Thursday, August 12, 2010
வழுக்கி விழும் வீடு
(Picture by cc licence, Thanks Brad & Ying)
சிகரெட் பிடிக்கிற காசிற்கு
வாழைப் பழம் வாங்கி தின்னேண்டா
என்பாள் அம்மா.
சிகரெட் குடிச்ச காசை
சேர்த்து வைத்திருந்தால்
வீடு கட்டியிருக்கலாம்
என்கிறாள் மனைவி.
கொல்லையில்,
வாழை மரங்கள் வைத்த
வீடொன்றை நினைக்க
நல்லாத்தான் இருக்கிறது...
புகைக்கிற போதெல்லாம்.
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
Subscribe to:
Post Comments (Atom)
60 comments:
கவிதை நல்லாஇருக்கு மாம்ஸ் :)
எப்ப வர்றீங்க பா.ரா? பேசி நொம்ப நாளாச்சு இல்ல
மாமா,
தேவையில்லாத்தை செய்யிறப்போ ஒன்னும் ஒறைக்கிறது இல்ல.
எல்லாம் ஓய்ஞ்ச... அப்புறமா பொலம்பறது எல்லார்க்கிட்டயுந்தான் இருக்கு.
Arumainga...
:).பா.ரா. :)). பொண்டாட்டி சொன்ன பேச்சுக்கு வீடு அம்மா சொன்ன பேச்சுக்கு வாழைமரம்.என்னா பேலன்ஸிங். அருமை பா.ரா.
அருமை.. கடைசி வரி புன்னகைக்க வைத்தது.
பீடி குடிச்சா இதெல்லாம் நடந்து இருக்குமோ ?
இன்னொரு முறையிலே சொன்னா, சிகரெட் குடிக்கிறதாலே வேலை வாய்ப்பு பெருகுது, நம்மளை நம்பி நாலு பேரு பொழைப்பு ஓடுது, குடிக்கிற நாம வீடு கட்ட முடியலைனாலும், தயாரிக்கிறவன் வீடு கட்டுறான், தோட்டம் வைக்குறான், ஊரான் புள்ளைய ஊட்டி வளர்த்தா தான் புள்ள தன்னாலே வளரும் ?
விகடத்துவம் மிளிர்கிறது
சிறுவயதில் கிச்சு கிச்சு தாம்பாளம் என்றொரு விளையாட்டு ஆடுவோம் அது நினைவுக்கு வருகிறது கவிதைக்குள் கவிதை இருக்கும் இடம் அடையும்போது
குடிக்கிற நாங்க என்ன செய்ய ...
வாழைமரங்கள் வைத்த வீட்டையும் தரலாம்; சிகரெட் குடிப்பதை நிறுத்தியாச்சி என்ற மகாசந்தோஷத்தை பெற்றவளுக்கும், கொண்டவளுக்கும் தரலாம்.
பா ரா அண்ணே கவிதை செம...
/ பொண்டாட்டி சொன்ன பேச்சுக்கு வீடு அம்மா சொன்ன பேச்சுக்கு வாழைமரம்.என்னா பேலன்ஸிங். அருமை பா.ரா. / - இது சூப்பர்..
/ குடிக்கிற நாங்க என்ன செய்ய ... / - இந்த கேள்விக்கு என்ன பதில்?
:) புன்னகைக்க வைக்கும் கவிதை :)
அருமை!!
ரொ.அ
aiyo... my dream house... avvvv... kavithai vazhakkam pola arumai... padam arumaiyo arumai....
சூப்பர்... புகைக்க தெரிந்த மனதிற்கு... வாழ்த்துக்கள்
சில விசயங்கள் பலர் சொல்லும் பொழுது உணர்வதில்லை இந்த மனம் . தானாக அதை பார்க்கவோ , சந்திக்கவோ நேரும் தருணத்தில் மட்டும்தான் உணர்ந்துகொள்கிறது . சிந்தனை சிறப்புதான் . பகிர்வுக்கு நன்றி
வீட்டைச் சுற்றி வாழைமரம் மட்டுமா பழத்தோட்டமே வைக்கலாம் சொன்ன சொல் கேட்டால். வீட்டில சொல்லி கேட்காதவர் வரப்போற புது உறவு சொல்லி கேட்க வேண்டி வரும் . கவிதையாக மட்டும் ரசிக்க முடிகிறது.
அட ஆமாமில்ல! சிகரெட் பிடிச்சிட்டே பாக்குறப்போ எல்லாமே நல்லா அழகாத்தான் தெரியுமில்ல! நல்லாருக்கு சார்!
அதானே சிகரெட் குடிக்கிற நாங்க என்ன செய்ய ?
