Thursday, May 13, 2010

கடவுள் அடக்கம்


(Picture by cc licence, Thanks Seattle Miles)

பிழைக்க மாட்டான் என்றிருந்த மகன்
பிழைக்க வேண்டி
வாங்கிய ஆட்டுக் குட்டிக்கு
நேர்ச்சை சாமி
பெயரே இட்டோம்.

தன்னை கொன்று
மகனை காப்பாற்றியது
பெயரைக் காப்பாற்ற
விரும்பிய சாமி.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


68 comments:

க ரா said...

அருமை பா.ரா. சார்.

க ரா said...

ஆனந்த விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

அருமை. வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

மிக அருமை வடிவமும்...வலிமையும் மிக சிறப்பு.....

பாராட்டுக்கள்.

பத்மா said...

இப்போ தான் விகடன்ல படிச்சுட்டு வரேன் உங்களுக்கு பாராட்டு போடலாம்ன்னு .தெரிஞ்ச பேர் பத்திரிகைல பாத்தா ரொம்ப சந்தோஷம் தான் .
ஆனா ஆட்ட நெனச்சா பாவமா தான் இருக்கு .எப்படியும் மத்தவங்களுக்காத்தான் சாவுது .பாவம்

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை பா ரா.

பிரபாகர் said...

விகடனில் வந்ததுக்கு வாழ்த்துக்கள் அண்ணே!

கருணாகரசு சொல்வதைத்தான் நானும்!

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை பா.ரா.

சைவகொத்துப்பரோட்டா said...

நிதர்சனம்!!
வாழ்த்துக்கள்.

Ravichandran Somu said...

கவிதை அருமை... வாழத்துக்கள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

இரசிகை said...

nallaayirukku.....:)

Unknown said...

விகடனில் படித்தேன்...

உயிரோடை said...

too good அண்ணா

சத்ரியன் said...

//தன்னை கொன்று
மகனை காப்பாற்றியது
பெயரைக் காப்பாற்ற
விரும்பிய சாமி.//

ஆனா பாருங்க மாமா,

அந்த சாமியக் கும்புடற நாம நம்ம பேரக் காப்பாத்த மறந்தே போயிடறோம்.

செம சூடு வெச்சிருக்கீங்க.

இளமுருகன் said...

அருமை
வாழ்த்துகள்

இளமுருகன்
நைஜீரியா

ஈரோடு கதிர் said...

அருமை

CS. Mohan Kumar said...

இங்கு வாசிக்கும் முன்னே விகடனில் படித்து ரசித்தேன் வாழ்த்துக்கள்

Ashok D said...

விகடனுக்கு வாழ்த்துகள் சித்தப்ஸ்

விஜய் said...

இயற்கையின் சமன்பாடுகள் புதிரானவை

வெட்டப்படும் ஆடுகள் இனப்பெருக்கம் குறைவதே இல்லை.

விகட வாழ்த்துக்கள் பங்கு

விஜய்

அன்பேசிவம் said...

நல்ல வேளை இங்க போட்டிங்க, நான் இந்த வாரம் ஆனந்த விகடன் வாங்கலை, ஆமா மகாப்பா, குத்தகைக்கு எடுத்துட்டிங்க போல...வாழ்த்துக்கள்....

வழமைபோல கவிதை அருமை......

Vidhoosh said...

கார்த்தால விகடன் வந்ததும் எப்டி மதன் பக்கங்களை தேடித் படிப்பேனோ அது போலவே பா.ரா. கவிதை வந்திருக்கான்னும் தானாவே பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

கிரிக்கெட் மேட்ச் போன்ற பிரபலமான நிகழ்சிகளை ஒளிபரப்பும் போது குட்டி எழுத்துல சின்னச் சின்ன விளம்பரங்கள் வந்து போகுமே, அதோட ரீச் என்னான்னு கேளுங்க.. தண்டோரா மணிஜி-க்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்.

