Monday, June 21, 2010

மகள் மகன் கதைகள்


(Picture by cc licence, Thanks cliff1066)

வெயிலடித்துக் கொண்டே
மழை பெய்தால்
நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் என்றாள்
மகள் ஒரு நாள்.

கேட்க நன்றாக இருந்ததால்
ஆகா எனக் கேட்டுக் கொண்டேன்.

ற வச்ச அரிசி தின்றால்
உங்க கல்யாணத்தன்னைக்கு
மழை பெய்யும் என்றாள்
மற்றொரு நாள்.

கேட்க நன்றாகத்தான் இருந்தது.
என்றாலும்
சுற்றும் முற்றும்
பார்த்துக் கொண்டேன்.

**

மொட்டை மாடியில்
படுத்திருந்த நாளொன்றில்
மகனுக்கு நிலாக் கதையை
தொடங்கியிருந்தேன்.

ட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருப்பதால்
நிலாக் கதையொன்றும்
வேண்டாம் என்றான்.

சுட்டி சுட்டி எண்ணிய விரலில்
சறுக்கி இறங்கிய
நட்சத்திரங்கள்...

கனுக்கு சொல்ல நினைத்திருந்த
நிலாக் கதையை
எனக்கு சொல்லத் தொடங்கின.

60 comments:

க ரா said...

// ஊற வச்ச அரிசி தின்றால்
உங்க கல்யாணத்தன்னைக்கு
மழை பெய்யும் என்றாள்
மற்றொரு நாள். //
சிரிச்சுகிட்டே இருப்பேன் சான் இன்னிக்கு முழுக்க.

க ரா said...

மனசுக்குள்ள டென்ஷன் இருந்தா உங்க கவிதைய படிச்சா போதும் சார். மனசு ரொம்ப லேசாயிடுது எனக்கு. ரொம்ப நன்றி சார்.

நேசமித்ரன் said...

இந்தக் குசும்பும் ரசனையும் நல்லா இருக்குண்ணே

பாலா said...

கேட்க நன்றாகத்தான் இருந்தது.
என்றாலும்
சுற்றும் முற்றும்
பார்த்துக் கொண்டேன்.

நல்லாத்தான் இருக்கும் மாம்ஸ் நல்லாத்தான் இருக்கும்

சிநேகிதன் அக்பர் said...

பா.ரா அண்ணா கலக்குங்க...

//ஊற வச்ச அரிசி தின்றால்
உங்க கல்யாணத்தன்னைக்கு
மழை பெய்யும் என்றாள்
மற்றொரு நாள். //

நல்ல ஆசைதான் :)

உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

வினோ said...

அழகு அண்ணே...

Unknown said...

ரெண்டுமே அடிபொழி மாம்ஸ்
:)))

சுசி said...

:))))

எம் அப்துல் காதர் said...

//சுற்றும் முற்றும்
பார்த்துக் கொண்டேன்//.

ஹா..ஹா..ஹா..

Ashok D said...

//சுட்டி சுட்டி எண்ணிய விரலில்
சறுக்கி இறங்கிய
நட்சத்திரங்கள்...

மகனுக்கு சொல்ல நினைத்திருந்த
நிலாக் கதையை
எனக்கு சொல்லத் தொடங்கின//

ஓக்கே சித்தப்ஸ்... :))

உரையாடல் கவிதை போட்டியில் வென்ற சித்தப்பன், மகன் கதை தெரியுமா உங்களுக்கு.. ;)

வாழ்த்துகள்.. cheers.........

காமராஜ் said...

எப்டி பாரா.
இந்த வீட்டை.
முன்மதிய தாவாரத்து நிழலை. மொட்டைமாடி நிலவை.வளவிச்சத்தத்து இசையை.சாதம் கொதிக்கிற வாசனையை.
சாயங்கால காத்திருப்பை.இதெலாம் சலித்துப்போகும் போது வந்துநிற்கிற உரசலை.
அதற்குப்பின்னான மர்மக்கவிதையை.