//சிறுவயதில் கிச்சு கிச்சு தாம்பாளம் என்றொரு விளையாட்டு ஆடுவோம் அது நினைவுக்கு வருகிறது கவிதைக்குள் கவிதை இருக்கும் இடம் அடையும்போது//
சரியாகச் சொல்லியிருக்கிறார் நேசமித்ரன்.
உங்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் எழுத முடியும் பா.ரா.:)
நான் தம்மடிக்கறவன். எனக்கு கவிதை பிடிக்கல பா.ரா.
வாழைப்பழம் வாங்கற காசிற்கு
சிகரெட் வாங்கி ஊதுடா
உற்சாகப்படுத்துவார் அப்பா
என்று ஆரம்பித்திருக்கலாம்
பா.ரா அண்ணே,
அப்பா ஒன்னும் சொல்லவில்லையா?
இல்ல இப்படி சொன்னாரா:)
//வாழைப்பழம் வாங்கற காசிற்கு
சிகரெட் வாங்கி ஊதுடா
உற்சாகப்படுத்துவார் அப்பா//
இனிமேல் ஒவ்வொரு வியாழக்கிழமைக்கும் “ஆனந்த விகடனுக்கு வாழ்த்துகள்” என்று Automatic-க்கா ஒரு பின்னூட்டம் போடறமாறி ஒரு Program script எழுதப்போறேன்:)
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
அப்ப இன்னும் சிகரெட் குடிக்கீறீங்க. ம்ம்ம் கொஞ்சம் கூட பயமே இல்லாம போச்சு யார் பாசத்தின் மேலயும் இல்ல.
அருமை; விகடனின் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என வந்துட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்
எளிமை. அழகு. ஃபீல்.!
நேசமித்திரன்தான் கொஞ்சம் டஃப் கொடுக்கிறார். :-(
கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க!
கவிதை அழகா இருக்கு... ஆனா, கருத்து கண்டிக்கும்படியயிருக்கே !
ரொம்ப நல்ல கவிதை...ரொம்ப நல்லா இருக்குப்பா..
உதட்ல சிகரெட்டோட நீங்க கவிதை பேசுறது.
இதோட மூணாவது தடவை என்பதாய் ஞாபகம், இல்ல..
//
அச்சசல் அண்ணன்
மாதிரி இருந்ததால்
மறைத்துக்கொள்கிறேன்
புகையும் சிகரெட்டை
கைகளுக்குள்.
அவரும் புன்னகைத்து
கடந்து போகிறார்.
அண்ணனா
அண்ணன் மாதிரியா
என்கிற
கேள்வி மறைந்து
புன்னகையா
புன்னகை மாதிரியா
என்கிற கேள்வியில்
புகைந்து கொண்டிருந்தேன்.
சிகரெட் மாதிரி.///
---------------------
//என்னை மறந்ததேன்
தென்றலே என
எங்கேயோ பாடிக்கொண்டிருக்கு.
இக்காரணம் போதும்
சிகரெட் புகைக்க எனக்கு.///
//ஆதிமூலகிருஷ்ணன் said...
நேசமித்திரன்தான் கொஞ்சம் டஃப் கொடுக்கிறார். :-(
///
@ ஆதி ! Bear with me :)
http://seppiduviththai.blogspot.com
இதுவும் நாந்தான் பாஸ்.கொஞ்சம், கிறுக்குத்தனம் கம்மி இந்த ப்ளாக்குல
:)
நல்லாருக்கு சார்:)
சூப்பர்..!
கடைசி வரி புன்னகைக்க வைத்தது.
மாப்சு, நன்றி!
மணிஜி, நலமா? இந்தா வந்துக்கிட்டே இருக்கேன்ஜி.
யோவ் மாப்ள, வெறும் சிகரெட் குடிக்கிறதுக்கு இம்புட்டு பெரிய பஞ்சாயத்தாயா? :-)
நன்றி அஹமது இர்ஷாத்!
நன்றி பாலாண்ணா! :-)
ரிஷபன், மிக்க நன்றி!
industriyalist நசர், மாப்ள சத்ரியனிடம் சொல்லட்டா? பீடிக்கென மீண்டும் மொதல்ல இருந்து வருவார். நன்றி பாஸ்!
நேசா, கவிதைக்குள்ள எங்கடா கவிதை இருக்கு? பயமுறுத்துற பார்த்தியா? என்னங்கடா உங்களோட.. :-) நன்றி சொல்லனுமா நேசா?
குடிக்கிற நம்மன்னு சொல்லியிருக்கணும் செந்தில். நன்றி மக்கா!
