(Picture by cc licence, Thanks Markles55 )
ஒன்று
இறுக மூடிய கைகளை நீட்டி
"கைக்குள்ள என்ன சொல்லு பார்போம்?"
என்றாள்.
கைகளை தொட்டுத் தடவி
இன்னதென்றேன்.
இன்னது, இன்னது என்றேன்.
ஒருவேளை இன்னதோ என்று கூட
சொல்லிப் பார்த்தேன்.
"ஒண்ணுமே இல்லையே.." வென
கைகளை விரித்து
சிரித்துப் போனாள்.
ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
***
இரண்டு
என்னைப் போல் உலகில்
ஏழு பேர் உண்டு தெரியுமா
என்றாள்.
தூக்கி வாரிப் போட்டது.
என்னைப் போல் இன்னும்
ஆறு பேருக்கு
எங்கு போவேன்?
**
67 comments:
தெரிந்துவிட்டது மக்கா!
இப்படியெல்லாம் கூட காதல் கவிதை படைக்க முடியுமா. பிரமிப்பாக உள்ளது.
:) Wow!!!
ஆஹாவென்ற ஒரு வார்த்தையை எப்படிப் பங்கு போடுவேன் அற்புதங்கள் ரெண்டுக்கு? களைத்திருந்த நான் பருகினேன் இளநொங்கையொத்த இக்கவிதைகளை.சபாஷ் பா.ரா.
அழகு.....!!! அருமை!!!
//ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?/
அருமை!
அடடா....
:)
முதலாவது கவிதையுடன் இன்று காலை விடிந்தது(விகடனில் படித்தேன்). இரண்டாவதுடன் இன்றய காலை உணவு முடிந்திருக்கிறது. அருமை பா.ரா. சார்.
"என்னைப் போல் இன்னும்
ஆறு பேருக்கு
எங்கு போவேன்?"
:-)
இந்த வயதிலும் குசும்பு ரொம்ப அதிகம் சித்தப்பு
nice ones... :)
இரண்டும் அருமை.
அருமை.
அண்ணே,
கண் கலங்கி விட்டது. அழகு. அழகு.
நகுலனை நினைத்துக்கொண்டேன்.
/"என்னைப் போல் இன்னும்
ஆறு பேருக்கு
எங்கு போவேன்?"/
இது கலக்கல்ஸ்!
அசத்தல்!! :))
அடடா.ரெண்டாவது என் சாய்ஸ்.
ஒன்றுமில்லாததை - மக்கா கிளப்பள்ஸ்
இன்னும் ஆறு பேருக்கு - அட அட அடா!!!
மாமா எனக்கு ரெண்டாவது ரொம்ப பிடிச்சுருக்கு.
:)
முதல் கவிதை ரசனை மாம்ஸ்.
மச்சான் செம மூட்ல இருக்காப்ல..
//ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
//
இது ரொம்ப நல்லா இருக்கு பா.ரா
ஆனா எல்லாத்தையும் தின்னு செமிக்குதே உங்க பேனா .. அதுதான் உங்க வெற்றி :)
பங்காளிக்கு குசும்பன்கிற பெயர்தான் சரியாக படுகிறது.
விகட வாழ்த்துக்கள்
விஜய்
கவிதை ஒன்றூமில்லை தான் இருந்தாலும் விசம் உள்ளது புரிகிறது. வாழ்த்துக்கள்
கையில் என்ன இருந்ததுன்னு தெரிஞ்சிதா பா.ரா. அண்ணே..
"இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் மானிடர்" அப்படிங்கிற பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது பாரா அண்ணே..
இது வாழ்வியல் தத்துவத்துல ஒன்றா இருக்குமோ?..
வழக்கம் போல அருமை பாரா.
எனக்கு தீபா, ஷோபா etc etc எல்லோருடைய ஞாபகமும் ஒரு கணம் வந்து செல்கிறது.
(ஹி... ஹி... இன்னும் திருந்தல...)
எனக்கு ஒரு டவுட். இதெல்லாம் ஒரே பெண்ணைப் பார்க்கும் போது தோன்றிய கவிதைகளா... அல்லது...
:) :)
ஒன்னுமில்லாதத தொட முடிஞ்சதில
எல்லாம் இருக்கிறத சொல்ல முடியல பா.ரா. அற்புதம்.
//ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?//
இந்த வரில பின்னிட்டிங்க
தெரியும்.
