Saturday, October 24, 2009

பா.ராஜாராம் கவிதைகள்-4

1.
(picture by cc license, thanks seeveeaar)

வாடாவென அழைக்கிறது
உள்ளிருக்கும் கடவுள்.
மிதித்துப்போக வலிக்கிறது
கோபுர நிழல்.

2.
(picture by cc license, thanks fesoj)

ரட்டை பாப்பாத்தி
இருந்தமர்ந்து
எழுந்த பூ
ஆடிக்கொண்டிருக்கிறது
கட்டிலையொத்து.

3.
(picture by cc license, thanks appaji)

டுவழி மைல் கல்
சொல்கிறதெப்போதும்...
புறப்பட்ட தூரத்தை
போகும் தொலைவை
இனம் புரியாதொரு
அனாதரவை.

------------------------------------------
பா.ராஜாராம் கவிதைகள் 1, 2, 3
------------------------------------------

31 comments:

ஆ.ஞானசேகரன் said...

இரண்டாவது அருமை ....

பிரபாகர் said...

கோபுரமும், கட்டிலும் அருமை...

எளிமை, கருத்தாக்கம்.... உங்களின் அழகு.

பிரபாகர்.

அகநாழிகை said...

கவிதைகள் அருமை.

- பொன்.வாசுதேவன்

சந்தான சங்கர் said...

பக்தி

ஆனந்தம்

ஆதரவு..

அருமை...பா.ரா

ராமலக்ஷ்மி said...

மூன்றாவது மிகப் பிடித்தது.

ராகவன் said...

அன்பு பாரா,

அழகான கவிதைகள். மூன்றுமே!

அன்புடன்
ராகவன்

Rajan said...

நடுவழி மைல்கல் நிஜம் சொல்கிறது!

வாழ்த்துகள்

காமராஜ் said...

நடுவழி மைல் கல் மனதை பிராண்டுகிறது.
எத்தனை முறை வருடிக்கொடுத்தாலும்,
தகம் அடங்காத பிரியம் கூட்டுகிறது.
கவிதைமேலும், உங்கள் மேலும்.

அருமை பாரா.

velji said...

1)அருமை.

2)அருமை.

3)அருமை.

S.A. நவாஸுதீன் said...

மூன்றுமே அருமை மக்கா. கட்டில் கலகலப்பு ”அட” போட வைக்கிறது

Ashok D said...

கடைசி: அதிக மதிப்பெண் பெற்று முதல் நிலை வகிக்கிறது. வாழ்வின் அபத்ததை வெறுமையை கூறுவதால்.

புலவன் புலிகேசி said...

இரண்டாவது மிக அருமை....

சென்ஷி said...

மூன்றாவது மிக நெருக்கமாக உணர வைக்கிறது!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமையாக கவிதைகள்.அதிலும் இரண்டாவது கவிதையின் ஒப்புமை புதியது.

உயிரோடை said...

நான்கு க‌விதைக‌ளும் அருமை. மைல் கல் க‌விதை ம‌ன‌தை என்ன‌வோ செய்கிற‌து. வாழ்த்துக‌ள்.

அ.மு.செய்யது said...

எனக்கு அந்த கோயில் கடவுள் கவிதை பிடித்திருந்தது.

நிறைய அர்த்தங்கள் புலனாகின்றன....;பன்முகத்தன்மையும் இருக்கிறது.

Good work Pa.ra !!

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதலும், மூன்றாமவது நன்றாக இருந்தது,

ரெண்டாவது புரியலீங் சாமி!

தமிழ் நாடன் said...

இரண்டாவது கவிதை அருமை! ஒரு கவிஞனால் மட்டுமே இப்படி ஓசைபடாமல் சிந்திக்க முடியும்!

க.பாலாசி said...

//வாடாவென அழைக்கிறதுஉள்ளிருக்கும் கடவுள்.மிதித்துப்போக வலிக்கிறதுகோபுர நிழல்.//

சரியான சிந்தனை...உங்களின் பார்வை மிக நன்றாயிருக்கிறது.

//புறப்பட்ட தூரத்தை
போகும் தொலைவை
இனம் புரியாதொரு
அனாதரவை.//

கடைசியா செம டச்....

இரசிகை said...

2-um 3-um arputham........

1-enakku muzhusaap puriyala..

vazhththukal rajaram sir...!!

:)

Nathanjagk said...

முதல் கவிதையிலேயே நிழல் தடுக்கி விழுந்து அங்கேயே கிடக்கிறேன் அய்யா!

பூவைத் தொட்டிலாக்கிவிட்டு என்னை அதில் உறங்க​செய்வதின் உத்தேசம் தானென்ன?

அனாதரவின் தூரம் சொல்லி என்னை உங்கள் அருகாமையில் உட்கார்த்தி வைத்துவிட்டீர்கள் ராஜா!

