Monday, September 14, 2009

ப்ரீதி விடை


(picture by CC license, thanks Jeff Kubina)

செந்நிற நிழலோடு
ஒடுங்குகிறேன்

ழைத்து போகவும்
வந்திருக்கிறாய்
நீ

ழுது புலம்ப
யார்
நாம்

போகும் முன்பாக
நீ
நெகிழ்த்திய
நொடியில்
வாரியணைத்து கொள்கிறேன்
உன் கத்திகளுக்குள்
சிக்காது போன
என் போன்சாய்
கனவுகளை கூட

வானம்
தாழ பறக்கிறது

முன்பு

டைவிடாது
மேலே பரந்த
வானம்

24 comments:

சி. கருணாகரசு said...

வானம் கவிதை நல்லாயிருக்கு... தலைப்பு புரியலிங்க.

Nundhaa said...

nice

நேசமித்ரன் said...

மொழியில் இருண்மை கூடிக் கொண்டே போகிறது ரசிக்க வைக்கிறது
கத்திக்கு சிக்காத போன்சாய் கனவுகள் தாழப் பறக்கும் வானம் ம்ம்

சென்னிற நிழல் செந்நிற நிழல் என்றிருக்க வேண்டும் என் நினைக்கிறேன்
பரந்தவானம் ?

துபாய் ராஜா said...

/கத்திக்கு சிக்காத போன்சாய் கனவுகள்/

அருமை அண்ணாச்சி.

ஹேமா said...

அண்ணா வர வர உங்கள் கவிதைகள் மெருகேறி அழகாய் ஒளிர்கிறது.
வாழ்த்துக்கள்.போன்சாய் கனவுகள்...அர்த்தமுள்ள ஒரு சொல்.

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

சென்ஷி said...

என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கவிதை கூற முற்படும் விவரங்கள் இதுவென நினைக்கிறேன்.
--------

ப்ரீதி விடை - மனநிம்மதியான (அ) சந்தோசமான பயணவழியின் பால் விடைபெறுதல்

இறுதிப்பயணத்தைப் பற்றிய கவித்துவ வழிக்குறிப்புகள்.

அருமை அண்ணா!

/////

சென்னிற - செந்நிற

/////

@ நேசமித்ரன்

பரந்தவானம் ? - வானத்தின் பரப்பை வியக்கும் ஆச்சரிய சொல்!

///////////

பா.ராஜாராம் said...

@சென்ஷி.

மிக சரி சென்ஷி!சந்தோஷமும் அன்பும்.பிழை திருத்தியாச்சு சகோதரா.(என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில்-இது காமடி!)

@நேசா

மோதிரவிரல் கொட்டு எனக்கு நேசா..நன்றியும் அன்பும் மக்கா!

@கருணா

பார்க்க:பின்னோட்டம் சென்ஷி.

பாலா said...

பெரிய மக்கள் சொல்லிட்டாங்களே எல்லாத்தையும்

D.R.Ashok said...

பிடித்த வரிகளை மற்றவர் பிடித்துவிட்டதனால்,
’கவிதை நிறைவாக இருந்தது’ என்பதை மட்டும் இங்கே பதிகிறேன்.

மண்குதிரை said...

mozhi veRumaariyaana anupavaththai tharukirathu

Anonymous said...

படித்தேன் பொய்யாய் நல்லாயிருக்கு என சொல்ல மனசில்லை ஏன்னென்றால் அவராவது சிற்றறிவு என்றார் எனக்கு அது கூட இல்லாததால் புரியவில்லை..என்னை போன்றோர்க்கும் புரியும் விதமாய் எழுதுங்களேன்.....

அமிர்தவர்ஷினி அம்மா said...

திரும்ப திரும்ப படித்தபின்னர் புரிந்துகொண்டேன் :)

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

படிசசேன், திரும்பவும் படிச்சேன், உஹூம் புரியல!!

மாதவராஜ் said...

//வானம்
தாழ பறக்கிறது

முன்பு

இடைவிடாது
மேலே பரந்த
வானம்//

வரிகளில் கவிதை உயர்ந்து செல்கிறது.

S.A. நவாஸுதீன் said...

வானம்
தாழ பறக்கிறது

முன்பு

இடைவிடாது
மேலே பரந்த
வானம்

இந்த வரிகள் என்னைக் கட்டிப்போட்டன நண்பா!. மேகக்கூட்டத்துடன் மிதந்துகொண்டு அதற்கும் மேல்நோக்கி நானும் ரசித்தேன்.

kathirvelmuniyammal said...