அப்புறம், ராகவன் வந்து ஆட்டு கறி ரெசிபி கொடுக்கும் போது திரும்பி வாரேன். (சாமிக்கு நேர்ந்து விட்டதை சமைச்சு சாப்பிடுவீங்களான்னு தெரில.)

நாங்கல்லாம் நிறையா நெய் விட்டு பண்ணும் சக்கரை பொங்கலை சாமியே சாப்பிடும் என்ற நாள் வந்தே விட்டால் டால்டாவும் கருப்பட்டி வெல்லமும்தான் ஆகும் என்று சொல்லி விடுவோம்.
(இதை லேசா எடுத்துக்கோங்க. No offenses meant : )

vasu balaji said...

சாமி படிச்சிச்சோ கைய ஒத்திக்கும்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அன்பின் பாரா...

தொடர்ந்து ரசித்துக் கொண்டே இருக்கிறேன் :)

-ப்ரியமுடன்
சேரல்

Balakumar Vijayaraman said...

சிலிர்ப்பு.

க.பாலாசி said...

அருமை....நல்ல கவிதைங்க தலைவரே....

செ.சரவணக்குமார் said...

இன்று காலையிலேயே அலுவலகம் வந்துவிட்டேன், லீவு நாளில் வேலை செய்யும் கசப்புடன்.

ஆனால் கடவுள் அடக்கத்துடன் இந்த நாளைத் துவங்குவது மற்ற எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிட்டது.

ஆம் பா.ரா, சேரல் சொல்வதுபோல தொடர்ந்து ரசித்துக்கொண்டிருக்கிறோம்.

ருத்ர வீணை® said...

அருமை பா.ரா.

Paleo God said...

அற்புதம்! :)

ஜெனோவா said...

மிக அருமை பா.ரா , ரசித்தேன் .. வாழ்த்துக்கள் !! ;-)

மணிஜி said...

கொன்றால் பாவம்..தின்றால் தீரும்..

x-(

நேசமித்ரன் said...

தலைப்பு .,...

கவிதையை விட தலைப்பு நின்னு விளையாடுது பாரா

விகடனுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துகள்

புதிய கரு... உங்கள் வழுக்கிப் பேசும் மொழியில்

உங்கள் தேசத்தில் மாரி வாரம் தோறும் பெய்ய வைக்கிறீர்கள் மன்னா

vasan said...

இருந்தும் இல்லாத‌வ‌ன்,
இற‌ந்தும் இருப்ப‌வ‌ன்,
இர‌ந்தால் இரைப்ப‌வ‌ன்,
இழ‌ந்தும் ஈப‌வ‌ன்,
வெட்டுப்ப‌ட்ட‌ சாமி கூட‌,
விருந்தாய் நாம் கொண்டாட‌,
அட‌டா .... அருமை பா ரா.

Radhakrishnan said...

:) வாழ்த்துகள். சில வரிகளில் பல விசயங்கள். அருமை பா. ரா

கே. பி. ஜனா... said...

அருமையான சுருக்கமான வரிகள்! -- கே.பி.ஜனா

ஹேமா said...

குட்டிக் கவிதைல பெரிய விஷயம் சொல்லும் அண்ணா பாராட்டுக்கள்.

Ashok D said...

//குட்டிக் கவிதைல பெரிய விஷயம் சொல்லும் அண்ணா பாராட்டுக்கள்.//

ஆட்டுக்குட்டிய தானே சொல்லறீங்க

பா.ராஜாராம் said...

//ஆட்டுக்குட்டிய தானே சொல்லறீங்க//

:-)

அடிச்சான் பாரு சைக்கிள் கேப்ல சிக்ஸ்சர்.

enjoyed மகனே. :-))

VELU.G said...

அருமையாயிருக்கு சார்

மாதேவி said...

நல்ல கவிதை.

விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

அன்பு பா.ரா அண்ணா,

அருமை...

உண்மைதான்...

நல்லாயிருக்கு

இரசிகை said...

// நேசமித்ரன் said...

