ஒன்று
(Picture by cc licence, Thanks Christian Haugen)
அவளும் இவளும் வழியில்
அவனும் இவனும் எதிரில்.
கடந்த பிறகு,
அவள் சொல்வாள் இவளிடம்
மெதுவா திரும்பிப் பாரேன்
திரும்பிப் பார்ப்பான் பாரு.
அவன் கேட்பான் இவனிடம்
டக்குன்னு திரும்பிப்பார் மாப்ள
பார்க்கிறாளான்னு?
ஆக,
அவளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்க்கிறார்கள்
இனி,
இவர்களுக்காக அவர்கள்
திரும்பித் தொலைப்பார்கள்.
***
இரண்டு
(Picture by cc licence, Thanks Abhisek Sarda)
முப்பிரி சனலை மூட்டி
ரயில் வண்டி ஓட்டிய அனுபவம்
தந்ததோ என்னவோ
ரயில் டிரைவர் ஆசையை.
பை நிறைய முருக்கு அதிரசம்
வாங்கி வருகிற D.முருகன் அப்பாவை
பார்த்த பிறகு ரோடு ரோலர் ஓட்டுனராக
பிரியம் கொண்டிருந்தேன்.
மெய்யரக்கா மகன் பழனி மாதிரி
பேசாமல் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்
என்ற நினைவிற்கு ராமலிங்க வாத்தியாரின்
புளியங்குச்சிதான் காரணமானது.
முப்பிரி சனல்
முருக்கு அதிரசம்
புளியங்குச்சி மாதிரியே
மஞ்சள் பத்திரிக்கையும்
காரணமாச்சு ஒரு நாள்,
லேடீஸ் டைலராக
விரும்பிய கனவிற்கு.
***
Tuesday, August 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
46 comments:
//அவளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்க்கிறார்கள்//
ஜூப்பர் மாம்ஸ்........ :)
(Picture by cc licence, Thanks Christian Haugen) :)
யப்பா .. லேடீஸ் டெய்லர் கனவு காண இப்படி ஒரு காரணமா?
எல்லாமே சூப்பர் !!
அண்ணா முதல் கவிதை ரொம்ப நல்லாயிருக்கு..இரண்டாவது கவிதை வேணாம்னா அந்த ஆசை...
//அவளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்க்கிறார்கள்//
கலக்கல்..............:)
//லேடீஸ் டைலராக
விரும்பிய கனவிற்கு.//
கெட்ட கனவு.....:(
ஆகா!!!!!!
நல்லா ஆசை தான்... :):):):)....
//அவளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்க்கிறார்கள்
இனி,
இவர்களுக்காக அவர்கள்
திரும்பித் தொலைப்பார்கள்.//
//முப்பிரி சனல்
முருக்கு அதிரசம்
புளியங்குச்சி மாதிரியே
மஞ்சள் பத்திரிக்கையும்
காரணமாச்சு ஒரு நாள்,
லேடீஸ் டைலராக
விரும்பிய கனவிற்கு.//
nalla irukku siththappa...
ஒன்று = ஆஹா!!!
கவிதை நல்லா இருக்குங்க அண்ணா
நல்லாயிருக்குங்க பா ரா அண்ணா..
சின்னதாய் ஒரு சிரிப்பு வருகிறது கனவை நினைத்து .
முதல் கவிதை : யதார்த்த நிகழ்வு அண்ணே
இரண்டாவது : முதல் வாசிப்பில் புரியவில்லை. பின் வாசிப்பில் மெல்ல மெல்ல .. புரிகிறது (கொல்கிறது எனவும்... )
அழகு...... அருமை..... !!!
நல்லாயிருக்குங்க.........கனவு?
பா ரா.. இரண்டும் கலக்கல்.. ரெண்டாவது அழகான கனவு..
முதல் டாப்பு
இரண்டுமே அழகு
:)
ரெம்பவே கெட்ட பயலாத்தான் திரிஞ்சிங்களோ, பாரா?
சரிதான்,வால்மீகி,அருணகிரி மாதிரி பாரா வும்.
சித்தப்பா...
