிறேன்....
நல்லாயிருக்கு ராஜாராம்
// செல்வராஜ் ஜெகதீசன்..
நம்ம அறிவுக்கு ஐந்தும் ஆறும் ஓகே. //
அதே நிலமதான் இங்கயும்..
:)
ஐந்து
காகம் சோறெடுத்த பிறகு
சாப்பிடுகிறாள் அம்மா.
முன்பும் அப்பா சாப்பிட்ட பிறகே
..... nice. :-)
:)
மிஸ்டு கால்களின் மீதான ஏக்கம்
இருக்கத்தான் செய்கிறது
சும்மா வந்த நாலாவது டீ தாங்கி போல
கயிறு பிணைந்த பட்டாம் பூச்சி போல
நன்றியரிய ஆவல் பொங்க
நீர் முட்டை போல
காகம் சோறெடுத்த பிறகு
சாப்பிடுகிறவள் போல
மிஸ்டு கால்கள் மீண்டும் அழைக்க முடியாத
ஆனால் மீண்டும் மீண்டும் ஒலிக்க
கூடியதாக
இருக்கத்தான் செய்கின்றன
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு. என்ன இது வரிசையா சொல்லிக்கிட்டு, அசத்தலான சிக்ஸர் அடிச்சிருக்கீங்க.
மிகப் பிடித்திருக்கிறது பா.ரா அண்ணா.
@ நேசன்..
கவிதைப் பின்னூட்டம் கலக்கலா இருக்குண்ணே.
இந்தக்கவிதைகள் சொல்ல வரும் செய்திகளை அப்படியே நீங்கள் ரசித்து விளக்க.. எப்படியிருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன். உங்கள் நண்பர்கள் லக்கி.!
அண்ணா எப்பவும்போல எல்லா...மே.
காக்காக்குச் சோறு அசத்தலா இருக்கு.
நன்றி ஆர்.கே!
நன்றி செ.ஜெ!
நன்றி பாலாஜி!
நன்றி ராதா! always with u. :-)
நன்றி பத்மா! ஹி..ஹி..ஆம்!
நன்றி அமைதிச்சாரல்!
நன்றி மகன்ஸ்! (இருடி இரு...வச்சுக்கிறேன்)
மீண்டும் நன்றி மகன்ஸ்! :-)
நன்றி கதிர்!
நன்றி மாரி-முத்து!(கொஞ்ச நாளா காணோம்?) :-)
நன்றி நண்டு@!
நன்றி பாலா சார்!
நன்றி சங்கவி!(வேலையோ?)
நன்றி நந்தா!
நன்றி ஆ.மு!(சமீபத்திய பிரமிப்பு நீங்கள்) :-)
நன்றி சித்ரா!
நன்றி வித்யா@கல்கோனா.காம்!
நன்றி நேசா@கம்பெனி.காம். :-)
நன்றி செ.ச.! (சும்மா கூப்பிட்டு பார்த்தேன் சரவணா) :-)
நன்றி செ.ச@நேசா.காம்!
நன்றி ஆதி!
// இந்தக்கவிதைகள் சொல்ல வரும் செய்திகளை அப்படியே நீங்கள் ரசித்து விளக்க.. எப்படியிருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன்.//
ஓய்..வச்சீர்ல ஆப்பு. :-) (பன் பிக்சர்சா?..கிடு..கிடு..:-))
நன்றிடா ஹேமா!
2 மிகவும் பிடித்துள்ளது பா.ரா..)
/ஒரு மிஸ் கால் வந்தால், ஹாய்.
ரெண்டு வந்தால், தூங்கப் போறேன்.சரியா?"
சொல்லிப் போனாள்.
தூங்கப் போறாளா, ரெண்டு ஹாயா?
குழம்பினான்-தூக்கம் வராதவன்.//
soo.. cute
ஒன்று மிக நன்று.
ஐந்து
ஆறும் பிடித்தன.
ஆறுமுகங்களும் அருமை!
கழிமுகத்தின் ரிங்-டோன் பிரமாதம்!!!
என்றும் நிற்கும் இந்த 16 (ஒன்றும், ஆறும்)
அன்பு பாரா,
ராகவனை கொஞ்ச நாளா காணோம்... எங்கேயோ தொலைஞ்சு போயிட்டான்னு நினைக்கிறேன்... படிக்கிறதுக்கு நேரமில்லை... பின்னூட்டம் போடுறதுக்கும் நேரமில்லைன்னு போலம்புறான் பாக்கும்போதெல்லாம்... ஒரு வழியா இழுத்து பிடிச்சு கூட்டி வந்தா ஏதோ கடமையா எழுதுறான்... யார் வீட்டுக்கும் போகாதவன்... உபசரிக்க பயப்படுபவனை கட்டி கொண்டு தொங்குகிறது தோரணங்கள் குலைக்கும் குரங்கு போல.
ஒன்று, இரண்டு, நான்கு மட்டுமே நல்லாயிருந்தது... மற்றவையெல்லாம் சுமார் ரகம். வெளீர் நீலம் ஊதினேன்... மாநிறம்... அருமையான கவிதை... நீர்குமிழ்களில் தன்னை பார்க்கும் வாழ்க்கை நிறையபேருக்கு வாய்ப்பதில்லை... உங்களுக்கு வாய்த்திருக்கிறது...