உங்கள் தேசத்தில் மாரி வாரம் தோறும் பெய்ய வைக்கிறீர்கள் மன்னா
//

:))

கதிர்பாரதி said...

நல்ல கவிதை. தொடர்ந்து உங்கள் கவிதைகளை கவினிக்கிறேன். கதிர்பாரதி சீனியர் சப் எடிட்டர் கல்கி

Jackiesekar said...

சில இலக்கியவாதிகள் என் மீது வைத்த விமர்சனங்களைக் கேள்விப்பட்டு அரண்டுவிட்டேன்///

பாரா
விகடன்ல இன்னைக்கு காலைல படிச்சேன்... சூப்பர்..

Thamira said...

சிறப்பான ஒன்று.

(ஒரு சின்ன கருத்து. சுகுணா ஒரு சிறந்த கவிஞர் என்பதை அறிவோம். நீங்கள் 'நன்றி சுகுணா' என்றும் போடுவதால் அவர் எழுதி, விகடனில் வந்து நீங்கள் ரசித்ததை எங்களோடு பகிர்கிறீர்கள் என்றும் ஒரு அர்த்தம் தொனிக்கிறது. மேலும் விகடனில் கவிதை வெளியானதற்காக சுகுணாவிற்கு நன்றி சொல்வது பொருத்தமாகவும் இருக்காது. தவறெனில் மன்னிக்க‌)

தமிழ்நதி said...

கவிதை நன்றாக இருக்கிறது. ஆடு வெட்டப்பட்டதைச் சொல்லாமல் சொல்லியிருப்பது. இந்த நுட்பமே கவிதை.

ஆதிமூலகிருஷ்ணன்,

என்னுடைய கதையும் ஆனந்தவிகடனில் கடந்தவாரம் வெளியானது. நன்றி சொல்ல மறந்துவிட்டேன்:)ச்ச்ச்சச்ச்சோ...

சிநேகிதன் அக்பர் said...

அற்புதமான சிந்தனை கவிதையில்.

அருமை அண்ணா.

விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

விகடனில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்!பாவம் ஆடுகள்!

பா.ராஜாராம் said...

நன்றி ஆதி!

கவிதைகளை ஆரம்பம் முதலே ஆ.விக்கு அனுப்பியவன் இல்லை. இப்பவரையில் சுகுணா மின் முகவரிக்கு அனுப்பி வருகிறேன். இவர்தான் ஆ.வியில் சேர்க்கிறார். இது எனக்கு வசதியாக இருக்கிறது, காரணம், ஆ.விக்கு அனுப்பி தேர்வாகிறதா இல்லையா என்பதை தெரிய பிரசுரம் வரையில் காத்திருக்க வேணும். இல்லையா?

அப்படி தேர்வாகிற கவிதைகளை பிரசுரத்திற்கு முன்பாக நாம் தளத்திலும் பதிய முடியாது/கூடாது என்பதாலும் சுகுணா திவாகரின் பங்கு இங்கு மிக உதவியாக இருக்கிறது.

கவிதை எழுதி, தம்பிக்கு அனுப்புவதை(அவன்தான் தளத்தில் போஸ்ட் பண்ணுகிறான்) சுகுணாவிற்கும் பார்வர்ட் பண்ணுகிறேன்.

ஆ.வி யில் தேர்வாகாத கவிதைகளை, சுகுணாவிற்கு ஒரு போன் செய்து தெரிந்து கொண்டு என் தளத்தில் பதிந்து வருகிறேன்.

இது சுகுணா ஆ.வியில் இருப்பதால் சாத்தியமாகிறது. இதற்கு சுகுணாவிற்கு நன்றி சொல்வது என் கடமை ஆகிறது.

நல்லது ஆதி,

இந்த கேள்வியின் மூலம், இந்த பதிலின் மூலம், பதிவ நண்பர்களுக்கு, ஆ.வியின் கதவை திறக்க சுகுணா என்ற பதிவர் உதவியாக இருந்தார் என்பதை இங்கு பதியவும் உதவியாக இருந்தது. புரை ஏறும் மனிதர்களில் ஒருவரை பதிய...

