Thursday, September 17, 2009

நந்தி


(Photo by CC license, Thanks Robyn Gallagher)

பேருந்து
நிறுத்தத்தில்
இறங்கப்போகிற
அவளின்
துப்பட்டா நுனி
பிடித்திழுக்கிறது
பின்னிருக்கை
குழந்தை.

விடுவித்து
கன்னம் நிமிண்டி
சிரித்திறங்கி
போய்விட்டாள்
அவளும்.

டைத்துக்கொண்டு
அருகமர்ந்திருக்கிறாள்
மனைவி

க்குழந்தையாக
மாற
நினைந்திருந்த
என்
மனக்குகை
துவாரத்தை
அடைத்துக்கொண்டு

43 comments:

தமிழ்ப்பறவை said...

ரசித்தேன் சார்.. நன்றாக இருந்தது...

Kannan said...

இருக்க எடம் கொடுத்த இந்த பய படுக்க எடம் கேட்பான்னு எங்க அத்தாச்சிக்கு தெரியும்ல..!!

uthira said...

குறும்பு கலந்த கவிதை. ரசிக்கதக்க அமைந்திருப்பது சிறப்பு.

ஹேமா said...

ம்ம்ம்....அண்ணா குசும்புதான்,

சென்ஷி said...

:-)

கும்க்கி said...

அடைத்துக்கொண்டா....?

ஹூம்.

Vidhoosh/விதூஷ் said...

ஹா ஹா.. ரொம்பவே இரசித்தேன் இரண்டு காட்சிகளை...
--வித்யா

RaGhaV said...

ரொம்ப நல்ல இருக்கு.. :-)

பாலா said...

மாமாவ் அக்கா கிட்ட சொல்லனுமா?
உங்க காலம்லாம் முடிஞ்சு போச்சு இப்போ எங்களுக்கான நேரம்
இப்பவும் வந்து குழந்தையா மாறுறேன் ,குயில் பாட்டு பாடுறேன் னு
சொல்லிக்கிட்டு இருக்கப்புடாது என்ன புரிஞ்சுதா????/

velkannan said...

:-) ,,,,:-)

தமிழ் நாடன் said...

கவிதைக்கேத்த படம்!

velji said...

அருமையான படம்..எங்க பிடிச்சீங்க?!

க.பாலாஜி said...

//அக்குழந்தையாக
மாற
நினைந்திருந்த
என்
மனக்குகை
துவாரத்தை
அடைத்துக்கொண்டு//

ரொம்ப பலமா அடைச்சிருப்பாங்க போலிருக்கு....சரிதான் அனுபவஸ்தர் சொன்னா சரியாதான் இருக்கும்...

நல்லாருக்கு அன்பரே கவிதை....

சி. கருணாகரசு said...

கவிதையெல்லாம் நல்லாதான் இருக்கு... குசும்புத்தான் அதிகம். இப்ப நீங்கத்தான் எங்க (இளையர்) பாதையை அடைத்துக்கொண்டு இருக்கிங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

படம் தேர்வு அருமை, கவிதை நன்றாக இருந்தது..

D.R.Ashok said...

மெல்லிய புன்முருவல் :)

தியாவின் பேனா said...

ரசிக்கதக்க கவிதை.

ஜெஸ்வந்தி said...

கவிதையை விட உங்கள் குசும்பு நல்லாகவே இருக்கு. உங்க மனைவி நம்பர் குடுங்கோ.

சேரல் said...

;)

-priyamudan
sEral

பிரியமுடன்...வசந்த் said...

படம் நல்லாயிருக்கு...

ஆரூரன் விசுவநாதன் said...

அடைப்பிருக்கும் போதே இப்படியா?

வரிகள் அருமை

அன்புடன்
ஆரூரன்

சந்தனமுல்லை said...

:-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை பிடிச்சிருக்கு மக்கா!

நேசமித்ரன் said...

ம்ம்
குசும்பு

:)


***********************************************
யாரும் அற்ற பேருந்தின்
கடைசி நிறுத்தத்தில்
உறங்கி கொண்டிருக்கும் பெண்ணின்
நெகிழ்ந்த ஆடை தடுக்கிறது எழுப்பிச் சொல்ல

****************************************

" உழவன் " " Uzhavan " said...