சரிங்க அம்பிகா டீச்சர்! ;-)
கவிதையை விடுங்க வினோ. பாலாண்ணா சிகரெட் குடிக்கிறவரா இருந்தா மெயின் சப்ஜெக்ட்டை விட்டுட்டு ஆன்சிலரிக்கு தாவுவாரா? அண்ணாக்கள் எல்லோரும் ரொம்ப மோசம் வினோ அண்ணா. :-)
/ குடிக்கிற நாங்க என்ன செய்ய ... / - இந்த கேள்விக்கு என்ன பதில்? "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்."
குட்டிப் பைஸ், ரொம்ப நாளாச்சு. நன்றி!
மி.மி.ந, பின்னோக்கி!
நன்றி ப்ரியாஸ்! உங்க, கமலேஷ், பெயர் சொல்லி கயல் வந்தாங்க. அதுக்கும் சேர்த்து நன்றி!
மதுரை சரவணன், மிக்க நன்றி மக்கா!
ஆம்.மிக சரி, ப.து. சங்கர்! நன்றி பாஸ்!
போடுங்க மஹி அக்கா. போட்டாதான் திருந்துவான், ராசாப் பயல். (திருந்துவானாக்கா?) நன்றியக்கா!
விந்தை மனிதா, மேலே, மஹி அக்கா உமக்கும் சேர்த்துதான் போட்டிருக்கிறார்கள். மூச்! நன்றி பாஸ்!
பத்தாதுக்கு, நீருமா காமு? மஹிக்கா, ஹி..ஹி.. காமுவும்தான் போலக்கா. போடுங்கக்கா. போட்டாலா வது திருந்துவனான்னு பார்க்கலாம், இந்த காமு பயல். :-))
ரொம்ப நன்றி ம. மேகலா!
மஹிக்கா, விநாயகத்தின் பின்னூட்டம் மட்டும் உங்க கண்ணுக்கு பட்டுர வேணாம். ரௌடி அப்படித்தான்! (அவரை விட, அவர் அப்பா ரௌடி போல) ரௌடிகள்! :-)
அப்பா நிறைய சொன்னார் ரவி. 'நானொருவன் கெட்டது போதாதா?' என. அப்பாவை கெட்டவர் என பார்க்க ப்ரியமில்லை. நானும் கெட்டவனாகி, ப்ரியமான அப்பாவாகி விட்டேன். நன்றி ரவிச்சந்திரா!
இந்தா, லாவண்யா கிளம்புது பாருங்க...வைட்டமின் f லாவண்யா அது. நன்றிடா!
நன்றி மோகன்ஜி!
நன்றி ஆதி! உண்மையில், நேசன் வேறொரு உலகம் ஆதி. நமக்காக அவன் முகத்தை துடைக்கிறான். நண்பர்கள் சந்தோசத்திற்கென சுயத்தை துடைக்கிற நன்பன் அவன். ஊண்டி, ஊண்டி பார்க்கணும் ஆதி அவனை. பார்த்தாலும், தவ்விக் கொண்டுதான் இருப்பான்.
நல்லாயிருக்கே...
நிகோடின் சுவை கான்க்ரீட் கட்டிடத்தில் கிடைக்காதுதான் பங்கு
விகட வாழ்த்துக்கள்
விஜய்
நல்லாருக்கு சார்
அருமைண்ணே.
சுதந்திர தின வாழ்த்துகள்.
நன்றி மோகன்!
நன்றி நிலாமகள்! கண்டிச்சிருங்க. :-)
இதுக்காகவே பழசை எல்லாம் புரட்டினாயாக்கும், படவா கமலேஷ்? ஆனாலும் ஓவர் சிகரெட் வாடைதான் இல்லையா? சரி, விடு. நசரேயன் போல நாளையில் இருந்து பீடி. நன்றி படவா!
நேசா, நன்றி!
நன்றி தோசை (எ) வித்யா! :-)
நன்றி குமார்ஸ்!
சேகர், நலமா? மிக்க நன்றி மக்கா!
மிக்க நன்றி பங்கு! நேசமித்திரன் கவிதை மாதிரி உம் பின்னூட்டமும் மண்டையை குடையுது ஓய். ரெண்டுமே இணக்கமா இருக்கு. ஆனா, புரிஞ்ச பாடா காணோம். :-)
நன்றி அன்பரசன்!
கன்னக்குழி அக்பர், மிக்க நன்றியும், சேம் 2 யு வும்!
எப்டிங்க சார்... இப்டில்லாம் பின்றீங்களே... அருமையா இருக்குன்னு சொல்லித்தான் ஆகனுமா?
aahaa :)
அண்ணா,
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அ்ழைத்திருக்கிறேன்.
