(picture by cc license thanks SubZeroConsciousness)
அச்சுவர் ஏறிக் குதிப்பது
மிக எளிது.
கண்ணாடிச் சில்கள்
பதிந்திருக்கவில்லை.
கால் பதித்து ஏற
செங்கலொன்று உதிர்ந்திருந்தது.
மனிதக்காலில் ஏறி
பூனைக்காலில் குதித்தால் போதும்
பறிக்கலாம்
பால்யத்தில் மாங்காயும்
பருவத்தில் விருப்பத்தையும்.
பூனைக்காலில் ஏறி
மனிதக் காலில் குதித்ததால்
பறித்தேன்
பால்யத்தில் விருப்பத்தையும்
பருவத்தில் மாங்காயும்.
50 comments:
ராஜாராம், உங்களுடைய கவிதைகளை புகழ்ந்து புகழ்ந்து வார்த்தைகளே தீர்ந்து விட்டது.
//மனிதக்காலில் ஏறி
பூனைக்காலில் குதித்தால் போதும்
பறிக்கலாம்//
அற்புதமான அவதானிப்பு.
//பால்யத்தில் விருப்பத்தையும்
பருவத்தில் மாங்காயும்//
இதுவும்தான்.
என்னமோ போங்க.
நல்லாயிருங்க ராஜாராம்.
அண்ணா..அற்புதம் இந்த கவிதை எளிமையாய் எனக்கு புரிந்தது...
//பால்யத்தில் விருப்பத்தையும்
பருவத்தில் மாங்காயும்//
இவ்வரிகள் தத்துவமாய் தெரிகிறது அறிவுக்கு.....
ஓ !!! சூப்பர்..! குதிச்சி குதிச்சி யோசிப்பீங்களோ !!!!
அதிரடி கவிதை !!!
பா ரா,
கவிதை அற்புதம்.
அம்மாடியோ!:)
நல்லா இருக்கு அண்ணா
ஆத்தாடி! இம்புட்டு எழுத்தையும் இத்துனூண்டு வரிக்குள்... உங்களால் மட்டுமே முடிகிறது அண்ணா.. :)
ஆ.... அது...சித்தப்ஸ் :)
பால்யத்தில் பறித்த மாங்காய் !
பருவத்தில் தேவைப்பட்டிருக்குமே!
கவிதை நன்றாக வந்திருக்கிறது, மனிதக் காலில் குதித்து அடிவாங்கி இருக்கிற அனுபவம் எங்களுக்கு இருந்த போதும்.
சென்ற பதிவில் வெளிப்பட்ட என் அச்சத்தை உண்மையாக்கிவிட்டது, விதூஷுக்கு நான் எழுதியுள்ள பின்னூட்டத்துக்குக் கீழே உள்ள 'அருவி'. அப்பழுக்கற்ற குற்றால அருவிகள் மன்னிக்குமாக, இவர்கள் அறியாமல் புனைபெயர் தேர்கிறார்கள்.
என் email id உங்களுக்குப் பயனுள்ள வகையில் தருகிறேன்.
நல்ல கவிதை சார். நிறைய நினைவுகள் வருகிறது..:)
இரத்தின சுருக்கம், அழகு.
nallaa irukku Rajaram. Rasiththen.
பை மிஸ்டேக், என் பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டம் காணாமல் போய்விட்டது.
பின்னூட்டத்தின் முதல் வரியை மட்டும் படிக்க நேர்ந்தது.தொடர்பதிவு இடுகையை படித்து விட்டேன்.முடிந்தால் மீண்டும் பின்னூட்டமிடவும்.
அன்பின் பா.ரா , யாருக்குத்தான் இந்த அனுபவம் இருக்காது ?
ஆனால் மிக எளிதான கோர்வைகளில் , பால்ய காலத்தை நினைவு படுத்துகிறீர்கள் ;-)
ரொம்ப அருமை பா.ரா !!
வாழ்த்துக்கள்
பா. ரா அண்ணா கவிதை அருமை.
நண்பர் சரவணன் ஊருக்கு சென்றது சந்தோசம். (மனசுக்கு என்னவோ போல இருக்குல்ல)
///விதூஷுக்கு நான் எழுதியுள்ள பின்னூட்டத்துக்குக் கீழே உள்ள 'அருவி'. அப்பழுக்கற்ற குற்றால அருவிகள் மன்னிக்குமாக, இவர்கள் அறியாமல் புனைபெயர் தேர்கிறார்கள்.////
அன்பின் ராஜாசுந்தரராஜன். மனசாட்சியை விட வேறென்ன நமக்கு பயம் கொடுத்து விட முடியும்.
