Wednesday, November 11, 2009
ஐந்து காசு கவிதைகள்
(picture by cc license, thanks granwoman's photostream )
ஒன்று:
கோயில் வாசலில்
சாமி விற்கிறான்.
காசுக்கு மனிதன்.
இரண்டு:
புட்டு விற்கிற
ஆச்சிக்கு பசி.
புட்டு இருக்கு.
காசு திங்க வேணாம்
ஆச்சிக்கு.
மூன்று:
பொட்டு சரியாவென
கேட்க்கிறாள்
புறப்படும் அவசரத்திலும்..
காசு தந்து
கலைத்தவனிடம்.
நான்கு:
பஸ்சுக்கு காசு இருக்காடா
என கேட்க்கும் அண்ணனிடம்
எப்படி சொல்வேன்
தங்க வந்த கதையை.
ஐந்து:
மகள் சடங்கிற்கு
ஆயிரத்து ஒன்னு எழுதியவர்
பத்திரிக்கை வைத்தார்.
வெட்கமாய் இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
64 comments:
//பொட்டு சரியாவென
கேட்க்கிறாள்
புறப்படும் அவசரத்திலும்..
காசு தந்து
கலைத்தவனிடம். //
போட்டு குடுத்த தான் நி வழிக்கு வருவ போலயே..!!!
ithu nalla irukku nalla tone
nice sir..
வரிகள் சுவைக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன...
மிக்க நன்று
//நான்கு:
பஸ்சுக்கு காசு இருக்காடா
என கேட்க்கும் அண்ணனிடம்
எப்படி சொல்வேன்
தங்க வந்த கதையை.
ஐந்து:
மகள் சடங்கிற்கு
ஆயிரத்து ஒன்னு எழுதியவர்
பத்திரிக்கை வைத்தார்.
வெட்கமாய் இருக்கிறது.//
இது போன்ற தர்ம சங்கட நிலைகளை நானும் கடந்திருக்கிறேன்.
// Kannan said...
//பொட்டு சரியாவென
கேட்க்கிறாள்
புறப்படும் அவசரத்திலும்..
காசு தந்து
கலைத்தவனிடம். //
போட்டு குடுத்த தான் நி வழிக்கு வருவ போலயே..!!!//
பார்த்து சூதானமா இருந்துக்கோங்க அண்ணா. இந்த matter அண்ணிக்கு தெரிஞ்சு அடிய கிடிய போட்டுற போறாங்க.
கவியின் வலி கவிதையில் தெரிகிறது.
எல்லாமே வலி பா.ரா
மக்கா!
ஐந்தும் அருமை!.
என்ன பன்றது! கீரல் விழுந்த ரெக்கார்டை எங்களை மாற்றியது உங்கள் தவறு
காசால் விளையும் ஆயிரமாயிரம் அவஸ்தைகளின் மாதிரிகளாய் இந்த ஐந்து காசுகள்.அருமை.
கவிதைகளுக்கு நன்றி பா.ரா.
அன்பின் பா.ரா ,
நிறைய நாட்கள் உங்களை படித்தாலும் , பெரும்பாலும் தாமதமாக வருவதால் பின்னூட்டமிடாமல் சென்று விடுவதுண்டு .
உங்களின் வாழ்க்கைக்கவிதைகள் அனைத்தும் அருமை , குறிப்பாக இந்தப்பதிவிலுள்ள நான்கு மற்றும் ஐந்து...
இந்த நான்காவது தர்மசங்கடத்தை நானும் மிதித்திருக்கிறேன்...
தொடர்ந்து வாசிக்கிறேன் .. நன்றி !!
//பஸ்சுக்கு காசு இருக்காடா
என கேட்க்கும் அண்ணனிடம்
எப்படி சொல்வேன்
தங்க வந்த கதையை. //
இதுவும் கடைசியா உள்ள கவிதையும் நச்சின்னு இருக்கு தலைவரே...
நல்லா இருக்கு ராஜாராம்.
நான்கும், ஐந்தும் மிகவும் பிடித்திருந்தது.
அனுபவங்களை சொன்னால் எல்லோருக்குமே பிடிக்கும் தானே ;)
அத்தனை காசும் அருமை.
