Thursday, August 26, 2010
அழகு
(Picture by cc licence, Thanks Mary Jane watson )
சாண வரட்டி
தட்டிக் கொண்டிருந்தாள்
சகுந்தலா சித்தி.
வீட்ல அடையாக்கும் என
விசாரித்தபடி போய்க் கொண்டிருந்தார்
பெருமாள் சித்தப்பா.
ஆமா, சாப்பிட வந்துருங்க கொழுந்தனாரே
என சிரித்த சகுந்தலா சித்தி
அவ்வளவு அழகு.
அதைவிட அழகு,
அத்தருணத்தில் மணிக்கட்டினால்
சித்தி முடி ஒதுக்கியது.
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
Subscribe to:
Post Comments (Atom)
65 comments:
அவ்வளவு அழகு
இன்றைய காலை அற்புதமாக விடிந்தது விகடனில் இந்த கவிதையோடு.. வாழ்கையோட சின்னஞ்சிறு விசயங்கள கூட கவிதையா பாக்கறப்ப வாழ்கை ரொம்ப அழகா தெரியுது மாம்ஸ் :)
அழகு அழகாய் இருக்கின்றது ராஜாண்ணா
அழகு. கண்டிப்பாக
மிக அழகு.
கொள்ள அழகு.. கொஞ்ச நாட்கள் கழித்து வந்ததால் இன்னும் அழகு பா ரா அண்ணே....
அழகு...மிக அழகு!
அழகுங்க!...
பிரபாகர்...
கிராமத்து கிண்டல்
வரட்டியை அடையென்றான்
அதை நீயே திண்னென்றாள்.
சாணம் தோஞ்ச கையோட மணிக்கட்டால முடி ஒதுக்குற சகுந்தலா சித்திய கண்ணு முன்ன கொண்டு வந்துல நிறுத்துது கவிதை... அருமை!
அழகு
அழகு...
கொள்ள அழகு..!
:)அழகு தான்
நீங்க எழுதும் அத்தனையும் அழகுதான் பாரா.
சாணிதட்டும் போதோ,
சப்பாத்தி உருட்டும் போதோ, மணிக்கட்டினால் முடி ஒதுக்கும் இயல்பான நிகழ்வு, உங்களுக்கு மட்டும் அழகான கவிதையாய் தெரிந்திருக்கிறது.
அழகு..!
பின்னூட்டத்த தலைப்பா வச்சா நாங்க என்ன போடுறது. ரொம்ப பிடிச்சது.
சூப்பருங்க..
வெகு அழகு:)!
ஊதுவத்திப்ப்பொக மாதிரி மனசுக்குள்ள சுத்தி சுத்தி வருது கவிதை! மனசே கவிதையா இருந்தாத்தான் இப்டி எல்லாம் எழுதவரும்போல!... யப்பா சாமி... இனிமே நான்லாம் கவிதை எழுத நெனக்கிறப்போ எல்லாம் மனசுக்குள்ளாற இது வந்துவந்து போகும்யா! என்னன்னமோ சொல்லணும்னு தோணுது... என்னத்த சொல்லி கிழிக்கப்போறேன்! கைய எடுத்து கண்ணுல ஒத்திக்கணும்போல...
அழகழகு பாரா..
கல்மிஷமில்லா உயர்ந்த உறவுகள், சின்னச்சின்ன இலைகளாலன குளிர் மரமாய் அன்பு நிழல் பரப்பும் கிராமக் குடும்பங்கள். சில சமயங்களில் ரத்த உறவுயில்லாதவர்கள், மாற்று சாதியினர் கூட உறவு சொல்லி அழைத்துக் கொள்வர்.
என்ன சொல்ல பாரா அண்ணா?
கவிதையில் ஓடும் கிராமத்து கிண்டல்கள் இப்போல்லாம் காணாமப்போயிடுச்சு வரட்டி மாதிரியே :(
அழகுங்கோ!!! மீண்டும் ஒரு மண்வாசனை நினைவில்
வடை தட்டும் காலத்திற்கு விடை கொடுத்தாகிவிட்டது
நோஸ்டால்ஜிக் சிந்தனைகள் அழகு
விகட வாழ்த்துக்கள் பங்கு
விஜய்
எங்க சித்தி அழகு தான் சித்தப்பு
சூப்பருங்க..
கவிதை நல்லா இருக்குங்க அண்ணா
I Love You PAA.RAA.
ஒரு விதமான உணர்வை தொட்டுசெல்லும் கவிதை அழகு
சூப்பர்..............
நட்சத்திர பதிவுகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .......
