Sunday, June 27, 2010

வலைச்சரத்தில் - ஒரு வாரம்!

சரியாய் 20-வது வயது தொடக்கத்தில் அப்பா எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். கல்லூரி முடித்த கையோடு கல்யாணத்திற்குள் நுழைய நேரிட்டது. கல்லூரியில், மூன்று வருடமும் 400 மீட்டர், 110 மீட்டர், தடை தாண்டும் ஓட்டத்தில்(hurdles), மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி சாம்பியன். இதைக் கொண்டு, அழகப்பா பிசிகல் எஜுகேசன் கல்லூரியில் சீட் வாங்கலாம் என அப்பாவும், கோச் வேலாயுதம் சாரும் வற்புறுத்தினார்கள். "நாலு பொம்பள புள்ளைகளை வளர்த்தவண்டா. ஒரு புள்ளையை பார்க்க மாட்டனா? லதாபாட்டுக்கு வீட்ல இருக்கட்டும். நீம்பாட்டுக்கு படி" என்றார் அப்பா.

"நல்ல விளையாட்டாவுல இருக்கு" என்று கிருஷ்ணா மெடிக்கல்சில் 500 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இதுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அப்பாவின் நண்பர் கணேசன் மாமாவிடம் கடனுக்காக போய் நின்ற போது, "ஒங்கப்பன் சம்பளம் வாங்கி வட்டியை கொடுத்துர்ராண்டா. திருப்பி வட்டிக்கு வாங்கி சம்பளம் மாதிரி கொண்டு வர்றான்" என்றார். போக, மனைவிக்கு வாங்கும் பூ என் காசாக இருக்க வேணும் என்பதும்தான்.

விளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின. "டே.. டே.. ஒன் விளையாட்டுல நாங்களும் இருக்கோம்டா...கொஞ்சம் பார்த்து விளையாடு" என அவ்வப்போது லதா, குழந்தைகள் நிஜத்திற்குள் இழுத்து வருவார்கள். பிறகு நிஜம் விளையாட்டாக தொடங்கும். அதாவது நிஜ விளையாட்டு.! ரொம்ப குழப்புறனோ?... சும்மாதான், விளையாட்டுக்குத்தான்...

சரி, வந்த விளையாட்டை பார்ப்போம்..

"வாங்கப்பு... வந்து பொறுப்பெடுங்க" என சீனா சார் ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தை நம்மிடம் தருகிறார். (வலைச்சரத்தில் எழுதப் போறான்கிறத என்னா பில்டப் கொடுக்குறான்யா என்று மாது-காமு மாதிரியான அம்ப்பயர்கள் தேர்ட் அம்ப்பயரிடம் கட்டம் கட்டுவார்கள், பாவிகள்! :-)

எடுத்துட்டாப் போச்சு சீனா சார். அப்புறம், ரொம்ப நன்றியும் சார்!

ஆக, இந்த வாரம் நம்ம டாப் வலைச்சரத்தில் மக்கள்ஸ்! so, அங்க வந்துருங்க. ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசுவோம்.

அட, வாங்க மக்கா..."இந்தா" இருக்குற தூரத்திற்கு வண்டி எடுத்துக்கிட்டு. காலாற பேசிக்கிட்டே நடக்கலாம்...

***

48 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள் பாரா அண்ணே.. கலக்குங்க கலக்குங்க.

Prathap Kumar S. said...

வாழ்த்துக்கள் பாரா ராஜா சார்...:))



//விளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின. "டே.. டே.. ஒன் விளையாட்டுல நாங்களும் இருக்கோம்டா...கொஞ்சம் பார்த்து விளையாடு" என அவ்வப்போது லதா, குழந்தைகள் நிஜத்திற்குள் இழுத்து வருவார்கள். பிறகு நிஜம் விளையாட்டாக தொடங்கும். அதாவது நிஜ விளையாட்டு.! ரொம்ப குழப்புறனோ?... சும்மாதான், விளையாட்டுக்குத்தான்..//

சார் வார்த்தைகளை போட்டு விளையாடுறீங்க...ஆனா ஒண்ணும் பிரியல.... என்னைமாதிரி ஆளுங்களுக்கும் கொஞ்சம் புரியட்டுமே சார்... :))

Karthick Chidambaram said...

