Sunday, August 1, 2010
பத்திரிக்கை வைக்க வருபவர்க்கு
(Picture by cc licence, Thanks Col_ford)
செட்டியார் கடை ஸ்டாப்ன்ணு
டிரைவர்ட்ட சொல்லி வைக்கணும்
அப்பதான் நிறுத்துவாரு.
இறங்கி செட்டியார்ட்ட கேட்டா
காட்டுவாரு நாவித மரத்தை.
முந்தில்லாம்
சின்னக்கண்ணு அண்ணன்
அந்த மரத்தடியில்தான்
எல்லோருக்கும்
கட்டிங், சேவிங் பண்ணுவாரு.
சின்னக்கண்ணு அண்ணன்
நாவிதர் ஆனபோது
மரமும் நாவித மரமாயிருச்சு.
நாவித மரத்திற்கு நேர் எதிரில்
ஆறுமுகம் சேர்வை சந்து.
ஆறுமுகம் மாமா வீடு இருந்ததால
இப்ப அது ஆறுமுகம் சேர்வை சந்து.
புடிச்சு வந்தீங்கன்னா
வேப்ப மரம் வச்ச வீடு.
சிவசாமி பிள்ளை
வீடான்னு கேட்டுக்கிடுங்க.
சிவசாமி தாத்தா
வீடாத்தான் இருந்தது.
இப்பதான் எல்லாம்
மாறிப் போச்சே.
***
Subscribe to:
Post Comments (Atom)
44 comments:
ரொம்ப நல்லாயிருக்குங்க!
கலக்கிட்டீங்க போங்க.. இப்பல்லாம் எல்லாம்தாம் மாறிவருதே.. நல்லவிதமாக :-)))
ஆமாண்ணே... எல்லாம் மாறித்தான் போச்சு ...
கலக்கிட்டீங்க
கவிதை நல்லாருக்கு
ஆனா இது பேசும் விஷயங்களோடு எனக்கு நிரம்பவே நெருடல் உண்டு..
எது மாறிப்போச்சு என்று சொல்லவருகிறீர்கள்? ஜாதியா? அப்படியெனில்.....
:). ஆமாம். வசதிக்கு.
//இப்பதான் எல்லாம் மாறிப் போச்சே.//
இப்ப கட வச்சு, காத்து(ஏசி) வச்சுலோ கிராப்பு,ஷேவ் எல்லாம் பண்ணிக்கிராயிங்க. அதச் சொல்ல வரீங்களாப்பு! அசத்தனும்னு முடிவு பண்ணிட்டா எல்லாமே மாறித்தான் போவும்!! பலே பலே அசத்துங்க!!
அண்ணாச்சி,மாமா, தாத்தா என்று இருந்த உறவுகள் காலப்போக்கில் மாறித்தான் போச்சு.
நல்லா வந்திருக்குண்ணே.
கவிதை நல்ல இருக்கு பா ரா அண்ணே...
அசத்தல் பா.ரா. வீட்டுக்கு வழி சொன்ன விதம் அழகு.
ஒவ்வொரு கவிதையிலும் புதுமை படைக்கிறீர்கள்.
கலக்கிட்டீங்க
வழக்கம்போல் அருமை...பா.ரா அண்ணே!
நான் சிறுவனாக இருந்தபோது சொந்த பந்தங்களின் வீடுகளை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் ஒரு சிலர்தான் பத்திரிக்கை வைக்க போகும் specialists!
நானும் சிறுவனாக இருந்தபோது பத்திரிக்கை கொடுக்க சென்றிருக்கிறேன்.. காப்பி,கலர் குடிப்பதற்காக:)
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
:))
மரத்தைத்தான் வெட்டித் தள்றோமே.அப்புறம் எப்பிடி அடையாளம் சொல்றது !
இனி ஆண்டனாக்களை வச்சுச் சொல்லலாமோ !
நாவிதர் அண்ணன், சேர்வை மாமா,
பிள்ளை தாத்தா, சாதிகள் தாண்டிய உறவுகள்.
//இப்பதான் எல்லாம்
மாறிப் போச்சே.//
மாறித்தான் விட்டது.
தடைசெய்த பின் அதன் தாக்கம்.
தலைகீழாய்.
கவிதை நல்லாருக்கு!!!
தலைப்பில் எழுத்துப் பிழை : பத்திரிகை வைக்க வருபவர்க்கு என இருக்க வேண்டும்.
@விந்தை மனிதன்
எனக்கும் நெருடல்தான் மக்கா. உடன்பாடில்லை.
"உறவுகளின் நசிவிற்கு எதுவெல்லாம் காரணமாகிறது பாருங்கள்?" என்கிற தொணியே, கவிதையில் பேச வந்தது. நன்றி விந்தை மனிதன்!
ரொம்ப நல்லா இருக்குண்ணே
நல்லா இருக்கு மாம்ஸ் :)
கொஞ்சம் டிபிகலான கவிதைதான். இருப்பினும் உங்கள் வார்த்தைகளில் அழகாக இருக்கிறது.
கவிதை அருமை.. மண் மணம் தெரிந்தது.
சாதியை தாண்டிய உறவுகள், எல்லாமே மாறித்தான் போய்விட்டது.
