ஆச்சு. நன்றி ஜெஸ்வந்தி! வாங்க அனுஜன்யா போகலாம். பயணம் சுவராசியபட ஒரு நிகழ்வை கேளுங்கள்..
ஒரு நாள், சைக்கிளை பூட்டி சாவியை தொலைத்து விட்டேன்.
"சங்கிலிட்டே கொண்டு போகலாம்டா பத்து நிமிஷத்திலே திறந்துருவான்." என்று நண்பன் ஒருவன் சொல்ல கொண்டு போனோம்.
நண்பன் சொன்னது போல் பத்து நிமிடத்திற்கும் குறைவில் சைக்கிளை திறந்து தந்தார் சங்கிலி. போக, அடித்து செப்பனிட்ட சாவி மாதிரியான ஒரு சாவியையும் கையில் தந்தார். கூலியை கொடுத்து அத்துடன் நான் வந்திருக்கலாம்தான். சிற்பம் செய்தவரை சும்மா அனுப்ப இயலாது என்னால் என்பதால் நண்பனிடம்,
"சங்கிலி அண்ணனுக்கும் சேர்த்து மூணு டீ சொல்லுடா"என்று சொன்னேன்.
"அப்பு...நீங்க இருங்க நான் போய் வாங்கிட்டு வர்றேன்"என்று உற்சாகமாகி, மூன்று தேநீர்களை கம்பி வலையில் தொங்க செய்து கொண்டு வந்தார்.
சங்கிலி அண்ணனின் முகம் தேநீரைவிட சுவராஸ்யமாக இருந்தது. சும்மா நிற்க வேண்டாமே என்று நினைத்த நான், "எப்படிண்ணே தொழிலெல்லாம்?" என்று கேட்டேன்.
"ஏப்பூ கேக்குறீக...சின்ன வயசுல விளையாட்டா தொடங்கினது...இப்ப கஞ்சி ஊத்துதுதான் என்றாலும்...எங்க சைக்கிள் தொலைஞ்சாலும் போலீஸ் என்னை வந்து கொண்டு போயிருது.. யாரு சைக்கிளை தூக்கிட்டு வந்தா?ஆள் எப்படி இருந்தான்? என்ன சைக்கிளுன்னு போட்டு குடைஞ்சுரு வாங்க...சில நேரம் அடி படுறதும் உண்டு."
"இதென்னடா வம்பா போச்சு. ஏன் அடி வாங்கணும்..கேக்கும் போதே யாருக்கு திறந்து கொடுத்தேன்னு சொல்லிற வேண்டியதுதானே"என்றேன் ஆறுதலாக.
"யாரைன்னு சொல்றதுப்பு..நம்ம தொழிலை பார்ப்பமா,ஆளையும் அடையாளத்தையும் பார்ப்பமா?பேரம் பேசி சாவி பூட்டுறாங்க. செஞ்சு கொடுத்த மறு நிமிஷம் சிட்டா பறந்துருவாங்க. உங்களை மாதிரி நின்னு டீ வாங்கி கொடுத்து பேசிக்கிட்டுருந்தா அடையாளம் தெரியும்தான்" என்றார்.
"வாஸ்த்தவம்தான்" என்றபடி என் சைக்கிளின் சகல அடையாளங்களையும் கூர்ந்து கவனித்து, "நல்ல வேலை நம்ம சைக்கிள்தான்" என்று நண்பனிடம் சொன்னேன்.
சங்கிலி அண்ணனும் சிரித்தார்!
வாஸ்தவத்தில், சங்கிலி அண்ணனுக்கும் எனக்கும் மெல்லிய ஒன்றுணர்வு இருக்கு அனு. இந்த பதிவுலகம் எனக்கு ரொம்ப புதுசு. பின்னூட்டம் வழியாக, அவர்களின் வீடடைகிறேன், அவர்களின் பின்னூட்டம் வழியாக அவரவர் வீடடைகிறேன். சங்கிலி அண்ணன் சொன்னது போல், "உங்களை மாதிரி நின்னு..டீ வாங்கி கொடுத்து..பேசிக்கிட்டு இருந்தால் அடையாளம் தெரியலாம்தான்" என இங்கு நானும் சொல்ல விரும்புகிறேன் அனு.
