சரி,நம்மளும் முட்டித்தூக்குவோம்.
விதி-1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும் என்பது இந்தத் தொடரின் விதி!
விதி-2 . அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
விதி-3 . பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.
நான் இங்கு இருவரை தேர்கிறேன். இணையான என எடுக்கலாம். வாங்க போவோம். படம் போட்டாச்சு.
1.அரசியல்வாதிகள்
பிடித்தது, கக்கன், நல்லகண்ணு.
பிடிக்காதது,ஜெயலலிதா, ராமதாஸ்.
2.எழுத்தாளர்கள்
பிடித்தது, தி.ஜா, வண்ண நிலவன்.
பிடிக்காதது, ராஜேஷ்குமார், சிவசங்கரி.
3.கவிஞர்கள்.
பிடித்தது, கல்யாண்ஜி, நேசமித்ரன்.
பிடிக்காதது, வைரமுத்து, மு.மேத்தா.
4.நடிகர்கள்.
பிடித்தது, கமல், சூர்யா.
பிடிக்காதது, ராமராஜன், மோகன்.
5.நடிகைகள்.
பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).
பிடிக்காதது, பானுமதி, சரளா.
6.இயக்குனர்கள்
பிடித்தது, மணிரத்னம், பாலா.
பிடிக்காதது, இராம நாராயணன், பாலச்சந்தர்.
7.இசை அமைப்பாளர்கள்
பிடித்தது, இளைய ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்.
பிடிக்காதது, தேவா, குன்னக்குடி.
8.விளையாட்டு வீரர்கள்
பிடித்தது, ஸ்ரீகாந்த், பாலாஜி.
பிடிக்காதது, எவ்வளவு யோசித்தாலும் தமிழ் நாட்டில் யாரும் இல்லையே,மக்கா.
9.ஊர்கள்
பிடித்தது, சிவகங்கை, மதுரை.
பிடிக்காதது, சென்னை, கருப்பாயி ஊரணி(ஏதாவது சொல்ல வேண்டி இருக்கே..)
10.சமையல்
பிடித்தது, அம்மா, லதா (எனக்கு இவுங்க பிரபலம்தான்!)
பிடிக்காதது, நம்பியார் சேட்டா, பா.ராஜாராம் (நான்,அம்மா,லதாவுக்கு பிரபலம்தானே!)
ஒஹ்! நம்பியார் சேட்டாவா? அவரும் பிரபலமே, எப்படி சமைக்க கூடாது என்பதில். விடுங்க மாதவன் முல்லை பெரியாறு பிரச்சினைக்கு, இந்த அட்ஜஸ்ட்மென்ட்டில் ஏதாவது தீர்வாகுதானு பாப்போம்.
நன்றி, மாதவன், முல்லை, நவாஸ்!
வாங்க,
ஹேமா,
விஜய்,
விக்னேஷ்வரி,
இன்றைய கவிதை,
ஸ்ரீ
43 comments:
நல்லா எழுதியிருக்கீங்க
9.ஊர்கள் //
ஊர் பேரெல்லாம் சொல்லலாமா, அய்யோ, எங்க ஊர பத்தி சொல்ல கெடச்ச ஒரே ஒரு சான்ஸ மிஸ் பண்ணிட்டேனே.
//பிடித்தது, கக்கன், நல்லகண்ணு.
பிடிக்காதது,ஜெயலலிதா, ராமதாஸ்.
பிடிக்காதது, பானுமதி,குன்னக்குடி
பிடித்தது, ஸ்ரீகாந்த்//
சித்தப்ஸு இதில மட்டும்தான் நம்ம ஒத்துமை.
பிடித்ததுல நெ.பி.லெபில விட்டுடீங்க. இக்கி இக்கி.
நீங்களுமா????
super.
:)
vidhya
நடத்துங்க !
நல்ல தேர்வு, நல்ல ரசனை...
வாழ்த்துக்கள் பா.ரா
வைரமுத்தும் மேத்தாவும் புடிக்காதா? ஏம்ப்பு?
ஆஹா ...இது கொஞ்சம் விவகாரமான மேட்டராயிருக்கே பாஸ்
,மாட்டி விட்டுட்டீங்களே.
ஜிகினாதான் கண்ணா..
தூரத்துலதான இருக்கோமுன்னு 'த்ரிஷாவைப் பத்தி தையிரியமா எழுதியிருக்கீங்களா', இருங்க,இருங்க சின்னம்மாகிட்ட சொல்லிக் கொடுக்கிறேன்.
ஹைய்யோ!
ரொம்ப ரசிக்கிற மாதிரி சொல்லிட்டீங்க.
// த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).//
இன்னும் அடக்க முடியல ராஜாராம்!