காமத்தையும் தாண்டி சிந்திக்கத் தெரியாத "அருவி" போன்ற சுயமுகம் காட்டக் கூட பயப்படும் பெயரிலிகளைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து. எரித்தால் எரிந்து விட அக்கால சீதைகள் இல்லை இன்றைய பெண்கள், அவர்கள் PHOENIX பறவையாகி ரொம்ப நாளாகிவிட்டது.
உங்கள் அன்பு நிறைந்த concern-னுக்கு மிகவும் நன்றி.
பால்யத்தின் விருப்பம் என்னன்னு அனுமானிக்கமுடியாமல் முழித்துக்கொண்டிருக்கிறேன். :-(
எப்படியோ இப்படி எல்லாம் எழுதறீங்க...
உங்கள் கவிதையில் தமிழ் அழகாக வந்து விளையாடுகிறது
கவிதை அற்புதம்.
அழகிய கவிதை, வரிகள் எத்தனை ஆழம்.
//பால்யத்தில் விருப்பத்தையும்
பருவத்தில் மாங்காயும்//
இது மட்டும் புரியல....
ஏதும் உள்குத்து இல்லையே!?
ரொம்ப நல்லா இருக்கு - மனசுக்கு நெருக்கமாகவும்!
//பால்யத்தில் விருப்பத்தையும்
பருவத்தில் மாங்காயும்//
பறித்தது அழகு.
ஊஊப்ஸ்ஸ்...... தாங்க முடியலைங்க இவரு தொல்லை. வாசு சார் அடுத்த புத்தகத்துக்கு சொல்லிடுங்க..
ஒன்னுமில்லை மக்கா ...
நல்லா பறிச்சீங்க போங்க..
க்ளாஸ்... அருமையா இருக்குங்க...
ஏறுதல் எளிது .பறித்தல் நம் ஊழ் .பாரா fan club ஆரம்பிக்கலாமா என்று நினைக்கிறேன்
சூப்ப்ப்ப்பர்
kalakkals:-)
பின்னுறிங்க..இனியும் பின்னுவிங்க..:)
அண்ணா நல்ல கவிதை.
very very nice this poem
Excellent!!!
அன்பு பாரா,
அழகான கவிதை... பல்லிழந்த பின்னே பொரிவிளங்காய் உருண்டை மாதிரி, வாயில் அதக்கி அதக்கி, ஊறிய பின் சவைச்சு தின்ன ஆசை... எதிரில் கடப்பவளை எச்சில் ஒழுக ரசித்ததெல்லாம் மனசுக்குள் வந்து போகும் இப்போதும்... தொண்டைக்குழி சங்கு மாதிரி பொரிவிளங்காய் உருண்டை விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அடைக்கிறது.
அன்புடன்
ராகவன்
செய்ங்க..:))
பாரான்றது பேர்லதான் இருக்கு பாரா பாராவா எழுதவேண்டியது எல்லாம் பத்து வார்த்தையில அசால்ட்டா எழுதிட்டு போயிடறீங்க..!
அசத்துங்கண்ணே..:)
loved it totally!
//பூனைக்காலில் ஏறி
மனிதக் காலில் குதித்ததால்
பறித்தேன்//
நினைத்துக்கூட பார்க்கமுடியாத வரிகள்..
ரொம்ப நல்லாருக்கு...
வாலிபம் வந்தா எல்லா கள்ளத்தனத்தையும் கூடவே கொண்டு வந்துடுது மக்கா
கவிதை அருமை...மனிதக்கால், பூனைக்கால் சூப்பர் உவமை
நல்ல காமடியான ஒரு சுவரேறியின் டைரிக்குறிப்பு :))
அகநாழிகை said...
ராஜாராம், உங்களுடைய கவிதைகளை புகழ்ந்து புகழ்ந்து வார்த்தைகளே தீர்ந்து விட்டது.
அஃதே அஃதே அஃதே
மனிதக்கால் / பூனைக்கால் = எப்படி இப்படிலாம் அணுகறீங்க. ச்சான்ஸே இல்லை.
பிடிச்சிருக்குங்க பா.ரா.
அருமை அருமை பா.ரா !!
வாழ்த்துக்கள்
அழகான கவிதை பா.ரா. ஸார்.
-Toto
நல்ல குறிப்பு :)
:)
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
பின்னூட்டங்களில் அன்பு காட்டும் உங்கள் அணைவருக்கும் நிறைய அன்பும் நன்றியும் மக்கா!
:)
Post a Comment