Saturday, September 4, 2010

அம்மாக்களும் கவிதைகளும்

ஒன்று


(Picture by cc licence, Thanks Romana Klee)

முகத்தில் நிறைய
கரும் புள்ளி வந்துருக்கேடா
கரும்புள்ளி என்றால்
கஷ்ட காலமேடா
என்றாள் அம்மா.

முகத்தில் தானேம்மா புள்ளி
புள்ளியில் இல்லையே முகம்?
என்றதற்கு,

புள்ளியையும் சேர்த்து
முகத்தை வழித்து
சொடுக்கிக் கொண்டாள்.

ஷ்ட காலம்
இந்த அம்மா.

***

இரண்டு


(Picture by cc licence, Thanks Hector Garcia)

ப்படிப்பா உங்களுக்கு சித்தி
வந்துட்டு போனவுங்க?
என விசாரித்தான் மகன்.

ப்பா இருக்கேன்லடா
அப்பாவோட அப்பா இருக்கார்ல
அவரோட தம்பி இருக்கார்ல
அவரோட...
என்று தொடங்கியிருந்தேன்.

ங்கப்பா எனக்கு என்ன முறைன்னு
முன்னாலேயே தெரிஞ்சிருந்தா
நாமளாவது நல்லாருந்திருப்போம்டா
என முடித்து வைத்தாள்...

கனின் அக்காவோட
அம்மாக்காரி.

***

டிஸ்கி:- எனவே நண்பர்காள், வீட்டிற்கு வரும் போது, "இவர் எனக்கு வெறும் சித்தப்புதான்" என்று சொல்லி வைத்தால் போதும்.

***

நன்றி தமிழ்மணம் மற்றும் நண்பர்காள்!


64 comments:

Vel Kannan said...

1. கஷ்டம் என்றாலும் அன்பு
2. அன்பு என்றாலும் கஷ்டம்

கலாநேசன் said...

நல்லா இருக்குங்க...

ராமலக்ஷ்மி said...

இரண்டும் அருமை பா ரா.

இரா கோபி said...

சூப்பர்

மதுரை சரவணன் said...

இரண்டும் அருமை.கலக்கல்.வாழ்த்துக்கள்

ருத்ர வீணை® said...

அதுசரி, தமிழ்ல தான் இவ்வளவு குழப்பமும். ஆங்கிலத்துல மொத்தமா அங்கிள்னு முடிச்சிட்டனுங்க. நல்லாருக்குங்க.

சைவகொத்துப்பரோட்டா said...

1 அழகு.
2 :))

பத்மா said...

என்னவோ போங்க உருக்கிகிட்டே இருங்க

தமிழரசி said...

கரும்புள்ளி இன்னும் நம் அறியாமையை சொல்கிறது...

அண்ணா...எப்படின்னா நீங்க அண்ணா? ஐய்யோ சொல்லப்போறீங்களா மீ த எஸ்கேப்.....

சே.குமார் said...

//டிஸ்கி:- எனவே நண்பர்காள், வீட்டிற்கு வரும் போது, "இவர் எனக்கு வெறும் சித்தப்புதான்" என்று சொல்லி வைத்தால் போதும்.
//

athu sari...

சின்ன அம்மிணி said...

இந்த உறவு முறை சொல்றது எங்க வீட்ல அடிக்கடி நடக்கும் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

இரண்டும் அருமை

வினோ said...

அப்பா முதல் கவிதை அன்பு மிக்கது. கலக்கல்...

நட்புடன் ஜமால் said...

எதுவுமே சொல்லாம சொல்லிட்டு போற வித்தை எதுனா இருந்தா சொல்லிதாங்க மக்கா

உங்களது படிச்சிட்டு எதுவுமே சொல்லவும் தெரியலையே நான் என்ன செய்ய

நிலா மகள் said...

வேல் கண்ணனை வழிமொழிகிறேன்.

வானம்பாடிகள் said...

அம்மாக்களும், கவிதைகளும் பின்னே குசும்பும்:)). முதல் கவிதைக்கு படம், ரெண்டாவது கவிதைக்கு கடைசியில போறாததுக்கு டிஸ்கி:)

காமராஜ் said...

அதானே பாலாண்ணா இதப்பாருங்களேன் குசும்பக்கூட கவிதையாக்குது. என்ன செய்லாம் இதெ.?,

கலகலப்ரியா said...

அழகும்... குறும்பும்... அப்டின்னு தலைப்பு வச்சிருக்கலாம்...

cheena (சீனா) said...

அன்பின் பாரா

இரண்டுமே அருமை - முதலில் அது தான் அம்மா - இரண்டாவதில் .....
நல்வாழ்த்துகள் பாரா
நட்புடன் சீனா

கோமதி அரசு said...

முதல் கவிதை நெகிழ்வு.
இரண்டாவது சிரிப்பு.

வல்லிசிம்ஹன் said...

அம்மாவே ஒரு கவிதை. அப்பா இன்னோன்று. இரண்டுமே படைத்த கவிதை நீங்க சொன்னது. அன்பாக இருக்கிறது. அருமை ஜி.

இராமசாமி கண்ணண் said...

அது எப்படி மாம்ஸ் .. மாம்ஸ சித்தப்புன்னு கூப்பிடறது...

செம குசும்பு மாம்ஸ்...

ப்ரியமுடன் வசந்த் said...

இரண்டாவது மிகபிடித்ததுண்ணா!

ஒருவாரம் முழுதும் நட்சத்திர கவிதைகள் படைத்தமைக்கு வாழ்த்துக்கள்..!

கமலேஷ் said...

ஒரு நாளைக்கு ஒரு வர்ணம்.
ஏழு நாள்ல வானவில் செஞ்சிடீங்க
தமிழ் மனதிற்கு நாங்கள்தான் நன்றி சொல்லணும்...வாரம் போனதே தெரியலை. வாழ்த்துக்கள்பா.

sakthi said...

முதல் கவிதை ரொம்பவே ரசிக்க வைத்தது ராஜாண்ணா

K.B.JANARTHANAN said...

அபாரம் சார்!

D.R.Ashok said...

Excuse me... நீங்க நார்த் இந்தியாவா? :)... நான் படத்த சொன்னேன்...

ரவிச்சந்திரன் said...

ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் அருமையான கவிதைகள்...

வண்ணமயமான நட்சத்திர வாரம்... வாழ்த்துகள் பா.ரா அண்ணா!

ஆ.ஞானசேகரன் said...

இரண்டும் அருமை...

விந்தைமனிதன் said...

உங்களைச் சொமந்தப்ப உங்கம்மா கவிதையா படிச்சிட்டு இருப்பாங்களோ!!!!

மண்ணு தூள்ள கூட செல செதுக்குறீங்களே சித்தப்பூ!

இரசிகை said...

:)

nallaayirukkuthu rajaram sir.....

niraiya vaazhthukalum.,anbum...!!

இரசிகை said...

:)

nallaayirukkuthu rajaram sir.....

niraiya vaazhthukalum.,anbum...!!

ராதை/Radhai said...

//கஷ்ட காலம்
இந்த அம்மா//

நிஜம் தான் பா.. இந்தக் “கஷ்ட காலம்” மத்த கஷ்ட காலத்த எல்லாம் மறக்கடிச்சிரும். சரி தானே?

//மகனின் அக்காவோட
அம்மாக்காரி//

யார்ப்பா அவங்க?? ;) இவ்வளோ ஃபீல் பண்றாங்க :)

இரண்டுமே அழகுப்பா.

பா.ராஜாராம் said...

நன்றி வேல்கண்ணா!

நன்றி கலா நேசன்!

சகா, நன்றி!

என்ன ஓய் கோபி, வெறும் சூப்பரோடு போறீர்? சரி.தலை தப்பியது. நன்றி மக்கா!

