Saturday, November 14, 2009

எம்.ஜி.ஆர்.



(picture by cc license, thanks justinmaier's photostream
)


புருஷன் பொண்டாட்டி
சண்டை போல.
பெரிய கூக்குரல்.

குழந்தை குட்டிகளின்
அலறல் வேறு.

"தே பொழப்பாப்போச்சு இதுகளுக்கு"
என இவளும் சலிக்கிறாள்.

டிப்பதை நிறுத்திவிட்டு
முகம் பார்க்கிற என்
குழந்தைகளின் முகத்திலும்
சொல்லொண்ணா கலவரம்.

னி,
அப்பாவாக வேணும் நான்.

ழுந்து சென்று
ரெண்டு தட்டு தட்டுகிறேன்.

மூச்சுப்பறியக்காணோம்
குருவிக்கூண்டில்.

45 comments:

இன்றைய கவிதை said...

பட்டைய கெளப்பும் கவிதை!

எம் ஜி ஆர் - புரியல பா ரா?!

-கேயார்

இன்றைய கவிதை said...

இப்போ நான்தான் முதல்வன்!

-கேயார்

சத்ரியன் said...

//இனி,
அப்பாவாக வேணும் நான்.

எழுந்து சென்று
ரெண்டு தட்டு தட்டுகிறேன்.

மூச்சுப்பறியக்காணோம்
குருவிக்கூண்டில்.//

பா.ரா,

உயிர் உள்ள எல்லாமும் நம் "உறவு"தான்.

அழகாச் சொல்லிட்டீங்க.

vasu balaji said...

:). நன்றாயிருக்கிறது கவிதை

ஜெனோவா said...

கவிதை நன்றாக இருக்கிறது ...
ஆனால் அதென்ன தலைப்பு மட்டும் எம்.ஜி.ஆர் ?? புரியவில்லையே சார்

Veera said...

'குருவி'கள மிரட்டின மாதிரி, 'வேட்டைக்காரர்'களையும் மிரட்டினா நல்லா இருக்கும்! ;-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

இராகவன் நைஜிரியா said...

// புருஷன் பொண்டாட்டி
சண்டை போல.
பெரிய கூக்குரல். //

அண்ணே... ஆரம்பமே பின்னீட்டீங்க... இதுல இந்த பெரிய கூக்குரல் புருஷனோடதுதானே... அடிவாங்கி சத்தம் கூடுதலா வருது?

இராகவன் நைஜிரியா said...

// குழந்தை குட்டிகளின்
அலறல் வேறு. //

ஆமாம் அப்பா அடிவாங்கற பாத்து பயந்து அலறாங்களா?

இராகவன் நைஜிரியா said...

// படிப்பதை நிறுத்திவிட்டு
முகம் பார்க்கிற என்
குழந்தைகளின் முகத்திலும்
சொல்லொண்ணா கலவரம். //

ஐயோ பாவம் குழைந்தகள்... :-)

இராகவன் நைஜிரியா said...

// எழுந்து சென்று
ரெண்டு தட்டு தட்டுகிறேன். //

அது சரி நம்ம ஆத்தமையை வேற எங்க காண்பிக்க முடியும்..

இராகவன் நைஜிரியா said...

// "இதே பொழப்பாப்போச்சு இதுகளுக்கு"
என இவளும் சலிக்கிறாள். //

ஆமாம். ரொம்ப நல்லவன்.. எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் அப்படின்னு பார்த்தா, இப்படி சத்தம் போட்டு ஊர் கூட்டு கின்றாரே என்று இடுக்குமோ?

SUFFIX said...

கவிதை புரிஞ்சுடுச்சு, தலைப்பு புரிய மாட்டேங்குதே, ஒரு காரணமாத்தேன் சொல்லி இருப்பீக, பார்ப்போம் மத்தவுக என்ன சொல்றாகன்னு.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... கொஞ்சம் உரிமை எடுத்துகிட்டு கும்மி அடிச்சுட்டேன்...

கோச்சுகிடாதேயும்...

இராகவன் நைஜிரியா said...

// ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
கவிதை புரிஞ்சுடுச்சு, தலைப்பு புரிய மாட்டேங்குதே, ஒரு காரணமாத்தேன் சொல்லி இருப்பீக, பார்ப்போம் மத்தவுக என்ன சொல்றாகன்னு. //

மத்தவுக என்ன சொல்லுவாக...

தலைப்புத்தான் யாருக்குமே புரியலை..

சந்தனமுல்லை said...

செம சூப்பர்!! ரசித்தேன்!
எபப்டித்தான் இப்படில்லாம் எழுதறீங்களோ!! படமும் கலக்கல்! எனக்கும் அந்த தலைப்பு புரியலை!! :(

விஜய் said...

தகப்பனின் ஆற்றாமை அழகு

கூண்டுக்கிளியா ?

விஜய்

நட்புடன் ஜமால் said...

எம்.ஜி.ஆர் - இழப்பு.

இதுவா மக்கா!

S.A. நவாஸுதீன் said...

பெண்கள் கூண்டுக்கிளிகள் என்றால் ஆண்கள் மிளகாய் விதைகள் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது மக்கா.

