Monday, April 5, 2010

அப்பன் பிள்ளை



(Picture by cc license Thanks mckaysavage)

சேவுக மூர்த்தி என்ற
'குண்டக்க மண்டக்க' மூர்த்தியை
தேடிப் போயிருந்தேன்.

பூட்டியிருந்தது வீடு.

ட்டிய சந்திலிருந்து
ஓடி வந்த சிறுவனொருவன்
மூர்த்தியை ஒத்திருந்தான்.

மூர்த்தி மகனாடா என்றேன்.

ல்ல...
வந்து...
அது வந்து...
என்றெல்லாம் இழுத்தவன்
மூர்த்தி எங்கப்பா என்று
ஓடிப் போனான்.

மேற்கொண்டு
மூர்த்தியையும் வேறு பார்கனுமாவென
திரும்பினேன்.

**

44 comments:

மணிஜி said...

முதல் போ(ளி)ணி

இரசிகை said...

:)

padam nice...

இரசிகை said...

m...
naan D/O mr.J.Ranjith singh..:)

appuram..,
naanum yen thambiyum odinathu polave irukku intha padam!

'பரிவை' சே.குமார் said...

kavithaiyil kathai...

moorthiyum ippaduththano?

nanru

பாலா said...

அப்பனுக்கு பிள்ளை ................
அப்படீன்னு தலைப்பு வச்சுருக்கலாம்

Vidhoosh said...

குண்டக்க மண்டக்க
மண்டக்க குண்டக்க.. :)))

எப்போதும் போல ராகவன் பின்னூட்டத்திற்காக :)

க.பாலாசி said...

நல்லாருக்குங்க சார்...

சைவகொத்துப்பரோட்டா said...

க(வி)தை நல்லா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

:))!

அம்பிகா said...

மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிது

இது அந்த பிள்ளைக்கு மட்டுமல்ல
உங்கள் கவிதைக்கும் பொருந்தும்.

பனித்துளி சங்கர் said...

சிறப்பு . பகிர்வுக்கு நன்றி !

SUFFIX said...

ஆகா :)

Unknown said...

குண்டக்க மண்டக்க ஜூனியர் :-)

Ahamed irshad said...

ரசித்"தேன்"......

உயிரோடை said...

:)

தமிழ் said...

:)))))

vasu balaji said...

நல்ல பதில்தானே:))

rvelkannan said...

//மேற்கொண்டு மூர்த்தியையும் வேறு பார்கனுமாவென திரும்பினேன்//
ஆனால் மூர்த்தியை பார்த்தது போல் இருந்தது பா. ரா.
ஒரு குறிப்பு : சுமதியின் கவிதைக்கும் ராமின் வலைப்பக்க அறிமுகத்திற்கும்(எனக்கு) உங்களுக்கு நன்றி சொல்லி கொண்டே இருக்கலாம் பா. ரா.

ப்ரியமுடன் வசந்த் said...

S/o மூர்த்தி?

(or)

F/o மூர்த்தி?

:)

Unknown said...

அப்ப கடைசியில சேவுக மூர்த்திய பாக்காம வந்துட்டீங்க போல.
அன்புடன்
சந்துரு

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அப்பன் பிள்ளை அல்ல
அப்பனையே
அசத்தும் பிள்ளை.....

Chitra said...

நல்லா இருக்குங்க. அருமை.

நேசமித்ரன் said...

பா.ரா

நான் புரிந்து கொண்ட விதத்தில்

ஆத்தாடி ...

சொல்லிக்கொள்ளப் பிரியப்படாத தகப்பன்
கொள்ளிக்கு சொல்லிவிடும் தூரத்தில் பிள்ளை

மக்கா ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல கவிதை உங்ககிட்டயிருந்து

சிநேகிதன் அக்பர் said...

விதையொன்னு போட்டா...

நல்லாயிருக்கு அண்ணா.

பத்மா said...

எத்தனை பேர் இப்படி அவனை கேட்டாங்களோ /கேட்பார்களோ?
குண்டக்க மண்டக்க இல்ல விவரம் தான் .அப்பனும் மகனும்

Paleo God said...

தாயைப்போலத்தான் பிள்ளை இருக்கனுமா என்ன??

:)

ரிஷபன் said...

தி.ஜா. கதைகளில் போகிற போக்கில் ஒரு விஷயம் சொல்லிப் போவார்.. நினைத்து நினைத்து ரசிக்கும் மனசு.. இந்தக் கவிதையிலும் அப்படித்தான்..

க ரா said...

