(picture by CC licence, thanks Mark)
ஒன்று.
என்னை மறந்ததேன்
தென்றலே என
எங்கேயோ பாடிக்கொண்டிருக்கு.
இக்காரணம் போதும்
சிகரெட் புகைக்க எனக்கு.
(picture by CC licence, thanks RBerteig)
இரண்டு
பக்கத்துப்பள்ளி
ஒன்னுக்கு மணி சத்தத்தில்
இங்கு ஓடிப்பிடித்து
விளையாடிக்கொண்டிருக்கிறது
ஒரு நிழலை ஒரு அணில்.
(picture by CC licence, thanks Babasteve)
மூன்று.
ஜன்னல் வழியாக
பார்த்துக்கொண்டிருந்தாள்
காலைக்கோலத்தில் சிந்திய
சைக்கிள் மணி சத்தத்தை.
நான்கு.
குடமுழுக்கு விழாவும்
நீராட்டு விழாவும் வேறு வேறு
என அறிந்த போதே
சத்தமில்லாமல்
பரு வந்தது.
ஐந்து
மகாப்பா வந்துட்டாங்களா
சத்தம் கேட்டுச்சு என
வருவார்கள் கவிதாம்மா.
"எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ?"
கிசு கிசுத்தென்னை
முறைப்பாள் மகாம்மா.
59 comments:
/மகாப்பா வந்துட்டாங்களா
சத்தம் கேட்டுச்சு என
வருவார்கள் கவிதாம்மா.
"எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ?"
கிசு கிசுத்தென்னை
முறைப்பாள் மகாம்மா.//
ரகசியமாய் ஒரு கவிதை??
ஐந்தும் அருமை!
கற்றுக் கொண்டேன் இக்கவிதைகளிலிருந்து.... வார்த்தைகளும், வாழ்வும்.
என்னை மறந்ததேன்
தென்றலே என
எங்கேயோ பாடிக்கொண்டிருக்கு.
இக்காரணம் போதும்
சிகரெட் புகைக்க எனக்கு. //
ரசனையான வரிகள்.
குடமுழுக்கு விழாவும்
நீராட்டு விழாவும் வேறு வேறு
என அறிந்த போதே
சத்தமில்லாமல்
பரு வந்தது. //
சின்னச்சின்ன விஷயங்களைக் கூட எழுதனும்னு உங்களுக்குத் தாங்க தோணுது.
மகாப்பா வந்துட்டாங்களா
சத்தம் கேட்டுச்சு என
வருவார்கள் கவிதாம்மா.
"எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ?"
கிசு கிசுத்தென்னை
முறைப்பாள் மகாம்மா.//
ஹாஹாஹா.. அழகு.
புத்தகத்திற்கு வாழ்த்துகள் சித்தப்ஸ்.
ஐந்தும் விருந்து.
யாத்ராவின் நிச்சயதாம்பூலம் விருந்தும் இனிதே முடிந்தது.
பா.ரா. மிகவும் அருமை. ஐந்தில் இருக்கும் தொணியின் அழகு தமிழில் மட்டுமே. உங்கள் நடையில் இன்னும் அழகாக....
முதல் பதிவிலிருந்து வாசிக்கத்தொடங்கியிருக்கிறேன். :-)
அழகுத் தமிழில், அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.
ரொம்ப பிடித்தது.. நான்காவது கவிதைதாங்க.
ஒன்று, நான்கு, ஐந்து அருமை மகாப்பா :)
வழக்கம் போல பா.ரா வின் வார்த்தை ஜாலங்கள்.உங்ககிட்ட நிறைய கத்துக்கணும் ஸார்.கவிதைகள் எல்லாமே அருமையா இருக்கு.
எனக்கு ரொம்பப் பிடித்தது மூன்று:)!
ellam azhau
maranthu vitteen padangkalumthaan
நிழல் பிடித்த அணிலும், சைக்கிள் மணி கோலத்தில் சிந்திய சத்தமும் மனதில் பசுமையாய் பதிந்துவிட்டது.
கவிதாம்மா நலமா ? ஹா ஹா ஹா
வாழ்த்துக்கள்
விஜய்
நண்பரே அருமையிலும் அருமை
எல்லாமும் கிடைத்தது போலவும் கிடைக்காதது போலவும் மாயத்தோற்றம்...