சேத்து வச்சு மணக்க மணக்க பரிமாறுகிற படைப்பாளி பாரா.

இப்படிபாராவை
படித்தபின்னாடி அப்டியே கண்ணமூடிசஞ்சாரிக்கலாம் அந்த அற்புத நினைவுகளுக்குள்.

இகம் மட்டும் நிஜ சொர்க்கம்.

vasu balaji said...

வாழ்த்துகள் பா.ரா. பரிசுக்கு.

/சுட்டி சுட்டி எண்ணிய விரலில்
சறுக்கி இறங்கிய
நட்சத்திரங்கள்...

மகனுக்கு சொல்ல நினைத்திருந்த
நிலாக் கதையை
எனக்கு சொல்லத் தொடங்கின./

எனக்கும் கிசு கிசுக்குது :)

ஹேமா said...

எப்பவும் போலவே கலக்கல் மழைதான் அண்ணா !

வாழ்த்துகளும் கூட.

சாந்தி மாரியப்பன் said...

//ஊற வச்ச அரிசி தின்றால்
உங்க கல்யாணத்தன்னைக்கு
மழை பெய்யும் என்றாள்
மற்றொரு நாள்.

கேட்க நன்றாகத்தான் இருந்தது.
என்றாலும்
சுற்றும் முற்றும்
பார்த்துக் கொண்டேன்.//

கேக்க நல்லாத்தான் இருக்கும்..
:-)))))))))))))

Katz said...

//சுட்டி சுட்டி எண்ணிய விரலில்
சறுக்கி இறங்கிய
நட்சத்திரங்கள்...

மகனுக்கு சொல்ல நினைத்திருந்த
நிலாக் கதையை
எனக்கு சொல்லத் தொடங்கின.
//

அருமை!

கமலேஷ் said...

ரெண்டு கவிதையுமே
ரொம்ப நல்லா இருக்குப்பா...

ராஜவம்சம் said...

இந்த உலகத்துக்கு கடவுலால் மூன்று கப்பல் கவிதை அனுப்பப்பட்டதாம் அதில் இரண்டை உலகுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டு
நேரமின்மைகாரணத்தல் மூண்றாவது கப்பலை அப்படியே சித்தப்புவிடம் விட்டுச்சென்றுவிட்டதாம்.

பரிசுக்கு மகிழ்ச்சி.

.

செ.சரவணக்குமார் said...

இரண்டு கவிதைகளுமே நெருக்கமாக வந்து மனதில் ஏறி இடம் பிடித்துக்கொண்டன.

மறந்துபோன பழசையெல்லாம் அப்பப்ப ஞாபகப்படுத்துறதுக்கு பக்கத்துலயே ஒருத்தர் இருக்கார். ரொம்பப் பக்கத்துல.

உரையாடல் வெற்றிக்கு வாழ்த்துகள்.

மாதவராஜ் said...

சேட்டைக்கார கவி மக்கா!

வாழ்த்துக்கள் பரிசுக்கு. சேத்து வச்சு வாங்கணும் ஒருநாள்!

:-)))))

Chitra said...

மகனுக்கு சொல்ல நினைத்திருந்த
நிலாக் கதையை
எனக்கு சொல்லத் தொடங்கின.


....wow!

பனித்துளி சங்கர் said...

இரண்டும் அருமை . அதிலும் இறுதி கவிதை மிகவும் சிறப்பாக இருந்தது

நளினி சங்கர் said...

மகன் குடுத்த பல்பையும் ஒரு கவிதையாக மாற்றி இருக்கிறீரே தலைவா...

இரண்டுமே வழக்கம்போல அருமை பாரா...

ஈரோடு கதிர் said...

கவிதை அழகு

பரிசுக்கு வாழ்த்துகள் பா.ரா

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை ரொம்ப அழகா இருக்கு.. வாழ்த்துகள் பா.ரா அண்ணே..

Unknown said...

உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.

பிரேமா மகள் said...

உண்மைதான்.. ஊற வைச்ச அரிசியை தின்னதால, என் கல்யாணத்தப்போ மழை பெய்தது.//

sathishsangkavi.blogspot.com said...

