(picture by cc license thanks kyz )
ஒன்று
போகிற போக்கில்
மின்னல் எறிந்து போனாள்.
அனிச்சையாக சொல்லிக்கொண்டான்
"அர்ச்சுனன் பெயர் பத்து"
இரண்டு
சும்மா சும்மா
கேட்காதீர்கள்.
அவளுக்கும்
அவள் என்றே பெயர்.
மூன்று
உ மட்டும் எழுதியிருந்த
டைரி ஒன்று எழுதப்படாமலே இருந்தது.
ஏன் என்பதில் எழுதி இருந்தது
யார் கொடுத்தது என்பது.
நான்கு
பச்சை குத்திக்கொண்ட போது
வலி இல்லை.
பத்திரிக்கை நீட்டினாள்
பெயர் இல்லை.
ஐந்து
குடித்துக் குடித்து
நினைவு தப்பி இருந்தான்.
sms வந்தது
"வழி அனுப்பவாவது வருவியா?"
ஆறு
செத்தாலும் பார்க்கக்கூடாது
என்றிருக்கிறான்.
"ஏன் சாகனும்?"
என்றவளை.
59 comments:
ராஜாராம், கவிதை அருமை.
4 ம் 5ம் ரொம்ப பிடித்திருந்தது.
ஆஹா. காதலர் தின கவிதைகளா!!.
3 ரொம்ப பிடிச்சுருக்கு.
3.சந்தோசம்னா
5.வலி
6. எனக்கும் சரி
மடைதிறந்த வெள்ளத்தை போல் காதல்
எல்லோரிடமும்
யாருக்கு எவ்வளவு
அவரவர் விருப்பத்தை பொருத்து
அனைத்துமே மிக அருமை அண்ணா. காதலர் தின கவிதைகளா? ரைட்டு மக்கா, நீங்க நின்னு விளையாடுங்க.
நான்கு... அற்புதம் பா.ரா
ஆறு முகமும் களை.
முதல் இரண்டும் நன்று.
அனேகமா உங்களுக்கு இன்னிக்கு லவ் லெட்டர்(கள்) வரும்..:))
காதலை அதன் தெய்வீகப்பூச்சை
கழுவித்துடைத்துக்கொடுத்த நிஜம் இது.
பாரா...
பாரா...
ஆறு பாராவும்
அழகிய அவஸ்தை
அலைக்கழிக்கும் எழுத்து.
போய்யா....
இந்த சந்தோசத்தை
நான் என்ன செய்து
கழிக்க ?
ஆஹா!
ஹலோ இளமை ஊஞ்சலாடுகிறது.. நடத்துங்க
இதை எதிர்பார்த்தேன்! அருமை!!!
அண்ணே. கவிதைகளில் இளமை. அருமை.
//உ மட்டும் எழுதியிருந்த
டைரி ஒன்று எழுதப்படாமலே இருந்தது.
ஏன் என்பதில் எழுதி இருந்தது
யார் கொடுத்தது என்பது.//
எனக்கு இந்த 3 ரொம்பப் பிடிச்சிருக்கு தல..மற்றவைகளும் நல்லா இருக்கு
ஒவ்வொருத்துருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும்.. எனக்கும் 3 உள்ளிட்ட சில பிடித்தன
அனைத்துமே சிறப்பான கவிதைகள் .
அருமையாக உள்ளது பாரா சார் .
அறுசுவை விருந்து...
பாராட்டுக்கள்
பிடிச்சுருக்கு!!!
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அனேகமா உங்களுக்கு இன்னிக்கு லவ் லெட்டர்(கள்) வரும்..:))//
மக்கா, இது வேறயா!! ரைட்டு.
ஆறு முகமும் அழகு
வாழ்த்துக்கள்
விஜய்
பச்சை குத்திக்கொண்ட போது
வலி இல்லை.
பத்திரிக்கை நீட்டினாள்
பெயர் இல்லை.
இது ரொம்ப கொடுமை .ஆனா வரிகள்
ரொம்ப நல்லாஇருக்கு
Dear Rajaram,
Really dont know how many times I would keep appreciating you. Please be assured that you are the best of the lot (of Kavignar-Bloggers).