நன்றி ம.ச!

சிம்ப்ளா. இல்லையா?நன்றி ருத்ர வீணை!

நன்றி, எஸ்.கே.பி!

நன்றி பத்மா!

புட்ரா தமிழ, நன்றி தமிழ்!

குமார் மகன்ஸ்! :-)

நன்றிங்க CA!

காமராஜ் said...

வாழ்த்துக்கள் பாரா. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.நட்சத்திர பதிவரானதற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் பாரா.

இன்றைய கவிதை said...

பா ரா,

ரொம்ப நல்லாருக்கு, கஷ்டம் போக்கும் அம்மா நம்க்கு கஷ்டம் வந்துடுமே என்று கஷ்டப்படும் அம்மா , கஷ்டம் அம்மா ---- ரசித்தேன்

உறவு என்றும் குழப்படித்தான் நல்லா எழுதியிருக்கீங்க

நன்றி

ஜேகே

க.பாலாசி said...

இந்த வாழ்க்கையும் உறவுகளும் எவ்வளவு அழகு... ரசித்து அதை கவிதையாக படிக்க இந்த பக்கத்தில்தான் முடிகிறது...

"உழவன்" "Uzhavan" said...

//மகனின் அக்காவோட
அம்மாக்காரி.//
 
கலக்கல் :-)

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் மக்கா !

எப்படியோ தேத்திட்டீங்க நட்சத்திர வாரத்தை :)

சிநேகிதன் அக்பர் said...

உங்கள் வேலைப்பளுவுக்கு இடையில் இதை செய்தது பெரிய விசயம்தான். ஒரு வாரம் தொடர்ந்து உங்களை படிக்கவைத்த தமிழ்மணத்துக்கும் நன்றிகள்.

கவிதைகள் அனைத்தும் அருமை அண்ணா.

சுந்தர்ஜி. said...

ஒங்க தாத்தா சம்சாரத்தோட பேரன் பொஞ்சாதி சொன்னது சரிதான் பா.ரா.

ஜெஸ்வந்தி said...

//மகனின் அக்காவோட
அம்மாக்காரி//
mmm .நல்லா இருக்கு பா.ரா.

உயிரோடை said...

கவிதைகள் நல்லா இருக்குங்க அண்ணா

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றாக எழுதுகிறீர்கள். கொஞ்சம் நீளத்தை குறைத்தால் படிப்பதற்கு எளிதாக இருக்கும்.

இதை எடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.


http://tamilkadu.blogspot.com

Chitra said...

தாயன்பை பற்றியும் நட்பு வட்டம் பற்றியும் உள்ள கவிதைகள், அருமைங்க!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றாக எழுதுகிறீர்கள்..

வாழ்க உங்கள் பணி....

கலாசாரத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன்.

முடிந்தால் கருத்துக்கள் கூறவும்..

http://tamilkadu.blogspot.com

சுசி said...

பா.ரா.. எதுவும் சொல்ல வரல.. :))))

பா.ராஜாராம் said...

டி.வி.ஆர். சார், நன்றி!

நன்றி வினோ!

சும்மா இருங்க ஜமால் மக்கா. நன்றியும்!

நிலா மகள், நன்றி!

நன்றி பாலாண்ணா!

ஹா.ஹா. காமு, நன்றி!

ப்ரியா, நன்றி!

நன்றி சீனா சார்!

நன்றி கோமதி அரசு!

வல்லி சிம்ஹன்ஜி, நன்றி!

ஆர்.கே, :-))

தம்பு, நன்றி!

logu.. said...

Nallarukku.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

வாழ்த்துக்கள் பா.ரா.
அம்மாவே ஒரு கவிதை தான்.
அப்பா?
புதுக்கவிதை?
லேசில் புரியாது..
புரியும் போது,
அவர் இருப்பார்...
முதியோர் இல்லத்தில்!!

ராதை/Radhai said...

