Wednesday, May 26, 2010
தட்டித் திறந்த கதவுகள்
(Picture by cc licence, Thanks prakhar )
ஒன்று
ஜோஸ்யர் வீட்டில் இருந்து
மூணாவது வீடு
கணேசன் வீடு என்றார்கள்.
கண்டு பிடித்த பிறகு
கணேசன் வீட்டில் இருந்து
மூணாவது வீடாக இருந்தது
ஜோஸ்யர் வீடு.
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
(Picture by cc licence, Thanks Romana)
இரண்டு
பார்க்காத வைத்தியமில்லை என
பேசிக் கொண்டிருந்தது டி.வி.
அழுவது போல் வேறு
பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாலில் இவளும்.
அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ் என
குப்பியை கீழும் மேலும் தட்டி திறந்தேன்
அடுப்பறையில்.
(Picture by cc licence, Thanks Robert Nyman)
மூன்று
மரங்கள் எல்லாம் வீடாச்சு.
மறக்காமல்,
குருவி சத்தம்
பெல் ஆச்சு.
நான்கு
ஒரு போதும்
முள் குத்தியதில்லை
கள்ளிப் பழம்.
கோன் ஐஸ் அப்படி இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
70 comments:
//அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ் என
குப்பியை கீழும் மேலும் தட்டி திறந்தேன்
அடுப்பறையில்.//
உங்களுக்குமா ?
மூன்று! அப்பப்பா :)
//நசரேயன் said...
//அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ் என
குப்பியை கீழும் மேலும் தட்டி திறந்தேன்
அடுப்பறையில்.//
உங்களுக்குமா ?//
எங்க போனாலும் நாய் சேகர் மாதிரி நாங்களும் ரவுடிதான்னு இவரு அழிம்பு தாங்கலயே:))
மூன்று , நான்கும் என்னோட சாய்ஸ். வழக்கம்போல அருமை பா.ரா. சார்.
மூன்று அசத்தல். கணேசன் வீட்டிலிருந்து மூன்றாவது வீடாகிப்போன ஜோஸ்யர் வீடும்..
இப்பிடியே வீடு கட்டி அடிங்க...
//அடிச்சாண்டா லக்கி பிரைஸ்//
இன்னும் மூணு மாசம்தான இருக்கு ஊருக்குப் போக.. இனிமே இப்பிடித்தான் பேசுவீங்க.
பாருங்க, இதுவும் மூணுன்னே வருது.
3, 4 ,1,2
என்னோட வரிசை
வழக்கம் போல அருமை பா.ரா...
படிச்சுக்கிட்டேதான் இருக்கேன்.. சில நேரத்தில பின்னூட்டம் போட முடியறதில்ல...
மூணாவது கவிதை அருமை !
வாசிக்க மனதுக்கு இதமா இருக்கு.
அந்த 3வது நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி அபாரம் அண்ணா.
//பாருங்க, இதுவும் மூணுன்னே வருது.//
வெறும் மூணுதானா ஹே..ஹேஹே... ( எங்களுக்கும் தெரியும் பாஸ்)
எல்லாக் கதவையும் தட்டுறீங்க போல
:)
அப்புறம் வாரேன் !
1) அடுப்பங்கறை பாட்டில் திறக்க டி.வி சீரியல்.....உதவியச்சு....
2) கணேசன் வீடும் சோசியர் வீடும்.....வாழ்வின்....எதார்த்தங்கள்
3) வேதனையான விசயம் .....குருவி பெல் அல்ல.....வெட்டப்பட்ட மரங்கள்
4) கோன் ஐஸ் கூடிப்போனால் டாக்டரின் ஊசிதான் குத்தும்....
எனது புரிதல் சரிய. பா.ரா. ஐயா? குருவி பெல்லும் மரமும் ஒரு மிகச்சிறந்த செய்தி....சமூகத்திற்கு!.....வணங்குகிறேன்!
// ஒன்று
ஜோஸ்யர் வீட்டில் இருந்து
மூணாவது வீடு
கணேசன் வீடு என்றார்கள்.
கண்டு பிடித்த பிறகு
கணேசன் வீட்டில் இருந்து
மூணாவது வீடாக இருந்தது
ஜோஸ்யர் வீடு //
கணேசன் கணக்கு வாத்யாருங்களா... அதனாலத்தான் கணக்கு கணக்கா வந்திருக்கு.
// அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ் என
குப்பியை கீழும் மேலும் தட்டி திறந்தேன்
அடுப்பறையில். //
ஒரு பக்கம் தட்டினா திறக்காதுங்களா..
அது சரி.. சத்தம் வராம தட்டினீங்களா... சத்தம் வருகின்ற மாதிரி தட்டினா அவங்க வந்து தட்டிடுவாங்க நம் முதுகில்... என்ன நான் சொல்வது சரியா
// மூன்று
மரங்கள் எல்லாம் வீடாச்சு.
மறக்காமல்,
குருவி சத்தம்
பெல் ஆச்சு. //
காலத்தின் கோலம். மாற்றங்கள் தேவைதான்... இந்த மாற்ற நல்லது இல்லையே..
// நசரேயன் said...
//அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ் என
குப்பியை கீழும் மேலும் தட்டி திறந்தேன்
அடுப்பறையில்.//
உங்களுக்குமா ? //
அவருக்கு மட்டுமா.... எல்லாருக்கும்தான்
நாலே பால்ல எப்பிடி பாஸ் நூறு ரன் அடிக்கிறீங்க?
வகை வகையா வாரிட்டு வாரீங்கபா...நடத்துங்க...
அண்ணா முதலாவது கணக்கு சரியாத்தான் போட்டிருக்கீங்க.
வீட்டு அழைப்புமணியில்
குருவிச் சத்தம் இனி கேட்டால்
உங்க ஞாபகம்தான்.
எப்போதும் போலவே
இனி எப்போதும்
நாலே வார்த்தைகளில் மனதை கட்டிப்போடும் வித்தை தெரிந்த விளையாட்டுக்காரர் பாரா நீங்கள் ..வியப்பிலிருந்து வெளியே வரவே இயலவில்லை
////மரங்கள் எல்லாம் வீடாச்சு.
மறக்காமல்,
குருவி சத்தம்
பெல் ஆச்சு.////
....... உண்மையை, சில வார்த்தைகளில் நச்னு சொல்லியாச்சு..... பாராட்டுக்கள்!
ஜோஸ்யர் வீட்டில் இருந்து
மூணாவது வீடு
கணேசன் வீடு என்றார்கள்.
கண்டு பிடித்த பிறகு
கணேசன் வீட்டில் இருந்து
மூணாவது வீடாக இருந்தது
ஜோஸ்யர் வீடு
சரி ரைட்டு.நீங்க சொன்னா கணக்கு சரியாத்தான் இருக்கும்
தலைப்பு ரொம்ப அருமை.
ஒன்று :)!
மூன்று :(!
மூன்றாவது மிக நன்று.
உபரியாய் ஒன்று.
வன விலங்குகள்
மன விலங்குகளாச்சு.
நாலாவது சூப்பர் ..
இரண்டு
//பார்க்காத வைத்தியமில்லை என
பேசிக் கொண்டிருந்தது டி.வி.
அழுவது போல் வேறு
பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாலில் இவளும்.
அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ் என
குப்பியை கீழும் மேலும் தட்டி திறந்தேன்
அடுப்பறையில்.//
இப்படிக்கண்ணசரும் நேரம் கிடைப்பது அந்த குண்டுமனி இடைவெளியில் கழுத்து திருகிற லாவகமும் வெற்றியும்
பினனைப் போதையை விடத்ரில் கலந்த போதை. களவாணி....களவாணி.
வீட்ல சொன்னேன், 'சேர்றது எல்லாமே இப்டித்தானா' என்று சொல்லிவிட்டுப்போய்விட்டாள்.உருப்படமாட்டோ மாம்.
//மரங்கள் எல்லாம் வீடாச்சு.
மறக்காமல்,
குருவி சத்தம்
பெல் ஆச்சு//
அருமை அருமை!
// மறக்காமல்,
குருவி சத்தம்
பெல் ஆச்சு. //
நச்..
கவிதைகள் நல்லா இருக்கு அண்ணா. முதல் கவிதை மிக கவர்ந்தது.
நாலும் நாலு விதம்.. நல்ல விகிதங்கள்...
சித்தப்ஸ் அடிச்சிட்டிங்க... FOUR....... :)
ஒன்றும் எழுதாமல் போகலாம் என்றால் ஒன்று மனதில் நின்று வென்று கொண்டிருக்கிறது. நல்ல சிந்தனை தூண்டும் வரிகள்.