நீங்க அற்புதமா எழுதுவிங்கனு தெரியும்.
நேரம் கிடைக்கிற போது கை தடவிக் கொள்ளலாம்.. :-)
@மாது
என்னய்யா முதல் ஆளாய்? நன்றி மக்கா!
@தமிழ் உதயம்
நன்றி பாஸ்! :-)
@நாளைப் போவான்
நன்றிங்க!
@சுந்தர்ஜி
//இள நொங்கை ஒத்த// opt word சுந்தர்ஜி. நன்றி மக்கா!
@சித்ரா
நன்றி சித்ரா! என்ன, காணல?
@சென்ஷி
நன்றி சென்ஷி!
@பாலாசி
நன்றி பாலாசி!
@முத்துலெட்சுமி
ரொம்ப நன்றிங்க!
@ஆர்.கே
ரொம்ப நன்றி ஆர்.கே!
@சின்னப் பயல்
வாங்க மக்கா. நன்றி!
@ராஜவம்சம்
மகன்ஸ், நலமா? (துரோகி..:-)) நன்றிப்பு!
@ப்ரியா
நன்றி ப்ரியா!
@ராமலக்ஷ்மி
நன்றி சகா!
@பின்னோக்கி
நன்றி மக்கா!
@இளங்கோ
எம்புட்டு பெரிய நினைப்பு இளங்கோ? உங்கள் தளம் வந்த உறைவே இன்னும் நிமிர முடியாமல் இருக்கு. என்றாலும் எல்லாம் அன்புதானே மக்கா. கொண்டாடுவோம். மிகுந்த நன்றி இளங்கோ!
@அருணா டீச்சர்
நன்றிங்க டீச்சர்!
@ஷங்கர்
நலமா மக்கா? நன்றி ஷங்கர்!
@மதுமிதா
ரொம்ப நன்றி மதுமிதா!
@ஜமால்
ஜமால் மக்கா, நலமா? நன்றி மக்கா!
@ஆ.மு. மாப்ள
நன்றி மாப்ள!
@விக்கி
நன்றி ம.மகள்ஸ்!
@காமு
எழுத்துலதானே மச்சி வயசை ஒளிக்க முடியும் இனி, நமக்கு! (உம்மையும் சேர்த்துக் கொண்டேனா? பரம திருப்தி!:-)) நன்றி காமு!
@நேசா
நான் உன்னை கேட்க வேண்டியதை நீ என்னை கேட்கிறாயா? இன்னும் செமியலடா பின்னம்! செமியவும் செமியாது..நன்றிடா மக்கா!
@பங்கு
நன்றி பங்கு! :-))
@மதுரை சரவணன்
நன்றி சரவணன்! என்ன, கொஞ்ச நாளா தட்டுப் படலை?
@staarjan
ரொம்ப நன்றி ஷேக்! வாழ்வியல் தத்துவம்?.இப்போ திருப்தியா உமக்கு? :-)
@நளினி சங்கர்
வாரும்யா...பிடிச்சுக் கொடுக்க பார்க்கிறீரா? தெரியாது..வீடு போனாத்தான் தெரியும், உள்ளதும் மிஞ்சுவேனா என. நன்றி மக்கா!
@பாலா சார்
ரொம்ப நன்றி பாலா சார்!
@ஸ்ரீதர்
ஸ்ரீ, கமலேஷ் நலமா? நன்றி மகன்ஸ்!
@சுசி
ரொம்ப நன்றி சுட்டி! ச்சே.. சுசி!
ஒண்ணுமில்லாததைத் தொடச்சொல்லி யாரோ ஏமாத்தீட்டாங்க அண்ணா உங்களை.
துங்கறபோகூட யோசிச்சிக்கிட்டே இருப்பீங்களோ !
அசத்தல்..
//ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?//
ம்ம்ம்ம் அருமை
எளிமையான கவிதை....அர்த்தங்களில் மனது ஆர்பரிக்கிறது...
ஒன்றுமே இல்லாததை தொட்டதனால்
ஒன்றாய்த்தான் ஆகிப்போனோம்.
ஏழும் சேர்ந்ததாய் வந்தவளோடு
ஆறு வருடம் ஓடிப்போனது.
