(Picture by cc license Thanks runran)
திட்டமிடலைப் போன்றே
சோர்வேற்படுத்துகிறது
தொலைத்த பொருளின் நினைவு.
துக்கம் பிதுக்கி
திகைக்க வைக்கிறது
பின் மதியத்தில் கூவும்
ஒற்றைக் குயில்.
மலைக்க வைக்கிறது
விளக்கு பொருத்தி, திரியையும் தூண்டி
எண்ணையில் மூழ்கி
காத்திருக்கும் தீக்குச்சி.
"பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த.." என
சோர்வேற்படுத்துகிறது
தொலைத்த பொருளின் நினைவு.
துக்கம் பிதுக்கி
திகைக்க வைக்கிறது
பின் மதியத்தில் கூவும்
ஒற்றைக் குயில்.
மலைக்க வைக்கிறது
விளக்கு பொருத்தி, திரியையும் தூண்டி
எண்ணையில் மூழ்கி
காத்திருக்கும் தீக்குச்சி.
"பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த.." என
பேருந்தில் பாடி வருகிற
கூலிங்கிளாஸ் காரரின் குரல் மட்டும்
ஏனோ பழகி விடுகிறது.
35 comments:
ஏனோ பழகி விட்டது....இதற்க்கு மேல் சொல்ல வரிகள் இல்லை. வாழ்த்துக்கள்
உங்க கவிதை தான் படிச்சா புரியுற மாதிரி இருக்கு..
கவிஞ்சனில் திரியும் மனிதனல்ல
மனிதனாக திரியும் கவிஞ்சன்.
வார்த்தைக்கு வார்த்தை நிதர்சனம். அருமை அண்ணா.
நலமாக கோபார் திரும்பினீர்களா.
நான்கு நாட்களுக்கு முன் ஒரு போனைத் தொலைத்தேன். ஆனால் துயரப்படவில்லை. மனிதன் எந்நேரமும் விழிப்போடு இருக்க முடியாது என்றே தோன்றியது.
//எண்ணையில் மூழ்கிக்
காத்திருக்கும் தீக்குச்சி.// = திட்டமிடுதல்.
//பின் மதியத்தில் கூவும்
ஒற்றைக் குயில்.// குயில் எதற்குக் கூவுகிறதென்று அறிந்தவர்களுக்குத் தெரியும்... 'பின்மதியம்' உருவகப் பொருள் பெற்றால்... ஓ, கடவுளே! கவிஞனே!
அந்த எம்.ஜி.ஆர் படத்துப் பாடலையும் தாண்டியது அல்லவா உலகளாவிய (universal) பார்வை? [ஆகவே, 'கூலிங் கிளாஸ்' (கண்ணை மறைக்கும்) கள்ளத்தனத்துக்கே உருவகப் பொருள் ஆக வேண்டும்]. ஆனால் நம் அனுபவம் யுனிவெர்சலாவது மண்ணாவது என்று ஒரு குருடரையே முன்கொண்டு நிறுத்துகிறது.
மனிதன் எப்போதுமே கருத்துகளுக்கு மேல் நிற்கிறான். கவிஞன்?
பா. ரா. வின் திரிதலில் நிற்கிறான்.
அதே பச்சரிசி மாவு தான்.
எடுத்துப் பிழிகிற
கையில் இருந்து தான்
எத்தனை ருசி.
ஜிலேபி,
கருப்பட்டி முட்டாய்,
அதிரசம், முறுக்கு.
படிக்கப்படிக்க
இனிக்கிற
ருசிக்கிற
மணக்கிற.
கைப்பக்குவம்
பாரா.
நன்றி பா.ரா. சார். நல்ல கவிதையை வாசிக்க தந்தற்கு.
அருமையான படம் பிடிப்பு!!
உலுக்கி எடுக்குது பா.ரா படமும் கவிதையும்
என்னம்மா எழுதறீங்க அண்ணா நல்லா இருக்கு
yaaru........
namma vaduvaavaa..?
kalakkuriyeppa..:)
ippadikku
paatiyin aanma..:)
naanum solluven,
pidichurukku rajaram sir!
பா.ரா கடைசி வரிகளை பலமுறைப் படித்தப்பின்னும் ... தாண்ட முடியவில்லை ..