அழகு :-)

மண்குதிரை said...

:-) nice

Anonymous said...

கவிதை எழுதியது வீட்டில் தெரியுமா?.......SOOOOOOOOOO SWEETTTTTT

கல்யாணி சுரேஷ் said...

இருங்க இருங்க அண்ணிகிட்ட சொல்றேன்.

ஜெஸ்வந்தி said...

நேசமித்ரன்
==========
''யாரும் அற்ற பேருந்தின்
கடைசி நிறுத்தத்தில்
உறங்கி கொண்டிருக்கும் பெண்ணின்
நெகிழ்ந்த ஆடை தடுக்கிறது எழுப்பிச் சொல்ல''

கவிதை அருமை நண்பரே! இப்படி எல்லோருக்கும் விளங்கத் தக்கதா உங்களுக்கு எழுதத் தெரியுமா?

துபாய் ராஜா said...

ஆஹா அண்ணாச்சி.அண்ணியார் வழியை அடைக்கலன்னா நீங்க புதிய பாதை போட்டுடுவீங்க போலிருக்கே...
:))

நேசமித்ரன் said...

பா.ரா கோச்சுக்க கூடாது

ஜெஸ்வந்தி மிக்க நன்றி

பா.ராஜாராம் said...

பா.ரா.கோச்சுக்க கூடாது.

நேசா,ஜெஸ்,மிக்க நன்றி!

uthira said...

வெகு தொலைவிலிருக்கும் தந்தைக்கு அன்பைச் சொல்ல, எடுத்த மாற்று உருவம்தான். நன்றி தகப்பனே.

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. கலக்கல் நண்பா. ஆமா அண்ணி படிக்கமாட்டாங்கங்ற தைரியம்!!!. ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

Nundhaa said...

இந்த wifesஏ இப்படித்தான் :)

என்.விநாயகமுருகன் said...

குறும்பு வரிகள். ரசித்தேன்

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்..
தமிழ்ப்பறவை,
கண்ணா,(கிளம்பிட்டியா?..)
உதிரா,(ஆகட்டும்டா..)
ஹேமா,
சென்ஷி,
கும்க்கி,
வித்யா,
ராகவ்,
பாலா,
வேல் கண்ணா,
தமிழ் நாடன்(நல்வரவு நண்பா)
வேல்ஜி(நல்வரவு,வேல்.)
பாலாஜி,
கருணா,
அமித்தம்மா,
அசோக்,
தியா,
ஜெஸ்,
சேரல்,
வசந்த்,
விஸ்வா,
முல்லை,
சுந்தரா,
நேசா,
உழவன்,
மண்குதிரை,
தமிழரசி,(நன்றி.. ஆண்டவா!)
கல்யாணி,
துபாய் ராஜா,
நவாஸ்,
நந்தா,
விநாயகம்,

நிறைய அன்பும் நன்றியும்-எல்லோருக்கும்!

உயிரோடை said...

அட‌ங்க‌ மாட்டீங்க‌ளா பா.ரா.?

ம்ம் க‌விதை ந‌ன்று.

அனுஜன்யா said...

நல்லா இருக்கு ராஜா.

அனுஜன்யா

இரசிகை said...

:)

பா.ராஜாராம் said...

@உயிரோடை
ரொம்ப நெருக்கமான வார்த்தையாக இருக்கு லாவன்யா.
நிறைய அன்பும் நன்றியும்.

@அனுஜன்யா
அனு,நல்லா இருக்கீங்களா?ரொம்ப சந்தோசம்.நன்றியும் மக்கா.

@ரசிகை
நன்றி ரசிகை-ரசிகன்!

சங்கா said...

நந்திகள் எப்போதும் பிரச்சினைதான்! ஹிஹி!!! ஆனால் அதுக்கெல்லாம் அசந்துருவமா?!!

பா.ராஜாராம் said...

அதானே!...அன்பும் நன்றியும் சங்கா.