நேரம் அனுமதிக்கும் போது தொடருங்கள்.
புன்னகைக்க வைத்தது பா.ரா .
சிரிக்க (ம) சிந்திக்க வைத்த படைப்பு.
இந்தக்கவிதையும் புகைதான்...பனிப்புகை!
பாரா
புகை பற்றி கவதை புகையாய் ஆகும் ஆதங்கம் படித்து புகைத்து ரசித்துக்கொள்ளும் உள்ளங்கள்
இது தீராத விவாதம் கொளுத்தி விட்டால் புகைந்து கொண்டிருக்கும் நம்முள்
அருமை பாரா
நன்றி ஜேகே
பாலாசி, மிக்க நன்றி!
ஆனா ரூனா மாப்ஸ், நன்றி!
நன்றிடா அம்பிகா! //நேரம் அனுமதிக்கும்போது// இதுக்கும் சேர்த்து.
ஜெஸ், அன்பும் நன்றியும்!
ரொம்ப நன்றி பழனியப்பன்!
வேல்ஜி, மிக்க நன்றி! எம்புட்டு காலம் ஆச்சு! :-)
ஜேகே மக்கா,ரொம்ப நன்றி!
மிக எளிமையானதை சொல்லி எங்கோ கொண்டு போயிடுறீங்க மக்கா..:))
அருமையான கவிதை பாஸ்..
சமீபத்திய சேதி..
காட்டுக் கருவேல மரங்கள் விஷச் செடிகளாம் ... அது நாட்டுக்கும் வீட்டுக்கும் ஆகாது.. வெட்டித் தள்ள வேண்டுமாம்...
அதன் நிழல்ல உக்காராதீக... அது ஆக்சிஜனை அதிக அளவில் உறிஞ்சி, அதிக கரியமிலவாயுவை வெளிப்படுத்துமாம்.. தான் வளரும் இடத்தில் வேறு சிறு செடிகள் வளர இடமளிக்காதாம்.. வேரை நிலத்தின் வெகு ஆழங்களுக்குச் செலுத்தி நிலத்தடி நீரை அதீதமாக உறிஞ்சுமாம்.. அதனால் அது இருக்கும் இடங்களில் வறட்சி நிலவுமாம்.. ஆனால் அது மட்டும் செழித்து இருக்குமாம்..
தேனு மக்கா, மிக்க நன்றி!
வாரும்யா. வரும்போதே உம்ம கோடங்கியை இம்புட்டு உருட்டனுமாக்கும்? :-) கருவேலநிழலில் இனி நானே அமர்வேன்? நன்றி பிரகாஸ்!
உங்க வலைப பக்கத்தின் பெயரைப் பாத்ததும் அப்படி எழுதினேன்.. உக்காராட்டி சர்தாம்ப்பா...
..புகைக்கத் தெரிந்த மனமே..
உனக்கு கதைக்கத் தெரியாதா?..
அட..உங்கள் கவிதையைப் பார்த்து எனக்கும் கூட கவிதை வருகிறதே...
அன்புடன்..
ஆர்.ஆர்.ஆர்
பிரகாஷ், ஜாலியா சொன்னது மக்கா. எனக்கு பிடிச்ச இடத்தில் நான் உட்காராவிட்டால் எப்படி?"(நல்லா உக்கார்ந்துக்கோ" வா? இதுவும் ஜாலிதான் மக்கா. ) :-)). விடுங்க. மனசு வருந்தும்படி சொல்லியிருந்தால் மன்னிச்சுருங்களேன் மக்கா. நன்றி பிரகாஷ்!
RRR, நலமா? சந்தோசம். மிக்க நன்றியும்!
//
நேசா, கவிதைக்குள்ள எங்கடா கவிதை இருக்கு? பயமுறுத்துற பார்த்தியா? என்னங்கடா உங்களோட.. :-) நன்றி சொல்லனுமா நேசா?
//
:)
nallaayirukku.........
சூப்பரா இருக்கு.. "சிகரெட் பிடித்தால் ரஜினி மாதிரி இருக்கே என்றான் என் நண்பன்"... சும்மா கொசுறு எழுதி பார்த்தேன்..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
http://mannairvs.blogspot.com
நல்லாயிருக்கு ராஜாண்ணா
சிகரெட் குடிச்ச காசை
சேர்த்து வைத்திருந்தால்
வீடு கட்டியிருக்கலாம்
என்கிறாள் மனைவி.
::)))
சரக்கு காசுல.. ஒரு ஊரையே வாங்கியிருக்கலாமோ??
நல்லவேளை பெண்கள் (பெரும்பாலான) புகைப்பதில்லை:)
Post a Comment