இந்த கவிதைக்கு எப்படி வாழ்த்துக்கள்னு சொல்றதுன்னு தெரியல பா.ரா ... மன்னிச்சிக்கோங்க
mama ithu thaan ""கவிஞனில் திரியும் மனிதன்" iyalpaa?
adichu thool parakkuthu
ராகவனின் பின்னூட்டத்திற்காக காத்திருக்கிறேன். :)
என்னங்க சார்.. கலங்க வைச்சிட்டீங்களே... இதுவரையும் பழகத்தான் கத்துகிட்டிருக்கேன்....
உங்களின் இன்னொன்று...
யதார்த்தத்தில் அலையும் வரிகள்..
நன்று.
தலைப்பு நல்லா இருக்குங்க
திரிந்து போவது
என்று பொருள் கொண்டால் தலைப்பு விரிக்கும் வெளி அழகு
வாவ் ராஜாராம். இதுவும் ரொம்ப நல்லா இருக்கு.
அன்பு பாரா,
உங்கள் கவிதையில், கவிஞனில் காலாற உலாத்துகிறான் மனிதன். கால் புதைகிற இடத்தில் நீர் விலகி உலர்வது போன்ற மாயத்தோற்றம் தருகிறது கவிஞனில் திரியும் மனிதனுக்கு எப்போதும்...
பிற்பகலில் கூவும் ஒற்றை குயிலின் குரலில் இருந்த ஏக்கம் உங்களுக்கு மட்டும் தான் கேட்கிறது பாரா... ஏதோ ஈனவுமாய் ஆரோ பாடும்போல் னு ஒரு மலையாள பாட்டு வரும், அதில் கேட்டது போல இருக்கு உங்களின் இந்த வரிகள்... மலைக்க வைக்கிறது விளக்கு பொருத்தி, திரியையும் தூண்டி, எண்ணையில் மூழ்கி காத்திருக்கும் தீக்குச்சி... பொருத்திய பிறகும் தீக்குச்சியா...???
பழைய சவுந்திரராஜனின் பாடல்கள் இது போன்று கூலிங் கிளாஸ் அணிந்தவர்களுக்கு சுயபச்சாதாபத்தின் காரணமாக தன் மேல் பிறருக்கு ஒரு கழிவிரக்கத்தை உண்டு பண்ண எதுவாய் இருக்கிறது போலும்... நான் ஒரு முறை சென்ட்ரலில் இருந்து பழவந்தாங்கலுக்கு சென்று கொண்டிருந்த போது...
மாம்பலத்தில் ஏறிய ஒரு பார்வை இல்லாதவர், தன்னை ஒரு சிறுமி முன் நடத்த, அய்யா, அம்மா கண் தெரியாத பாவிம்மா... எதவாது தருமம் பண்ணுங்கம்மா/அய்யா.. என்று கை நிறைய சில்லறைகளை தேற்றி அடுத்த ஸ்டேசனில் இறங்கி விட்டார், அதற்கடுத்த ஸ்டேசனில் ஏறிய இன்னொரு பார்வை இல்லாத நபர், பாஸ் கவர், ரேஷன் கார்ட் கவர், என்று தன்னை பற்றிய எந்த இரக்கத்தை எதிர்பார்க்கும் குரல் வித்தைகளும், வார்த்தைகளும் இல்லாமல், கம்பீரமாய் ஒரு சிறிய வாக்கிங் ஸ்டிக்குடன் கூவி கூவி விற்று கொண்டிருந்தார்... அவரிடம் பொருட்கள் வாங்கியவர்களின் மூலம் அவருக்கு கிடைத்த பணம் முந்தைய ஸ்டேசனில் இறங்கியரிடம் சேர்ந்ததை விட குறைவாகவே தான் இருக்கும்...
நம் எல்ல்லோருக்குமே... ஒரு மாற்று திறன் கொண்டவர்களை அவர்கள் மாற்று திறன் கொண்டவர்களாய் பார்ப்பதை விட... அவரிடம், அவர்களிடம் இருக்கும் குறையை முன்னிறுத்தி ஒரு அம்பது பைசாவை கொடுப்பது தான் மிகப்பெரிய மனிதாபிமானமான செயலாக தெரிகிறது...
பாராவின் கவிதை என்னை எங்கெங்கோ கொண்டு செல்கிறது... இது போல பயணம் உங்களைப போன்றோர்களை படிக்கும் போது மட்டுமே ஏற்படுகிறது பாரா..
