Wednesday, May 19, 2010
எஸ்கேப்
(Picture by cc licence, Thanks mckaysavage)
அம்மா சத்தியமாய்
என்று தொடங்கியது பிறகு
ஐயப்பன் சத்தியமாய் என்று
மாறியிருக்கிறது.
குலசாமி பொதுவா என்று
சொல்ல நேர்ந்ததும் உண்டு.
பிள்ளைகள் அறிய என்று
மனைவியிடமும்
அம்மா சத்தியமாய் என்று
குழந்தைகளிடமும்
கூறி வருகிறேன்.
அப்பவும், இப்பவும்
எங்கு தவறு நேர்கிறது என
அறிய இயலவில்லையே ஆஞ்சனேயா?
"ஆஞ்சனேயா?"
"ஆஞ்சி?"
எஸ்கேப் போல.
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
ஒரு பழைய நினைவை மீட்டு கொடுத்துள்ளீர்கள்.
பிள்ளைகள் அறிய என்று
மனைவியிடமும்
அம்மா சத்தியமாய் என்று
குழந்தைகளிடமும்
கூறி வருகிறேன்.//
கவிதை புரியலனாலும் இந்தப் பத்தி ஈர்க்குது..
:)
இந்த அங்கதம்தான் பா.ரா உங்க ஸ்பெஷல்
:)
ஆஞ்சி:
சஞ்சீவியை விட கனமா இருக்கேய்யா உன் புளுகு மூட்டை இதுல கவிஞன் வேற..
வால்மீகிக்கு நாரதன் சொன்னதுதான் எனக்கும் ரீபீட்டு
மரா மரா மரா
இனி மற மற ராஜாராமான்னு னும் சொல்லனும்யா உன் டுபாகூர் சத்தியத்துக்கு எல்லாம்
சேர்த்து
ஆனாலும் என் வாலை ஜெயிச்சுட்டியே பா.ரா
பா.ரா:
ஹை ! எப்பிடி ? சொல்லு மக்கா !
ஆஞ்சி :ம்ம் உன் ரீலு அதை விட பெருசா இருக்கேய்யா
ம்க்கும் இதுல பெரும வேற
பா.ரா: ஹி ஹி :)எங்கு சென்றாலும் என்னையும் நேசனையும் தூக்கி சுமக்கும் அம்மா நீங்கள் ஆஞ்சி நீங்கள்
ஆஞ்சி: டாய்! இது அனுஜன்யா வுக்கு சொன்ன டயலாக் ஆச்சே !எனக்கே ரிபீட்டா ? பிச்சு பிச்சு
அது சரி உன் புளுக சுமக்கவெ பீமனை துணைக்கு கூப்பிடனும் கூட என்ன தொடுப்பு ? அவன் புளுக சுமக்க கோவர்த்தன மலைய தூக்குனவனையும்ல கூப்பிடனும்
எங்கட இவன் ?
ராஜாராமா
ராஜா
பா.ரா
ப்பா பா.ரா
எஸ்கேப்பு
:)
ஆகா. நேசமித்ரன் சார் பின்றீங்க பின்னூட்டத்தில.
அண்ணா நீங்க இப்போ
ஆஞ்சனேயர் பக்கமா !
பிள்ளைகள் அறிய என்று
மனைவியிடமும்
அம்மா சத்தியமாய் என்று
குழந்தைகளிடமும்
கூறி வருகிறேன்.
..... எதார்த்தம். :-)
வாழ்க்கையைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் இத்தனை உயிரோட்டமாய் இருக்கிறது.கலக்குங்கோ.
ஹஹாஹாஹா ரொம்ப சரி!
உங்க மேல சத்தியமா ..
கவிதை ஆஞ்சி ...
//அப்பவும், இப்பவும்
எங்கு தவறு நேர்கிறது என
அறிய இயலவில்லையே ஆஞ்சனேயா?///
வேறென்ன... ஞாபக சக்தியிலதான் தகராறு. யாரார்கிட்ட என்னென்ன புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டிருக்கோம்ன்னு ஞாபகம் வெச்சுக்க வேண்டாமா :-)))))))). ஒரு பொய் சொன்னா அப்றம் அத மறைக்க ஒன்பதுபொய் சொல்லவேண்டி வருதே.:-)))
"ஆஞ்சி" செல்லப்பேர் நல்லாருக்கு.