இந்த தைரியம் பதிவுலகத்துல யாருக்கும் இருந்த மாதிரி தெரியல!
வாழ்த்துக்கள்
வருகைக்கும் ஆசிக்கும் நன்றி மக்கா
கடைசியிலே என்னை மாட்டி விட்டுடீங்களே
தெரிஞ்ச அளவுக்கு எழுதறேன்
தங்கள் அன்புக்கு நான் அடிமை
விஜய்
:)
அய்யா! போட்டு பாத்துட்டீயளே!
முயற்சி பண்ணுறோம்!
-கேயார்
உங்கள் அழைப்பை ஏற்று பதிவு போட்டுவிட்டேன்
நன்றி
விஜய்
”பிடித்தது பிடிக்காதது” பத்தும் பிடித்தது, எங்களை அழைத்ததும்
பிடித்தது , நன்றி நண்பா
ஜேகே
//பிடித்தது, சிவகங்கை, மதுரை//
மெய்யாலுமா தல....? சிவகங்கையில அப்புடி என்ன இருக்கு புடிக்கிற மாதிரி? :-) நமக்கும் அது தானே ஊரு.
அண்ணா எனக்கு ஏற்கனவே தீபாவளித் தொடர் தொங்கினபடி கிடக்கு.அதோட இதுவுமா ?எனக்கு என்னமோ இந்தத் தொடர் பிடிக்காம இருக்கு.எழுதவேணம்ன்னு இருந்தேன்.மாட்டிவிடறீங்க.சரி பாக்கிறேன்.நன்றி அண்ணா.
உங்க பதில்கள் ரசிப்போடு...
அதென்ன த்ரிஷா சாப்பிடலாம்.
ம்ம்ம்....!இருங்க இருங்க.
சித்தப்பாகிட்ட போயாவது வத்தி வைக்கிறேன்.
அய்யயோ
அய்யயோ
பிடிச்சிருக்கு..
உமக்கும்
திரிசா
பிடிச்சிருக்கு..
நல்லா இருக்கு மக்கா..
பா.ரா. கக்கனைப் பற்றி சில வித்தியாசமான மாற்றமான கருத்துக்களை சிறிது நாட்களுக்கு முன் எங்கோ படித்த நியாபகம்.
திரிஷா, நர்சிம் தோழியாம் தெரியுமா இந்த விஷயம் ?
காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றே இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புயல் என்று
புரிய வைப்போம்
-மேத்தா
******
பின்னோக்கி..ரைட்டு.
///பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).///
வீட்டில் எல்லோருக்கும் தெரியுமா????
நல்லாயிருக்கு நண்பரே
nallathunney
நர்சிம் said...
காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றே இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புயல் என்று
புரிய வைப்போம்
-மேத்தா
sarithaan nanbare
//த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).//
சம்பந்தி,
"பிடிச்ச" நடிகைய சொல்லுங்கன்னா, நீங்க "கடிச்ச" நடிகையப் பத்தி சொல்றீங்க. இதெல்லாம் நல்லால்ல. சொல்லிட்டென்...!
@பின்னோக்கி
//திரிஷா, நர்சிம் தோழியாம் தெரியுமா இந்த விஷயம் ?//
"அப்படியா?...த்ரிஷா,நான் நர்சிம் தோழன்தான்!"
@நர்சிம்
apart that..
உறங்கிகொண்டிருக்கும்
போர்வாளை காட்டிலும்
ஊர்ந்து கொண்டிருக்கும்
புழு கூட உயர்ந்ததுதான்.
--மு.மேத்தா.
தரையில் கால் இருக்கும் படி
எதாவது சொல்ல சொல்லுங்க நர்சிம்...
//பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).///
ம்ம் ம்ம் . எப்போதிருந்து மனிதரைச் சாப்பிடத் தொடங்கினீர்கள் ராஜாராம்.
சொல்லவே இல்லையே!
பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்
சாவித்ரி ஓகே
அதென்ன த்ரிஷா நாங்கெல்லாம் எதுக்கு இருகோம் இங்க
முதல்ல இந்த மாதிரி எழுதறதுக்கு முன்பு தலை முடியின் கலரையும் , அடர்த்தியையும் யோசித்துகொள்ளவும் மாம்ஸ்
இதெல்லாம் ரெம்ப ஓவர் ஆமா சொல்லி புட்டேன்
//பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).//
இந்த மேட்டர் அண்ணிக்கு தெரியுமா?
@அமித்தம்மா
ஒரு தளமே இருக்கு!நம்ம சொல்லாட்டி யார் சொல்றது?நன்றி அமித்தம்மா!
