என் தாத்தாவை போல
நானென
யார் ஒருவரும்
சொல்லக்காணோம்.
அவன்
தாத்தாவை போல
நானென
என் மகன்
சொன்னால்
அக்குறை தீரும்
சரி பாதியாய்.
என்ன செய்தால்
சொல்வானென
என்னென்னவோ
செய்து பார்க்கிறேன்.
இக்கவிதை
உட்பட.
முள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...
36 comments:
ஹா..ஹா..புன்னகைக்க வைத்த கவிதை ராஜாராம்.
( நான் என் தாத்தா மாதிரி தாங்க..! அட்ட கருப்பு இந்தியன்.எங்க அப்பா பர்மியர்.செவப்பு.)
முகமறியா அனைவருக்கும் உங்களின் எழுத்துமூலம் அன்பும் நட்பும் பாராட்டும் உங்களை 'எனதருமை தாத்தாவைப் போலவே' என்று விரைவில் சொல்வான்.
பெரு விரல் வளைவு
சிரிப்பின் கோணல்
பேரும் அவருடயதென்பதால்
ஐயா என்றுதான் அழைப்பாள் அப்பத்தா
பாம்படம் கழுத்து சங்கிலி ஆக
பின்னர் என் மகன் கையில்
கை சங்கிலியாகவும்
மகன் பெயரில் ஸ்டைல் ஆக பாதியாக தாத்தாவும்
இக்கவிதை வடிவமைப்பிற்கு உதவிய நண்பர்,அகநாழிகை ஆசிரியர் பொன்.வாசுதேவன் அவர்களுக்கு மிகுந்த அன்பும் நன்றியும்.
தத்தா! மந்திர வார்த்தை. அனுபவப்பாடம். நிறைய கிளறிவிட்டிருக்கிறீர்கள். நன்றி நண்பரே...
உங்களின் இடுகைளைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன் http://abiprabhu.blogspot.com/2009/10/blog-post_5611.html எனக்கு பிடித்த இடுகையாளர்கள்...
), படித்துப் பாருங்கள்.
பிரபாகர்.
நானும் கூட பாரா வைப்போலொரு கவிதை செய்ய ஆசைப்படுகிறேன்.
அண்ணாமலைத் தாத்தாவின்
விராட பர்வம்
புத்தகம் மக்கி மண்ணோடோ, அல்லது கரையானோடோ
கலந்துவிட்டது அவர் கொடுத்த கதைகளின் சாவி பத்திரமாக இருக்கிறது. எனக்குப்பட்டி தான் எல்லாம்.
பாடு பொருளை தேடி,வார்த்தகளுக்குள் சிக்கிக்கொள்கிறோம்...,பெரும்பாலும் நாங்கள்.
நீங்கள் 'வெண்ணெ' மாதிரி கவிதை சொல்றீங்களே மக்கா!பாராட்டுக்களும்,அன்பும்.
//என்ன செய்தால்
சொல்வானென
என்னென்னவோ
செய்து பார்க்கிறேன்.
இக்கவிதை
உட்பட. //
Excellent...!
உன் தாத்தாவைபோல நீயென
உங்கள் பேரனை பார்த்து
சொல்லும்போது நிறையும்..
நல்லா இருக்கு. தாத்தாவின் ரேகைகள் குழந்தைகளின் சரீரத்தில் படியாமலா போகும்?
நான் என் தாத்தாவைப் போலத் தான் உயரத்தில்..
viththiyaasamaa irukku inthak kavithai....:)
ரெண்டு வருஷம் ஆகுமா?
நல்லா இருக்குங்க
வாழ்த்துக்கள்
விஜய்
நல்லா இருக்கு
//என்ன செய்தால்
சொல்வானென
என்னென்னவோ
செய்து பார்க்கிறேன்.
இக்கவிதை
உட்பட. //
நல்லாயிருக்கு
ரொம்ப நல்லா இருக்கு ....
அழகான கவிதை
பா. ரா விற்கு தாத்தாவை
ரொம்ப பிடிக்கும் போல.
ஒருவேளை உங்கள் முன்னால்
சொல்லியிருக்க மாட்டார்கள்
கவிதை நன்று
//அவன்
தாத்தாவை போல
நானென
என் மகன்
சொன்னால்
அக்குறை தீரும்
சரி பாதியாய்.//
உண்மைதான்....