//ஊற வச்ச அரிசி தின்றால்
உங்க கல்யாணத்தன்னைக்கு
மழை பெய்யும் என்றாள்
மற்றொரு நாள்.//

என் திருமணத்தன்றும் இப்படித்தான் சொன்னாங்க....

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

செந்தில்குமார் said...

மழை நல்லாவே பெய்திருகிரது

அண்ணா...

வெகு நாட்கள் ஆச்சு இப்படியெல்லாம் கேட்டு.....

ராமலக்ஷ்மி said...

//கேட்க நன்றாகத்தான் இருந்தது.
என்றாலும்
சுற்றும் முற்றும்
பார்த்துக் கொண்டேன்.//

இருக்கும் இருக்கும்:))!

உரையாடல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் பா ரா.

அம்பிகா said...

ஊற வச்ச அரிசியை சுற்றும் முற்றும் பார்த்தபடி எடுத்து தின்னிங்களா?

//சுட்டி சுட்டி எண்ணிய விரலில்
சறுக்கி இறங்கிய
நட்சத்திரங்கள்...

மகனுக்கு சொல்ல நினைத்திருந்த
நிலாக் கதையை
எனக்கு சொல்லத் தொடங்கின//

அழகு. அருமை.

அன்புடன் நான் said...

இப்படி ஒரு நிகழ்வையும் கவிதையில் பதியும் உங்களுக்கு நன்றி.
பா ரா ட்டுக்கள்.

ஜெய் said...

// சுட்டி சுட்டி எண்ணிய விரலில்
சறுக்கி இறங்கிய
நட்சத்திரங்கள்.. //

பெரிய கவிதைக்கு நடுவுல இப்படி குட்டி குட்டி கவிதையும் வர்றது அழகு...

rajasundararajan said...

//நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் என்றாள்
மகள் ஒரு நாள்.//

//உங்க கல்யாணத்தன்னைக்கு
மழை பெய்யும் என்றாள்//

//நிலாக் கதையொன்றும்
வேண்டாம் என்றான்.//

//சுட்டி சுட்டி எண்ணிய விரலில்
சறுக்கி இறங்கிய
நட்சத்திரங்கள்...//

பெண்ணாய்ப் பிறந்ததுகளுக்குக் கல்யாணத்தைத் தாண்டி ஒன்றும் தெரியாது. கொஞ்சம் மழை (அன்பு) தெரியும்.

ஆண் பிறப்புகள் நிலாவை (மனச்சார்பினை) ஒதுக்கிவிட்டு, நட்சத்திரங்களை (லட்சியங்களை) குறிவைக்கலாம்.

நம் ஆண்பிள்ளைகள் இப்படி என்று நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் பெண்பிள்ளைகள் பெரும்பாலும் இப்படித்தான், இன்றைக்கும்.

நன்றாக இருந்தாலும் வெட்கப்பட வேண்டிய வளர்ப்பு என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டீர்களோ? 'பெண்ணியல்' ஆளர்கள் சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள், பார்த்து.

சுந்தர்ஜி said...

நாம் இழந்துபோனவைகளை மீட்டெடுக்கிறது உங்கள் கவிதைகள்.

என்னவொரு வளமையான கற்பனை.நாய்க்கும் நரிக்கும் கல்யாணம்.ஊறவைத்த அரிசி கல்யாணத்துக்கு மழை கொண்டுவரும்.அதுவும் இதையெல்லாம் பெண்ணொருத்தி சொல்லிக்கேட்பதென்பது இனி இல்லாமல் போய்விடுமே பா.ரா.

வானமும் நக்ஷத்திரங்களும் மொட்டை மாடியும் இருக்கின்றன.ஊம் கொட்டத்தான் யாருமில்லை.

க.பாலாசி said...

முதல் கவிதையிலேர்ந்தே மீளமுடியாத நிலை...இரண்டாவது அதையும் தூக்கிவிட்டது...

சிவாஜி சங்கர் said...

ஜூப்பர்...மாம்ஸ் :)

VELU.G said...