ஐந்தும் அருமை. மகாப்பா குளிக்க மாட்டாரோ=))
எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ராஜாராம்.
அசத்தல்
ஐந்தும் அசால்ட்டு...
பதிவுலக வாழ்க்கை கவிஞர் பா.ரா.
kadaisi kavithaiyai migavum rasikkiren.
அண்ணா எப்பவும்போல...தான் கலக்கல்.வாழ்த்துக்கள்.
நமக்கு இங்கே வேலை நெறையா இருக்கும் போலே இருக்கே....
நல்லா இருக்கு நண்பரே....
//ஐந்தும் அருமை!
கற்றுக் கொண்டேன் இக்கவிதைகளிலிருந்து.... வார்த்தைகளும், வாழ்வும்.
//
அவ்வண்ணமே கோரும்..
(ரிப்பீட்டுன்றத தமிழ்ல சொல்றாராம் நர்சிம்>>>>>>>)
5 கவிதைகளும் அருமை அதிலும் அணில் பற்றிய பார்வை என்னைக் கவர்ந்தது
அழகு ;)
தொகுப்பு வெளிவரப்போவதாக அறிகிறேன். வாழ்த்துகள்!
-ப்ரியமுடன்
சேரல்
//அழகு ;)
தொகுப்பு வெளிவரப்போவதாக அறிகிறேன். வாழ்த்துகள்!//
ஆமாங்கோவ் !!!!
மகாப்பா மகாம்மா கவிதாம்மா சுவாரஸியம் !!!
//நான்கு.
குடமுழுக்கு விழாவும்
நீராட்டு விழாவும் வேறு வேறு
என அறிந்த போதே
சத்தமில்லாமல்
பரு வந்தது.//
இது சூப்பர்....
ச்சான்ஸே இல்லை...
ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அழகு...
மிக அபாரம் ராஜாராம்
அன்புச் சித்தப்பா, அருமை மகாப்பா, கவிதைகள் அனைத்தும் அற்புதம்ப்பா.
அழகா இருக்கு
கலக்ஸ் கவிதைகள்!
-கேயார்
நல்ல அழகான கவிதை
எல்லா கவிதைகளிலும்
எதார்த்தமான காட்சிகள்
சிதறிகிடக்கிறது
மிகவும் அருமை....
அன்புச் சித்தப்பா, அருமை மகாப்பா,
கவிதையும் உங்க மக~ப்பா
எல்லா கவிதைகளுமே ரொம்பப் பிடித்திருக்கிறது.
சூப்பர் ராஜாராம். எல்லாமே அசத்தல். அந்த 'மகாப்பா ' வையும் ரொம்பப் பிடிச்சிருக்கு. பதிவு போட்டிருக்கிறேன்.பாருங்கோ.
ரொம்ப நல்லாருக்கு பா ரா...
இந்த வாரம் முழுக்க நெருக்கடியான வேலைகள் இருக்கும்.(பெருநாள் வேலைகள்)நாற்று நட்டுக்கொண்டே மர நிழலில், தொட்டிலில் தூங்குகிற குழந்தையை சகதி கைகளுடன் வந்து பார்வை இட்டு போகிற அம்மாக்காரியை போல்,ஓட நடக்க இருந்து கொண்டிருப்பேன்...இப்படித்தான் இந்த வாரம் முழுக்க வாய்க்கும்.உங்களுடன் உட்க்கார்ந்து பேச முடியாத குறைதான்.சரி எங்கு போய் விட போகிறது எல்லாம்?
பயதான் வரமாட்டான்ல என யாரும் வராமல் போய்விட வேண்டாம்.உண்மையில் உங்கள் தலை தடவல் என்னை பெரிய அளவில் இயக்குகிறது.இயக்கும்.அதுக்கு எப்பவும் போல என் அன்பும் நன்றியும் மக்காஸ்!