கவிதை அருமையா இருக்கு மக்கா

ஆ.ஞானசேகரன் said...

வரிகள் அழகு... தலைப்புதான் புரியவில்லை நண்பா...

velji said...

அடுத்து எதை எழுதுவீர்கள் என்ற ஆவலை ஏற்படுத்திகொண்டே இருக்கிறீர்கள்!

கவிதை வழக்கம் போலவே!

எம்.ஜி.ஆர்- சரியான நேரத்துக்கு வந்ததாலா?

ஹேமா said...

அண்ணா குருவிகளுக்கு நீங்க அப்பான்னா,அப்போ எனக்கு என்னவா வேணும் அவங்க !

கவிதை கலக்கல் எப்பவும்போல.
நல்லா புரியிறமாதிரியும் இருக்கு.
தலைப்பிலதான் ஏன் நம்ம வாத்தியார் !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நான் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாரும் கேட்டுட்டாங்க. உங்கள் பதிலைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்குத் தலைப்பும் புரியல. யார் அடி வாங்கினதென்றும் புரியல.
கேள்வி கேட்கப் போக ' இவ்வளவு தானா ஜெஸ்?' என்று முன்னர் ஒருமுறை கேட்டதுபோல் கேட்டு விடுவீர்கள் என்ற பயத்தில் காத்திருக்கிறேன். கவிதையைப் பிரசுரித்து விட்டு எட்டிப் பார்க்காமல் வேலை செய்து கொண்டு இருக்கிறிர்களா?

பா.ராஜாராம் said...

"கவிதை சரி.அது என்ன தலைப்பு, எம்.ஜி.ஆர்.?"என கவிதை எழுதி அனுப்பிய போதே தம்பி கண்ணன் கேட்டான்.கேட்டுருக்கலாம் நான்.

இப்ப பாருங்க "அம்மி குத்தலையோ... அம்மீ" என ராகவன் அண்ணாச்சி ஆக்கர் பொழிஞ்சிட்டாரு.....(சந்தோசம் அண்ணாச்சி...:-))

சிறுமை கண்டு பொங்கும் எம்ஜியாரை... ஒரு காமடிக்காக தலைப்பாக்கினேன் மக்களே...
வீட்டில்,குருவிக்கூண்டில்,...இந்த மாதிரி இடங்களில் நான் ஹீரோவாய் இருந்தால்தான் உண்டு..
(குருவியிடம் கூட காட்ட பயமே..கொத்தி புடிங்கிபிடிம்)

பாருங்க,.. இதுவும் ஆகலை உங்களுக்கு..

கண்ணா...ஆத்மா சாந்தியா?

ஆமா,ஜெஸ்..உங்களை எப்போ,"இவ்வளவுதானா ஜெஸ்?"என கேட்டேன்.(சரக்கில் இருந்திருப்பனோ...சவுதிக்குள்ள நான் சரக்கில் இருக்க சான்ஸ் இல்லையே மக்கா?)

நர்சிம் said...

கிராமட்தில் ஏதாவது கொஞ்சம் கெத்தாக பண்ணினால் “ஆமா இவரு பெரிய எம்ஜிஆரு,வந்துட்டாரு”என்பார்களே..அதுபோலத்தானே சார்??

கவிதை கலக்கல்.

நர்சிம் said...

*கிராமத்தில்

Ashok D said...

சித்தப்ஸ் இப்ப தான் புரியுது நீங்க யாருன்னு ;)
நல்லாயிருக்கு ரொம்ப

வினோத் கெளதம் said...

தல கவிதை நச்சினு இருக்கு..

உயிரோடை said...

த‌லைப்பை பார்த்த‌தும் ச‌ரி ரைட்டு ஏதோ அர‌சிய‌ல் ச‌ம்ம‌ந்த‌மாக‌ன்னு நினைச்சேன். க‌விதை. ப‌டிச்சி முடிச்ச‌தும் புரிஞ்சிருச்சி நீங்க‌ ஹீரோன்னு...

ராகவன் said...

அன்பு பாரா,

நல்லாயிருக்கு கவிதை! எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் போல எனக்கும் இடருகிறது. காமெடிக்கு எம்.ஜி.ஆரா? என் மரமண்டையில் இன்னும் முளைக்கிறது புரியாத்தனங்கள். குருவி வடிவத்தில் கிளி? கூண்டும் பறவையும் குறியீடா என்ன?

இதே பாணியில் நான் முன்பு எழுதிய கவிதையை பதிவாய் போடுகிறேன் படிக்கவும். இந்த பின்னூட்டத்தில் போட நினைத்தேன், பாரா, பதிவாய் போடச் சொல்லாம் என்று பதிவாகவே போடுகிறேன்.

அன்புடன்
ராகவன்

சந்தான சங்கர் said...

குடும்ப பிரச்சனைய
சமாளிக்க முடியாம
தட்டிட்டு வர்றீங்க
'இதுல ஹேமா எனக்கு
என்ன உறவுன்னு கேட்கிறீங்க'
பாவம் மக்கா
பக்கவா மாட்டிக்கிறார்.