@அசோக்
மகனாயா நீர்?முன்பே சொல்ல வேண்டாம்?புழக்கம் இல்லாததுதான்..நன்றி மகன்ஸ்!
@தராசு
த்ரிஷாவா?எஸ்!கேள்விகுறி எண்ணிக்கை பய படுத்துகிறது மக்கா.மொத மொத வந்துட்டு பயபடுத்தாதீங்க.நன்றி மக்கா!
@வித்யா
பார்த்தீங்களா..நன்றி மக்கா!
@ராஜன்
ஹ.ஹ..நன்றிப்பு!
@விஸ்வா
நன்றி மக்கா!
@உதிரா
பேசிக்கிரலாம் பங்காளி..உணர்ச்சி வசம் எதுக்கு..நன்றிடா!
@மாதவன்
சாத்துரார்,..குடும்பத்துக்குள்ள ..போதுமா?நன்றி மக்கா!
@விஜய்
நல்லாவே எழுதி இருக்கீங்க மக்கா...பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு?நன்றி விஜய்!
@தமிழன் கறுப்பி
ஒரே ஒரு புன்னகை,எல்லாம் இருக்கும்படி, ...ஏஸ் அதா சதிக்.. கிதா மாபி கொய்ஸ்..சுக்ரன்!
@இன்றைய கவிதை
கவிதை மட்டும் எழுதி தப்பிக்கவா?எழுதுங்கப்பு எல்லாம்!நன்றி கேயார்,முக்குலத்தோர் நலமா?நன்றி மக்கா!
@ரோஷ்விக்
சிவகங்கையே இருக்கு,அதுக்கு மேல என்ன வேணும் ரோஷ்விக்?நன்றி
மக்கா!
@ஹேமா
வாய்த்தால் எழுது ஹேமாம்மா.. வேண்டாம்டா.சித்தப்பாவிடம் சொல்லாதே.அவர் ஸ்ரீதேவியை அப்படியே சாப்பிடுபவர்!நன்றி மக்கா!
@சங்கர்
பேஸ்!பேஸ்!நம்மாளா?நன்றி நம்மாள்!
@பின்னோக்கி
கக்கன்?பயமுறுத்தாதீங்க பின்னோக்கி.உள்ளிருக்கும் கக்கன்...அப்படியே இருக்கட்டும்.ரொம்ப நன்றி மக்கா..
கக்கனை விட,நர்சிம் மேட்டர் முக்கியமானது.அருமையான மனுஷன் இந்த நர்சிம்..தெரியுமா?..நன்றி பின்னோக்கி :-)
@சேகர்
சேகரு,ஏன்,எதற்கு,இப்படி?நன்றி நல்லவரே,..
@மண்குதிரை
அப்பா..பழைய வாசனை!நன்றி மக்கா!
@சத்ரியன்
பிடிச்ச நடிகை சாவித்திரின்னு சொல்லிட்டேனே..ஒஹ்..அதுவா..ஹார்லிசுக்கு அரபிக் மாப்ள..நீங்க என்ன நினைச்சீங்க?..நன்றி சம்பந்தி!
@ஜெஸ்...
இந்தா உங்களுக்கு கீழ ஒருத்தர்..பாலான்னு..கொஞ்சம் கொம்பேறி மூக்கன்..போய் என்னான்னு கேட்டுட்டு வர்றேன்..கூப்பிட்டீகளா மாப்ள..
@பாலா
இந்த வர்றேன் மாப்ள..மேல் வீட்டுக்காறவுக கூப்பிடுராக..நமக்கு வேண்டியவுக...கூப்பிட்டீகளா ஜெஸ்..
@கல்யாணி
இன்னும் தெரியாது கல்யாணி.ஷூட்டிங்கில் பிசி!!...:-)
பிடித்த நடிகைகளில் நயன்தாரா, நமீதாவை குறிப்பிடாமல் விட்டதால் இந்த பதிவு செல்லாது.
ஆச்சர்யமாக ‘பாலசந்தர்’ பிடிக்காதவர் பட்டியளில் (எனக்கு பிடித்ததாலோ ...)
----------------
எழுத்தர் - தி.ஜா - என் உணர்ச்சியை வெளிப்படுத்த தெரியவில்லை - இப்பொழுதும் எப்பொழுதும்.
//8.விளையாட்டு வீரர்கள்
பிடித்தது, ஸ்ரீகாந்த், பாலாஜி.
பிடிக்காதது, எவ்வளவு யோசித்தாலும் தமிழ் நாட்டில் யாரும் இல்லையே,மக்கா.//
அய்யோ...எனக்கு வெட்கமா இருக்குங்க.... நான் அவ்ளோ பெரிய விளையாட்டு வீரன் இல்லீங்கய்யா.....