கவிதை மிக நன்று....அழகாய் வடிந்துள்ளது...கொஞ்சம் மௌனத்துடன்....
-:) nalla irukku
தாத்தாவின் நினைவுகளை கிளரி செல்கிறது.
ஓ...இப்படியெல்லாம் சிந்திக்க வருமோ...!நான் யார்போலன்னு இப்பவே கேக்கிறேன் தோலைபேசியில் அம்மாவிடம்.
கேட்டேன்.நான் என் அத்தை - அப்பாவின் அக்கா போலவாம்.
//என்ன செய்தால்
சொல்வானென
என்னென்னவோ
செய்து பார்க்கிறேன்.
இக்கவிதை
உட்பட. //
ரசித்தேன்:)!
அது சரி, உங்கள் மகன் இந்த ப்லோக் படிப்பதுண்டா? இல்லையென்றால் படிக்கச் சொல்லத் தான் கேட்கிறேன்.
தவமாய் தவமிருந்து. எங்கேர்ந்து மக்கா தோணுது.
அழகு!!
எளிய சொற்களில்...
கவிதைக்கு வேறு எதுவும் தேவையில்லை உண்மையை தவிரன்னு. அருமை. வாழ்த்துகள்
@செய்யது
உங்களை புகை படத்துல பார்த்து இருக்கிறேன் செய்யது!நவாஸ் தளத்துல..(.பொய் சொல்லாதீங்க!)நம்மை மாதிரி கருப்பு இந்தியர்கள் மனசை வெள்ளையா வச்சுக்கிரவேண்டியதுதான்!balance பண்ணிக்கிரதானே வேணும்!நன்றி செய்யது.
@உதிரா
ஆகட்டும் எனதருமை பாட்டி!ராணி அத்தாச்சி குரல் வந்துருச்சு உனக்கு!அத்தாச்சியின் சிரிப்பை நினைத்து கொள்கிறேன்..இத்தருணம்.ராணி அத்தாச்சி,அம்சம் அத்தை,அண்ணாத்துரை சித்தப்பா மாதிரி மனசில் இருந்து சிரிக்க இனி,மனிதர்கள் உண்டா கவிதும்மா? நன்றிடா பயலே!
@நேசன்
அருமைடா நேசா!ஒரு கவிதை மனிதர்களை கொண்டு வருமெனில்,அக்கவிதை ஜனிப்பின் புண்ணியம்!அடைந்து விட்டதுதான் இத்தவம்.நன்றி மக்கா.
@பிரபா
மிகுந்த அன்பு ப்ரபா உங்களுக்கு.இவ்வலை உலகுக்கு நிறைய கடன் பட்டிருக்கேன்.தீர்க்க இயலா கடன்!எல்லாவற்றையும் தீர்த்து விட முடியுமா என்ன?...அப்படி நீங்களும் இருந்து விட்டு போங்களேன்.தளம் வந்து நெகிழ்ந்தேன்.நன்றியும் அன்பும் ப்ரபா.
@காமராஜ்
நேசனுக்கு சொன்னதேதான் காமராஜ் உங்களுக்கும்.கூடுதலாக,"சம்பாரி மேளத்தின்"உறுமலும்,மருதோன்றி நினைவுகளும் எழுதிய உங்கள் கைகளுக்கும்,"இன்னும் கிளிகள்,வெயில்,கிடா நாற்றம்"எழுதிய மாதவனின் கைகளுக்கும் முத்தமிட என்னிடம் ஆசைகள் உண்டு!அந்த நாள் விடியும் போது செய்யணும்.நன்றி காமு!
@வேல்ஜி
உங்கள் பின்னூட்டங்கள் மிக வியப்பு எனக்கு வேல்ஜி!மிக நெருக்கமாய் உணரும் பாசை உங்களிடம் இருந்து தெறிக்கிறது-என் தளம் மட்டுமில்லை.உங்கள் பின்னூட்டம் எங்கிருந்தாலும் கவனிக்கிறேன்.மனசு நிறைவாய் பேச உங்களுக்கு வாய்த்திருக்கு வேல்ஜி.சந்தோசமாய் இருக்கு!நன்றி மக்கா!
