Monday, May 17, 2010

ஒரு ஊரில் ஒரு பஞ்சக்கா


(Picture by cc licence, Thanks Abhisek Sarda)

சீகரங்கள் தொலைந்த
மகளும் வாடிக்கையுமற்ற
சாயுங்காலத்தில்

கைவிடாத
மகளைப் போன்றவர்களுக்காக
வாங்கி வந்த டீயை
நிரவி ஊற்றிக் கொண்டிருந்த போது

"ஞ்சக்காவா இப்படி போச்சு?"
என்றொரு குரலில்
கை நடுங்கி
வெளி சிந்தியது டீ.

41 comments:

na.jothi said...

ஒரு ஊரில ஒருன்னு கவிதைக்காகவோ
கதைக்காகவோ கூறினாலும்
இந்த விடயத்தில் மட்டும தான்
நிஜத்தை குறைந்து
இல்லையா அண்ணா

தமிழ் உதயம் said...

எங்க ஊரிலும் ஒரு பஞ்சக்கா இருந்தார்கள்.

Ashok D said...

ஆரம்பிச்சிட்டாரையா.. சித்தபஸு... சரி ரைட்டு.. நடத்துங்க

Unknown said...

இன்னொரு டீ..

ரிஷபன் said...

சபாஷ்ங்ணா..

Paleo God said...

டிபிகல் பாரா பார்வை!

நேசமித்ரன் said...

இந்தக் கவிதையை சரியாக அணுகும்
கண்களுக்கான காத்திருப்பில் .....

க ரா said...
This comment has been removed by the author.
KarthigaVasudevan said...

கவிதை யதார்த்தமான சோகம் ,பஞ்சக்காக்கள் வேற வேற பேர்ல நிறைய எல்லா ஊர்லயும் இருக்காங்க பா.ரா.எங்க ஊர்லயும் கூட.அவங்களை ஜனங்க சுய இரக்கத்துல தள்ளாம இருந்தாலே தேவலை.

செ.சரவணக்குமார் said...

பஞ்சக்கா.. ஒரு சிறுகதையாக, குறும்படமாக மனதில் அழுத்தமாக இடம் பிடிக்கிறார்.

சிநேகிதன் அக்பர் said...

கவிதை அழுத்தம்

//பஞ்சக்கா.. ஒரு சிறுகதையாக, குறும்படமாக மனதில் அழுத்தமாக இடம் பிடிக்கிறார்.//

விமர்சனம் அழகு.

Unknown said...

ஒவ்வொரு ஊரிலும் "நிஜப்" பெயர் தெரியாத பஞ்சக்காக்கள் இருந்து கொண்டிதான் இருக்கிறார்கள்..!

கவிதையில் ஒரே ஒரு "பஞ்சக்கா".. :(

Chitra said...

ஒரு டீ........ ஒரு பன்..... அருமை.

பனித்துளி சங்கர் said...

நடுங்க வைக்கும் சோகத்தையும் அழகாக தொடுத்து இருக்கிறீர்கள் . அருமை !

ஹேமா said...

அண்ணா...கவிதைக்கு மனசில பட்டதைச் சொல்லப் பயமாயிருக்கு.அஷோக் கலாய்க்கிறார்.அண்ணா உங்க செல்ல மகனைக் கண்டிச்சு வையுங்க !

(அண்ணாகிட்ட சொல்லுவேன்னு சொன்னேன்."சொல்லு எனக்குப் பயமில்லை" ன்னு சொல்றார்.)

பா.ராஜாராம் said...

நன்றி ஜோதி! ரொம்ப நாள் ஆச்சு, இல்லையா? :-)

நன்றிங்க தமிழ் உதயம்!

நன்றி மகன்ஸ்! யோவ்..இன்னொரு பார்வை இருக்கு.முழிச்சிக்கோ. :-) (நல்ல வாசிப்பாளன் என்பதால்)

நன்றி செந்தில்!

நன்றி ரிஷபன்!

நன்றி ஷங்கர்!

நன்றி நேசா! நானும்., :-)

நன்றி கார்த்திகா!

நன்றி சரவனா! நேசா, சேம் பின்ச்! :-)

நன்றி அக்பர்! நேசா, ஒன் மோர், :-)

நன்றி ஆ.மு! yaa.

நன்றி சித்ரா!