//"பிடிக்காதவர்களை சொல்வதற்கு இங்கு தைரியம் வேண்டியதிருக்கிறது" என்று கொம்பு சீவல் வேறு. நல்லா இருங்கப்பு!//
இப்போ ஊர்ல ரெண்டு இட்லிக்கு ஒரு லிட்டர் இதையம் ஊத்திச் சாப்பிட்ட தெம்புல பேசுறாரு பாலா. வாங்க மக்கா திரும்பி வந்ததும் இருக்கு உங்களுக்கு
//நம்பியார் சேட்டாவா? அவரும் பிரபலமே, எப்படி சமைக்க கூடாது என்பதில். விடுங்க மாதவன் முல்லை பெரியாறு பிரச்சினைக்கு, இந்த அட்ஜஸ்ட்மென்ட்டில் ஏதாவது தீர்வாகுதானு பாப்போம்.//
சேட்டனுக்கு போன் பண்ணி வெவரம் சொல்லட்டா மக்கா.
Hi Paa.raa.,
I have one question. How can you say that 'Karuppaayee Oorani' is not a good place.? May I know which Karuppaayee Oorani you are saying?. Maamuu. Naan athukku romba pakkathula irundu vanthavan. Sollidungalen, pl.
Karthik
@விநாயகம்
இந்தபதிவு செல்லாததால் மற்றொரு பதிவு.நயன்தாரா குறித்தல்ல.நமீதா குறித்து!கிடு,கிடு,கிடு,..(எவ்வளவு குடும்ப எதிரிகள்!)நன்றி விநாயகம்!
@ஜமால்
அடைப்பு குறிக்குள் தற்சமயம் உபயோக படுத்தலாம் என மாதவன் சொல்லி இருக்கிறார் ஜமால்.அவ்வுபயோகத்தில் பாலசந்தர் வரலை.உங்களுக்கு பிடிக்கும் எனில்,தற்சமயம் வாபஸ் பண்ணலாம்!நம்ம இஷ்ட்டம்தானே.ஆனால் தி.ஜா.வில் சேத்திதானே?....மக்கா..வேலை பளுவா?எப்பாவாவெனவே பார்க்க வாய்க்குது.நல்லா இருக்கீங்கல்ல?நன்றி ஜமால்!
@பாலாஜி
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பாலாஜி...நன்றி மக்கா!
@நவாஸ்-1
அதானே..கேக்க ஆள் இல்லைன்னு நினைச்சுக்கிட்டு இருக்காரு பாலா.நல்லா கேளுங்க நாட்டாமை.
நவாஸ்-2
தீர்ப்பை மாத்திப்புட்டியலே நாட்டாமை...ஆமா,நீங்க நல்லவுகளா கெட்டவுகளா?நன்றி மக்கா!
@கார்த்தி முருகன்
இங்கதான்,சவுதியில் இருக்கு.ஒரே கருப்பாயும்,ஊரணியுமாய் இருக்கும்.அதனால் சொன்னேன்.மாப்ள கேட்டதால் சொல்றேன்..சிவகங்கை கார்த்தி.ஊரின் கோபம் இருக்கு.அதுதானே ஒரே அடையாளம்.நன்றி மக்கா!
ஜே கே எயுதினா அயகா கீது!
நாம எயுதினா அயுக்கா கீது!
போட்டாச்சி பா.ரா!
வந்து பாராய்!!
-கேயார்
நல்லாருக்கே!
அண்ணே, சிவகங்கை கெடயாது. இது மதுரைக் கோவம்ணே. மதுரை பாண்டி கொவிலுக்கு பக்கத்துல இருக்குற ஊர் 'கருப்பாயி ஊரணி'. அதான் மனசு கேக்காம சொல்லிட்டேன்.
@இன்றைய கவிதை
பார்த்துட்டேன் நண்பர்களே.நன்றி மக்கள்ஸ்!
@அருணா
பூங்கொத்து இல்லையா?நன்றி அருணா!
@கார்த்திக் முருகன்
காயப்படுத்தி விட்டேன் என நினைக்கிறேன் கார்த்தி..விளையாட்டுக்கு கூறிய வார்த்தையே அது.ரொம்ப வருத்தமாக இருக்கு.மன்னியுங்கள் கார்த்தி.நன்றி மக்கா!
@ரசிகை
நன்றி ரசிகை!
என்ன பா.ரா இந்த சல்லிப் பய பேர எல்லாம் போட்டுகிட்டு
பெரிய மனசு மக்கா
அட எப்படிங்க சென்னை பிடிக்காதுன்னு சொல்லலாம். உங்க அட்ரஸ் குடுங்க ஆட்டோ அனுப்பனும். :)
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com
Post a Comment