வாழ்த்துகள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ரொம்ப சந்தோசம் ராஜாராம். வாரம் முழுக்க கலக்கல் தான் என்று தெரிகிறது. உங்கள் பில்டப்பும் அந்த மாதிரி இருக்கிறது.ஹ ஹ ஹா

Chitra said...

விளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின. "டே.. டே.. ஒன் விளையாட்டுல நாங்களும் இருக்கோம்டா...கொஞ்சம் பார்த்து விளையாடு" என அவ்வப்போது லதா, குழந்தைகள் நிஜத்திற்குள் இழுத்து வருவார்கள். பிறகு நிஜம் விளையாட்டாக தொடங்கும். அதாவது நிஜ விளையாட்டு.! ரொம்ப குழப்புறனோ?... சும்மாதான், விளையாட்டுக்குத்தான்...


......... கலக்கல்.

வலைச்சரத்தில் அசத்துங்க.... வாழ்த்துக்கள்!

சிநேகிதன் அக்பர் said...

இப்படித்தாண்ணே எனக்கும் 23ல கல்யாணம் ஆகிப்போச்சு. நண்பர்கள்லாம் பால்யவிவாகம்னு கிண்டல் பண்ணுவாங்க.

வாழ்த்துகள் அண்ணே!

செ.சரவணக்குமார் said...

ரொம்ப சந்தோஷம் மக்கா.

மனமார்ந்த வாழ்த்துகள்.

விளையாட்டா சொன்ன கல்யாணக் கதையும் அந்த நாட்களின் நினைவுகளையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியவில்லை அண்ணா.

ஒரு நல்ல அத்லெட்ட மிஸ் பண்ணிட்டோம்.

சரி, வலைச்சரத்துல விளையாடுங்க மக்கா.

Haroon said...

விளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின

Really very good

வினோ said...

வாழ்த்துக்கள் அண்ணே...ஒவ்வொரு இடமாய் போய் உங்க முத்திரையை செதுக்கிறிங்களே....

Ahamed irshad said...

வாழ்த்துகள் பாரா அண்ணே..

சுசி said...

வண்டின்னா பரவால்லங்க.. நான் ஃப்ளைட்டுல்ல பிடிக்கணும்..

இருந்தாலும் வந்துடறேன்..

வாழ்த்துக்கள்.

ஹேமா said...

வாவ்....அசத்தல் அண்ணா வாரம்.சந்தோஷம் அண்ணா.

நேசமித்ரன் said...

மக்கா வாழ்த்துகள் அடிச்சு ஆடுவீங்கன்னு தெரியும் .ம்ம் கேலரி எப்பவும் போல நிரம்பி வழியும்ன்னு நினைக்கிறேன்

என் பங்கு அட்சதை

vasu balaji said...

உள்ளே இருக்கிற விளையாட்டு வீரன் வார்த்தையில் விளையாடுறார். அதிலும் சாம்பியந்தானே பா.ரா. துள்ளலும், அயற்சியுமாய் வார்த்தையும்தான். வலைச்சர ஸ்டேடியத்தில் பார்ப்போம். வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் பா.ரா

அருமையான சுய அறிமுகம் - 20 வயதில் இல்லற வாழ்க்கையா = படித்தது மதுரை காமராஜ் பல்கலைக்கழகமா - நானுன் அப்பல்கலைக் கழக மாண்வன் தான். படித்தது மதுரை தான். நண்பரே ! வாங்க வாங்க ! அடிச்சு விளையாடுங்க அங்க .

நல்வாழ்த்துகள் பா.ரா
நட்புடன் சீனா

செந்தில்குமார் said...

வாழ்த்துகள் அண்ணே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் பாரா

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் பா ரா.

Unknown said...

வாழ்த்துகள்

அம்பிகா said...

\\விளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின.
வாழ்த்துக்கள் பாரா.

Unknown said...

வலைச்சர வாழ்த்துக்கள் சார்...