ஜெஸ்வந்தி எனக்கு தந்திருக்கும் விருதிற்கும் நீங்கள் தந்திருக்கும் விருதிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அது, பதிவு லக நண்பரை தேர்வு செய்வது. அதில் நிறைய சுதந்திரம் உண்டு. இது சுவராசிய பதிவினர் விருது. உண்மையில் சுவராசிய பதிவரை தேர்வு செய்ய சற்றும் அருகதையற்றவன் அனு நான். ஏனெனில், கடந்த பதினைந்து வருடங்களாக... நான் மிகவும் நேசித்த, நேசிக்கும் இந்த இலக்கிய உலகின் முன் வாசல் பின் வாசல் அறிய இயலாமல் போய் விட்டது. நான் ஏற்கனவே சொன்னது போல், பின்னூட்டம் வழியாக தளம் தளமாக போய் வாசித்ததில் நான் ஒன்றுமே இல்லை என்றே உணர்கிறேன். அவ்வளவு பெரிய உலகம் விரிந்து கிடக்கிறது. நுழந்து வெளிவர வெகு காலம் பிடிக்கும். மிகவும் விரும்பிய தளங்களில் கூட வெறும் ஒரு கவிதையை வாசித்த நேரமின்மையும் என்னிடம் இருக்கிறது. இப்படி ஒரு சூழலில்... இந்த சொற்ப காலங்களி ல், நான் என்ன தெரிந்தனோ அது குறித்தும், அதன் சுவராசியம் குறித்தும் குறிப்பிட என்னால் இயலும்... இதை எல்லாம் ஏற்க நீங்கள் தயாரெனில்,...
இவர்களிடம் அவ்வளவு கொட்டி கிடக்கிறது...
அவர்கள்...
இன்னும் அனேகர் உளர். விதிகள் என்னை அனுமதிக்க காணோம். மற்றபடி நிறைய அன்பும் நன்றியும் அனு.
எல்லோருக்கும் அன்பு நிறைய!
பா. ராஜாராம்
22 comments:
கவிதை மாதிரி சொல்லியிருக்கீங்க!, I like it!!
விருதுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!
I like it!!!
I like it!!!
me too
அன்பை சொல்வது ஒரு கலை .குழந்தையிடம் குழந்தையாக
மனைவியிடம் காதலனாக .தகப்பனிடம் தாயிடம் இறுதி வரை மாறாததாக
நண்பனிடம் சகோதரனாக சக உதிரங்களிடம் நண்பனாக
உங்களுக்கு வாய்த்திருக்கிறது பா.ரா.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இலக்கியத்தில் உங்களுக்குள்ள தணியாத ஆர்வமும் ஈடுபாடும் உங்கள் கதை,கவிதைகள்,பின்னூட்டங்கள்,மறுமொழிகளில் மட்டுமல்லாது இப்பொழுது கவிஞ நண்பர்களுடன் அளவளாவும்போதுகூட வெளிப்படுகின்றது.மென்மேலும் உங்கள் இலக்கிய உணர்வையும் கவித்திறமையையும் வெளிப்படுத்தி இன்னும் நிறைய விருதுகள் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
யாத்ரா தனி மின்னஞ்சலில் சொன்னது...
______________
அன்பு ராஜாராம் அண்ணா,
உங்கள் அன்புக்கு நான் என்ன செய்வது, மிகவும் நெகிழ்ந்து கரைந்து போயிருக்கிறேன், உங்கள் எழுத்து மூலமே நீங்கள் தாங்கவியலாத நேசத்தை கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள், இப்போது தோள்களில் தட்டிக் கொடுப்பது போன்ற தங்கள் இந்த அன்பு, மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது.
வழக்கம் போல் உங்கள் வலைப்பக்கத்தில் பின்னூட்டம் இட முடியாமலிருப்பதால் இந்த தனி மடலனுப்புகிறேன்.
உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களுக்கு என் நன்றிகள், ஆரம்பத்தில் என்னையும் அவர் தான் பலருக்கு தன் மொழி விளையாட்டு வலைப்பக்கத்தில் அறிமுகப்படுத்தினார்.
இந்த அன்புக்கு எப்போதும் என் நன்றிகள்.