ஒன்று அதனால் வந்து-அன்பால் கடந்த
மூன்றாண்டாய் உயிரெடுக்க-போக்குக்காட்டியின்று
ஒரு நிமிட அவகாசத்தில்
இரண்டு முறை படித்துவிட்டேன்
இரண்டாவது மிக அருமை.
நூறாண்டு வாழ்க.
ஆயிரம் கவிதை நல்க.
-கபிலன்
என்னைப் போல் இன்னும்
ஆறு பேருக்கு
எங்கு போவேன்? ///
அருமை நண்பரே ....... இக்கவிதை விரியும் தளங்களும் .. காதலனின் தவிப்பும் சிந்தனையின் சிறகை தடவி கொடுக்கின்றன ...
நல்ல கவிதை அண்ணா
கவிஞரைச் சந்திக்கிற ஓர் ஆள், "உங்களை நான் பார்த்திருக்கிறேன்," என்கிறான். "எங்கே, எப்போ?" "ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் நீங்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை." தான் உறங்கிக்கொண்டு இருந்தபோது பார்த்துக்கொண்டு இருந்தவன் என்ற வகையில் கவிஞருக்கு அவன்மீது மரியாதை வருகிறது.
//ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான், தெரியுமா?//
இப்படி இந்தக் கவிஞர்கள், ஒன்றுமே இல்லாததில் அளப்பரிய தத்துவம் திகைய நம்மைத் திகைப்பிக்கிறார்கள்.
முதலில் சொல்லப்பட்ட அவர், கவிஞர் தேவதேவன்.
முன்னது அருமை :)
பின்னது அழகு :)
அப்படியே அடிச்சு ஆடுங்க சித்தப்ஸு
முதல் கவிதை நல்லாயிருக்கு ராஜாராம்.
Vry Nice Maammssssssss...... :)
ரொம்ப நல்லா இருக்கு ணா
நொருங்கி விழுந்த கண்ணாடி கோப்பையின் கூரிய சில்லை போல வரிகள்
அவ்வளவும் காதல் இல்லையின்னா வரும்மா வரிகள் இப்படியேல்லாம்
அண்ணா...
ரெண்டுமே புடிச்சிருக்கு பா.ரா !
இப்படியும் நிகழ்ந்திருந்தால் வாழ்க்கை இன்னும் நன்றாயிருந்திருக்கும் ...ம்ம்ஹூம்
ஒன்றும் இல்லாததை தொட்டது அழகு
இப்படியெல்லாம் பிரம்மிப்புகளை
எழுதிப்புட்டு..என்னை மாதிரி எதையோ கிறுக்கிட்டு இருக்கறவங்கட்டு வந்து.. தலைல பனம் பழத்தை வச்சுட்டு வந்திர்ரது....
அற்புதம்..தேவதேவனுக்கப்பறம் துளிகளில் கோப்பையை நிரப்புவது நீங்ள்தான்....
//ஒன்றுமில்லாத இடத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது..
எல்லாமும்தான்//
நகுலனும் நிழழாடுகிறார்...
நன்றி!!!...
அழகு இரண்டும்
ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?
ம்.. என் மனதைத் தொட்டு விட்டது!
கவிதைக்குள்ளேயே முகத்தை கொண்டு வரும் வித்தையை எங்கு கற்றுக் கொண்டீர்களப்பா ...அதுவும் எல்லா பாவத்தோடும்.....வரிய விட்டு நகர முடியலை...
suppero supper andnnae!
ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?
அப்படியா!
நச் அண்ணா!
முதல் கவிதை மிகப் பிடித்திருந்தது மக்கா.
ஒன்றுமே இல்லாததைத் தொட்டு விடுவதற்காகத்தான் இங்கிருக்கிறோமோ?
@ஹேமா
தூங்கும் போது யோசிப்பு? டேய்.. :-)) நன்றிடா பயலே!
@பிரேமா மகள்
நன்றி சுபி!
@சேகர்
நலமா சேகர்? மிக்க நன்றியும்!
@இராசராச சோழன்
மிக்க நன்றி ஆர்.ஆர்.எஸ்! :-)
@கபிலன்
கபிலன், lively கமென்ட்! :-)) மிக்க நன்றி மக்கா!
@முடிவிலி
ஷங்கர், நலமா மக்கா? மிக்க நன்றி!
@லாவண்யா
நன்றிடா லாவண்யா!