அன்பு பாரா,
ஆறுமுக காதல். 5 வது கவிதை எனக்கு ரொம்ப பிடித்தது. மற்றவை பரவாயில்லை. ஆனால் ஆவியில் வந்த கவிதைகள், அப்பா என்னை உலுக்கி எடுத்து விட்டது.
நிறைய பேர் எழுதியிருந்தார்கள்... நீங்கள் தான் கித்தானுக்குள் பிதுங்கி வழியும் வர்ணங்களை எறிந்து கவிதை வனைந்திருக்கிறீர்கள். பேசும், சிரிக்கும், கொஞ்சும் ஓவியங்கள் அத்தனையும். வர்ணம் வழியும் கையைக் கொஞ்சம் கொடுங்கள் பாரா, என் கைக்குட்டையில் துடைத்துக் கொள்கிறேன்.
அன்புடன்
ராகவன்
அழகான கவிதைகள் பா.ரா.
அதிலும் ஒன்றும் மூன்றும் ரொம்பப் பிடித்திருந்தது.
அனைத்தும் அருமையா இருக்கு...
எல்லாமே நல்லா இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது ரெண்டும் நாலும்...
அண்ணா அன்பு வாழ்த்துக்கள்.
கடைசி ரெண்டும் ரொம்ப
நல்லாருக்கு.
ஆஹாஹாஹா...அத்தனையும் அருமை!
பச்சை குத்திக்கொண்ட போது
வலி இல்லை.
பத்திரிக்கை நீட்டினாள்
பெயர் இல்லை.
...........அருமை.
அனைத்தும் அருமை
எனக்கும் கடைசிக் கவிதையே சிறப்பாகத் தெரிகிறது.
அருமை மக்கா!
அருமை
அருமை
ஏற்றார்போல படம் போட்டிருந்தால் இன்னும் அழகாயிருந்திருக்கும்
ஆனந்தவிகடன் அட்டைப்படத்தில் 'பா' வன்னாவைப் பார்த்து
ஒரு நிமிடம் நெஞ்சு அடைத்துக் கொண்டதுடா,ராஜா.
யோ மாம்ஸ் இப்போ பக்கத்துல இருந்தீங்க கைக்கு முத்தம் கொடுத்துருப்பேன் அருமைஸ்
உங்க கவிதை அழகு.உங்க கவிதைக்கு வரும் பின்னோட்டங்கள் அது போல அழகு.
அன்பின் பா.ரா
விக்டனில் வெளிவந்த படைப்புகளுக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்
வாசு முதலில் கூறியபடி 4ம் 5ம் எனக்குப் பிடித்த்ஹிருக்கிறது - மற்றவையும் அருமையான கவிதைகள் தான்
நல்வாழ்த்துகள் ராஜாராம்
அனைத்தும் அருமை பாரா
/உ மட்டும் எழுதியிருந்த
டைரி ஒன்று எழுதப்படாமலே இருந்தது.
ஏன் என்பதில் எழுதி இருந்தது
யார் கொடுத்தது என்பது/
இது நெம்ப யோசிச்சா நிறைய விஷயங்களுக்கு பதில் கிடைக்கும்போல இருக்கு...
காதலர் தினத்தில் மெல்லிசா ஊடுறுவிய கவிதைகள் அண்ணா உங்க ஸ்பெசாலிட்டி பளிச்..
நாலாவது ரசித்தேன்!
கவிதை மிக அருமையாக இருக்கிறது...
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டிக்கிட்டே இருக்கு...
தலைவரே ஐந்தாம் கவிதை நெஞ்சை கொள்ளை கொண்டது. அனைத்துமே அற்புதம்.... வாழ்த்துக்கள்...
அனைத்தும் அருமை. 4வது மிக அழகு.
-Toto
ஐந்து ஆறு செம்ம ஃபீலிங்குஸூ...!!!!
வழி அனுப்பவாவது வர்றியா..3 வார்த்தையில எவ்வளவு அர்த்தம்ல.!!!
எல்லாமே நல்லாருக்கு பா.ரா.
அருமை. 3,5 மனதுக்குள் ..