அவ்வளவு அழகு.வண்ணதாசன் நினைவுக்கு வருகிறார் அண்ணே,
சாணி தட்டுவதை கூட அழகான சித்திரம் ஆக்கி விட்டீர்கள். குறிப்பாய் மணிக்கட்டால் முடி ஒதுக்குவது அற்புத பதிவு
வழக்கம் போல்
அருமை நண்பரே.
வாழ்த்துகள்
அதைவிட அழகு,
இத்தருணத்தில் கைவிரலினால்
பா.ரா பதிவு அழுத்தியது...[mouse button].....
We introduce ourself a group from educational background.We are ready to help you for any competitive examinations or engineering studies at free of cost.Ask your doubts and get clarified
http://regionofachievers.blogspot.com/
. -திருஷ்டிப்பொட்டு!
கிராமத்துக் கிண்டல் :)
நல்லாருக்கு. ஆவிக்கு வாழ்த்துகள்.
நேத்தே விகடன்ல படிச்சேன்... அழகா நல்லாயிருக்குங்க..
என்னா நக்கலு பாருங்க சித்திக்கு... பொண்ணுன்னா பொண்ணு :))) சூப்பர்
பாரா அண்னன்,
அழகு !
வேறென்ன அழகுதான் :)
அண்ணா நீங்களும் அழகு !
அழகு..!
/பின்னூட்டத்த தலைப்பா வச்சா நாங்க என்ன போடுறது. ரொம்ப பிடிச்சது//
அதானே!
சித்தப்பா....
ஊர் பக்கங்களின் சில வழக்குகள், கிண்டல்கள்கள் கேலிகள் எல்லம் ரொம்ப உயிர்ப்பானவை...
பல நேரங்களில்...ஆழ்மனதில் தோன்றும் ஒரு விசயம் அழகாய்...மேலே கொண்டு வந்து இருக்கிரீர்கள்...! சூப்பர்ப்!
முடியொதுக்க கழுத்தை நொடிக்கும் வடிவம் மனதுக்குள் ஓடுகிறது
//வண்ணதாசன் நினைவுக்கு வருகிறார் அண்ணே//
:)
"athai vida azhagu " Pa. Ra. athai kavithaiyakkiyathu.
முத்து, நல்லா தொடங்கினீர்கள்! இப்பவரையில் நாற்பத்து ஒன்பது அழகு! :-) சரி. அழகுதானே எல்லாம்! நன்றி மக்கா!
மாப்ஸ், ஆர் கே மிக்க நன்றி!
சக்தி, நன்றிடா!
நன்றி பின்னோக்கி!
கருணா, நன்றி!
நன்றி வினோ!
நன்றி ரவி!
ப்ரபா, நன்றி!
மகன்ஸ், நன்றி!
வாங்க விஜய், மிக்க நன்றி!
நன்றி நசர்!
நன்றி குமார்!
முத்துலெட்சுமி, மிக்க நன்றி! :-)
சுசி, நன்றி!
நன்றி அம்பிகா!
பாலாண்ணா, நன்றி!
நன்றி அன்பரசன்!
சகா, மிக்க நன்றி!
வி.எம், கையை பிடிச்சு பேசுனது போல இருக்கு. நன்றி!
நன்றி ப்ரியா!
வாசன்ஜி, நன்றி!
நன்றி வசந்த்!
சுவாமிநாதன், நன்றி பாஸ்!
பங்கு, மிக்க நன்றி!
எங்க ஜமால் மக்கா, நன்றி!
நன்றி கலா நேசன்!
லாவன்ஸ், நன்றிடா!
ஐ லவ் யூ டு ஜெரி!
யெஸ்! யாதவன், அதைத்தான் பேச நினைத்ததும். good! நன்றி!
ஒரு நண்பன் ஒருவன் வீட்டிற்கு சென்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு செகண்ட் ஷோ கிளம்பினோம். வீட்டில் இருந்து இருபது அடி நடந்திருப்போம். அந்த திருவனந்தபுரத்து சந்தில் மங்கிய நிலவொளியில் என் நண்பனின் தங்கை ஓடோடி வந்து "ஹாப்பி பர்த்டே அண்ணா .. 12 மணிக்கு உன்னை பார்க்க முடியாது போல" என்று சொன்ன அழகை இருபது வருடங்கள் கழித்து அசை போட வைத்தது பா ரா. ஒரு சில வினாடிகளில் நிகழும் அற்புத கணங்களை வார்த்தைகளில் ஏற்றி எங்களிடம் அனுப்பும் வித்தையை எங்கு கற்றுக் கொண்டீர்கள் பா ரா? என்ன சொல்ல.. மிக்க நன்றி பா ரா.
நன்றி, யோகேஷ்!
வேல்கண்ணா, சாராமல் இருக்கவேணும் என இருந்தது. சார்ந்துட்டேன் போல. சரி, மச்சம். நன்றி வி. கே.!