:)
குரங்கு.. மனித மனம் ஒரு குரங்கு.. அறிந்தாயோ ஆஞ்சனேயா... :)
நேசன் :)
அண்ணா புரியலை
ஆஞ்சியோகிராம் பண்ணப்போறவங்க கூட சிரிச்சே ஆகணும்
கவிஞனுக்கு பொய்யழகு
வாழ்த்துக்கள் பங்கு
விஜய்
:)) full of life, life full of ... :))
:)
பா.ரா யதார்த்தமாய் இருக்கு , கடவுள் மட்டும் எல்லார்கிட்டயும் பேசிகிட்டு இருந்தார்னா நேசா அண்ணா சொல்றது போல தான் இருக்கும் :)
அருமை !
\\பிள்ளைகள் அறிய என்று
மனைவியிடமும்
அம்மா சத்தியமாய் என்று
குழந்தைகளிடமும்
கூறி வருகிறேன்.\\
பொய் சத்தியமெல்லாம் பண்ணக் கூடாது. ஆமா.
//
"ஆஞ்சனேயா?"
"ஆஞ்சி?"
எஸ்கேப் போல.
//
maapilla.....
maapilla...
maappu..
vachchuttaanyaa aappu:))
ippadithaane sollutheengaa??
பா.ரா. வை - பாராமல் தவிர்க்க முடியாது... பா.ரா. நீங்க பாரா பாரா-வா (paragraph) எழுதுங்க...
அண்ணே கலக்கிட்டிங்க.
எல்லோரும் இதைத்தான் தேடிக்கிட்டு இருக்கோம்.
தெரியாமல் தவறு செய்வது மனித இயல்புதான். ஆனால் உடனே கடவுளிடம் மன்னிப்பு கேட்டல் நலம்பயக்கும். கவிதை ரொம்ப நல்லாருக்கு..
/"ஆஞ்சி?"
எஸ்கேப் போல./
ஹான் ஜி! சிரிச்சி முடியல.
உங்களுடைய வரிகள் எல்லாமே சக மனிதர்களின் வாழ்க்கைலிருந்தே பிறக்கிறது...எல்லாருக்குள்ளேயும் ஒரு பாரா இருக்காரு இல்ல...ஆனால் இதை போன்ற கவிதை பாராவுக்கு மட்டும் கிடைக்குது...
அருமை
மாமா,
இதுவரைக்கும் பண்ண பொய் சத்தியங்களுக்கே கணக்க காணம்.
இந்த லட்சணத்துல ஆஞ்சினேயன் தலையில வேற அடிச்சி சத்தியம் பண்ணனுமோ..?
ஆஞ்சிநேயன் அரசமரத்துல ஏறிட்டான்.
ஹா ஹா! அது சரிதான்.
சத்தியமா சொல்றேன் நல்ல கவிதை!
Really nice
ஆஹா.. யதார்த்தமாய் ஆரம்பித்து முடிவில் ஒரு விளையாட்டும்..
சத்தியம் முன்னே பின்னே இருந்தாலும் கவிதை சத்தியமாய் கை வந்து விட்டது உங்களுக்கு..
பா.ரா. கவிதைகளுக்கு உரை தேவை இல்லை. பிறகும் நேசமித்ரன் ஆஞ்சி ஆஞ்சி எழுதிய பின்னூட்டம் வாசித்த பிறகும் 'உயிரோடை' கவிஞருக்குப் புரியவில்லையாம். நல்ல எஸ்கேப்.
அன்னாருக்கு நேசமித்ரனின் 'ஒட்டகத்தின் மூன்றாவது இமை'யைப் பரிந்துரைக்கிறேன்.
ரா.சு. அண்ணே நீங்கதான் கோழிய பிடிக்குறதும் தெரியாம கொழம்பு வைக்கிறதும் தெரியாம வாசமா போட்டிருக்கீங்களே அண்ணே பின்னூட்டம்
பரிந்துரைக்கு சந்தோஷம் . அதில் இருக்கும் குறும்புக்கு என் பிரியம்
:)
எஸ்கேப்!!!