கவிதை நல்லாயிருக்கு அண்ணா
nallaayirukku.....rajaram sir:)
ini ovvoru veedaakap poi paththirikkai vaikkum panbaavathu maaraamal irukkumaa??
kaalam thaan pathil sollum.appothum rajaram sir- in kavithai athai yellorukkum sollum:)
vaazhthukkal rajaram sir......!1
விந்தைமனிதன் தவறாகப் புரிந்துகொண்டாரோ என்று தோன்றுகிறது.
சின்னக்கண்ணு அண்ணன், ஆறுமுகம் மாமா, சிவசாமி தாத்தா என்று நம் சிறுவயதுப் புரிதலில் உறவுகொண்டு இருந்தவை எல்லாம் நாவிதர், சேர்வை, பிள்ளை என்று நம் முதிர்வயதுப் பிரித்தறிதலில் மாறிப்போனதே என்பதுதான் கவிதை சுட்டும் அவலம் என்று எண்ணுகிறேன். (தெரு/கடைப் பெயர்ப்பலகைகளில் சாதிப் பெயர் இருக்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்தாலும் நம் மண்டக்குள் அது அழிந்தபாடில்லை).
செட்டியார் என்ன பாவம் செய்தார், அவரையும் உறவு கொண்டாடி இருக்கலாம் அல்லவா?
கவிதை அருமை..
பெயர்க் காரணங்களும், வீட்டு அடையாள விவரணைகளும் அழகு... இவ்வளவு மெனக்கெட்டு உறவு கொண்டாடத்தான் ஆளில்லை.இதமான சொற்களில் வளரும் கவிதையின் முடிப்பு வரிகளிரண்டில் இருக்குது வெடி.
நல்லாயிருக்குங்க....
ஆமாம் எல்லாம் மாறிதான் போச்சி சூப்பர்.
இயே இன்னாமே அங்கபோயிகீனியா அங்க ஒரு பேமானி சேட்டு வட்டிகட ஈக்கிது அதிலேந்து ஸ்டைடா போயிகீனே இரி அப்பாலிக்கா டாஸ்மாக்குவரும் அதுல ரைட்டுபோய் லெப்ட்ல ஒரு யு டர்ன் போனா சேப்பு சாய அட்ச்ச மூனாவது வூட்டாண்ட போய் கேளுமே.
எதார்த்தமான அழகு.
கவிதை நல்லாருக்கு
:)
@ விந்தை மனிதன்
தென்னாடார் குசும்பு உம்ம விட்டு போகாது வோய் :)
அண்ணே எனக்கும் உண்டு மதார் சாயபு குருத வண்டி துவங்கி நினைவுகள்
சலவைத்துறை பாலு அண்ணன் வரை
அருமையான தொகுப்பு இந்தக் கவிதை
//சின்னக்கண்ணு அண்ணன்
நாவிதர் ஆனபோது
மரமும் நாவித மரமாயிருச்சு.
//
காரம்...!
ஒரே ஒரு சந்தேகம்
லதா மகன் நீங்களா?
ரொம்ப நல்லா இருக்குங்க...
கவிதை மிக அருமையா இருக்கு
அன்றும் இன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் வீட்டிற்கும் கூட சில புனை பெயர் இருக்க தான் செய்கின்றது, அருமை.
வாசனின் கருத்துதான் 100% சரியான கருத்து.
மோகன், ரொம்ப நன்றி!
வாஸ்தவம் சாரல். நன்றி!
நன்றி செந்தில்!
டி.வி.ஆர் சார், மிக்க நன்றி!
நன்றி விந்தை மனிதன்!
நன்றி பாலாண்ணா!
நன்றி அப்துல் காதர் சார்!
மிக சரி அக்பர்! நன்றி!
நன்றி தம்பி வினோ!
நன்றி ஜெஸ்!
நன்றி குமார்!
நன்றி ரவி!
சுசி மக்கா, நன்றி!
நன்றிடா ஹேமா!
நன்றி வாசன்ஜி! ஆம்.
நன்றி gulf-tamilan!
நன்றிடா சுந்தரா!
நன்றி யாத்ரா!
நன்றி ஆர். கே. மாப்ஸ்!
நன்றி ஆதி!
ஜோதிக் குமார், நன்றி!
நன்றி அம்பிகா! :-)
நன்றி ரசிகை!
நன்றியண்ணே! :-) செஞ்சுருக்கலாம்தான்.
நன்றிடா சக்தி!
நன்றிங்க நிலா மகள்!
sangkavi, நன்றி!
மகனே, கலக்கல். நன்றி! :-))
நன்றி விக்கி!
ப.து. சங்கர், நன்றி!
நன்றி மணிநரேன்!
நன்றி நேசா!
நன்றி வசந்த்!
இல்லை பத்மா. லதாமகன் கவிதைகளை நானும் வாசித்திருக்கிறேன் விகடனில். நன்றி பத்மா!
நன்றி யோகேஷ்!
ஜோ, மிக்க நன்றி!
நன்றி சுல்தான் சார்!
நன்றிங்க அழுத்தம்!
super சித்தப்ஸ்... இப்பதான் பாக்கறன் :)
@அசோக்
மகன்ஸ், என்னடா ஆளக் காணோமேன்னு இருந்தது. நன்றி அசோக்! ஏன் ஓய், பு.ஏ. மனிதர்கள் பிடிக்கலையா? அங்க உம்ம பின்னூட்டம் காணோமே?
அண்ணா ஒரு சிறுகதையா எழுதி இருக்கலாம்.
Post a Comment