நன்றி ப.து.சங்கர்! :-)

நன்றி ஹேமா! ரேஸ்கள்,அப்படியா சொன்னார்?(ரேஸ்கள் சொன்னதை மகனிடம் சொல்லாதே) :-)

நண்பர்களுக்கு,

காலையில் பாலைவனம் பயணம்.வந்து பேசலாம். ;-)

நசரேயன் said...

ஊருக்கு ஊரு இப்படி நிறைய பஞ்சக்கா இருக்கு

Nathanjagk said...

ஊர் செட்டியார் கடைகளில் அவர்களின் மகள்கள் நின்று வியாபாரம் ​செய்கிற அழகே அழகே அழகு. வாங்குபவர்களை விட உயரமான இடத்தில் நின்று கொஞ்சம் கர்வமும் நிறைய கறாருமாய் சுழன்று வேலை ​செய்வார்கள்.

பள்ளிவிட்டு வரும் மாலைகளும், விடுப்பு நாட்களும் மிக உசிதம் - எல்லாத் தரப்புகளுக்கும்.

வசீகரங்களைக் குலைக்கவென்றே வருகின்றன ஷாப்பிங் மால்களும், கல்யாணங்களும்.

சிறுகதை லாவகமும், சிறுநதி வேகமுமாய் இருக்கிறது பஞ்சக்கா கவி.. ​நோ.. கதை!

வாழ்த்துக்கள் ராஜா சார்!

சைவகொத்துப்பரோட்டா said...

கண் முன்னே வந்து விட்டார் பஞ்சக்கா!!

Anonymous said...

கவிதையின் பாடு பொருள் எனக்கு புரியவில்லை...யாராவது விளக்கினால் நானும் மகிழ்வேன்...நன்றி

விஜய் said...

ஒரு பக்கம் இயலாமையும் மறு பக்கம் காமத்தையும் இயம்புவதை இருக்கிறது கவிதை

தவறா பங்கு?

விஜய்

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

நல்லா இருக்குங்க. தி.ஜாவின் "தவம்" ஏற்படுத்திய தாக்கத்தை இந்த கவிதையும் தருகிறது.

rvelkannan said...

நானும் பார்த்திருக்கிறேன் அண்ணே .. நிறைய பஞ்சக்காவை .. :-(

உயிரோடை said...

//சித‌றிய‌ டீ// ப‌டிம‌ம் ப‌டிம‌ம்

SUFFIX said...

என்னவோ போல் இருக்கு, பாவம் பஞ்சக்கா!!

இரசிகை said...

AZHAGI....padam yerppaduththiya oru unarvai,ikkavithaiyum koduththathu..!!

unarvukalai yelimaiyaai vaarththaiyaakkuvathil neengal mttumthaan ungalukku inai!!

vaazhththukkal rajaram sir:)

இரசிகை said...

AZHAGI....padam yerppaduththiya oru unarvai,ikkavithaiyum koduththathu..!!

unarvukalai yelimaiyaai vaarththaiyaakkuvathil neengal mattumthaan ungalukku inai!!

vaazhththukkal rajaram sir:)

Ashok D said...

ஹேமா கெளம்பு காத்துவரட்டும்....

சித்தப்ஸ்.. கவித புரிஞ்சது... ஆனா சூப்பருன்னு போடாம.. வேறுமாதிரி போட்டேன்...

Be frank.. இதெல்லாம் நான் 5 கிளாஸ் படிக்கும்போது எழுதனது...சித்தப்ஸ் :))))

சித்தப்ஸ் இந்த அன்பு அன்புன்னு சொல்லறாங்களே... அது எந்த கடையல கிடைக்கும்?

Ashok D said...

/வசீகரங்கள் தொலைந்த
மகளும் வாடிக்கையுமற்ற
சாயுங்காலத்தில்//
பேரிளம் பெண்ணின் தாய் தான் பஞ்சக்கா..
not much business in that evening
(நல்லா வாழ்ந்தும் கெட்டுயிருக்காங்க...)

இது மொத பத்திக்கான சிறுவிளக்கம்)
மீண்டும் வருகிறேன்.. In office)

RaGhaV said...

:-))

Vidhoosh said...

பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி, வேலைக்கு ஒரு கை குறைஞ்சு போச்சு? அக்கா இளைச்சு போய்ட்டாங்க?
வாழ்ந்து கெட்டாங்க?