மிகவும் அருமை

பாலா அறம்வளர்த்தான் said...

பரிசுக்கு வாழ்த்துகள் பா ரா!!!

இரண்டும் வழக்கம் போல அருமை.

நீங்கள் முல்லைக்கு இட்ட பின்னூட்டத்தை வைத்து , முதல் கவிதையை கொஞ்சம் வேறு விதமாகவும் படித்து பார்த்தேன் :-)

SUFFIX said...

அருமை பா.ரா...ஹி..ஹி :)

Deepa said...

//சுட்டி சுட்டி எண்ணிய விரலில்
சறுக்கி இறங்கிய
நட்சத்திரங்கள்...//
இது ரொம்ப அழகு! :)

Marimuthu Murugan said...

ஒன்று:

//கேட்க நன்றாகத்தான் இருந்தது.
என்றாலும்
சுற்றும் முற்றும்
பார்த்துக் கொண்டேன்//

(குற்றமுள்ள மனசு போல,,

.....கலக்கல்...)


இரண்டு:

அருமை. நெகிழ்வான கவிதை....


மூன்று:
உரையாடல் கவிதைப் போட்டியில் தேர்வானதற்கு வாழ்த்துக்கள்.

vasan said...

இங்கும், பெண்(குழ‌ந்தை)பேசுகிறாள்,
ஆண்(குழ‌ந்தை)ந‌ம் சொல் கேட்ப‌தில்லை.

AkashSankar said...

எளிமை + கவிதை = கருவேல நிழல்

அன்புடன் அருணா said...

உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பூங்கொத்து வாழ்த்துகள்!
கவிதைக்கும் சேர்த்து!

ஜெனோவா said...

ஊற வாய்த்த அரிசி- மழை , நரி-காக்கை கல்யாணம் , காயும் கை - தாமதமான திருமணம் .. இன்னும் நிறைய நினைக்க நினைக்க சந்தோசம் ... இந்த நிலைக்காகவே இன்னும் நம்பும்படி ஆகிறது , இதையெல்லாம் இன்னும் எழுதுகிறீர்கள் என்றால் நீங்களும் இன்னும் மறக்கல போல :)

வாழ்த்துக்கள் டியர் :)

sakthi said...

ஊற வச்ச அரிசி தின்றால்
உங்க கல்யாணத்தன்னைக்கு
மழை பெய்யும் என்றாள்
மற்றொரு நாள்

ippavum naanga ithai solram raja anna

Madumitha said...

இரண்டு கவிதைகளும்
நன்று.

கே. பி. ஜனா... said...

சுற்று முற்றும் பார்த்து விட்டு கரகோஷம் செய்தேன்! -கே.பி.ஜனா

கமலேஷ் said...
This comment has been removed by the author.
விஜய் said...

கவிதை போட்டியில் நம்ம சுற்றத்தில் உங்களுக்காவது பரிசு கொடுத்தார்களே, அதற்க்கு முதலில் வாழ்த்துக்கள்.

நட்சத்திர வாழ்த்துக்கள் பங்கு கவிதைக்கு

நளினி சங்கர் said...

கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் -னே

இன்றைய கவிதை said...

பா ரா

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

கவிதை எப்பொழுதும் போல் அருமை
உங்கள் நடை தங்கு தடையில்லா நதி போல் உள்ளது அது போல் எனக்கும் எழுத ஆசை
அந்த உத்வேகத்தை தந்தைமைக்கும் நன்றி

ஜேகே

பா.ராஜாராம் said...

நன்றி ஆர்.கே!

நன்றி நேசா!

அக்பர், நன்றி!

நன்றி முத்துலெச்சுமி!

வாங்க வினோ. மிகுந்த நன்றி!

நன்றி மாப்ஸ், ஆ.மு!

நன்றி சுசி!

நன்றி அப்துல் காதர்!

நன்றி மகன்ஸ்!

நன்றி காமு!

நன்றி பாலாண்ணா!

நன்றிடா ஹேமா!

நன்றிங்க அமைதிச்சாரல்!