அருமை பா.ரா. சார். நன்றி.

Ashok D said...

ஆங் ரைட்டு.... சித்தப்ஸ்

காமராஜ் said...

இப்படி எங்க பாரா பத்தி போட்டு.நாங்க வட்டப்பாச்சால போட்டு ஒக்காந்து கேக்கனும். அந்த இளவரசர் இழுத்துக்கிட்டு போய்ட்டாரே ஒரு வரம் தவிக்கவிட்டுட்டு.
அங்க தண்னிவெண்ணியெல்லால் சிலாட்டமா பாரா ?.

ராகவன் said...

அன்பு பாரா,

அழகான கவிதை இது. நேசன் சொன்னது போல நீண்ட நாட்களுக்குப் பிறகு என்று என்னால் சொல்லமுடியவில்லை. எனக்கு ஏனோ உங்களின் பழைய கவிதை ஒன்றை இது ஞாபகப்படுத்துகிறது. ”அப்பா இன்னும் வரலை என்று சொல்லும் பொய்யை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.” தகப்பனாக இருப்பது என்ற கவிதை, இரண்டுக்கும் பெரிதாக சம்பந்தம் இல்லை, ஆனாலும் அப்பாவை மகனிடம் விசாரிப்பது என்ற பொதுமையுடன் இருப்பதால் ஞாபகம் வந்திருக்கலாம்.

இது மாதிரி கவிதைகளில் இருக்கும் தொக்கி நிற்கும் கேள்விகள் மாத்திரமே அதற்கு ஒரு கவிதை அந்தஸ்தை தருவதாக படுகிறது எனக்கு. ராமசந்திரன், வேணுகோபால், உங்களுக்கு சேவுகமூர்த்தி. முக்கு திரும்பும் போது, பீடி நெருப்பில் அவர் வாய் இருந்தது, அப்புறம் அவரும் இருந்தார்னு எனக்கு எழுதத் தோனுச்சு.

என் அப்பாவை பெரிதாக யாரும் தேடி வருவதில்லை. நண்பர்கள் என்று மதுரையில் அவருக்கு யாரும் கிடையாது. அப்பாவுடன் பணிபுரியும் கருணாகரன் மட்டும் தான் எப்பவாவது வருவார், ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் வேலைக்கு சேர்ந்ததால் கொஞ்சம் அதிக உரிமையுடன் பழகுவார். அவரும் மஞ்சனக்காரத்தெருவில் மின்சாரப் பழுது பார்க்க கரண்டு கம்பத்தில் ஏறியவர் ஏதோ பிரச்னையாகி மின்சாரத்தில் அடிபட்டு இறந்த பிறகு வருவது இல்லை. எப்போதாவது, குமாரி! கருணாகரன் வந்து ஏண்ட்ட பொடி கேட்டாரு புள்ள, என்பார் என் அம்மாவிடம். என் அம்மாவுக்கு சிரிப்பா வரும், கிறுக்கு தான் பிடிச்சிருக்கு உங்களுக்கு என்பாள்.

உங்கள் நடையும், தொனியும் சுகசமுத்திரம் பாரா... ஞாயித்துக் கிழம சூடு பறக்க எண்ணெய் தேச்சு குளித்தவுடன், மூக்கு உறிஞ்சுக்கிட்டே அம்மா செய்து வைத்த வெந்தயக்கலியில் குழி பறிச்சு பொடித்த கருப்பட்டியுடன் நல்லெண்ணையும் ஊத்தி சாப்பிட்டது போல ஒரு சுகம்.
வித்யா என்னை ஒரு வழி பண்ணப்போறாங்கன்னு நினைக்கிறேன்... இனிமே எதிர்பார்க்க மாட்டீங்க தானே!

அன்புடன்
ராகவன்

வினோத் கெளதம் said...

நன்னாருக்கு தல ..

கோமதி அரசு said...

வழக்கம் போல் கவிதை அருமை.

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கிறான்.

Vidhoosh said...