இதற்கொரு நன்றி ஆதி!

Thamira said...

தமிழ்நதி,

'வாடகை வீடு' கதையை வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது.

'நீயும்தான் கதை எழுதறே? இப்பிடில்லாம என்னைக்கு எழுதப்போற?'ன்னு ஃபிரென்ட் என்னை நக்கல் பண்ணினான். :-((

Thamira said...

மதிப்புக்குரிய பாரா,

பதிவுலகுக்கும், விகடனுக்கும் வாயிலாக சுகுணா இருப்பது மகிழ்வான விஷயம். நிச்சயமாக சுகுணா நம் நன்றிக்குரியவரே. தாங்கள் மட்டுமின்றி பல பதிவர்களின் படைப்புகளும் விகடனில் வெளியாக அவர் காரணமாகவே இருந்துவருகிறார். அவர் விகடன் பொறுப்பில் இல்லாமலிருப்பாரேயானால் நன்றியை எழுத்தில் பதிவதில் தவறு இருக்காது. ஆனால் அவர் விகடனில் பணிபுரிவதாலேயே அவருக்கு நன்றி சொல்வது பொருத்தமற்றும், மேலும் தவறான அர்த்தம் தருவதாகவும் அமைந்துவிடுகிறது. இதை சுகுணாவும் ஒப்புக்கொள்வார் என்றே கருதுகிறேன்.

நசரேயன் said...

வாழ்த்துக்கள், வாசகர்களுக்கு எதாவது கட்டிங் உண்டா ?

பா.ராஜாராம் said...

//அவர் விகடன் பொறுப்பில் இல்லாமலிருப்பாரேயானால் நன்றியை எழுத்தில் பதிவதில் தவறு இருக்காது. ஆனால் அவர் விகடனில் பணிபுரிவதாலேயே அவருக்கு நன்றி சொல்வது பொருத்தமற்றும், மேலும் தவறான அர்த்தம் தருவதாகவும் அமைந்துவிடுகிறது. இதை சுகுணாவும் ஒப்புக்கொள்வார் என்றே கருதுகிறேன். //

ஆம் ஆதி,

அவரும் இதை விரும்பவில்லை. "எத்தனை கவிதைக்கு நன்றி சொல்வீர்கள்?" என்கிறார்.

இருக்கட்டுமே.

ஒரு நன்றிதானே, சுகுணா மற்றும் ஆதி!. :-)

யோவ்..விட மாட்டீரா நீர்? (மதிப்பிற்குரிய பாராவாமே?) :-)

பா.ராஜாராம் said...

மற்ற என் நண்பர்களுக்கு,

வேலைக்கு கிளம்ப வேண்டிய நேரம் மக்களே.

வந்து பேசலாம். சரியா?

Unknown said...

கடவுள் பெரும்பாலும் இப்படித்தான் அடக்கப் படுகிறாரோ.. ?

கவிதை அட்மாஸ்பியர் ரொம்ப பிடிச்சுருக்கு..

:)

காமராஜ் said...

கவிதை,படம்,எங்க பாரா எல்லாமே க்ரேட்.

ராகவன் said...

அன்பு பாரா,

நல்ல கவிதை இது... புத்திசாலித்தனமான வரிகள்...

நிறைய பேர்கள் எழுதுகிறார்கள் பாராவிற்கு இதில் குறிப்பாய் நான் சொல்ல வேண்டியது என்று எதுவும் இல்லை. வழக்கம்போல வித்யா சொன்னது போல தோலையும், கொம்பையும் விடுத்து அத்தனையும் உணவாய்ப்போகும் இரை (இறை) ஆடு, அதனால் ரெசிபி என்று சொல்ல ஆரம்பித்தால் ஒவ்வொரு உறுப்புக்கும் சொல்ல வேண்டும். அது அத்தனை சிலாக்கியமாய் இருக்காது. சர்க்கரை பொங்கலும் கிடாவெட்டும் இல்லாத விசேஷங்களே இல்லை, கரூர் மற்றும் இதர கொங்கு நாட்டு ஊர்களில்.