ஜூன் 2009 லேயே வானம் தாழப் பறக்க ஆரம்பித்து விட்டது ,நண்பரே!

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்...
Nundhaa
துபாய் ராஜா
ஹேமா
தமிழினி (tamil10.com)
பாலா
D.R.Ashok
மண்குதிரை
அமிர்தவர்ஷினி அம்மா
ஷ‌ஃபிக்ஸ்
மாதவராஜ்
நவாஸுதீன்
kathirvelmuniyammal
எல்லோருக்கும் என் நிறைந்த நன்றியும் அன்பும்!

பா.ராஜாராம் said...

ஐயோ தமிழ்,..மன்னியுங்கள்.ரமதான் வேலை பளுகளில்,கிடைக்கிற நேரத்தில் வந்து அவசர,அவசரமாய் பின்னூட்டங்களுக்கு பதில் சொன்னதில் விடுபட்டதாக இருக்கும்.உங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகே,மீண்டும் என் நன்றி அறிவித்தல் பின்னூட்டம் பார்க்க போனேன்.கவனக்குறைவுதான்.அவசரமும் கூட!விடுங்கள்,உங்களுக்கு தனியாக நன்றி சொல்லணும் என்று கூட இப்படியெல்லாம் நடந்திருக்கலாமோ என்னவோ.மனதில் வைக்காமல் கேட்டது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது தமிழ்.இல்லாவிட்டால்,எனக்கு தெரியாமல் கூட போயிருந்திருக்கும்.
ப்ரியங்கள் நிறைந்த என் தமிழுக்கு,நிறைய அன்பும் நன்றியும்!இதே பின்னூட்டத்தை என் தளத்திலும் பதிகிறேன்.மீண்டும்,மன்னியுங்கள் தமிழ்!

இரசிகை said...

neenga nesamithran sir kooda seraatheenga......... rajaram sir!!!

puriya maattukku!!!

பா.ராஜாராம் said...

@ரசிகை

ஐயோ..பெரிய வார்த்தை ரசிகை.அவன் அன்புக்கு ஏங்கும் ஆத்மா நான்.அவன் ஒரு வார்த்தையில் ஊறிக்கொண்டே இருக்கலாம்...சமீபமாய் உங்கள் கவிதையின் வீச்சும் ரொம்ப அழகா இருக்கு ரசிகை.தொடர்ந்து நேசனை வாசியுங்கள்.எனக்கு உங்களுக்கெல்லாம் சற்று அடர்த்தி கூடியது அவன் வாசிப்பில்தான்.உண்மையை சொல்லுங்கள்.இல்லையா?

இரசிகை said...

ithu vilayaattukkuth thaan sonnathu...(vilayaattukkum ini solla maatten..)

thappu ..kannaththil pottukkiren:)

பா.ராஜாராம் said...

போச்சுடா!மீண்டும் பெரிய வார்த்தை ரசிகை..நானும் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்!!!சரி....உங்கள் அன்புக்கு ஏங்கும் ஆத்மாக்கள் நேசனும் நானும்!உங்கள் ஒரு நமுட்டு சிரிப்பில் ஊறிக்கொண்டே இருக்கலாம் நானும்,நேசனும்.தொடர்ந்து ரசிகையை வாசிடா,நேசா.அவனுக்கு,எனக்கு சற்று மென்மை கூடியது உங்கள் காதல் கவிதைகள் வாசித்துதான்.சொல்லு நேசா, உண்மையா,இல்லையா?

இனி,நேசன் வந்து கன்னத்தில் போடாமல் இருக்கணும்!

மீண்டும் முதல்ல இருந்தா..

(இந்த பின்னூட்டத்தை ரியாத்தில் இருக்கும் போதே போட்டேன் ரசிகை.எங்கு போனது என தெரியவில்லை.சம்பந்த மில்லாமல் வேறு பக்கங்களில் போட்டு விட்டேனா என தெரியவில்லை...வேலை அவசரத்தில்!என் தளத்தில் வேறு எங்காவது போட்டிருந்தால் பரவாயில்லை.வேறு தளங்களில் போட்டிருந்தால் "எங்கே செல்லும் இந்த பாதை.."என பாடிக்கொண்டு நண்பர் பாண்டிமடத்தில் இருக்க வாய்ப்பிருக்கு.இந்த பாவம் ரசிகை அக்கவுன்ட்டில் ஏறக்கடவது கடவுளே..)

இரசிகை said...

:)