@ராஜசுந்தரராஜன் அண்ணே
நன்றியண்ணே! நல்லாருக்கியாடான்னு கேட்டுட்டு போகலாம். என்னையவோ, நேசனையோ. விழுந்து,விழுந்து அல்லது ஓடி, ஓடி கை தேடி பற்றுவது என்ன வகையான பக்குவம்ண்ணே! வாழ்ந்த காலங்களை கைக்குள் மறைத்துக் கொண்டு, கைநீட்டி "என்ன சொல்லு பார்ப்போம்?" என்கிறீர்கள். நாங்களும் தொட்டு தடவுகிறோம், தொட்டு தொட்டு தடவுகிறோம்.. தடவிக் கொண்டே இருக்கிறோம்... நீங்களும் வந்தாத்தாண்ணே, ஒன்றுமில்லாததை தொட்ட சுகம்! சீக்கிரம் வாங்கண்ணே..
@அசோக்
நன்றி மகன்ஸ்! :-)
@சுந்தரா
வாடா, கொம்பேறி மூக்கா! :-) நன்றிடா பயலே!
@சிவாஜி
மாப்சு, ரொம்ப நாளாச்சு? நன்றி மாப்ஸ்!
@யாத்ரா
செந்தி! நலமா இருவரும்? நன்றி மக்கா!
@செந்தில் குமார்
நன்றி தம்பு! :-)
@ஜெனோ
நன்றி ஜெனோ!
@மோகன்
நன்றி மோகன்!
@சு.சிவக்குமார்
பாருங்களேன் இப்பவும் உங்களுக்கு பனம்பழம்தான் நினைவு வருகிறது. உச்சி வெயிலின் ஒற்றை பனை மர நிழல் போல பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. பொழுதுக்கு தக்கவாறு. உங்களையே.. வேறு என்ன செய்யட்டும் மக்கா? நன்றியும்!
@ரிஷபன்
நன்றி ரிஷபன்!
@கமலேஷ்
மகன்ஸ், நலமா? ஓவரா பேசாதே. வாயிலேயே போடுவேன். நன்றிடா பயலே!
@மெல்லினமே...
ரொம்ப நன்றி மக்கா!
@அக்பர்
நன்றி அக்பர்! :-)
@சரவனா
ஆம சரவனா, எனக்கும் இதே கேள்விதான். நம்ம வயிறை விட இள நொங்கு வயிறுகள்(thanks,sundharji) நகர்த்துகிறது.. :-( நன்றி மக்கா!
விகடனில் படித்த இந்தக்கவிதை உங்களை நோக்கி சொடிக்கி விட்டது.
ஒன்ற்மில்லாததை தொட்டுவிட்டீர்கள் பா.ரா.!
mikavum arumai yanai kavithaigul
அருமையான கவிதைகள்..
கடின வார்த்தைகள் இல்லாமல் பெரிய விஷயங்களைப் பேசுகின்றன உங்கள் கவிதைகள். அட்டகாசம் பண்றீங்க.!
ஒன்றை புரிந்து ரசித்தேன்...:)
ஒன்றும் இல்லாததிற்குள் எதோ கண்டு பிடிக்க சொன்ன அவளும் ,எதோ இருக்கிறதை தெரிந்து அதை மட்டும் சொல்லாத நீங்களும் பலே ஆட்கள் தான் .
பா ரா சார் கண்ணா மூச்சி விளையாட்டு தானே அடுத்து?
//ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?//
:)
தொட்டு விட்டீர்கள் மனதை!
தொட்டு விட்டீர்கள் மனதை!
நான் ரொம்ப லேட்டு போல.
எனக்கும் முதல் கவிதை ரொம்ப...
பிடித்திருக்கிறது.
@வேல்ஜி
வணக்கம் வேல்ஜி! நலமா? எவ்வளவு நாளாச்சு! மிக்க நன்றி மக்கா!
@அபினேஷ்
வாங்க அபி! மிக்க நன்றி!
@உழவர்
நன்றி உழவரே!
@ஆதி
ரொம்ப நன்றி ஆதி!
@சபிக்ஸ்
மிக்க நன்றி மக்கா!
@பத்மா
பத்மா, நடத்துங்க.. :-)) மிக்க நன்றி மக்கா!
@கீதா
வாங்க கீதா, மிக்க நன்றி!
@ஜனா
நன்றி ஜனா!
@அம்பிகா
மிக்க நன்றி சகோ!
அருமை பா.ரா..
Post a Comment