மனம் எங்கு லயிக்கிறதோ அங்கு தானே எண்ணமெல்லாம். காண்போரின் கண்களிலல்லவா காட்சியின் நயம்.
சுந்தருக்கு இப்போத்தான் வழி தெரிஞ்சுது போலருக்கு.. அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ் :))
மற்றபடி, தலைவன் வாழ்க தலைவன் வாழ்க தலைவன் வாழ்க தலைவன் வாழ்க
1,3,4 நெஞ்சை அள்ளுகிறது வழக்கம்போல்.
இரண்டாவதை வன்மையாக கண்டிக்கிறோம் அண்ணே (அண்ணி,பிள்ளைகளின் சார்பாக )
அருமை பா.ரா.
எளிமை பா.ரா.
புரிதலில் உவக்கும் மனது(கள்) பா.ரா.
காலமெல்லாம் இப்படியே பா.ரா.
அருமையான கவிதைகள் பா.ரா ! :)
நாலாவது சரியா விளங்கலப்பா , யாராவது ?
//குருவி சத்தம்
பெல் ஆச்சு//
அழகு.. :-)
முதல்
முதலா உங்க வீட்டுக்கு வர்றேன்.
எல்லாமும் நல்லா இருக்கு.
படிக்க
படிக்க மனதுக்கும் இதமா இருக்கு.
மீண்டும் வருவேன்!!
ஒன்னாவது செம கணக்கு மாமா.
நல்லா இருக்கு ராஜாராம்.
யதார்த்தத்தின் மூன்றாவது வீடு பாராவுடையது
வாழ்த்துக்கள் பங்கு
விஜய்
மூன்று = அருமை.
இரண்டு- வழக்கம் போல் உங்கள்
அட்டகாசம்.
ஒரு போதும்
முள் குத்தியதில்லை
கள்ளிப் பழம்.
கோன் ஐஸ் அப்படி இல்லை. //
எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.
கவிதை இருக்கட்டும். அது வரும் போகும். ஆனால் ஆட்கள்? 'உயிரோடை'க் கவிஞர் திரும்பி வந்ததால் மகிழ்ச்சி. மட்டுமல்ல, 'முதல் கவிதை மிகக் கவர்ந்தது' என்று எழுதியதாலும்.
என்னையும் முதற்கவிதைதான் முதலில் கவர்ந்தது. காரணம் அதில் உள்ள point of view தத்துவச் சரடு.
நர்சிம் தன் பதிவொன்றில், ஒரு வார்த்தைதான் முதலில் தன்னை உள்ளிழுக்கும்; படைப்பு அதைத் தொட்டு விரியும் என்று எழுதியிருக்கிறார். 'சென்னை நகரத் தொடர்வண்டிச் சுவர் விளம்பரத்தில் ஒரு வார்த்தை என்னை உள்ளிழுத்தது; அதிலிருந்து கவிதை பிறந்தது' என்று கவிஞர் யுவனும் பேசியிருக்கிறார்.
என் வழக்கு அப்படியில்லை. ஒரு கருத்து மண்டையைப் பிடித்தால் மட்டுமே எழுத்துக்கான தூண்டுதல் வரும்.
அந்த வகையில்தான் 'தட்டித் திறந்த கதவுகள்' கவிதையின் எடுப்பே (முதல் கவிதை) என்னைப் பிடித்திழுத்தது. தொடுப்பும் (இரண்டாவது கவிதை) அதையே பேசுகிறது, யாருடைய பார்வையில் எது முக்கியம் என்று.
அடுத்த தொடுப்பு (மூன்றாவது கவிதை), வளர்ச்சிப் பாதையில் வந்த அழிவை எள்ளுகிறது.
முடிப்பு (நான்காவது கவிதை)நழுவிப் போன ஒன்றை - கவிஞரின் ஏக்கத்தை - சொல்லுகிறது.
நான்கும் நான்கு வேறு கவிதைகள் அல்ல. ஒரே கவிதையின் நான்கு உறுப்புகள்.
'ஒன்று'-இல் தலைகாட்டும் ஜோஸ்யர் வீடு; 'இரண்டு'-இல் செயல்படும் தப்பித்தல்; மூன்று'-இல் கண்ணீர் வருத்தும் காடழிவு. 'நான்கு'-இல் மீளவரும் ஏக்கம்.