எல்லாவற்றையும்விட,ரொம்ப மிஸ் பண்ணுவது உங்கள் தளம் வந்து வாசித்து பின்னூட்டமிடுவது.வரமுடியாதுன்னு சொல்றான் எப்படி நம் பதிவுக்கு ஓட்டு போடுகிறான் என்கிற கேள்வி வரலாம்.ரெண்டு நாள் முன்பாக கண்ணன் அலை பேசியிலே ஓட்டு போட கிட்ட தட்ட முக்கால் மணி நேரமாக சொல்லி கொடுத்தான்.அந்த கூத்தை ஒரு தனி பதிவாகவே போடலாம்.பொழைச்சு கிடந்தால் எழுதலாம் கண்ணா. :-))
கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் பின்னூட்டங்கள் வாசிக்கவென வருகிறேன்.வாசித்து முடிந்ததும் நம்ம மக்கள் என்னென்ன எழுதி இருக்கிறார்கள் என பார்க்க நேர்கிறது.(கிட்ட தட்ட தலைப்ப மட்டும்.)பக்கத்து வீட்டு காலிங் பெல் அடிச்சுட்டு குடு குடுன்னு வீட்டுக்குள்ள ஓடுற சுகம் யாருக்குதான் இருக்காது.
இது உங்கள் எழுத்துக்கு செய்கிற பாவம்தான்.அந்த பாவத்தை விட இந்த விளையாட்டு புடிச்சுருக்கு.நேரம் வாய்க்கிற போது வந்து,வாசிச்சு பின்னூட்டம் போட்டா போகுது.எல்லா பாவங்களுக்கும் என்னிடம் மன்னிப்பு உண்டு.நீங்களும் நானும் வேறு வேறா?
பொருத்தருளனும் நண்பர்கள்.
குடமுழுக்கு விழாவும்
நீராட்டு விழாவும் வேறு வேறு
என அறிந்த போதே
சத்தமில்லாமல்
பரு வந்தது.
:)
//பொருத்தருளனும் நண்பர்கள்.//
ஐயோ...பெரிய வார்த்தை எல்லாம் சொல்லறிங்களே...உங்க கை பட்டா எங்க வீட்டு அழைப்பு மணிகூட கவித சொல்லுமையா... அதுக்கு நாங்க குடுத்து வச்சிருக்கணும்....
அது சரி, உங்க கண்ணுக்கு மட்டும் எப்படி ராஜா இந்த கவித எல்லாம் தெரியுது..எல்லாமே கலக்கல்..
//பதிவுலக வாழ்க்கை கவிஞர் பா.ரா.//
இது மிக மிக சரி... வாழ்த்துக்கள்...
//மகாப்பா வந்துட்டாங்களா
சத்தம் கேட்டுச்சு என
வருவார்கள் கவிதாம்மா.
"எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ?"//
நீங்க சவூதி வந்தது பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கோ? சொல்லவே இல்லை:)
பா. ரா வாசகர்கள் பா. ரா பற்றிய ஸ்பெஷல் பதிவு படிக்க எனது -blog பக்கம் வருமாறு கேட்டு கொள்கிறேன். "வாரம் ஒரு blogger -இந்த வாரம் - பா. ரா"
http://veeduthirumbal.blogspot.com
குடமுழுக்கு விழாவும்
நீராட்டு விழாவும் வேறு வேறு
என அறிந்த போதே
சத்தமில்லாமல்
பரு வந்தது.//
சத்தமில்லாமல் பரு
வந்ததுபோல்
வந்த பா.ராவின் கவிதை கரு..
அருமை பா.ரா
அத்தனையும் அருமை.
புகைப்படத்துக்காக கவிதைகளாக 'புகை'யிலிருந்து ஆரம்பித்து கவிதாம்மா மூக்கு வரைக்கும் நீள்கிறது. நம்மிடம் வேண்டி முறையிட்டும் நாம் கண்டுகொள்ளாத அழகான தருணங்களை, கணங்களை சேமித்து தரும் ஒரு காலத்தை சேமிக்கும் செல்லக் கவிக்காரர் எங்கள் ராஜா!
//5 கவிதைகளும் அருமை அதிலும் அணில் பற்றிய பார்வை என்னைக் கவர்ந்தது//
வழிமொழிகிறேன்
ஐந்தும் அருமை... அந்த அணில் மிக அழகு
ஒன்றும் ஐந்தும் இன்னும் நல்லா இருக்கு...
//என்னை மறந்ததேன்
தென்றலே என
எங்கேயோ பாடிக்கொண்டிருக்கு.
இக்காரணம் போதும்
சிகரெட் புகைக்க எனக்கு.//
இது வரை கேள்விப்படாத ஒரு காரணம்.
