Wednesday, July 1, 2009

பிராய்லர் இல்லம்



கேள்விகளற்று
ஒருவர் மேல் ஒருவராககூட
நெருக்கியடித்து
அமர்ந்து கொள்கிறோம்.

ம்பி வலையிடை விரைகிற
உலகம் பார்த்து
வியந்து கொள்கிறோம்.

ன்னதென்று
அறுதியிட இயலாத
பதட்டம் இழையோடியபடி
அறிந்தவர், அறியாதவர்
எல்லோருடனும்
பேச்சிறைத்து கொள்கிறோம்.

தவு திறந்து
கை
உள்நீண்டு
வரும்போதெல்லாம்
கை
இரைக்கானது
என்றெண்ணி
அடித்து, புரண்டு
விழுந்து கொள்கிறோம்.

நின்று, நிதானித்து
தேடுகையில்
யாரோ
குறைந்ததுபோல்
இருக்கும்.

யாரை
எங்கென்று
எப்படி
தேட?...

றக்க
புதிதொன்று
பேச கிடைக்கும்.
மென் சிறகுரசும்
கதகதப்பு
கூடலுடன்.

செத்த நேரத்திற்கு.

20 comments:

அண்ணாதுரை சிவசாமி said...

உருக்குரேயடா ராஜா.....காதலைக்கைவிடு....ஜெயத்திருந்தாலும்
இன்னும் யாரையாவது நாலைந்து பேரை நினைத்து நெக்குருக
நிறைய சம்பவங்கள் ஞாபகம் இருக்கும்.பொது விசயங்களை
தொடு....மெருகேற்று.....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை மிகவும் அழகு. ஏனோ எனக்கு அந்தக் கோழிக் குஞ்சுகளைப் பார்க்கும் போது
அந்த இடத்தில் கம்மி வலைக்குப் பின்னால் அடைபட்டுக் கிடக்கும் என் உடன்பிறவாத சகோதரர்கள் தான் தெரிகிறார்கள். கவிதை அப்படியே அவர்களுக்கும் பொருந்துகிறது.
Well done.

நேசமித்ரன் said...

வெகு அற்புதமான பாடு பொருள்
நுண்ணிய படிமங்கள்
அற்புதம் ராஜாராம்
ஒரே ஒரு சந்தேகம்
இறைக்கானதா? இரைக்கானதா?

பா.ராஜாராம் said...

ஆகட்டும் சித்தப்பா..ரொம்ப நன்றி..

பா.ராஜாராம் said...

நன்றி...ஜெஸ்...கோழிக்குஞ்சுகளை பிடித்து கொண்டுவந்து...இன்னும் இந்த கவிதைக்கு அடர்த்தி ஏற்படுத்தி கொடுத்த ரமேஷ்,கண்ணாவுடன்...நானுமாக உங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டியதாகிறது..

பா.ராஜாராம் said...

"இரைக்கானது" தான் சரி நேசமித்ரன்!சுட்டிக்காட்டியதிர்க்கு மிகுந்த அன்பு!மறுமொழிகளுக்கு நன்றியும்...

maha said...

kallakkuringa appaaaaaaaaaaaaaaa

பா.ராஜாராம் said...

நன்றிடா மஹா...

கவிதாசிவகுமார் said...

கோழி குஞ்சுகளின் நுண்ணிய உணர்வுகளை அப்படியே படம்பிடித்து கவிதை ஆக்கியிருப்பது அழகு.வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

கவிது...இன்னும் உன்னை காணாமேன்னு
பார்த்தேன்..நன்றிடா பயலே..

நந்தாகுமாரன் said...

நல்லா இருக்குங்க ... தலைப்பு கவர்ந்தது ... :)

பா.ராஜாராம் said...

நன்றி நந்தா...இது "சுபமங்கலாவில்"
பிரசுரமானது...பதியும் போது மறந்தாச்சு...

இரசிகை said...

memaiyaa irukkunga unga varikal..

ஒளியவன் said...

//சிறகுறசும்//
கவனிக்க!

தங்கள் நிறைகளை கூற இடம் போதாதென்பதால் குறைகளை மட்டும் சுட்டியிருக்கிறேன்.

பா.ராஜாராம் said...

நன்றி ரசிகை..

பா.ராஜாராம் said...

கவனிக்கிறேன் ஒளியவன்...
அன்பும்..நன்றிகளும்..

ச.முத்துவேல் said...

பிராய்லர் இல்லம்-கோழி வாங்கப் போகும்போதெல்லாம், மனம் சலனமுறும்.கண்ணெதிரில் அவை, கைக்குக்கிடைத்ததாய் எடுத்து, நமக்காக அறுத்து..
(நான் வாங்கிவரும் நாட்களில் பெரும்பானமையான தினங்களில் நான் சாப்பிடுவதில்லை.)
நான்கூட இம்மாதிரி தருணங்களில் கவிதையென்று மனதிற்குள் சில வரிகளை கோர்த்துப் பின் அழித்ததுண்டு. நீங்கள் அருமையாக எப்போதோ எழுதிவிட்டீர்கள்.

பா.ராஜாராம் said...

நன்றி ச.முத்துவேல்!இப்படியான அனுபவம்தான்,
இந்த கவிதைக்கான கருவும்.ஆனால் நான் சாப்பிடவும்
செய்கிறேன்.உறுத்தல் கூட இல்லையே என்கிற உறுத்தல்
மட்டும் இருக்கு.மற்றபடி,அன்பு நிறைய...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

இப்படியும் யோசிக்கலாமா?

அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

நன்றி சேரல்.அன்பு நிறைய!