என்றும் அன்புடன்
யாத்ரா
__________
யாத்ரா சொன்னதோடு நானும் ஒத்துப் போகிறேன்.
வாழ்த்துக்கள் பா.ரா அவர்களே !!!
ஸ்வாரஸ்யமாக எழுதுகிறீர்கள் ... உங்கள் நடையும் எனக்குப் பிடித்திருக்கிறது
உங்கள் ஊக்கத்துக்கு என் நன்றி.
உங்களுடைய எளிய நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
சங்கா
=======
வரணும் சங்கா...உங்கள் முதல் வருகைக்கும் அன்பிற்கும்.நிறைய அன்பும் நன்றியும்!..
ஜோதி
===========
ஆகட்டும் ஜோதி...முதல் வருகை என்பதால்,உங்கள் மற்றும் நண்பர் சங்கா வலை தளத்திற்கும் வந்திருந்தேன்.நன்றியும் அன்பும் ஜோதி!
நேசமித்ரன்
=============
இடையில் இருக்கிற என் கவிதை வாசித்து பின்னூட்டத்தில் அன்பு காட்டியிருந்த நண்பர் அய்யனார் அவர்களின் பின்னூட்டத்தின் கீழாகவே நீங்கள் சிலாகித்திருந்தது,ஆழமான அன்பின் வெளிபாடு!அன்பு என்பது வார்த்தை அல்ல அது ஒரு செயல்---இந்த மாதிரி!..பத்திரமாய் வைத்திருக்கிறேன் நேசா உங்களை!எப்பவும் போலான அன்பும் நன்றியும்...
உங்களை அருகிலிருந்து பார்ப்பதுபோல், உங்கள் குரலைக் கேட்பதுபோல் இருக்கிறது. அன்பும், நெகிழ்ச்சியும்,உணர்வுபூர்வமான ஆர்வமூம் எளிதில் உங்களிடத்தில் யாருக்கும் அன்னியோன்யம் வந்துவிடும்.அப்படியே எழுதுகிறீர்கள்.
நிறைய அன்பும் நன்றியும்.
உங்களை அருகிலிருந்து பார்ப்பதுபோல், உங்கள் குரலைக் கேட்பதுபோல் இருக்கிறது. அன்பும், நெகிழ்ச்சியும்,உணர்வுபூர்வமான ஆர்வமூம் எளிதில் உங்களிடத்தில் யாருக்கும் அன்னியோன்யம் வந்துவிடும்.அப்படியே எழுதுகிறீர்கள்.
நிறைய அன்பும் நன்றியும்.
சுவாரசியமாக கதை சொல்லி விருது தந்து விட்டீர்கள். அழகான பதிவு.
அருமை
தமிழ்
========
வேலையா கவிதும்மா...முந்தைய பதிவில் உன்னை காண கிடைக்கலை.வர போக இருப்பவர்களில் ஒரு ஆள் குறைந்தாலும் வெறிச்சோடித்தான் வருகிறது.அன்பு நிறைய குட்டிம்மா.
யாத்ரா
========
ப்ரியங்கள் நிறைந்த என் யாத்ரா,
நீரோட்டமாக வாய்த்திருக்கிறது நமக்கு இந்த வாழ்வு.ஓடும் வழியெங்கும், கிடைத்த...கிடைக்கிற இந்த பச்சையமும்,தழுவி நிறைகிற ஈரமும் எந்த திட்டமிடலும் அற்றது.நீரின் தன்மை தாவரம் அறிகிறது.தாவரத்தின் தேவை நீரும் அறிகிறது.தன்மையொத்த வாழ்வு!தாவரத்தின் தேவையறிந்த நீரோட்டமாகிறீர்கள் யாத்ரா நீங்களும்!மற்றபடி,..
சுந்தராவும் அப்படித்தான்.மற்றொரு நதியோட்டம்!பிரவாக பசுமைக்கு அன்பும் நன்றியும்...
அ.மு.செய்யது
==============
ரொம்ப நன்றியும் அன்பும் செய்யது...பாஸ்வேர்ட் தேவதைகள் ரொம்ப நல்லா வந்திருக்கு..