//பக்கத்து வீட்டு காலிங் பெல் அடிச்சுட்டு குடு குடுன்னு வீட்டுக்குள்ள ஓடுற சுகம் யாருக்குதான் இருக்காது. //
ஆஹா....
//காலைக்கோலத்தில் சிந்திய
சைக்கிள் மணி சத்தத்தை.//
எல்லா கவிதையும் நல்லா இருக்கு கவிதாம்மா என்றும் ஒரு ரசிகையுண்டா அண்ணா உங்களுக்கு ம்ம்ம்ம்ம் ஒன்னும் சரியில்லை சொல்லிட்டேன் ஆமா
//குடமுழுக்கு விழாவும்
நீராட்டு விழாவும் வேறு வேறு
என அறிந்த போதே
சத்தமில்லாமல்
பரு வந்தது.//
பா.ரா,
ம்ம்ம்ம்ம்....பருவம் வந்தது தெரியல. பரு வந்தது மட்டும் தெரியுது...!
போங்க மாம்ஸ். மனசுல மறுபடியும் மீசை அரும்புது.
உங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை, இவ்வளவு அழகாக எழுதுகிறாரே இவர் என் வலையுலக நண்பர் என்று மறுபடி மறுபடி படித்தும், நண்பர்களிடம் சொல்லியும் சந்தோசப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
//ஜன்னல் வழியாக
பார்த்துக்கொண்டிருந்தாள்
காலைக்கோலத்தில் சிந்திய
சைக்கிள் மணி சத்தத்தை.//
ரசனைங்க.... ரசனைங்க....
என்ன என்னமோ தோணுது...
அழகு..
இயல்பாய் எழுதுகிற வார்த்தைகள் எப்பொழுதும்.
அருமை.
தோன்றியதெல்லாம்
எழுதினேன், கவிதை என்று!
எழுதியதைக்
கிழித்துப் போட்டேன்,
உங்கள் கவிதை கண்டு!
காணும் சிறு சம்பவமும்
கவிதையாய்....
புனைகிறீர்கள்
வியக்கிறேன்
மழலையாய்.........
மக்கா!
அதான் எல்லாத்தையும் எல்லாரும் சொல்லியாச்சே. இனிமே நான் என்னத்த சொல்ல.
வேனும்னா ஒன்னு சொல்லலாம். பா.ரா க்கு மகாம்மா கிட்ட சொல்லி கல்லு உப்பும், காஞ்ச மிளகாயும் அனுப்பச்சொல்லலாம். அவங்களுக்கு பதிலா இங்க நான் சுத்திப்போடுறேன்னு.
//நேரம் வாய்க்கிற போது வந்து,வாசிச்சு பின்னூட்டம் போட்டா போகுது.எல்லா பாவங்களுக்கும் என்னிடம் மன்னிப்பு உண்டு.நீங்களும் நானும் வேறு வேறா?//
நன்றி ராஜாராம்..
ஐந்தும் அருமை ..அசத்துறீங்க ..
புத்தகமாய் வெளிவரப் போகுதா ?பாராட்டுக்கள் மக்கா!!!
நல்லா இருங்க !!!
நல்லா அமோகமா வரட்டும்!!!
//என்னை மறந்ததேன்
தென்றலே என
எங்கேயோ பாடிக்கொண்டிருக்கு.
இக்காரணம் போதும்
சிகரெட் புகைக்க எனக்கு.//
தம் அடிக்கறதுக்கு இப்படி ஒரு காரணமா? இருங்க இருங்க அண்ணிகிட்ட சொல்றேன்.
//மகாப்பா வந்துட்டாங்களா
சத்தம் கேட்டுச்சு என
வருவார்கள் கவிதாம்மா.
"எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ?"
கிசு கிசுத்தென்னை
முறைப்பாள் மகாம்மா.//
புன்னகைகையை வரவழைத்த வரிகள். அருமைண்ணா.
வழக்கம் போல
அனைத்தும் அருமை.
SIRAPPU OLIYUM OLIYUM........:)
KALAKKAL!!
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
பின்னூட்டம் வழியாக என்னை உற்சாகம் கொள்ள செய்த உங்கள் யாவருக்கும் எப்பவும் போலான அன்பும் நன்றியும்.
Post a Comment