@இன்றைய கவிதை
ரொம்ப சந்தோசம்,ஜேகே,சந்தர்,ப்ரபா,கேயார்!உண்மையில்,உங்கள் நால்வருக்கும்தான் ரொம்ப பயம் எனக்கு.என்ன சொல்ல போறீங்களோ என.இந்த பாராட்டை பத்திரமாய் வச்சுக்கிறேன்.நன்றி மக்காஸ்!
அன்பு பாரா,
நலமா? எப்படி பாரா இதுபோல் எழுதுறீங்க! சுட்டுவிரலில் பர்வதம் தூக்கியது போல அநாயசமாக வித்தை பழகுகிறீர்கள்! ஆச்சரியம், ஒரு கவிதை எழுதி பதிலாய் நிறைய கவிதைகள் அறுவடை செய்வது உங்களுக்கு மட்டுமே சாத்தியம் பாரா! எங்கயா இருக்க! முடிஞ்சா உங்க தொலைபேசி எண் தரவும், எங்கே இருந்தாலும் பற்றிக் கொள்கிறேன்!
பரந்த, சிவந்த நெற்றி, தெற்குக்கும், வடக்குக்கும் ஒரு திருசுர்ணம், இரட்டை நாடி சரீரம், மஹாபெரிய காதுகள் ஐராவதத்தை ஞாபகப்படுத்தும் தோற்றம், குளிர்மாமலை வேங்கடவா, மாதவா...என்று சதா அரற்றும் தாத்தாவின் சாயல் கொஞ்சமும் இல்லாத ஒரு பேரன், நான். ஆனால் அவர் விட்டுச்சென்ற சர்க்கரையும், ரத்தக்கொதிப்பும் மட்டும் தலைமுறை தாண்டி வந்து கொண்டிருக்கிறது.
வாழ்த்துக்கள்
அன்புடன்
ராகவன்
மென்னுணர்வுக் கவிஞரே என்னத்தச் சொல்ல?! ஆகா ஆகா, அருமை!
@சங்கர்
வாவ்!இது நல்லா இருக்கே,சங்கர்.ஆனால்,அவன் தாத்தாவை போல என் பேரன் வரவேண்டாம் என்பதாகவே எண் விடுப்பம் இருக்கு சங்கர்!(சிகரெட்,தண்ணி..)அவனையும்,சூழலையும் மாசு படுத்திக்கொள்ளாமல் வரட்டும்.நன்றி மக்கா.
@மாதவன்
நன்றி மாதவன்.தினம் ஒன்னு அல்லது ரெண்டு பதிவு,வாசிக்கணும்,எழுதணும்,பின்னூட்டமிடனும்,எல்லாவற்றையும் குறை வைக்காமல் செய்ய இயல 48 மணிநேரம் வச்சுருக்கீங்களா மாதவன்.,நாளொன்றுக்கு?உங்கள் இயக்கம் பிரமிப்பு மக்கா.சக்தி கொடுக்கட்டும் அன்பெனும் இவ்வலை உலகம்!
@புலவன் புலிகேசி
ஆகட்டும் மக்கா.உங்கள் தொடர் வருகை சந்தோசம் தருகிறது புலிகேசி.உற்சாகத்தையும்!நன்றியும் அன்பும் தோழா!
@ரசிகை
நன்றி ரசிகை.எப்பவும் போலான அன்பு!
@தண்டோரா
இல்லை,மணி.இன்னும் ஒரு வருஷம்தான்.மகா திருமணத்தில் சந்திப்போம்-எல்லோருமாக.நன்றி மணிஜி.
@விஜய்
நன்றி விஜய்.நல்லா இருக்கீங்களா?அன்பு நிறையவும் மக்கா.
@அமித்தம்மா
நன்றி அமித்தம்மா.மிகுந்த அன்பும்.
@சேகர்
ரொம்ப நன்றி சேகர்.மனசு சோராமல் வரும் ஒரு ஆத்மா!அன்பு நிறைய சேகர்.
@ராஜன்
ஆகட்டும் ராஜன்.நன்றி மக்கா.
@உழவன்
வாங்க உழவரே.ரொம்ப சந்தோசம்.நிறைய நன்றியும் அன்பும்!
