Saturday, July 2, 2011

ரகசியம்



யாரிடமும் சொல்ல முடியாத
ஒன்றை என்னிடம்
சொல்லப் போவதாக சொன்னாள்.

என்ன வென்பதையும்.

யாரிடமும் சொல்ல முடியாததாக
இதில் என்னவிருக்கிறது
எனத் தோன்றியது.

கேட்கவில்லை​.

என்னிடமும் இருந்தால்தான் என்ன
யாரிடமும் சொல்ல முடியாத ஒன்று?

##

டிஸ்கி : கூகுள் பஸ்'சில் இந்தக் கவிதைக்கான தலைப்பை வைத்தவர் நம் தினேஷ்குமார்(முகிலன்), முகிலன், நன்றி!

18 comments:

எல் கே said...

நல்லா இருக்கு அண்ணே

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என்னவோ நடத்துங்கோ ராஜாராம்.புதுசு புதுசாக் கதை சொல்கிறீர்கள்.ரசிக்கிறேன்

vasu balaji said...

ஆஹா. வந்துடிச்சே. அப்ப கவிதைக்காகத்தான். :))

வினோ said...

அப்பா ரகசியம் செம...

க ரா said...

போட்டோவ மாதிரியே கவிதையும் அழகு மாம்ஸ் :)

ஓலை said...

அருமை பா.ரா.

யாரிடமும் சொல்லாம செய்யக் கூடிய வாய்ப்பு கிடைச்சா என்ன செய்ய! பேசாம நம்ம நேசனின் கவிதைக்கு பொழிப்புரை சொல்றவரைக்கும் ரகசியம் காப்போம்னு வாக்கு கொடுக்கலாம். என்ன சொல்றீங்க பா.ரா. !!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரகசியங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரகசியங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்...

ரிஷபன் said...

உங்ககிட்டேயும் சொல்லியாச்சா..

சி.பி.செந்தில்குமார் said...

அழகு வரிகள்

'பரிவை' சே.குமார் said...

சித்தப்பா...
வரிகளில் வாழ்கின்றன உங்கள் எழுத்துக்கள்.

Unknown said...

யாரிடமும் சொல்ல முடியாத ஒன்று?

என்னிடமும் இருந்தால்தானே
சொல்வதற்கு ?

ஏமாற்றம் ஏ... மாற்றம்
உமக்கும் எமக்கும் சரி பாதி

புலவர் சா இராமாநுசம்

கே. பி. ஜனா... said...

அழகு கவிதை!

சிநேகிதன் அக்பர் said...

ஒரு முறை நண்பனை சந்திக்கும் போது ரகசியமா சொன்னான்.

”ஹிஸ்டரி கொஸ்டீன் பேப்பர் அவுட் தெரியுமுல்ல.”

”அப்படியா”

”ஏ, சத்தம் போட்டு சொல்லாதே. யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு குமார் சொன்னான். உங்கிட்ட மட்டும்தான் சொல்றேன். நீ யார்கிட்டயும் உளறிடாதே.”

நான் கேட்டேன். குமார் சொல்லியும் நீ என்கிட்ட உளறுன மாதிரியான்னு :)

அதை நினைவு படுத்துகிறது கவிதை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ரகசியத்தின் அழகே யாரிடமும் சொல்லிவிடாதே என்ற எச்சரிக்கை மணியுடன் எல்லாரிடமும் சொல்லிவிடுவதுதான்.இப்ப நீங்களும்.

இரசிகை said...

sssshhhhhh......!!

:)

orutharkku therinthaall kooda athu ragasiyam illai...
appadithaan naan ninaikiren.


vaazhthukal rajaram sir...

:)

Ashok D said...

அட

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப நாள் ஆச்சு அண்ணா. இப்போதான் வரேன். ரகசியம் அருமை. யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.