முதல்ல இருந்தே "விகடனுக்கு அனுப்புங்க" என்ற மோகன், நன்றி!
நாத்து, நன்றி! :-)
taaru, நன்றி! ரொம்ப நாள் ஆச்சு.
நன்றி வேல்ஜி!
நன்றி வி. பாலகுமார்!
நன்றி வித்யா!
பாலாஜி நன்றி!
சகோ வித்யா, நன்றி!
நன்றி மறத்தமிழன்!
நன்றி மகன்ஸ்! வேலைகளா?
நன்றிடா ஹேமா!
மாப்பூ + மாப்பு நன்றி! திரும்பி வந்துட்டீராக்கும்? உம்மால்தானே மகா திருமணம்? உம்ம கை நனைப்பு இருக்கணும். இல்லைனா பிச்சுப் புடுவேன் பிச்சு. நன்றி மாப்ஸ்!
நன்றி தேவா!
கதிர், நன்றி!
ஊரில் இருந்தாலும், கூடவே இருக்க பார், இதுதான் நீ நேசா! இப்ப என்ன? அதுதான் வேல்கண்ணா சொல்லியாச்சே. புதுசா ஏதாவது போடுடா கண்ணா. :-))
மஹி அக்கா, நலமா? நன்றி!
பாலா, மிக நெகிழ்வான பின்னூட்டம். நன்றி!
”அழகு” அழகா அம்பது பின்னூட்டங்கள்...
அவற்றிற்கு ஒன்று விடாமல் பதில் சொல்லும் பா.ரா - கைல விருதோட குழுமி இருக்குறவங்களைப் பார்த்து “நன்றி” “நன்றி”னு சொல்லுவதாய் என் மனத்திரையில் தெரிகிறது... வீட்ல சொல்லி திருஷ்டி சுத்தி போட்டுக்குங்க பா.ரா... அடுத்த கவிதையும் சிறப்பா வரனும்ல! :-)
/பின்னூட்டத்த தலைப்பா வச்சா நாங்க என்ன போடுறது. ரொம்ப பிடிச்சது//
sariya sonneenga vaanambadikal sir.!!
வெள்ளி காலை விகடனில் பார்த்தேன். உடனே பாராட்ட நினைத்தும் இப்போதுதான் நேரம் கிடைத்தது. பாராட்டுக்கள் சார்...
ஒரு அழகிய கவிதை படித்த திருப்தி என்னுள்!!!
கவிதை சூப்பர்.
\\ வானம்பாடிகள் said...
பின்னூட்டத்த தலைப்பா வச்சா நாங்க என்ன போடுறது. ரொம்ப பிடிச்சது.\\
இந்தப் பின்னூட்டம் சூப்பரோ சூப்பர்
விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!!
விஜய், "நீரே திருஷ்ட்டிதான். தனியா வேறு திரிஷ்ட்டியா?" என்பாள் வீட்டில். சும்மா இருக்க மாட்டீங்களா நீங்கள்? :-) இதை விடுங்க. நம்ம பங்காளி ஒரு விஜய் இருக்கார்.(இங்கயே இருக்கார் பாருங்க) இப்ப, நீங்களும் விஜய். ஏதாவது பார்த்து பண்ணுங்க, உடம்பங்காளி. :-)) நன்றி விஜய்!
ஒட்டி அடிக்க கூடாது நேசன் மாதிரி, ரசிகை. நீங்க என்ன சொல்றீங்க நாட்டாம? நன்றி ரசிகை!
ஸ்ரீராம், மிக்க நன்றி! எப்ப இருந்தா என்ன?
RRR, ரொம்ப சந்தோசம். நன்றியும்!
வாங்க கோபி. பதிவு போலவே பின்னூட்டத்திலும் ஸ்கோர் பண்ணுவார் பாலாண்ணா. நன்றி கோபி!
ஆஹா! நட்சத்திரப் பதிவருக்கு நாந்தான் முதல் வாழ்த்து. அதுதான் முறையும் கூட இல்லையா பா.ரா:)). அசத்துங்க. பசியோடிருக்கோம்.
:(இல்லை. இரவிச்சந்திரன் முந்திக்கிட்டார். :))
அதிகமாகச் சுற்றாமல், அதிகமாக யோசிக்காமல் இந்த ஈரங்களோடேயே இருந்திருக்கலாம். திரைகடலோடித் திரவியம் தேடினோமோ இல்லையோ... சின்னச் சின்ன மகிழ்ச்சிகள் போச்சு. நீங்கள் இப்படியே இருக்க வாழ்த்துக்கள்.
பா ரா அண்ணே.... செம!!!!
செமையாக இருக்கு அண்ணே.
உங்க ரசிப்புத்திறனுக்கு ஒரு சல்யூட்.
AZHAGU.......!!
Post a Comment