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
மிகுந்த நன்றியும் அன்பும்.
ரொம்ப நல்லாவே இருக்குங்க..உங்க மேல சத்தியமா சொல்றேன்!
ஹா.ஹா..நன்றி, ஆ.ஆர்.ராமமூர்த்தி!
பா.ரா.உங்களையும் இப்பத்தான் படிக்கத் துவங்குகிறேன்.ரசிகைக்கு நன்றி உங்கள் மூலமும்.
படித்தவரை உங்களின் எளிமையும்-ஆழமும் தொடுகிறது.முதிர்ச்சியின் அடையாளம் இவைதான் என்றும் தோன்றுகிறது.அடிக்கடி வருவேன் பா.ரா.
நன்றி சுந்தர்ஜி! நேற்றிரவு முழுக்க உங்கள் தளத்தில்தான் இருந்தேன். இப்பவும் அங்கிருந்துதான் வருகிறேன். இந்த ரசிகையையும், பத்மாவையும் என்ன செய்யலாம் என வருது. ரேஸ்கல்ஸ்! :-) எவ்வளவு லேட்?
மொத்த பதிவுகளையும் வாசித்தேன்.
உண்மையில் ஒண்ணுமே இல்லை நான் சுந்தர்ஜி.
இவ்வளவு அங்கீகாரம் கிடைத்ததை முதன் முறையாக கில்டி-யாய் feel பண்றேன்.
any hw , மீண்டும் நன்றி ரசிகை!
பத்மா உங்களுடன் டூ. :-(
ஐயோ டூ லாம் விடாதீங்க பா ரா சார் ...உங்களை மாதிரி பிரியமான ஆட்கள் சும்மா டூ விட்டாக்க கூட கஷ்டமாய் இருக்கு.. இனி எது தென்பட்டாலும் உடனே ஒரு மெயில் ok யா ?இந்த கவிதை நிஜமாய் எனக்கு புரியவில்லை அதான் திரும்ப வந்து படித்து படித்து பார்க்கிறேன் .கொஞ்சம் ஆட்டு மூளை தான் போல எனக்கு? :(
ஒரு surprise சொன்னேனே அது விரைவில் ....
பா.ரா. உங்களின் பணிவு என்னைக் கண் கலங்க வைத்தது.உங்களிடம் நான் காணும் எளிமையும்-அன்பும்-விலைமதிப்பில்லாதவை .கவிதையோ-கதையோ யார் வேண்டுமானாலும் எழுத முடியும். வாழ்க்கையை விடப் பெரிய இலக்கியம் என்ன இருக்கமுடியும்? குணமெனும் குன்றேறி நிற்றல் உங்களையன்றி யாருக்கு வரும்? நெகிழ்கிறேன் பா.ரா. நம் உறவுக்குக் காரணமான ரசிகைக்கு மறுபடி ஒரு மூன்றெழுத்து வார்த்தை.
ராஸ்கல் என கூப்பிட்டது சிரிப்பு சிரிப்பாய் வருது ஹிஹிஹி
:)
நன்றி பத்மா! கவிதை, நேரடியானது மக்கா. ஆ.மூ. ல்லாம் ஓவர் பாஸ். என் டூ கூட, உலு உலு. :-)
நன்றி சுந்தர்ஜி! //குணமெனும் குன்றேறி நிற்றல்// நான் ஒகே யான்னு தெரியலையே சுந்தர்ஜி. கோணல்னாலும் என்னுடயதாக்கும் என குர் குர் விளம்பரம் போல் சந்தோசமாய் இருக்கு. :-)
நன்றி பத்மா ராஸ்கல்! :-) சிரிச்ச முகம் லட்சணம். சிரிசிகிட்டே இருங்க, போதும்.
நன்றி ம.மகள்ஸ்!
நான் படிச்ச படிப்பு மேல சத்தியமா கவிதை அருமையா இருக்கு நண்பரே.
சத்தியமா படிச்சுட்டுதான் கமெண்ட் போட்டுருக்கன். நம்புங்கோள்...
சத்தியமாய் நன்றி நளினி சங்கர்! அறிமுகத்திற்கும். :-)
Post a Comment