திடீரென்று பத்து பேர் லீவு கேப்பாங்க, நான் கரூரில் இருக்கும் போது என்னடான்னு கேட்டா கிடாவெட்டு போகலேன்னா குத்தமா போயிடும் என்று ஒரு நாள் விருந்தை அடுத்த நாள் வந்து புளிச்ச ஏப்பத்துடன் பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஒரு முறை லண்டனில் மேலாண்மை படித்து வந்து கரூரை சேர்ந்த நண்பரின் தம்பி, ஒரு கேஸ் ஸ்டடி பற்றிய பாடத்தில், பிஸினெஸ் கிரைஸிஸ் வந்ததனால் நிறைய நட்டமாகி விட்டது அந்த நேரத்தில் தொழிலாளர்களும் போனஸ் கேட்கிறார்கள், நியாயமான ஒப்பந்தத்தின் படி தரவேண்டியது... கம்பெனியின் நிதி நிலைமை உசிதமாய் இல்லை அந்த கம்பெனியின் நிர்வாக இயக்குனரான நீ இதை எப்படி சமாளிப்பாய் என்று கேட்டிருக்கிறார்கள், அதற்கு நமது கரூர் நண்பர், எங்க குலசாமிக்கு கிடாவெட்டி பொங்க வைச்சா எல்லாம் சரியாப்போயிடும் என்று எழுதியதாக சொல்வார்கள். இது வேடிக்கையான கதையாய் இருந்தாலும், கரூரில் நான் இருந்த காலத்தில் அனேகமாக (ஒரு வருஷம் பத்து மாதத்தில்) ஒரு அம்பது கிடாவெட்டுக்கு அழைப்பு வந்தது. இதில் பிஸினஸ் சரியாக போகவில்லை என்று அமெரிக்காவின் ரிசெஷன் தீர கிடாவெட்டியவர்களும் உண்டு.

உடலெங்கும் கவிச்சி வாடை வீசிக்கிடக்கு காவலுக்கு கொலை பழகும் எல்லைச்சாமிகள் மீது!

அன்புடன்
ராகவன்

Sai Ram said...

விகடனில் கவிதை வெளிவந்ததற்கு வாழ்த்துகள்!

பா.ராஜாராம் said...

நன்றி ஆர். கே!

மீண்டும் நன்றி ஆர்.கே!

நன்றி தாமோதர் சந்துரு!

நன்றி கருணா!

நன்றி பத்மா! "எங்கள் ப்ளாகில்" நீங்கள் பாடிய பாடல் கேட்டேன்.amazing!
நண்பர்களுக்கு, பத்மா பாடிய பாடல் லிங்க் இது: http://engalblog.blogspot.com/2010/05/blog-post_12.html. கேட்டுப் பாருங்க மக்கள்ஸ்.

நன்றி ராமலக்ஷ்மி சகா!

நன்றி ப்ரபா!

நன்றி டி.வி.ஆர்.சார்!

நன்றி எஸ்.கே.பி!

நன்றி ரவிச்சந்திரன்! ரொம்ப நாளா காணல. :-)

நன்றி ரசிகை! என்ன பாஸ், சுரத்தே இல்லாம? :-)

நன்றி செந்தில்!

நன்றிடா லாவண்யா!

நன்றி மாப்ள சத்ரியன்! செய்த உதவி மறக்க இயலாது மாப்ஸ். கருணாவிற்கும் என் நன்றியை சொல்லுங்கள்.

நன்றி இளமுருகன்!

நன்றி கதிர்!

நேசமித்ரன் said...

கட வுள் அட க்கம்
வி கட ன் ம குட ம்


வாழ்த்துகள் பா.ரா

பா.ராஜாராம் said...

நன்றி மோகன்!

நன்றி மகன்ஸ்!