புகைப்படங்கள் நல்ல​தெரிவு மற்றும் துல்லியம்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வாடாவென அழைக்கிறது உள்ளிருக்கும் கடவுள்.மிதித்துப்போக வலிக்கிறதுகோபுர நிழல்.//
ஏன், உண்மையாகவே நிழலை மிதிக்காமல் உள்ளே போக முடியாதா ராஜா? ட்ரை பண்ணினீர்களா?
மற்ற கவிதைகளும் அருமை. வர வர மெருகேறுகிறது.

கவிதாசிவகுமார் said...

மூன்று கவிதைகளும் அழகு. மைல்கல் தூரம் என்ற வார்த்தைகளைப் படிக்கும்பொழுது கண்ணீர்த்துளி எட்டிப் பார்க்கிறது. ஆனால் இப்பதான் 'கருவேல நிழல்' தளம் இருக்கே.

நந்தாகுமாரன் said...

haiku moments :)

rvelkannan said...

உங்களின் கவிதைகள் பல மைல் கல்
தாண்டுகிறது அருமை பா.ரா

"உழவன்" "Uzhavan" said...

கவிதைகளுக்கு படங்கள் மேலும் அழகுசேர்க்கின்றன :-)

விநாயக முருகன் said...

வாடாவென அழைக்கிறது
உள்ளிருக்கும் கடவுள்.
மிதித்துப்போக வலிக்கிறது
கோபுர நிழல்.

அருமை

பா.ராஜாராம் said...

@சேகர்

நன்றி சேகர்!

@பிரபாகர்

நன்றி ப்ரபா!

@அகநாழிகை

நன்றி வாசு!இப்ப,வடிவமைப்பு கொஞ்சம் வருகிறதா?நீங்க சொல்லி கொடுத்ததுதான்.

@சங்கர்

நன்றி,
நன்றி,
நன்றி! சங்கர்.

@ராமலக்ஷ்மி

நன்றி ராமலக்ஷ்மி!

@ராகவன்

ரொம்ப நன்றி ராகவன்!

@ராஜன்

நன்றி ராஜன்!

@காமராஜ்

இதைவிட வேறு என்ன வேணும் காமராஜ்!நன்றி மக்கா!

@வேல்ஜி

மூணு நன்றி வேல்ஜி!

@நவாஸ்

நன்றி நவாஸ்!

@அசோக்

நிறைந்த நன்றி அசோக்!

@புலவன் புலிகேசி

நன்றி புலவரே!

@சென்ஷி

நெருக்கமான நன்றி சென்ஷி!

@ஸ்ரீ

நன்றி ஸ்ரீ!நல்வரவு சீயான்!

@உயிரோடை

உங்க பெயரையும் சேர்த்து சொல்கிறீர்கள் என நினைக்கிறேன் உயிரோடை!நன்றி லாவண்யா!

@செய்யது

நன்றி செய்யது!

@அமித்தம்மா

முதலுக்கும் மூன்றாவதுக்கும் நன்றி!

ரெண்டாவதுக்கு...
போகட்டும் விடுங்க பக்தை! :-)

@தமிழ் நாடன்

சத்தமா ஒரு நன்றி சகோதரா!

@பாலாஜி

செம நன்றி பாலாஜி!

@ரசிகை

நன்றி ரசிகை டீச்சர்!

@ஜெகா

வாங்கப்பு!ரொம்ப நன்றி ஜெகா!

@ஜெஸ்

காளையார் கோவிலில் இவ்வனுபவம் கிட்டியது ஜெஸ்.மிதித்துத்தான் போனேன்.அப்பாமேல் கால் போட்டுக்கொண்டு தூங்குவது போல.அப்பாவும் ஒன்னும் சொல்லலை!!நன்றி ஜெஸ்!

@மண்குதிரை

தீராத பக்கங்களுக்கு வாழ்த்துக்களும்,கருவேலநிழலுக்கு நன்றியும் மண்குதிரை!

@உதிரா

நன்றி கண்ணம்மா!

@நந்தா

நன்றி நந்தா!

@வேல்கண்ணன்

நன்றி சகோதரா!

@உழவன்

நன்றி உழவரே!

@விநாயகம்

நன்றி விநாயகம்!

சத்ரியன் said...

//வாடாவென அழைக்கிறது
உள்ளிருக்கும் கடவுள்.
மிதித்துப்போக வலிக்கிறது
கோபுர நிழல்.//

பா.ரா,

ஆஹா

////இரட்டை பாப்பாத்தி
இருந்தமர்ந்து
எழுந்த பூ
ஆடிக்கொண்டிருக்கிறது
கட்டிலையொத்து.//

ரொம்பத்தான் உத்த்த்த்து கவனிக்கிறீங்க சம்பந்தி.
(இருய்யா...லயிச்சிப்போயி நீக்கிறேன்)

அருமையா இருக்கே மாமா.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மூன்றும் அருமை பா.ரா!

இரண்டாவது கவிதை, விடுகதை போலத் தொன்றியதெனக்கு. எதனால் அப்படி?

-ப்ரியமுடன்
சேரல்

ஜோதிஜி said...

மிகவும் மகிழ்ச்சியை தந்தது. உங்களது அத்தனை வரிகளும் என்னை எனக்கே உணர்த்தியது பாரா