மகளைப் "போன்றவர்கள்" மட்டும் தென்பட வில்லை?

என் பார்வை மங்கிப் போச்சு?

ராகவன் எங்கே?

எங்கே ராகவன்?

நட்புடன் ஜமால் said...

முதல் வாசிப்பில் ஒரு கோணம்

வேற ஏதோ இருக்குன்னு நேசமாக சொன்னவுடன் மீண்டும் பார்க்கையில்

வேறு கோணம், விளங்கிடிச்சின்னு தான் நினைக்கேன் மக்கா ...

நேசமித்ரன் said...

"நிஜப்" பெயர் தெரியாத பஞ்சக்காக்கள்

:)

இரசிகை said...

http://sundarjiprakash.blogspot.com/

konjam inthap pakkaththukku neram othukkungalen..:)

பிரேமா மகள் said...

கனம்.......

கே. பி. ஜனா... said...

கை நடுங்கி டீ வெளிச் சிந்துகிற இது மாதிரி சந்தர்ப்பங்கள் வாழ்க்கை நெடுக பரவிக் கிடக்கிறது நிறைய...
--கே.பி. ஜனா

அன்புடன் அருணா said...

மீண்டும் ஒரு பூங்கொத்து!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அசத்துது பா.ரா.
எப்படி கரு கிடைக்கிறது என்று நினைத்தேன். வியக்காமலிருக்கவில்லை.

பா.ராஜாராம் said...

நன்றி நசர்!

நன்றி ஜெகா! மிக சரியான கவ்வல்.இது தூசு என தெரியும். :-) இதை விடுங்கள், புதுசா என்ன சார்?

நன்றி எஸ்.கே.பி!

நன்றி பதிவேடுகள்!

நன்றி விஜய்! மிக சரி!

நன்றி ஜெ.ஜெ! உங்களின் அறிமுகத்திற்கும் சேர்த்து.(வந்து, வியந்தேன்)

நன்றி வேல்கண்ணா!

நன்றி லாவண்யா! அதில் படிமமா இருக்கு?(ராஜா, எக்ஸ்பெர்ட்டா நீ :-))

நன்றி சபிக்ஸ்!

நன்றி ரசிகை!

நன்றி மகன்ஸ்! // சித்தப்ஸ் இந்த அன்பு அன்புன்னு சொல்லறாங்களே... அது எந்த கடையல கிடைக்கும்?//
ஓய்..ஓம்ட்ட தான் இருக்கு.ஏம்ட்ட கேட்கிறீர்?:- )

நன்றி ராகவ்!

நன்றி வித்யா!உங்களுக்கே புரியல எனும் போது கவிதை abrupt failure வித்யா. அதானே, ராகவன் ரேஸ்கள் எங்க?

நன்றி ஜமால் மக்கா! எவ்வளவு நாள் ஆச்சு! :-)

மீண்டும் நன்றி நேசா! :-)

நன்றி பிரேமா மகள்!

நன்றி ஜனா!

நன்றி அருணா டீச்சர்!

நன்றி ஜெஸ்! ஆமா, இந்த ஊர்லதான் இருக்கீங்களா? :-)

Kumky said...

மனம் நடுங்கும் வார்த்தைகளில் விரிகிறது ஒரு கதை...

அர்த்தம் அதுதானா எனும் கேள்வியும் கூடவே..

முதல் வரி உணர்த்துகிறது வயிற்றுக்காக உழைத்த உடலை..தேய்மானத்தை.

வாடிக்கையற்ற சாயங்காலங்கள் அசைபோட வைத்திருக்கலாம் வாழ்ந்து கெட்ட வாழ்வையும் யவனங்கள் மிளிர்ந்த இளமைக்காலங்களையும்...

கை விடாத மகளுக்கும் அதே வாழ்வுதானா...

நிரவி ஊற்றுதலில் வெளிப்படும் அன்பும்..அதன் அவசியங்களும்..

வெளிகளெங்கும் சிதறிக்கிடக்கிறது வேறு வழிகளில்லா வாழ்வு..

பா.ராஜாராம் said...

நன்றி கும்க்கி!

மிகுந்த சந்தோசம்! 'இருக்கிறேன்' என்று இருமினாலும் போதும். ஒரு சத்து. பலம்.

உங்க குறை இல்லாமல் இயங்கலாம்,இனி நான்.