நன்றி விஜய் மக்கா!

நன்றி முரளி! :-)

நன்றி வித்யா! //அப்புறம், ராகவன் வந்து ஆட்டு கறி ரெசிபி கொடுக்கும் போது திரும்பி வாரேன்.//பாருங்க வித்யா, ராகவன் கலக்கி இருக்கார். (சாமிக்கு நேர்ந்து விட்டதை சமைச்சு சாப்பிடுவீங்களான்னு தெரில.)// சாப்பிடாம? சாமி பேரை சொல்லி வெட்டுவோம். அப்புறம் 'சாமியாடி' சாப்பிட்டுருவோம். :-))

நன்றி பாலா (எ) தி.ஜா. சார்! :-)

நன்றி சேரல்! :-)

நன்றி பாலகுமார்!

நன்றி பாலாஜி தலைவரே!

நன்றி சரவனா! நானும் ரசித்துக் கொண்டிருக்கிறேன். நம் நண்பர்களை.

நன்றி ருத்ர வீணை!

நன்றி ஷங்கர்!

நன்றி ஜெனோ!

நன்றி மணிஜி! கிளீன் போல்ட். அதுவும் மிடில் ஸ்டிக்! :-))

நன்றி நேசா (எ) செல்ல குசும்பா! :-)

நன்றி வாசன்!

நன்றி ராதா!

நன்றி ஜனா!

நன்றிடா ஹேமா!

நன்றி அசோக் படவா! :-)

நன்றி எனதன்பு குமார் சகோதரா!

நன்றி ரசிகை! சுரத்து இங்க கிடைச்சது பாஸ். :-)

நன்றி கதிர்பாரதி! மின் கடிதமும் கிடைத்தது. பதில் சொல்லிட்டு அங்க வர்றேன்.

நன்றி சேகர்!

நன்றி தமிழ்நதி! இரண்டு வாரங்கள் கழித்தே இங்கு விகடன் கிடைக்கிறது. வாசிக்கணும். ஆதிக்கு/ஆதி கொடுத்த பதிலில் வைப்ரேசன் எனக்கும்.

நன்றி அக்பர்! பார்க்க முடியலேயே பாஸ். :-(

நன்றி அருணா டீச்சர்!

நன்றி நசர்! :-))

Ahamed irshad said...

அருமை வாழ்த்துக்கள்.....

பா.ராஜாராம் said...

நன்றி ஆறுமுகம் முருகேசன்!

நன்றி காமு! :-)

நன்றி ராகவன்! //அதற்கு நமது கரூர் நண்பர், எங்க குலசாமிக்கு கிடாவெட்டி பொங்க வைச்சா எல்லாம் சரியாப்போயிடும் என்று எழுதியதாக சொல்வார்கள்.// :-))) enjoyed ராகவன்!

நன்றி சாய்ராம்!

மீண்டும் நன்றி நேசா! :-)

நன்றி அஹமது இர்ஷாத்!

ரிஷபன் said...

கவிதை நல்லா இருக்கு.. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்.. இந்த ஆடு வெட்டற கவிதை எழுதறதெல்லாம் கவிச்சி சாப்பிடறவங்களாவே இருக்காங்களே.. (நீங்க எப்படின்னு தெரியல)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நம் நண்பர் பெயர் விகடனில் வந்ததைப் பார்க்க என்ன ஒரு சந்தோஷம்!!உண்மையிலேயே அருமை...

பா.ராஜாராம் said...

நன்றி ரிஷபன்! அப்படின்றீங்க?..:-) நான் சாப்பிடுவேன்.

ரொம்ப நன்றி ஆ.ஆர்.ராமமூர்த்தி! :-)

பிரவின்ஸ்கா said...

அருமை. வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

நன்றி பிரவின்ஸ்கா! எவ்வளவு நாளாச்சு! :-)

Marimuthu Murugan said...

கடவுள் அடக்கம்
அருமை பா ரா சார்
வாழ்த்துக்கள்