ஐந்தும் அருமை
3ம், 4ம் ரொம்ப பிடிச்சிருக்குது
அன்புள்ள பா.ரா அண்ணா..
இயலாமை, தவிப்பு, இயல்பு என எளிய மனிதர்களின் வாழ்க்கையை நேர்த்தியாக சொல்கிறது கவிதை.
மிக அருமை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் அண்ணா.
//என்ன பன்றது! கீரல் விழுந்த ரெக்கார்டை எங்களை மாற்றியது உங்கள் தவறு//
நண்பர் நவாஸீதீனை வழிமொழிகிறேன்.
//பொட்டு சரியாவென
கேட்க்கிறாள்
புறப்படும் அவசரத்திலும்..
காசு தந்து
கலைத்தவனிடம்.//
பா.ரா,
பரிசுத்தம்!
nice......
நல்லாயிருக்கு, ராஜாராம்.
ரொம்ப நல்லா இருக்கு... :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
5 kaasu.....kalume mathippaanavai!!
காசுக் கவிதைகள் ஐந்தும் அருமையாக இருக்கிறது.
காசு படுத்தும் பாட்டை ஐந்தாகப் பிரித்துப் பார்த்திருக்கிறீர்கள் அண்ணா.நாய் தின்னாக் காசு இன்னும் என்னவெல்லாமொ செய்யும்.
நண்பரே!
நாங்க எல்லாம்
கவிதை எழுதி என்னத்த கண்டோம்?!
இந்த மாதிரி எழுதவே முடியலையே?!
எவ்வளவு காசு கொடுத்தாலும்
வாங்கவே முடியாது இந்தக் கவிதைகளை!
-கேயார்
ஓரமா நின்னு வாசிச்சி, ரசிக்குற என்னையே
எயுத வெச்சிட்டீயளே!
யாரோ என்னிய 'பொடேர்'னு போட்டாப்புல இருக்கு அப்பு!
-பருப்பு ஆசிரியர்
எல்லா வரிகளுமே யோசிக்க வைத்தன.
நல்லா இருக்கு..
1.Super
2. ''
3. ''
4. ''
5. ''
வேற என்ன சொல்ல...
ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது பா.ரா.ஜி...
ஐந்து உருக்கம். நான்கு அதனினும்.
அனுபவம்..யதார்த்தம்..அருமை..
என்ன சொல்றது மக்கமாரே
இந்த கவிஞர் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு ஜாலம் காட்டுறார்
நல்லா இருக்கு பா.ரா
அனைத்தும் அருமை
அருமையான வரிகள் !
//பஸ்சுக்கு காசு இருக்காடா
என கேட்க்கும் அண்ணனிடம்
எப்படி சொல்வேன்
தங்க வந்த கதையை. //
எல்லாமே சிறப்பென்றாலும் இது எல்லோருக்குள்ளும் வந்து இன்னய வரை கவிதையில் பிடிகொடாத இடம்.
பாராவின் வரிக்குள் வந்ததுதான் அசாத்தியம்.
ஐந்தும் ஐந்துவிதம்
கவிதைகள் பலவிதம்
எல்லாம் இதம்
இப்படியே போனால்
அடித்துவிடுவீர் ஒரு மாதத்தில்
சதம்
அடுக்குகிட்டே போலாம்
அதனால இதோட ஸ்டாப் பண்ணிக்கிறேன் சித்தப்ஸ் :)
முரண்களின் இசை அருமை
//காசு திங்க வேணாம்
ஆச்சிக்கு. //
அழுத்தமான வரிங்க...
எல்லாமே அருமை
எல்லாமே பிடிச்சிருக்கு, இருந்தாலும்
//பஸ்சுக்கு காசு இருக்காடா
என கேட்க்கும் அண்ணனிடம்
எப்படி சொல்வேன்
தங்க வந்த கதையை. //
இது மட்டும் ஸ்பெஷல்.super.
appaa appaadi
இரண்டிரண்டு வரிகளில் நிதர்சனங்களை யதார்த்தமாகத் தர உங்களால் மட்டுமே முடியும் பா.ரா. சார். வாழ்த்துக்கள்.