@வேல்கண்ணன்.
ஆமாம் வேல்கண்ணா.இருக்கலாம்.நன்றி சகோதரா.
@பாலாஜி
அப்படியா?சந்தோசம் பாலாஜி.கவிதைகளில் நீங்களும் உலுக்குகிறீர்கள் மக்கா.நன்றி பாலாஜி.
@மண்குதிரை
நல்லா இருக்கீங்களா மண்குதிரை?நன்றி மக்கா.அன்பும்!
@அசோக்
உள்ளேன் ஐயா போடலையா அசோக்?வால் மேல உட்க்கார்ந்திருக்கீங்களோ?தாத்தாவுக்காகவா?நன்றி அசோக்!
@ஹேமா
நம் அப்பா போல நீங்களென நம்பிக்கொண்டு இருந்தேன் ஹேமா.அப்பா பற்றி அடிக்கடி பேசுவதால்.அத்தை மாதிரியாமா?அத்தையும் கோப காரர்கள் என கொள்ளவேண்டியதுதான்.நன்றிடா!
@ராமலக்ஷ்மி
என் மகள் பெயர் மகாலக்ஷ்மி ராமு!உங்கள் பின்னூட்டம் வாசிக்கிற போதெல்லாம் மகள் நினைவு வந்து விடுகிறது.நன்றியும் அன்பும் நிறைய உங்களுக்கு.
@ஜெஸ்
மகள் பார்க்கிறாள் என்று தெரிகிறது ஜெஸ்.மகன் இல்லை என்றே தோனுகிறது.அவனுக்கு விஜய் பார்க்கவே பிடித்திருக்கிறது.தோணும்போது தோனட்டும்.இந்த கவிதை பார்த்த பிறகு "தாத்தா மாதிரிதான்ப்பா" என்று அவன் சொன்னால் அது கள்ளாட்டை...நன்றியும் அன்பும் ஜெஸ்.
@நவாஸ்
பாசு,தீபாவளி முடிஞ்சு பொங்கள் வரப்போகுது நீங்க படத்தை மாத்திவிடுங்க மனவிலாசத்துல.பின்னூட்டம் போட்டே பொழுதடைக்காம!விகடன் காரவுக வேறு தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என கேள்வி.நன்றியும் அன்பும் மக்கா.
@சபிக்ஸ்
ஒரே வார்த்தை!நெற்றியில் அடித்தது போல.நன்றி சபிக்ஸ்.அன்பும் மக்கா.
@உயிரோடை
நன்றி லாவண்யா.அருமையான வார்த்தை.பத்திரமாய் வச்சுக்கிறேன்.உங்கள் பிராயாசைக்கும் சேர்த்தேதான் இந்த நன்றி.மின் மடல் அனுப்பனும் லாவண்யா உங்களுக்கு.தள்ளி போய்க்கொண்டே போகிறது.
@தீபா
நன்றி தீபா.அன்பும் கூட.
@ராகவன்
ராகவன்,என்ன சொல்லட்டும்?..சந்தோஷமும் அன்பும் மக்கா.உங்கள் குரலில் பேச முடிந்திருந்தால் இன்னும் என் மாமரக்கிளை ப்ரியமாய் அதன் அடுத்த வீட்டு சிறுவனுக்கு எனவே பூத்த பாரம்பர்ய மாவை அங்கேயே வைத்திருக்கும்.அதை விட யதார்த்தம் அப்படி நிகழாமல் இப்படி நிகழ்ந்தது.குரல் கட்டும் சிற்ப்பங்களில் இருக்கு எப்பவும் காண இயலாத சிற்பியின் முகம்!இல்லையா ராகவன்?
உடல் நலத்தில் கவலை கொள்ளுங்கள் மக்கா.தாத்தாவின் சொத்துக்கள் தாத்தாவோடையே போகட்டும்.நன்றி மக்கா.
@சங்கி
உங்களின் எதிர் பார்பற்ற அன்பு மலைக்க வைக்கிறது ஷங்கி.வழக்கம் போலவே.நன்றியும்,உங்களுக்கு எப்பவும் பிடித்தமான அன்பு நிறையவும்.
;)
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment