Tuesday, August 2, 2011
நீ
(Picture by cc licence mckaysavage)
ஒரு காற்று போல
வீச்சு போல
இன்னெதென்று சொல்ல முடியாத
ஒன்று போல
கடந்தாய் நீ.
குறிக்கிறேன்,
லிரில் சோப்பு, சாம்பார்
சைக்கிள் பால்ரஸ்
எலக்ட்ரிக் வயரில் சிக்கிய பட்டம்
கொஞ்சூண்டு ஆணியில்
சுத்தும் பம்பரக் கயிறு
பாம்பு கொத்திய புளிய முத்து,
சாம்பார்
லிரில் சோப்பு சாம்பார்.
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
ஒரு காற்று போல
வீச்சு போல
இன்னெதென்று சொல்ல முடியாத
ஒன்று போல
கடந்தாய் நீ.
குறுந் தொகை போல
நறுந் தொகை ஏல
பெருந் தகை யாரே
வருங் கவி நீ (யே)
புலவர் சா இராமாநுசம்
என் வலைப் பக்கம் வரலாமே
எனக்கு கொஞ்சம் புரியலை .. இன்னும் வயசாகனும் போல...
லிரில் சோப்பு சாம்பார் - இது டைரிக் குறிப்பில் ஒரு நாள் வருமோ?
சித்தப்பா...
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
ரொம்ப நாளா நம்ம பக்கமே உங்களை ஆளையே காணோம்...
வந்துட்டுப் போனா சந்தோஷமா இருக்கும்.
***இராமசாமி said...
எனக்கு கொஞ்சம் புரியலை .. இன்னும் வயசாகனும் போல...
August 2, 2011 8:59 AM ***
பரவாயில்லை, இப்போலாம் புரியலைனா புரியலைனு நெறையப்பேரு தைரியமாக சொல்லிப்புடுறாகப்பா, என்னைப்போல!
இதென்ன லிரில் சோப்க்கு புதுமாதிரியான கமர்ஸியலா?னு கேக்கிற அளவுக்கு மக்கு நான்! :)
சாம்பார்
லிரில் சோப்பு சாம்பார்.
..... நினைவலைகளில் அசை போடுங்க....
'சாம்பார்'தான் குழப்புகிறது.
நேசமித்ரன் கவிதையாக இருந்திருந்தால், சாம்பார் (Rusa Unicolor) ஒரு மான் என்று பொருள்கொண்டு புரிந்திருப்பேன். இங்கும் அப்படித்தான் தோன்றுகிறது (பின்னே என்ன, பா.ரா. கவிதைக்குள் ஜெமினிகணேசனா வருவார்?)
எனது பள்ளிப் பருவத்தில் மீனாட்சி; கல்லூரியில் ராதா! ஒன்று குட்டிக்குரா சாம்பார்; இன்னொன்று மல்லிகைப்பூ சாம்பார்.
'ப்ரீத்தி ஸ்ஜிந்த்தா'வுக்கும் முந்தி லிரில் சோப்புக்கு ஒரு மாடல் வந்தாள்; பெயர் தெரியவில்லை, ஆனால் அவள்தான் அழகு!
மன்னிக்கவும், 'சாம்பார்' குழப்பிவிட்டது.
நினைவலைகள் ஓயாமல் வீசட்டும் :-))
'லிரில்சோப்பு சாம்பார்' :-))
எனக்கு ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. நான் காலை வேளையில் அவசரமாய் நாலு கவளம் அள்ளிப் போடும் போது, என் கணவர் அடிக்கும் சென்ட் வாசனை உணவோடு சேர்ந்து ஒரு வித வெறுப்பைத் தரும். தவிர்க்க முடியாத இன்ப அவஸ்தைகள் இவை
// இராமசாமி said...
எனக்கு கொஞ்சம் புரியலை .. இன்னும் வயசாகனும் போல...//
எனக்கும் வயசு பத்தாது போல அண்ணா :)
எனக்கு
டவ் சோப்பு
செட்டி நாட்டு கார குழம்பு
பருப்பு போடாமல் வெறும் சோப்பு போட்டு சாம்பார் வச்சங்களா அண்ணா? எனக்கெல்லாம் இதை புரிந்துக் கொள்ள சமத்து போதாது விளக்கம் வேணும் மீண்டும் வந்து பதில் இருக்கான்னு பார்ப்பேன்,,,
பருப்பு போடாமல் வெறும் சோப்பு போட்டு சாம்பார் வச்சங்களா அண்ணா? எனக்கெல்லாம் இதை புரிந்துக் கொள்ள சமத்து போதாது விளக்கம் வேணும் மீண்டும் வந்து பதில் இருக்கான்னு பார்ப்பேன்,,,
பாரா அண்ணா...அவங்களை மட்டும் இருக்கிற எல்லாத்திலயும் குறிச்சு வையுங்க.எங்களையெல்லாம் மறந்திடுங்க !
அற்புதம் பாரா. அப்ப்ப்பப்ப்ப்பப்பா.. என்ன வரிகள்..
//
ஒரு காற்று போல
வீச்சு போல
இன்னெதென்று சொல்ல முடியாத
ஒன்று போல
கடந்தாய் நீ.
//
இந்த வரிகளைன்னு முதல் கமன்ட்ல சொல்ல மறந்துட்டேன் :)
மாமா,
ஐயங்காரு வீட்டு அழகே... ஐயங்காரூ... ஏ..ஏ..ஏ!