இப்படித்தான் எக்குத்தப்பா காதல்கள் துளிர்த்து விடுகிறது.... நிதர்சனமான உண்மை.
வாத்தியாரின் புளியங்குச்சி.....மிரட்டுகிறது....!
நன்றிகள்!
கவிதை அருமை.வாழ்த்துக்கள்
//அவளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்க்கிறார்கள்//
பிரமாதம்!
பேசத் தயங்கும் விசயம் நீங்கள் இட்ட முடிச்சுகளால் கவிதையானது!
அருமை பா.ரா.
சில அவனும் அவளுக்கும்தான் சில இவனும் இவளும் மாட்டுவார்கள் போல.. அனுபவம் கொட்டுது மாம்ஸ் அப்படியே :)
இவர்களுக்காக அவர்கள்
திரும்பித் தொலைப்பார்கள்.
மனதில் நிற்கும் வரிகளால் அழகிய கவிதை வாழ்த்துக்கள்
முதல் கவிதை சூப்பர்
முப்பிரி சனல்? ரெண்டும் அழகு பா.ரா.
////அவளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்க்கிறார்கள்//
மாமா,
அனுபவம் பேசுது....!
அன்பின் பாரா
அருமை அருமை
அவனுக்காகவும் அவளுக்காகவும் இவனும் இவளும் பார்க்கிறார்கள் - இயல்பான சிறு செயலை வைத்து ஒரு ஓவியம் - சிறு கவிதை - அருமை அருமை
முப்பிரி சனல் - முருகன் அப்பா - புளியங்குச்சி - மஞ்சள் பத்திரிகை - ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின வாழ்வில் கனவு நனவாக உதவி இருக்கின்றன . நல்ல கற்பனை பாரா
தமிழ் மண நட்சத்திரமாக சொலிப்பதற்கு பாராட்டுகள்
நல்வாழ்த்துகள் பாரா
நட்புடன் சீனா
கவிதைகள் பிடிச்சிருக்கு மக்கா.
இப்படி திரும்பிப் பார்த்தே தேறினது நிறைய இருக்குங்க
/பேசாமல் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்/
வேலை அழுத்தத்தின் போது இப்படி அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.!
இந்தப்பதிவின் பூச்செண்டு
அவளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்க்கிறார்கள்
சொட்டு
ராமலிங்க வாத்தியாரின்
புளியங்குச்சிதான் காரணமானது.
குட்டு
மஞ்சள் பத்திரிக்கையும்
காரணமாச்சு ஒரு நாள்,
நல்லாருக்கு அவன், அவளுக்காக இவன், இவள் திரும்புறது!
ஆசை...! சின்ன வயசுல நாம ஆகர்ஷிக்கிற எல்லாருமே நம்மள அவங்க மாதிரி ஆகறதுக்கு ஆசைப்பட வெச்சிடுறாங்க இல்லையா!
பாருங்க... கவிதை எப்டி பாராட்டுறதுன்னு தெரியாம என்னன்னமோ பேசிட்டு இருக்கேன்... இப்போ எனக்கு உங்கள மாதிரி கவிஞரா ஆகணும்னு ஆசை... ஹ்ம்ம்ம்!
//இனி,
இவர்களுக்காக அவர்கள்
திரும்பித் தொலைப்பார்கள்.//
கவிதை சூப்பர்
இவர்களுக்காக அவர்கள்
திரும்பித் தொலைப்பார்கள்.
என்ன இயல்பாய் வார்த்தைகள்.. அடடா..
// விந்தைமனிதன் said...
ஆசை...! சின்ன வயசுல நாம ஆகர்ஷிக்கிற எல்லாருமே நம்மள அவங்க மாதிரி ஆகறதுக்கு ஆசைப்பட வெச்சிடுறாங்க இல்லையா!//
சரியான புரிதல். பெரிய வயசிலும் அப்படித்தான். ஒரு எல்லையை எட்ட ஆசைகொண்டதாகவே இருக்கின்றன நம் நடபடிகள். அந்த எல்லையில் இருந்து நம்மை ஈர்ப்பது எது/யார் என்றும் நமக்குத் தெரியும்.