நன்றி மக்கா

உங்கள் ராட் மாதவ் said...

கவிதை Super...
ஆனால் அதென்ன தலைப்பு மட்டும் எம்.ஜி.ஆர் ? :-)

பூங்குன்றன்.வே said...

சூப்பர் கவிதை சாரே!!

rvelkannan said...

கவிதை அருமை பா.ரா
எனக்கும் தலைப்பு புரியவில்லை தான். பின்பு உங்களின் பின்னூட்டம் கண்டு புரிந்தது. சரிதான். தலைப்பு சற்று நக்கலாக வைத்த மாதிரியும்
தோன்றுகிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமைங்கிற வார்த்தைய தவிர வேறெதும் சொல்லமுடியுமா பா.ராவின் கவிதைக்கு :)

Unknown said...

இந்த
mega mall மாதிரி
இல்லன்னாலும் ஒரு
பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
நான்,
ஒரு முட்டு சந்து ஓரமா
புதுசா கட விரிச்சிருக்கேன்.

http://vaarththai.wordpress.com/

அப்டியே
அந்தான்ட…இந்தான்ட‌
போறசொல‌
நம்ம கடையான்ட வந்து
எட்டி பாருங்கோ… Senior

இரசிகை said...

m....

naangalum thaan kuruvikoondu,kili koondullaam paakkirom... ippadilaam onnum thona maattukkuthey:(


superb...rajaram sir:)

Rajan said...

கலக்கல் !... வர தாமதமயிடிச்சு ! :-(

காமராஜ் said...

பின்னூட்டங்களும் எம்ஜியாரும் அல்லோலகல்லோலப் படுத்திவிட்டார்கள். எம்ஜியார் என்று டைட்டில் போட்டால் ஓட்டு நெறய்ய உழுமாமே ? ராகவன் சொன்னார்.

உங்களிடம் சிக்காத பொருள் இன்னுமே தான் கண்டுபிடிக்கவேண்டும். நல்ல கவிதை. இதை எத்தனை பின்னூட்டத்தில் எழுத ?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்குங்க.

Thenammai Lakshmanan said...

//அப்பாவாக வேணும் நான்//

மிக அருமையான கவிதை ராஜாராம்

:-)))

கவிதாசிவகுமார் said...

நல்லாருக்கு எம்.ஜி.ஆர்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்,

கேயார் மக்கா,
மாப்ள மக்கா,
வானம்பாடிகள் மக்கா,
ஜெனோ மக்கா
வீரா மக்கா
டிவிஆர்,
ராகவன் அண்ணாச்சி :-))))
சபிக்ஸ் மக்கா,
பப்புக்கா,
விஜய் மக்கா
ஜமால் மக்கா,
நவாஸ் மக்கா,
சேகர் மக்கா,
வேல்ஜி மக்கா,
ஹேமா அக்கா :-)
ஜெஸ் மக்கா,
நர்சிம் மக்கா,
மகனே மக்கா,
வினோ,நல்வரவு மக்கா,
லாவண்யா அக்கா :-)(ரிதம் வேணாமா...)
ராகவன் மக்கா,
சங்கர் மக்கா,
ராத் மக்கா,
குன்றன் மக்கா,
வேல்கண்ணா மக்கா,
அமித்தக்கா, ;-)
லொடுக்கு,நல் வரவு மக்கா,
ரசிகை மக்கா,
ராஜன் மக்கா,
காமு மக்கா,
ஸ்ரீ மக்கா,
தேனு மக்கா,
உதிரா மக்கா(எம்.ஜி.ஆர்?..அடங்கொக்கா மக்கா..)

எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மக்காஸ்!

கல்யாணி சுரேஷ் said...

//சிறுமை கண்டு பொங்கும் எம்ஜியாரை... ஒரு காமடிக்காக தலைப்பாக்கினேன் மக்களே...
வீட்டில்,குருவிக்கூண்டில்,...இந்த மாதிரி இடங்களில் நான் ஹீரோவாய் இருந்தால்தான் உண்டு..
(குருவியிடம் கூட காட்ட பயமே..கொத்தி புடிங்கிபிடிம்)

பாருங்க,.. இதுவும் ஆகலை உங்களுக்கு..//

கவிதை ரொம்ப பிடிச்சிருந்துச்சுண்ணா. கவிதையை விடவும் பின்னூட்டங்களுக்கான உங்க பதில் ரொம்ப பிடிச்சிருக்கு.

//ஆமா,ஜெஸ்..உங்களை எப்போ,"இவ்வளவுதானா ஜெஸ்?"என கேட்டேன்.(சரக்கில் இருந்திருப்பனோ...சவுதிக்குள்ள நான் சரக்கில் இருக்க சான்ஸ் இல்லையே மக்கா?)//

அப்போ ஊர்ல இருந்தா சரக்கில் இருப்பீங்களா? இருங்க இருங்க அண்ணிகிட்ட சொல்றேன்.

thamizhparavai said...

நல்லா இருக்கு...
தலைப்பு டாக்டர். விஜய் ந்னு வச்சுருக்கலாம்... :-)