அன்பு ராகவன்
நண்பரே ! கவிதைகளை ரசித்து ரசித்து ரசித்து தளும்பும் வார்த்தைகள் உங்களுடையது. ஒரு அழகான கவிதையையோ பத்திகளையோ கதையையோ படித்து விட்டால், அந்த நாள் முழுக்க, புல்லு தின்ற மாடு வாய்க்கு கொண்டு வந்து கொண்டு வந்து அசை போடுவது போல, அதையே சுற்றி சுற்றி நினைத்து நினைத்து பைத்தியம் மாதிரி தனியாக புன்னகைத்து கொண்டிருப்பேன். எனக்கு உங்களைப் போல அந்த ரசனைகளை வார்த்தைகளாய் எழுதவெல்லாம் இன்னும் தெரியவில்லை. ஆனால், என்னைப் போல ஒரு 'தனியே புன்னகைப்பவன்' கிடைத்ததும் ஒரு மகிழ்ச்சிதான். :))
அப்படிப்பட்ட "நம்ம பாஷை" கவிதைகளுக்கு சொந்தக்காரர்கள் (இப்போது இணையத்தில்) ராஜாராமும், யாத்ராவும். சர்வ சாதரணமாய் நாம் கடந்து போய் விடும் நிகழ்வுகளை செதுக்கி இருப்பார்கள் இவர்கள்.

யாத்ராவின்
http://yathrigan-yathra.blogspot.com/2009/03/blog-post_20.html
மற்றும்
http://yathrigan-yathra.blogspot.com/2009/03/blog-post_30.ஹ்த்ம்ல்
மற்றும்
நிலைக்கண்ணாடி மற்றும் காற்றில் கால் உதிக்கும் ஒரு குழந்தை பற்றிய கவிதைகளைப் படித்துப் பாருங்கள். :) கடைசி இரண்டுக்கும் லிங்க் வேண்டும் என்றே தான் கொடுக்க வில்லை. இந்த பொக்கிஷத் தேடலில் இன்னும் கூடக் கிடைக்கலாம் உங்களுக்கு. :)

rajasundararajan said...

எதார்த்தமா வார்த்தை விழுகிறது என்று எண்ணி விலகிவிட முடியாத படிக்கு 'சேவுக மூர்த்தி'க்கு ஓர் அர்த்தம், 'மூர்த்தி'க்குத் தனியா ஓர் அர்த்தம் வருகிறது.

'குண்டக்க மண்டக்க' x 'ஒட்டிய சந்து' ஒரு ஊகத்தைக் கொண்டு தருகிறது.

குழம்பினாலும் குழப்பினாலும் பிள்ளை தன்னை முன்னிருத்தி அப்பனை அடையாளப் படுத்தியதாகச் செய்தது மிக அருமை.

Thenammai Lakshmanan said...

ஆமாம் அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல்தான் இருக்கு பாரா...:))

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html

JK said...

பா ரா

அருமை

அப்பா நினைவுகளையும் நான் பிள்ளையாய் இருந்த போது எத்தனை பேர் “அப்பனை வேற பார்க்கனுமானு போய்ருப்பாங்களோன்னு “ தோண வைக்குது..

நன்றி ஜேகே

இரசிகை said...

//Vidhoosh(விதூஷ்) said...
ஒரு அழகான கவிதையையோ பத்திகளையோ கதையையோ படித்து விட்டால், அந்த நாள் முழுக்க, புல்லு தின்ற மாடு வாய்க்கு கொண்டு வந்து கொண்டு வந்து அசை போடுவது போல, அதையே சுற்றி சுற்றி நினைத்து நினைத்து பைத்தியம் மாதிரி தனியாக புன்னகைத்து கொண்டிருப்பேன்.//

naanum appadithaanga..!

neenga sonna yathra kavithaiyaiyum appadi vaasiththathundu.

rajaram sir-n thakappanaayiruppathu
nilaraseegan-in vaazhkkai

ippo..,
vidoosh-in IGNORE IT...:)
mithran sir-n pinaayul perungalirudalin

piththiyam pola thirumba thirumba thaniyaa siruchutte irunthen.(tv-yil yaanai paaththuttu..,i.. yaanai nu laam pelamaa sonnen)

kavithai varikal nammai ulvaangik kolkirathu..vidupada aasaiyintri muyarchiyumintri sikkiye kidappathilthaan yeththanai sugam..
nitchathiravaanam paarthu pulveliyil kidappathu pola:)

nantri vidoosh...
vazhthukalum kooda.

ragavan sir--ungal pinoottam yeppothume azhagu thaan!
ullaththil irunthu varuvathanaal:)

விநாயக முருகன் said...

தகப்பனாக இருப்பது என்ற கவிதை
நினைவுக்கு வருகிறது. :)

விக்னேஷ்வரி said...

ஹிஹிஹி...

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

மிகுந்த அன்பும் நன்றியும் மக்கள்ஸ்!

பின்னோக்கி said...

எங்கிருந்து கிடைக்கிறது வார்த்தைகள் உங்களுக்கு மட்டும். அருமை

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அழகுதான் :)

-ப்ரியமுடன்
சேரல்