அப்பா.. நேரம் கிடைக்கும் போது இந்த 2 பதிவுகளையும் படிச்சுட்டு உங்க Comments சொல்லுங்கப்பா :-)

http://raadhaiyinnenjame.blogspot.com/2010/09/blog-post.html

http://raadhaiyinnenjame.blogspot.com/2010/09/2.html

அன்புடன்
ராதை

பா.ராஜாராம் said...

டேய் கமலேஷ், :-)

நன்றிடா சக்தி!

ஜனா, நலமா? நன்றி!

வெஸ்ட் இண்டீஸ் மகன்ஸ். :-) நன்றி ஓய்!

ரவி, உங்க நட்சத்திர வாரம் முழுக்க கலந்து கொள்ள முடியாத வேலைகள். அண்ணனை புரியும் என்றும் புரியும். நன்றி ரவி!

ரொம்ப நன்றி சேகர்!

நன்றி, விந்தை மகன்ஸ்! :-)

ராஜபாளையம் ரசிகை, நன்றி! :-)

ராதூஸ், அதானே, யாராம் அவுங்க? உதை, படவா.

நன்றி காமு! உம்மை, மாதுவை பார்க்கிற நாள் கூப்பிடு தூரத்திற்கு வந்திருச்சு மக்கா. நினைக்க நினைக்க 'பதக்' என இருக்கு. :-))

ஜே.கே, மிக்க நன்றி!

பாலாசி, நலமா? நன்றி பாஸ்!

நன்றி உழவரே!

எப்படியோ தேத்துனனா? ராஸ்கல். தாவு தீந்து போச்சு. நன்றிடா பயலே.

அக்பர், நன்றி!

சுந்தர்ஜி, குசும்பு தொடங்கிட்டீரா? நன்றி ஓய்! (ஓய் என கூப்பிடலாம்தானே சுந்தர்ஜி? மனசு நிறைஞ்சு போய்ட்டா என் விளிப்பிற்கு அளவே இல்லை, குண்டக்க மண்டக்க கூப்பிட்டுக் கொண்டே இருப்பேன்.) கேட்டீங்களா?

ஜெஸ் மக்கா, நன்றி!

நன்றிடா லாவன்ஸ்!

செஞ்சுருவோம் ஆட்டையாம்பட்டி அம்பி. நன்றி!

சுசி, நிறைய சிரிப்பான் இருக்கே. எதுனா தெய்வ குத்தமா? நன்றி சுசி!

லோகு, நன்றி!

ஆர்.ஆர்.ஆர். நலமா? நன்றி!

வந்து பார்த்தேன் ராதூஸ். சூப்பரா இருக்குடா. கலக்கு.

சே.குமார் said...

suyamariyathai endra thalaippil ulla kavithai open aga villaiyey. enakkumattum thana... illai ellarukkuma...

தியாவின் பேனா said...

இரண்டும் அருமை

தேனம்மை லெக்ஷ்மணன் said...

முதல் கவிதை அழகு பாரா. அம்மாவின் பாசம்..:))

sweatha said...

வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..
வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்


சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.
சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163

vasan said...

What is happening...? Long time no see.Awaiting for your lyrics.

ரிஷபன் said...

கவிதையில் சரளம்.. லாவகமாய் வார்த்தைகள் வந்து விழுகின்றன உங்களிடம்.

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life

ஸாதிகா said...

இரண்டாவது கவிதை ரொம்பவே அருமை.சரியாக சொல்லிட்டீங்க கவிதையில்.வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

கவிதைப்பலகையில் மாற்றம் காணோமே?

தமிழன்-கறுப்பி... said...

அண்ணன் பேச நிறைய இருக்கு, சோலி எல்லாம் முடிச்சுட்டு வாங்க, வாழ்த்துக்கள் சொல்லிடுங்க மகளுக்கும் மருமகனுக்கும்...

இரசிகை said...

mana makkalukku vazhthukal....:)

விமலன் said...

படமும் கவிதையும் நல்லாயிருக்கு.