//(பின்னே என்ன, பா.ரா. கவிதைக்குள் ஜெமினிகணேசனா வருவார்?)//
ராஜா அண்ணன் பின்னூட்டத்தில் பின்னி விட்டார்.
கடந்த கால நினைவுகளை கிளப்பி விட்டிட்டிங்க போல :)
சொல்லாத வார்த்தைகளில் கவிதையின் அழகு கூடுகிறது.
எங்கப்பா எல்லாரையும் குழப்பிட்டு தலைமறைவாகிடீங்க
ரா.சு அண்ணன் வணக்கம் !
பா.ரா வாசனைகளாலானவளையும்
வசியப்பட்ட மன நிலையையும் ஒரு கடத்தலாய் பார்க்கிறேன் படு பொருட்கள் வழி ...
நண்பர்கள் தின வாழ்த்துகள் மக்கா
நேசமித்ரன் said...
/வாசனைகளால் ஆனவளையும்
வசியப்பட்ட மன நிலையையும் ஒரு கடத்தலாய் பார்க்கிறேன், படுபொருட்கள் வழி .../
இதன் பொருள், Through the objects, as a transcendence, I see her, who is of aromas; and the poet's mind that was enchanted.
சரியா?
||Pero sé cada día menos.|| என்று முடிகிறது நெரூதாவின் ஒரு கவிதை:
I returned home, much older
after crossing the world.
Now I question nobody.
But I know less every day.(Pero sé cada día menos.)
எனக்கும் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
//லிரில் சோப்பு சாம்பார்//
!அது ஒரு மன உணர்வே; எழுச்சி அவ்வளவே. அவள் கடக்கும் போது கிடைத்த எல்லாம்ன்னு எடுத்துக்கலாம்!
என்று பா.ரா., தன் நண்பர் அக்பருக்கு விளக்கி இருந்ததை இமிர்விலே (in Buzz) வாசித்தேன். (இங்கு வந்து இனிமேல் விளக்குவார் ஆகலாம்).
//ஒரு காற்று போல
வீச்சு போல
இன்னெதென்று சொல்ல முடியாத
ஒன்று போல//
என்னும் போதே அதன் கோட்டாலை நம்மைப் பீடித்துவிடுகிறது. அதனால் இன்ன சொல்ல வருகிறார் என்பதனை எளிதில் யூகிக்க முடியும். ஆனால், //லிரில்சோப்பு சாம்பார்// என்பதில் ஓர் amalgamation-ஐ முயல்கிறார். அது சறுக்கு நிலை. மிகுதியும் சறுக்கவே வாய்ப்பு இருக்கிறது.
வாசனை (முன்வினைத் தொற்று தொடுப்புகள்) அருவமானதால் (abstract), எல்லை வரம்பற்றது. 'சாம்பார்' உருவமுள்ளதால் (concrete), எல்லைக் குறுகலுக்கு உட் பட்டது. அனுபவம், விரிந்து பரவுவதை விட குறுகிக் கெடுவதற்கே வாய்ப்பு வரும்.
Blogger நாய்க்குட்டி மனசு, இங்கே இட்டிருக்கிற பின்னூட்டமே சான்று.
[இதே விசயத்தை, சுந்தர்ஜீயின் 'கைகள் அள்ளிய நீர்' தளத்தில் அவரது 'கோடையின் பாடல்' பதிவுக்கு இட்டுள்ள பின்னூட்டத்திலும் பேசியிருக்கிறேன். (ஆர்வமிருந்தால், வாசித்துப் பாருங்கள்.)]
படிமங்கள், உருவகங்கள் என்று நம் கவிஞர்கள், முதுகுவலி போய்த் திருகுவலி வந்த கதையாய் ஆகிவிட வேண்டாமே என்பதே என் அக்கறை.
பிறகும்... Pero sé cada día menos.
ஐயோ அண்ணே, நாம்பாட்டுக்கு எழுதியதே இக்கவிதை. சாம்பாரு மட்டும் இங்கத்தைய சாம்பார். (மலயாளிகள் சாம்பார்) எல்லாக் காய்கறிகளையும் ஒண்ணாப் போட்டு ஒரு சாம்பார் வப்பாங்க. இதையும் என்னைக் கடந்தவளையும் மூக்கு வெடைச்சு குறிக்க முற்பட்டேன். அவ்வளவே. இவ்வளவு பொருள் குற்றம் இருக்கும்ன்னு அப்போ தெரியல. :-)) லிரில் சோப்பு புத்துணர்ச்சிங்கிறது மட்டுமே இந்தக் கவிதையில் சொல்ல நினைத்தேன். போங்கண்ணே நீங்க :-))
ராமனுஜம் சார் தொடங்கி நண்பர்களுக்கு,
ரமதான் வேலைப் பளுக்கள். முடிஞ்சதும் கண்டிப்பா எல்லா வீட்டுக்கும் வருவேன். வெறட்டி மட்டும் விட்றாதீங்க ப்ளீஸ்.
|Pero sé cada día menos.||//
தெண்டனிடுகிறேன் !
பொருள் கொண்டபடியே பகிர்ந்தேன்
நன்றிண்ணே !
:)
pinootta vilakka uraikalai paarkkum pothu..
adap paavinkala-nnu solla varuthu..
yellaarum moothavangalla irukkirathaala...sirichu vachutten.
irunthaalum remba thooram naanum vara vendiyirukku.:)
உங்க தயவுல நானும் காப்பியடிச்சு ஒரு பதிவு போட்டாச்சு... படம் மொதக்கொண்டு
http://ashokpakkangal.blogspot.com/2011/08/blog-post.html
Post a Comment