நந்தா
=======
மக்கா...உங்கள் "மீடியம்" வாசித்த கையோடு "தெறிச்சு" இங்கு வந்திருக்கிறேன்.வித்தை நந்தா உங்கள் நடை.என் நடையை சுவராஸ்யம் என சொல்ல உங்கள் பெரிய மனசு என கொள்கிறேன்,..எப்பவும் போலான அன்பும் நன்றியும்!
மண்குதிரை
=============
ஆகட்டும் மண்குதிரை...கருணை நிரம்பிய உங்கள் கரங்களின் கிரியா ஊக்கி இது எனக்கு!நன்றியும் அன்பும்...
ச.முத்துவேல்
=============
முத்து...நல்லா இருக்கீங்களா."உங்களை அருகில் இருந்து பார்ப்பது போல்,உங்கள் குரலை கேட்பது போல்"...பார்த்து...என்ன சொல்லட்டும் முத்து...மனதிற்கு பிடித்தவர்களிடம்மிருந்து எதிர் பாரா வார்த்தைகள்,மிக பலவீனபடுத்திவிடுகிறதுதான்.ரொம்ப நன்றியும் அன்பும்!
ஜெஸ்வந்தி
============
ஜெஸ்...இப்படி ஒரு"சவ்வாரி"தந்ததுக்கு, உங்களுக்கும் அணுவிற்கும் நன்றி நிறைகிறேன்."இது அவள்தானா" நல்லா வந்திருக்கு ஜெஸ்!அன்பும் நன்றியும்.
ஐந்திணை
===========
வரணும் ஐந்திணை.முதல் வரவு சந்தோசம் நிரம்பியதாகிறது.நிறைய அன்பும் நன்றியும்!
நன்றி தோழரே...
மனசு கனமா இருந்தா, முதலில் உங்க தளத்துக்கு தான் வரணும் ராஜா. ஒத்தடம் கொடுத்து தான் திருப்பி அனுப்புறீங்க.
போலவே, ஒரு கவலையும் இல்லாம வந்தா, அப்படியே பாரம் ஏற்றவும் செஞ்சுடறீங்க - காலத்தின் வாசனை மாதிரி. நீங்க சொல்லுவது போல, அன்பு ஒரு வன்முறை செய்யக்கூடிய பூதம் தான்.
உங்க கிட்ட பரிசு பெற்றதும் எல்லாம் நம்ம சகாக்கள் தாம். நளன் மற்றும் பிரியன் தளங்கள் படிக்க வேண்டும்.
நன்றி ராஜா. அனைவருக்கும் வாழ்த்துகள்.
அனுஜன்யா
ப்ரியன்
=======
அலையும் தனிமையில் எனை ஆட்டி படைத்த என் ப்ரியா...நல்லா இருக்கீங்களா...புது வீட்டு முகவரிக்கும் வந்தேன்.அன்பும் நன்றியும் மக்கா...
அனுஜன்யா
============
அப்பாடி....எங்கடா பயணத்துக்கு காரணமான மனுஷனை காணோமேன்னு பார்த்தேன்.பயணம் இனிதே நிறைவேறியது..டொட்டோடோயிங்...நன்றியும் அன்பும் அனு!
இந்நாட்களில்
பசுங்கொடிகள் சூழ்ந்த என் வாசலில்
எதையோ எதிர்பார்த்து தனித்திருக்கிறேன்
எப்பொழுதாவது வரும் மழையையோ
அல்லது எப்போதாவது வரும் சிறு மகிழ்ச்சியையோ.
யாரென தெரியாதிருந்தும்
உங்களின் இந்த அன்பு, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மிக தாமதமாக இப்பதிவை பார்த்ததிற்கு மன்னிக்கவும் பா.ராஜாராம்.
-அன்புடன்
நளன்
மன்னிப்பெல்லாம் எதற்கு நளன்...எளிதாக இருங்கள்.இது நம் வீடு.மென் சிறகுரசும் சிலிர்ப்பு உங்கள் எழுத்து.உங்களை வாசிக்க நான்தான் தாமதபட்டுவிட்டேன்.துரித வாழ்வு துரத்துகிறபோது,மனசு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போய் சேர தாமதமாகிறது.மற்றபடி...அன்பு நிறைய நளன்.
Post a Comment