வளர்ச்சிக்கு நான் எதிரி அல்லன். ஆனால் 'கோலா', 'பெப்சி'தான் நாம் ஈட்டி இருப்பது. அப்படி இருக்கிறது நம் progress.
மூன்றாவது அருமை
:)
aththanaiyum azhaku..thalaippilirunthey!
முதல் கவிதை என்னை வீழ்த்தியது.ஒன்றை அடையும் வரை ஒரு அடையாளமும் அடைந்தபின் வேறு அடியாளமும் தருகிறது வாழ்க்கை. அசத்தல் பா.ரா.
3 அழிக்கப்படும் இயற்கை
4. இயற்கை இல்லாத செயற்கையான
வாசனை உள்ள திண்பண்டம்
1.அடுத்தவர்களை அறியாது தட்டி
திறக்கும் கதவுகள்
2 முடக்கி வைக்கும் டி.வி
3 அழிக்கப்படும் இயற்கை
4. இயற்கை இல்லாத செயற்கையான
வாசனை உள்ள திண்பண்டம்
1.அடுத்தவர்களை அறியாது தட்டி
திறக்கும் கதவுகள்
2 முடக்கி வைக்கும் டி.வி
எளிமை&அற்புதம்..இந்த வார்த்தைகளுக்குப் பதில் இனி ’பா.ராத்தனம்’ என்று சொல்வோம்.
மூன்று - அருமை
//மூன்று
மரங்கள் எல்லாம் வீடாச்சு.
மறக்காமல்,
குருவி சத்தம்
பெல் ஆச்சு.//
நல்ல ஹக்கூ கவிதை ப்பா
சேர்த்து வெச்சு படிச்சுட்டோம்ல, ப்பா, விட்ட குறை தொட்டகுறை எல்லாம் தீர்ந்துடுச்சு :)
நாலுமே சூப்பர் மாம்ஸ்..
ரெண்டாவது உங்களைப் போலவே ஜாலி பேர்வழி.!
:)
ஹை! பெரியவுங்க எல்லாம் வந்தாச்சா
ரைட்டு :)
ஒரே கவிதைன்னு தான் சொல்ல வந்தேன் அதையே அண்ணனும் சொல்லியிருக்கிறார்
எனவே
வழிமொழிகிறேன் மக்கா !
mthalaavathu moonavathu arumai paa.raa..romba nala iruku..
காமராஜ் said...
//வீட்ல சொன்னேன், 'சேர்றது எல்லாமே இப்டித்தானா' என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள். உருப்பட மாட்டோமாம்.//
- ஹை இது ரொம்ப நல்லா இருக்கே! ஒரு வகையில் பார்த்தால் இந்த புலப்பம் கூட நமக்கு கிரியா ஊக்கி தான் சார். அவர்கள் அப்படி ராகம் போட்டதால் தான் நாம எல்லோரும் இங்கே ஒன்று சேருகிறோம். இல்லாவிடில் பா. ரா. சார் சொன்னது போல, அவர்களோடு உட்கார்ந்து "அழுவது போல் டி.வி. பார்த்துக் கொண்டு தானிருப்போம்!! சரியா?
//மரங்கள் எல்லாம் வீடாச்சு.
மறக்காமல்,
குருவி சத்தம்
பெல் ஆச்சு//
மனசுக்குள் ஒரு மூலையில் வலிக்கிறது
ஒன்னு ரெண்டு புரியுது, ஆனா எந்த ஒன்னு ரெண்டுன்னு தான் புரியல...
ரசிப்பும் உவகையும்.
மூனுமே முத்தா இருக்கு
கோன் ஐஸ் குத்ததான் செய்கிறது.... நல்ல கவிதைகள் ரசித்தேன்...
முதல் கவிதை சரியா கவரல...
மூன்றாம் கவிதை மிக மிக ரசித்தேன்....
மற்றவையும்... நல்லாயிருந்தது...
பா ரா ட்டுக்கள்.
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்கள் மற்றும் ராஜசுந்தரராஜன் அண்ணனுக்கு,
எல்லோருக்கும் மிகுந்த நன்றியும் அன்பும்!
3-வது கவிதை
ரொம்ப....
ரொம்ப....
நல்லாயிருக்கு!!!!
ஜோஸ்யர் வீடு. திரும்பத் திரும்பப் படித்து ரசித்தேன். அமர்க்களம்.
Post a Comment