பர்ஸ் எடுத்து
வைத்து கொண்டாள்.
மொத்த சேலைகளையும்
கூடைப்பையில் திணித்து கொண்டாள்.
பாவாடை பிரிலை
அவசரமாக உள் நுழைத்தாள்.
குழந்தைக்கான கவுனில்
எதெது அவன் எடுத்தது என
குழப்பத்துடன் திணித்து கொண்டாள்.
விளக்கு பொருத்தி
சாமி பார்த்தாள்.
கண்ணீர் பெருக்கெடுத்தது.
கதவு பூட்டி
சாவி எடுத்தாள்.
அவன் வந்து கொண்டிருந்தான்.
வாழை இலையில்
பொதிந்த பூவுடன்.
திண்ணையில் அமர்ந்து
மீண்டும் அழ தொடங்கினாள்.
53 comments:
லேபிள் டாப்.
அழகான நிதர்சனமான வரிகள்.
அலைக்கழிக்கப்படுவதற்கும் கூட அன்பு மட்டும் தான் வேண்டும் பாரா.
நினைத்து நினைத்து உருக ஆயிரம் உன்னத தருணங்கள் இருக்கும் போது.
பிரிவுக்கான சின்னச்சின்ன காரணங்கள் செயலிழந்து போகும்.
சொல்ல முடியாத உணர்வுகள்.
:)
அருமை.
//லேபிள் டாப்.//
ரிப்பீட்..
உரையாடல் கவிதை போட்டி பாத்தீங்களா?
வாழக்கூடாது என்று போகிறாள்
ஆனால் அவன் பூவோடு வருகிறான்.
நான் புரிந்துக்கொண்டது சித்தப்ஸு.
photo நல்லாவேகீது...
புத்தன் மரமா!
மரமே புத்தனா!
வேறுவேறா!
ஒன்றா!
:)
புருஷன் பொண்டாட்டி சண்டைன்னாலே இப்டித்தான் பாஸ். சண்டைக்கு பின்னாடி கிடைக்காத சாமந்திப்பூ வேறெந்த சந்தையில கிடைக்கப்போகுது.
அழகான கவிதை....
பிரிவையும், உறவையும் மிக அழகாக சொல்லி உள்ளீர்கள் பாஸ்.நல்லா இருக்கு.
நன்று.
ம்ம். அருமை.
/க.பாலாசி said...
புருஷன் பொண்டாட்டி சண்டைன்னாலே இப்டித்தான் பாஸ். சண்டைக்கு பின்னாடி கிடைக்காத சாமந்திப்பூ வேறெந்த சந்தையில கிடைக்கப்போகுது.
அழகான கவிதை..../
இது உனக்கே ஓவரா இல்லை பாலாசி. சாமந்திப் பூவாம்ல.=))
அட...
காட்சியாய் கண்முன் விரிய வைக்கிறது கவிதை
//.. க.பாலாசி said...
சாமந்திப்பூ வேறெந்த சந்தையில கிடைக்கப்போகுது. //
தம்பி... உமக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சுடனும்பா
மிகப் பிடித்திருந்தது.
[b]!!!Good!!!!
தாம்பத்ய உறவின் அன்பை அழகாச் சொல்லியிருக்கீங்க அண்ணா.அதானே அடிச்சு பிடிச்சுக்கிட்டு சாகிறவரைக்கும் ஒண்ணாவே இருக்காங்க நம்மவங்க.
மக்காஆஆ..அருமை
ஊடலுக்கு பின் கூடல் தானே நமது பாரம்பரியம்
சொன்ன விதம் பா.ரா முத்திரை
வாழ்த்துக்கள்
விஜய்
very heartful touching poem paa.raa
(sorry tamil font not working)
பிரிவின் வலியை அழகாகப் பதிவு செய்கிறது கவிதை.
ஒரு தளர்ந்த நதியில் மின்னும் காகப் பொன்மணல் இந்தக் கவிதையின் எளிமை
உறவுகளின் இதய துடிப்பில் இருந்து சொல்லெடுக்க முடிகிறது இந்தக் கவிஞனுக்கு
வாழ்த்துகள் பா.ரா
ஒவ்வொரு நிகழ்வும் உங்கள் வரிகளில் அருமையா மெருகேறுது. இதுதான் நிஜம்
kalakkal........:)
கணவன் மனைவிக்குள் வரும் பூசலையும் அது தீரும் வேகத்தையும் அழகாகச் சொல்லியிருக்கீங்க கவிதையில்...
பாராட்டுக்கள் பா.ரா சார்!
லேபிள் வரிகள் கூட கவிதை மாதிரி இருக்கிறது.
கவிதை அசத்தல் ரகம்.
//லேபிள் வரிகள் கூட கவிதை மாதிரி இருக்கிறது.
கவிதை அசத்தல் ரகம்.//
வழிமொழிகிறேன் !!!!
பா.ரா... பா.ரா... பா.ரா !!!!
nice
அண்ணே , அற்புதமான வாழ்வியல் கவிதை ...