புறமுதல்வாதக் கவிதைகள்.
//ராமலிங்க வாத்தியாரின்
புளியங்குச்சி// என்னும் revulsive influence-ஐ ரசித்தேன், ஒரு மாறுபட்ட tone & shade-ஐக் கொண்டு தருவதால்.
தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை.
ரெண்டும் நல்ல கவிதை.
நான் அப்படித்தான் வாசித்துக்கொள்வேன்.
இப்பெ என்ன செய்வாய் தோழனே.
தலைப்புதான் கவிதையின் அழகே!
ரசித்தேன்.
//லேடீஸ் டைலராக
விரும்பிய கனவிற்கு.//
இப்படி ஒரு கனவு இருந்துச்சு னு அண்ணிக்கு தெரியுமுங்களா?
ராஜா சார்வாள் வார்த்தைகளை படிப்பதற்க்கே தாமதமாக வரலாம் போல...
முதல் கவிதை மிகப்பிடித்தது அண்ணா!
//அவளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்க்கிறார்கள்//
:) :) :)
//மஞ்சள் பத்திரிக்கையும்
காரணமாச்சு ஒரு நாள்,
லேடீஸ் டைலராக
விரும்பிய கனவிற்கு//
;) ;) ;)
கனவுகளுக்கு மட்டும் கட்டுப்பாடே கிடையாது..
ரெண்டுமே சூப்பர் பா...
அருமைண்ணே.
சிவாஜி மாப்சு, நலமா? நன்றி! உங்களை பார்த்ததாக நேசன் சொன்னார் ஓய்.
நன்றி ருத்ர வீணை!
தமிழ், நலமாடா? நன்றி பயலே!
நன்றி ரவி!
நன்றி taaru!
குமார் மகன்ஸ், மிக்க நன்றி!
நன்றி எஸ்.கே.பி!
லாவண்யா, நன்றிடா!
நன்றி, இர்ஷாத்!
மஹிக்கா நன்றி!
நன்றி வேல்கண்ணா!
நன்றிங்க சித்ரா!
நித்திலம் சிப்பிக்குள் முத்து, நன்றி!
வினொஸ், :-)
ஜமால் மக்கா, நன்றி!
நன்றி வேலு.ஜி!
நன்றி சுசி!
வாசன்ஜி, ரெம்ப ரெம்ப. அதுசரி, மற்ற ரெண்டு பேரும் யாரு? நன்றிஜி! :-)
நன்றி தேவா!
மதுரை சரவனா, நன்றி!
நன்றி ஜனா!
வேல்ஜி, நன்றி!
ஆர். கே. மாப்ஸ், குசும்பு? நன்றி ஓய்!
நன்றிடா சக்தி!
நன்றி டி.வி.ஆர்.சார்!
மூன்று சனலை சேர்த்து திரட்டிய சனல் பாலாண்ணா. (சாக்கு முடைவோமே) நன்றிண்ணா!
சத்து மாப்பு, நன்றி! :-)
சீனா சார், ரொம்ப நன்றி!
நன்றி சுந்தரா!
நன்றி டீச்சர்!
என்ன கொடுத்தாலும் சரிதான்ப்பு. மகன் இல்லையா? மகன்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன் கேட்டீரா?
வி.எம், நன்றி! அண்ணனுக்கு முன்பாக வந்தது சுளுவாக இருந்தது.
நன்றி அன்பரசன்!
நன்றி ரிஷபன்!
நன்றியண்ணே!
காமு, 'ரெண்டுங்' ஓய். ரெண்டும் அல்ல. விழிச்சுப் பாரும். உதைப்பேன். நன்றி காமு!
இந்த காமுவை என்ன செய்யலாம் மாது? மொட்ட மாடில போட்டு பெரட்டிருவோம். சரியா? நன்றி மாது!
கல்யாணி, மூச்! நன்றி பயலே!
சரிங்க ஹெட் மாஸ்டர்வாள்! ( வால் படவா)
நன்றிடா ராதூஸ்!
சினேகிதா, நன்றி!
nallaayirukku rajaram sir.....
nallaayirukku rajaram sir.....
Post a Comment