தேநீர் தாங்கியில் கொண்டு வாராத தேநீர் இன்னும் அடிநாக்கில் அடிசில் சுவையாய் ஒட்டி கிடக்கிறது... சொல்லாத வார்த்தைகள், வயலினில் இன்னும் வாசிக்கபடாத இசை, பிறக்காத குழந்தை, கொண்டு வரப்படாத தேநீர் உருசி அதிகம் தான் பாரா... இடுப்பில் பிணைத்திருக்கும் கயிறு இழுக்கும் பறக்கும் வண்ணத்துப்பூச்சியை... தரையில் கால் பாவ அழைக்கிறது நிதர்சனம். ஒரு சொல்லப்படாத விஷயம், எக்ஸ் factor இருக்கும் கவிதையின் பரிமாணங்கள் பன்மடங்காகிறது பாரா... நல்ல வாசிப்பனுபவங்களை தருகிறது படிக்கும் போது...
அன்புடன்
ராகவன்
5 ..
4 ..
2 ..
1 ..
remba pidichchurukku!!
vaazhthukkal....rajaram sir:)
மாமா,
அஞ்சாங்கவிதை.... அம்மாவை உயர்வாக்குகிறது. மனைவியின் மீது ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்குகிறது.
ஆறாங்கவிதை.... மனைவி/காதலி-யின் அன்பை ...ஒலிக்கிறது.
மொதக்கவிதை.... இரக்கப்பட்டே பழகிப்போன மனசு, செய்ய நெனைச்சும் செயல்படுத்த முடியாத நெலமை.
இதுக்கும் மேல பின்னூட்டிக்கிட்டிருந்தேன்னா , நீங்க கவிதையாக்குனத நான் கட்டுரையாக்கின பாவத்துக்கு ஆளாயிருவேன்.
மாமாவின் முத்திரை இப்போதும் அழுத்தமாகவே!
ஐந்து TOP!!!
நல்லா இருக்கு!!
ஆறு - கலக்கல்....
ஆறுமுகமும் அழகு
வாழ்த்துக்கள் பங்கு
விஜய்
ராகவன் .. நிறையா மிஸ்ஸிங் சகோ. எங்கே காணும்... ??
முத கவிதைலேயே , மனசு நின்று அல்லாடுகிறது பா.ரா .. போதாக்குறைக்கு டி கொண்டுவந்தவனின் பசி அறிந்த முகமும் வந்து தொலைக்கிறது ;-(
ஒருவேளை நாலாவது டியையும் சொன்னால் , சம்பளம் தருபவனை பார்த்துக்கொண்டே வாங்கிக்குடிப்பானா ? அல்லது கடையை ஒட்டிய சந்துக்குள் போய்விடுவானா ? ஆனாலும் நாலாவது டியை சொல்ல பயமாகவே இருக்கு பா.ரா , ஒருவேளை அந்த கடைக்காரன் அவனை வேலையை விட்டு துரத்திவிட்டால் .. ???
கழிலுக்கு வாக்கப்பட்டால், வெளிரிப்போவதென்பது இயல்புதான் ;-(
ஐந்தும் ஆறும் பிடித்திருந்தது , அப்படின்னா ரெண்டு , மூணு -- அது புரியல ;-)
நா, ரொம்ப லேட். 37 வது ஆளா வந்து என்னத்தச் சொல்லமுடியும் ?. ம்ம்.. அதனால ஒரே ஒரு ஹாய்.
எனக்கும் முதலாவது ரொம்ப பிடிச்சிருக்கு.
எல்லாமே நல்லாயிருக்கு.
அதிலும் முதலாவது கவிதை முத்து..!
அனைத்து மிஸ்டுகால்களும் முக்கியத்துவத்தை பெறுகின்றன பா.ரா அண்ணே
நன்றி மணிநரேன்!
நன்றி கேபில்ஜி!
நன்றி ஆர்.எல் சகா!
நன்றி ஜெகா! :-)
நன்றி எஸ்.கே.பி!
நன்றி ராகவன்! :-)
நன்றி ரசிகை! :-)
நன்றி சத்ரியன் மாப்ஸ்!
நன்றிங்க விசா!
வாங்க,வாங்க மற்றும் நன்றி பிள்ளையாண்டான்!
நன்றி விஜய் பங்கு. உங்கள் செஸ், கார்க்கி தளத்தில், ரசித்தேன்.
நன்றி கல்கோனா@ ராகவன்.காம்!
நன்றி ஜெனோ! (எம்புட்டு நாள் ஆச்சு!) :-)
நன்றி காமு! நானே லேட் மக்கா, வாழ்த்து சொல்ல. happy b'th day dear!
நன்றி அம்பிகா! முத்துலெட்சுமி கேட்டாங்கன்னா அண்ணன் வீட்ல இல்லைன்னு சொல்லிருங்க.ஆம்பளை கிடைக்கலை.அதான். :-)
நன்றி குமார்!
நன்றி அக்பர்! ( காலை, ஹாசா பயணம் அக்பர். புள்ளி சேர்த்தால் இணைவோம்.) :-)
நல்லாயிருக்கு
ஐந்தும் ஆறும்
ஜந்தாறு முறை வாசித்தேன்
அங்கேயே நின்று விட்டேன்
என்னவோ சொல்கிறது... //என்னவோ சொன்னான் சிறுவன்.// :)
Post a Comment