1. பெவிலியனுக்கு திரும்பாதவர்
இழுத்துக் கொண்டு
ஓடிப்போன தங்கமுத்து மாமா
அத்தையை சாகக்கொடுத்த பிறகு
திரும்ப வந்து விட்டார்.
இப்ப அத்தை மட்டுமே
ஓடிப் போனவளாகவே
இருக்கிறாள்.
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
2. ஆல் - அவுட்
மேலிருந்த
கண்ணீர் அஞ்சலிக்காரனை
எட்டவில்லை போல.
கீழிருந்த
குடும்பத்தார்களை
கழுதை மென்று கொண்டிருந்தது.
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
3. நாட்- அவுட்
கொண்டோடி மாடு
என அழைப்போம்
செத்துப் போகும் முன்பு வரையில்
சுந்தரை.
அப்புறமெல்லாம்
சுந்தர்தான்.
Thursday, July 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
vaalththukkal... arumai arumai...
Nice.
மூணாவது ..... ம்ம்ம்ம்
ஆறாத வடுக்கள்.
நல்ல கவிதைகள்.
வாழ்த்துக்கள்.
இப்ப அத்தை மட்டுமே
ஓடிப் போனவளாகவே
இருக்கிறாள்.//
இது பெண்ணுக்குண்டான சாபம்
அனைத்தும் அற்புதம்.. :)
m...!!
வித்தியாசமான கிரிக்கெட் :)))
கவிதைகளில் என்றுமே நீங்க ’நாட் அவுட்’ தான்! அடிச்சா சிக்சர்!
மூணுமே CLASS! மாம்ஸ் :-)
முத்தான மூன்று!
முதலாவது அதில் முதலில்!
arumaiyana kavithaigal siththappa... namma pakkam vanthuttu porathu...
ஓடிப்போனவளின் உயிர்
ஓடிபோன பின்பும்
ஓடிப்போனவள பெயர்
ஓடிபோக வில்லை
நல்ல கவிதை!
புலவர் சா இராமாநுசம்
தங்கமுத்து இறந்திருந்தாலும் அத்தையை நாம்
அப்படியே சொல்லி இருப்போம்.
மூன்றுமே அருமை அண்ணா
கவிதை அருமை
Post a Comment