வாழ்த்துக்கள்
//புரிய/பிரிய இயலாத வாழ்வெனும் கவிதை //
எவ்ளோ ஆழமான வார்த்தைகள்...
அருமையான கவிதை ராஜாராம்.
ராஜாராம்,
வழக்கம் போலவே உங்க கவிதையோட ‘ஸ்பெஷல் டச்‘ அருமை. கண் முன் காட்சியாக விரிகிறது கவிதை.
மிக உன்னதமான உறவின் அன்பை அழகாய் சொல்லியிருக்கீங்க. கலக்குறீங்கப்பா.
சும்மா நச்சுனு இருக்குண்ணா. கலக்கிட்டீங்க.
அருமைப்பா...
புரியாத பிரியம் பிரியும்போது புரியும்ன்னு பெரியவங்க சொன்னதும் ஞாபகம் வருகிறது...
அந்த போட்டோ எதுக்குன்னுதான் யோசிக்கிறேன்..
கவிதையை படித்தேன்...பின் கருத்துரைகளை படித்து கவிதையை புரிந்துக்கொண்டேன்.... நல்லாயிருக்கு
ஆனா அந்த படம் குழப்புகிறது சரியான விளக்கம் தேவை பாரா.
போங்க பாரா.. உங்களைப் பாராட்டிப் பாராட்டி என் விசைப்பலகையின் ஆயுள் குறைந்து விடுகிறது....
//கவிதையை படித்தேன்...பின் கருத்துரைகளை படித்து கவிதையை புரிந்துக்கொண்டேன்....//
Me too..ஆனா கடைசி வரிகள் அழகு அழகு அழகு..
//குழந்தைக்கான கவுனில்
எதெது அவன் எடுத்தது என
குழப்பத்துடன் திணித்து கொண்டாள்.
//
;-))
அருமை....
அருமை....
வழக்கம் போல பா ரா கவிதை...
வழக்கம் போல அருமையோ அருமை!
கண்ணு படப்போவுதய்யா மக்கா!!
-கேயார்
உறவுகளின் உன்னதம் இந்தக் கவிதை, ரொம்பப் பிடித்திருக்கிறது.
:) superb..
//வழக்கம் போல பா ரா கவிதை...
வழக்கம் போல அருமையோ அருமை!//
Repeattu..!
அருமை அருமை
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை தொகுப்பில் ஒரு எஸ்.ரா கதை படித்துள்ளேன். இதை படித்ததும் அந்த கதை மனதுக்குள் ஓடியது.
//அவன் வந்து கொண்டிருந்தான்.
வாழை இலையில்
பொதிந்த பூவுடன்.
இதோடு முடித்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்.
//திண்ணையில் அமர்ந்து
மீண்டும் அழ தொடங்கினாள்.
இந்த கடைசி இரண்டு வரிகள் மனதை கனக்க வைக்கின்றது
உறவின் பிரிவு மற்றும் பிரிவின் உறவு...அழகு கவிதை...
//புரிய/பிரிய இயலாத வாழ்வெனும்//
ரொம்பப் பொருத்தம் நண்பா! கலக்குங்க...
கவிதையும் படமும் அருமை.
//வாழை இலையில்
பொதிந்த பூவுடன்.
திண்ணையில் அமர்ந்து
மீண்டும் அழ தொடங்கினாள்.//
மாம்ஸ்,
ஒரு "சிறந்த" தம்பதியரை காட்சி படுத்தும் இந்தக் கவிதையை "படிக்கும்' பலரும் பாடமாகவே ஏற்றுக்கொள்ளலாம்.
superb, as usual!
//குழந்தைக்கான கவுனில்
எதெது அவன் எடுத்தது என
குழப்பத்துடன் திணித்து கொண்டாள்.//
ஊசி வழி
உறவு நெய்தான்
நெஞ்சில் தைத்துவிட்ட
ஊடல் உறங்கமுடியாமலும்
விழிக்க முடியாமலுமாய் போல்
குடும்ப உறவு..
அருமை பா.ரா.
இப்படி உலகை சில வரிகளில்
உங்களால் மட்டும் எப்படி அடைக்க
முடிகிறது ஐயா,
வியந்து பார்க்க வைக்கும் பொருள்கள்...
உங்களுடைய
ஒவ்வொரு பதிவுகளையும்
வியந்த படியே நான்....
எதார்த்தம்...அழகான வரிகளில்....!!!
//கவிதையை படித்தேன்...பின் கருத்துரைகளை படித்து கவிதையை புரிந்துக்கொண்டேன்....//
நானும் தான்...
அழகான வரிகள்...
அழகு! பூங்கொத்து!
அழுகாட்சி படமெல்லாம் வேணாம் ம்ம்ம். கவிதை நல்லா இருக்கு மக்கா
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
பின்னூட்டம் வழியாக என்னை உற்சாகம் கொள்ள செய்த உங்கள் யாவருக்கும் எப்பவும் போலான அன்பும் நன்றியும்.
Post a Comment