வாங்க வழிப்போக்கன். நன்றிங்க!

நன்றிடா குட்டீஸ்!

நன்றி மகன்ஸ்! மகனே, டைட்டானிக்? :-)

நன்றி சரவனா! :-)

நன்றி மாது!

நன்றி சித்ரா!

நன்றி ப.து.சங்கர்!

நன்றி நளினி சங்கர்!

நன்றி கதிர்!

நன்றி ஷேக்!

நன்றி செ.ஜெ!

நன்றி சுபி!

Anonymous said...

முதல் கவிதைக்கு வாய்விட்டு சிரிச்சேன் :)

அண்ணாமலை..!! said...

ரசனைக்காரருங்கோ!!!!

பா.ராஜாராம் said...

நன்றி sangkavi! :-)

நன்றி டி.வி.ஆர். சார்! திரும்ப வந்தது, பின்னூட்டங்களில் உங்களை பார்ப்பது ரொம்ப சந்தோசமாய் இருக்கு சார்.

நன்றி செந்தி!

நன்றி சகா! :-))

நன்றி அம்பிகா! :-))

ரொம்ப நன்றி கருணா!

வாங்க ஜெய், நன்றி மக்கா!

நன்றியண்ணே! வெள்ளந்தியான கவிதை என நினைத்தேன்! இவ்வளவு பேசுதாண்ணே? கவிதையும்,
பெண்(குழந்தைகள்)கள் போலதானேண்ணே.. பிடித்தவர்களுக்கு என ஒரு பேச்சு/சைகை/கண்வெட்டு/முகவெட்டு இருக்கும்...உணர்ந்து எடுப்பவன் பாக்யவான். இல்லையா அண்ணே?

ஆம் சுந்தர்ஜி! நிறைய இழக்கிறோம்...'நாம'தான் எதுனா சேர்க்கணும். பத்திரப் படுத்தனும். நன்றி மக்கா!

சிவாஜி மாப்ஸ்! நன்றியப்பு!

நன்றி பாலா அறம்வளர்த்தான்! பப்பு சொன்னது போல என்று யோசித்தீர்களோ பாலா? :-)) குழந்தைகள் சிந்துகிற வார்த்தைக்குள் ஒரு ஜென்மம் வாழ்ந்து விடலாம்தான். சில நேரம் இதுவே பத்தாமலும் போயிரும். இல்லையா?

நன்றி சபிக்ஸ்! ஹி..ஹி.. சொல்லுது உங்கள் தகப்பன்மையை! :-)

நன்றி தீபா! நீங்களும் ரொம்ப நாள் ஆச்சுதான் தீபா வந்து. :-)

மூன்றிற்கும் நன்றி மாரி-முத்து!

நன்றி வாசன்! :-)

மிக்க நன்றி ராசராசசோழன்!

டீச்சர், நன்றி!

'நாம' மறக்கலாமா ஜெனோ? இந்த நாமவில் நீங்களும்தான் டியர்! நன்றி ஜெனோ!

என்னடா சக்தி ஆளையே/பதிவையே காணோம்? நலமா மக்கா? நன்றிடா பயலே!

நன்றிங்க மதுமிதா!

:-)) நன்றி ஜனா!

நன்றி பங்கு! எனக்கும் சில ஏமாற்றங்கள் உண்டு விஜய். ஆனால், இதைக்கொண்டா நம்மை நேர் செய்வது?

நன்றி ந.சங்கர்! டீ ஆத்துவோமா? :-)

என்னங்கையா ஜேகே! நலமா? நன்றி மக்கா!

நன்றி C.A!

வாங்க அண்ணாமலை, நன்றி!

ரிஷபன் said...

உங்கள் கவிதைக் கதைகள் மன இறுக்கம் தளர்த்தி அப்படியே பஞ்சு போல லேசாக்கிவிடுவதுதான் நிஜம். ‘உம்மணாமூஞ்சி’கள் கூட புன்னகைக்க வைத்து விடும் சாதுர்ய வார்த்தைகள்..

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றி ரிஷபன்!