Ravichandran Somu said...

வாழ்த்துகள் பா.ரா அண்ணே!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

பத்மா said...

அடிச்சு தூள் கிளப்புங்க

கமலேஷ் said...

ஓ,,, கர்ப்ப கிரகம் விட்டு சாமி இன்னைக்கு வெளிய இறங்குதா ...இனி ஊருசனம் பூரா சாமி பின்னாடிதான். கோவில்ல காப்பு கட்டியாட்சி....திருவிழா முடியற வரைக்கும் யாரும் ஊரை விட்டு வெளிய போக மாட்டோம்...

அன்புடன் அருணா said...

பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்!

உயிரோடை said...

வாழ்த்துக‌ள் அண்ணா.

Jey said...

வாழ்த்துக்கள் சார்.

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துக்கள் பா.ரா அண்ணா.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள்! கலக்குங்க !!

Ashok D said...

அங்கயுமா? நடத்துங்க... :)

goma said...

பா.ரா.
வாழ்த்துக்கள்

Vidhoosh said...

டன் டாணா டர்ன்னா... :))

க.பாலாசி said...

மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்களும்...

dheva said...

சித்தாப்பா லீவுக்கு சுத்தி காமிக்க கதைபேச என்ன வலைச்சரத்துக்கு கூட்டிடு போறிங்களா...! நீங்க கதை சொல்லும் போது நான் உங்க மடிலதான் உக்காந்து இருப்பேன் சரியா... ! இருங்க... மிச்சர், உப்ப்புகடலை எல்லாம் பாக்கெட்ல எடுத்து போட்டு கிட்டு வர்றேன்... கொறிச்சுகிட்டே பேசுவோம்...

உங்களின் அருகாமை...
எனோ புரியவில்லை..
நெஞ்சு முழுதும்..
பாசத்த நிறைக்கிறது...சித்தப்பா...!

வாங்க சித்தப்பா வலைச்சர வீட்டுக்கு போவோம்....!

SUFFIX said...

வாழ்த்துக்கள் அண்ணே!!

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் பா.ரா.

Thamira said...

வாழ்த்துகள் பா.ரா.

எம் அப்துல் காதர் said...

வாழ்த்துகளை வாங்கியாச்சு, வெற்றி முரசும் கொட்டியாச்சு, படைப் பரி'வாரங்கள்' அங்கே வந்து குவிந்து விடுகிறோம். "இந்தா" கூப்பிடு தூரத்தில் தானே இருக்கு! அசத்திப்புடுங்க!

vasan said...

பா.ரா. பாருங்க‌, என்ன்ன்ன‌ எதிர்பார்ப்புன்னு!!
ச‌ரி, ப‌ட்டைய‌ கொழ‌ப்புங்க‌...ப‌டையோட‌.

Unknown said...

வாழ்த்துக்கள் மாமா, கலக்குங்க. :)

நந்தாகுமாரன் said...

வாழ்த்துகள் பா.ரா.

பிரேமா மகள் said...

ஐ... இனி வலைச்சரத்தில் கவிதை மழை பொழியும்..

Manaf Haneefa said...

வாழ்த்துக்கள் பாரா சார்.

பாலா said...

உங்க கைய பிடிச்சு கிட்டே நடக்கணும் போல இருக்கு மாமா

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்! வாழ்த்துகள்!

கலக்குங்கோ நண்பா,...

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

மிகுந்த அன்பும் நன்றியம் மக்களே!

காமராஜ் said...

நா வர்ரறதுக்குள்ள கூட்டம் கூடிருது.விளக்கிக்கொண்டு உள்ளே எட்டிப்பாக்க முடியறதில்ல, இருந்தாலும் எட்டத்தில் நின்னு சத்தம் கேட்டுக்கொள்ளலாம்.

குரல்வழியே அன்பை எரியலாம்.அங்கிருந்து எதிர்த்துவரும் அன்பை கையேந்திச் சுமக்கலாம்.

பாரா மாதிரி மனசிருந்தால் போதும்.

பாரா எங்கிருந்தாலும் பாரா தான்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு, நன்றியும் அன்பும்!