அண்ணா கவிதைகள் நன்று வாழ்த்துகள்
நீங்க இப்ப டீன்-ஏஜ்!
அனைத்துமே அருமை. சட்டென்று புரிந்து விடும் கவிதையை விட, சற்றே சிந்தித்து புரிய வைக்கும் கவிதைக்கு சுவை அதிகம்.
அந்த வகையில் முதல் இரண்டு அபாரம் !!!
அதென்ன நான்கும், அய்ந்தும்..
அப்புறம் ஒன்னும்,மூனும்..
அதெல்லாமில்லை இரண்டும், ஆறும்..
ஹூஹும்...
காதலின் தோல்விகள்தான் எப்போதும் கவனிக்கத்தக்கவையாக இருந்திருக்கின்றன...
வெற்றி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்றுவிடுகையில் தோல்விகள் மட்டுமே உயிரைக்குடித்து வாழ்வை பதம் பார்த்துவிடுகிறது..
இப்போதும் இருக்கிறார்கள் பழைய காதலிகள் கடந்து செல்கையில் உற்று உற்று பார்த்தபடி..
எனக்கு எல்லா கவிதையும் ஒன்றின் தொடர்சியாகவே தோன்றுகிறதில் தப்பில்லைதானே பா.ரா....
சின்ன சின்ன நிகழ்வுகள்..ஆனால் அது மெல்ல மெல்ல கொடுக்கும் அதிர்வுகள் சிறப்பு...
ஆம் காதல் மெல்ல மெல்ல கொல்லும் என் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்
ஆறும் அருமை சித்தப்ஸ் :)
உங்கள் பதிவு அருமை
சீக்கிரம் பாரோமோ என்று தோன்றுகிறது!
எல்லாம் அருமை பா ரா..
//பச்சை குத்திக்கொண்ட போது
வலி இல்லை.
பத்திரிக்கை நீட்டினாள்
பெயர் இல்லை.//
அழகு அருமை
நன்றி
ஜேகே
மனசுக்கு வயசில்லை மக்கா.. நடத்துங்க...
அப்ப மிஸ் பண்ணிட்டேன் போல !
நீங்க அடிச்சு ஆடுங்க
மூன்று, நான்கு,ஐந்து கவிதைகள் அப்பப்பா ஒற்றை வரிகளில் ஓராயிரம் பொருள்படும் அர்த்தங்கள்..காதல் கவிதைகளுக்கும் நீங்கள் ராஜா ராம் தான் அண்ணா....
3,4 மற்றும் 6 மிகவும் பிடித்திருந்தது.
ப்ரியங்கள் நிறைந்த என்,
வாசு,
அம்பிகா,
ஜோதி,
சரவனா,
கதிர்,
எஸ்.கே.பி,
ஸ்ரீ,
ஷங்கர்,
காமராஜ்,
சென்ஷி,
விநாயகம்,
பாலா சார்,
அக்பர்,
புலவர்,
மோகன்,
staarjan,
பவித்ராபாலு,
மதார்,
சரவனா, :-))
விஜய்,
பத்மா,
எஸ்,பெயர் என்ன மக்கா?
ராகவன்,
சுந்தரா,
ப்ரியா,
ஸ்ரீராம்,
ஹேமா,
அருணா டீச்சர்,
சித்ரா,
இயற்க்கை,
மாது,
அபு அப்சர்,
சித்தப்பா,(ரொம்ப நாள் ஆச்சு சித்தப்பா,உங்கள் பின்னூட்டம் பார்த்து.மிக்க நன்றி சித்தப்பா!)
பாலா,
சாந்தி லெட்சுமணன்,
சீனா அய்யா,
வசந்த்,
ராமலக்ஷ்மி,
கமலேஷ்,
காவிரி,
டோடோ,
செய்யது,
சுசி,
ரமேஷ்,
லாவண்யா,
ஜெகா,
அகஆழ்,
கும்க்கி, !!! :-)
அசோக்,
நிகே,
மணிஜி,
ஜேகே,
தேனு,
ராஜன்,
தமிழ்,
அமித்தம்மா,
எல்லோருக்கும் மிகுந்த நன்றியும் அன்பும் மக்களே!
poo poththa maathiri irukku...:)
Post a Comment