அன்புடன்
ராகவன்
அருமை ராகவன். நிச்சயம் எதிர்பார்த்தேன் இது போன்றதொரு கருத்தை.. hats off to you. :)
//மலைக்க வைக்கிறது
விளக்கு பொருத்தி, திரியையும் தூண்டி
எண்ணையில் மூழ்கி
காத்திருக்கும் தீக்குச்சி.//
நல்ல வரிகள் நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
very nice, as usual...
mmmm...what can I say...super.
As usual.
அன்பு பா.ரா.
மதுரை சரவணன் சொன்னதுதான் எனக்குள்ளும்..!
ஏனோ பழகி விட்டது....இதற்க்கு மேல் சொல்ல வரிகள் இல்லை. வாழ்த்துக்கள்
\\மலைக்க வைக்கிறது
விளக்கு பொருத்தி, திரியையும் தூண்டி
எண்ணையில் மூழ்கி
காத்திருக்கும் தீக்குச்சி.\\
அருமை!
\\Vidhoosh(விதூஷ்) said...
அருமை ராகவன். நிச்சயம் எதிர்பார்த்தேன் இது போன்றதொரு கருத்தை.. hats off to you. :)\\
:-)))
பாலா படத்தில் ஒரு டயலாக்.. என்னமாய் கூவுறான்யா...(நான் கடவுள்)
பூமழை தூவி... :)
கவிஞனில் திரியும் மனிதன்
தலைப்பே நூறு பேசுகிறது
பா.ரா எனது தொகுப்பில் பூங்குழலி என்றொரு கவிதை உள்ளது.
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=2029
நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.
உங்கள் கவிதை அதைவிட அற்புதம்
அன்பு பா.ரா..
வழக்கம்போல வார்த்தைகளினால் உருவாக்கும் மனச்சித்திரங்கள் சொல்லவொன்னா அதிர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்திய வண்ணமே இருக்கின்றன...
கவிதைகளும் கவிதை சார்ந்த பொருளும் ஒவ்வொருவருக்கும் தனது கடந்துபோன வாழ்வின் ஏதேனுமொரு தருணத்தை அது துக்கமாக இருப்பின் சற்று கூடுதலாக நினைவில் கொண்டுவந்து நிறுத்துவதாகவே அமைந்துவிடுகிறதுதான் உங்கள் கவிதைகளின் அற்புதம்..
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த” இது கண்பார்வையற்றவர்களுக்காகவே பாடப்பட்ட பாடலோ என்று தோன்றுமளவு வேறு வேறு பயணங்களில் வேறு வேறு குரல்களில் ஆனாலும் ஒன்றுபோலான அர்த்தங்களில் கேட்டவை இன்னமும் சன்னமாக ஒலிக்கிறது பா.ரா..
இரண்டாவது கவிதை குறித்து என்னிடம் சொல்ல வார்த்தைகள் ஏதும் இல்லை பா.ரா...ஒரு பெரிய ஏக்கப்பெருமூச்சு தவிர..
நாட்கள் கொஞ்சம் கடந்துபோய்விட்டது..பரவாயில்லை விட்ட இடங்களிலிருந்து தொடர்ந்து வருகிறேன்...அதற்காக விட்டுவிட முடியுமா என்ன...
சில விஷயங்களை கவிதை வடிவில் எழுத உட்காரும் போது வார்த்தை வருவதில்லை.. வந்தாலும் உங்கள் வார்த்தையின் இயல்பு வருவதில்லை. பா.ரா பாராதவர். கலக்கல்
ஆஹா..!
பேரானந்தம்.!
தவமிருந்தாலும் வராத
தவரவிடும் நிகழ்வுகள்
தவராமல் வந்துவிடுகிறது
உங்கள் கவிதைகளில்..!
மிக அருமை பா.ரா அண்ணா! உங்கள் கவிதைகள் அத்தனையும் மனதைத்தொடுபவை...இது மட்டும் என்ன விதி விளக்கா? தொடரட்டும்... வாழ்த்துக்கள்!!!
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
இடையறாத வேலை,அலைச்சல்கள்.
தனித்தனியாக கை பற்ற இயலவில்லை.
எல்லோருக்கும் மிகுந்த நன்றியும் அன்பும் மக்களே!
Post a Comment