காசுக்கவிதைகள்
மதிப்பு
பலகோடி
வாழ்த்துக்கள்
விஜய்
எல்லாமே அற்புதம்.
அற்புதம்..
காசு பற்றிய உங்கள் பார்வை
அதை கூறிய விதம்
படம் அத்துனையும் சிறப்பு...
உணர்வுகளை தொடும் கவிதைகள்
நல்ல கவிதைகள் பா.ரா.
எழுத்துப்பிழைகளை களையுங்கள்.
ஐந்தும் அருமை...எனக்கு மிகப் பிடித்தது இது..
//கோயில் வாசலில்
சாமி விற்கிறான்.
காசுக்கு மனிதன்.
//
அருமை
1,3,4 அற்புதமான வரிகள்.
ஐந்துமே அருமை....
தலைப்பு பிரமாதம்...
ரொம்ப நல்லா இருக்கு எல்லா கவிதையும்
ஐந்தாவதுதான் அருமை ராஜாராம்
வாழ்த்துக்கள்
ஐந்தும் அருமை அண்ணே.
55-பின்னூட்டங்கள்!
என்ன அனியாயம் மக்கள்ஸ் இது!ரெண்டு நாளாக வெளியில் வேலையாக போய் விட்டேன்.வந்து பார்த்தால் இந்த கோலமா?எழுதுபவனுக்கு இதைவிட வேறு என்ன வேணும்!
கவிதை மட்டும் பிடித்துகொண்டால் தர்ம அடிதான் போல.தளம் தொடங்கிய புதிதில் ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும் தனி தனியாக பதில் சொல்லி,பின்னூடங்களை முன் நகர்த்தி,"நாங்களும் ரவுடில்ல"என்று காட்டிக்கொண்டு இருந்தேன்.இத்தருணத்தில்...கணையாழியில் கவிதை பிரசுரமானதற்கு வந்த ஒரு பின்னூட்டம் நினைவு படுத்திகொள்கிறேன்
வலைத்தளம் எவ்வளவு வலிமையானது!
"இது,மிகுந்த பொறுப்பை கொடுத்திருக்கு எனக்கு,இனிமேல் நல்ல கவிதைகள் மட்டுமே எழுதுவேன்"என்று நான் சொன்னால் அது புருடா!அப்படி எந்த இலக்கும் வைத்து கோண்டு யாரும் எழுதுவதில்லை,பிறகு நான் என்ன சும்பனா?
குருட்டாம் போக்குதான்!
இந்த அன்பு சந்தோசமா இருக்கு மக்காஸ்!ஐம்பத்து ஐந்து போரையும் கையை பிடிச்சுக்கிறேன்...மிகுந்த நன்றியுடன்!
அண்ணா,
ஐந்து கவிதையும் அருமை பிடியுங்கள் பிரியங்கள் நிறைந்த ஐந்து காசுகளை.
நன்றி லாவண்யா.பெற்று கொண்டேன்.பத்திர படுத்துகிறேன்.
ஐந்தும் அருமை.... பாராட்டுகள் உங்களின் எதார்த்த வரிகளுக்கு
நன்றி சேகர்.
மூன்று:
பொட்டு சரியாவென
கேட்க்கிறாள்
புறப்படும் அவசரத்திலும்..
காசு தந்து
கலைத்தவனிடம்.
நான்கு:
பஸ்சுக்கு காசு இருக்காடா
என கேட்க்கும் அண்ணனிடம்
எப்படி சொல்வேன்
தங்க வந்த கதையை.
இவ்விரண்டும் மிக பிடித்தன
மோகன் குமார்
http://veeduthirumbal.blogpot.com
நல்வரவும்,நன்றியும் மோகன்!
ஐந்து கடவுள் கவிதைகள் அருமையாக உள்ளது.
ஒவ்வொரு கவிதையும் வரிசைப்படி கியர்கள்...
அஞ்சு கவிதை எழுதுன கைக்கு அஞ்சு தங்க மோதிரம் போடலாம் பாஸ்... கலக்குறிங்க..
Post a Comment