ஒன்று
(Picture by cc licence, Thanks Shadowgate)
இறந்த வீட்டிற்கு
வந்தால்தான் என்ன?
அட,
வந்தவர்கள் சொல்லிக் கொண்டு
போனால்தான் என்ன?
இறந்தவரோடு
சேர்ந்து கொண்டு
வந்தவர்களுமா சாகடிப்பார்கள்?
***
இரண்டு
(Picture by cc licence, Thanks Ajay Tallam)
தனக்கு உண்ணிங்கிற பெயர்
ஏன் வந்துச்சுன்னு தெரியல என
வருந்தி சொல்லிக் கொண்டிருந்தான்
அரிக்கிட்டு.
நல்லவேளை,
அரிக்கிட்டுங்கிற பெயர்
எப்படி வந்தது என
கேட்க இருந்தேன்.
Thursday, September 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
44 comments:
//அறிக்கிட்டுங்கிற பெயர்
எப்படி வந்தது என
கேட்க இருந்தேன்.//
”அறிக்கி” கேள்விப்பட்டிருக்கேன். அதென்ன அறிக்கிட்டு:)
அப்பா முதல் கவிதை எதார்த்தம்.. ரெண்டாவது நல்லா இருக்கு...
Both are good Raajaaraam.
Corrikittuuuu...
Kavithai kalakkal....apram oru nalla vishayam unga kitta sollanum.
Viraivil azhaikkiren.
அறிக்கிட்டு :-))
புதுசா இருக்கு!
1. :-)
2. //”அறிக்கி” கேள்விப்பட்டிருக்கேன். அதென்ன அறிக்கிட்டு:)// அதானே ...
பதில் சொல்லுங்க அண்ணே ..
ஆமாம்....... அறிக்கிட்டு பெயர் எப்படி வந்தது?
அப்படி என்றால் என்னவென்றும் சொல்லவும். :-)
முதல் கவிதை எதார்த்தம்.. அறிக்கிட்டு பேரா..? பாரா
கவிதை அருமை.
இந்தவார ஆனந்தவிகடன் கவிதை
நீங்க எழுதியதுதானா?
' அறிக்கிட்டு' அப்படீன்னா என்னாங்க? கவிதை சூப்பருங்க......
நல்லா இருக்கு...
நல்லா இருக்கு...
இழவு வீட்டுல "வர்றேன்/வரட்டுமா"ன்னு சொன்னா இன்னொரு வருகை அப்படியே அமைஞ்சிடும்னு ஒரு மூட நம்பிக்கை. (இன்னொரு இழவு விழவே வாய்ப்பில்லாத வீடும் உண்டா?). மூட நம்பிக்கையோட mood-ஐப் புரிஞ்சுக்கிட்டு Loose-ல விடுங்க.
அறிக்கிட்டு = ஹரிகிருஷ்ணன்
ரெண்டும் நல்லாயிருக்கு சித்தப்பா.
நீங்கள் போடும் படங்கள் அனைத்து அருமை.
முதல் கவிதை டாப். :)
நல்லாயிருக்குங்க
நல்லாருக்கு..
அறிக்கிட்டு....அருமை சித்தப்பா.....!
முதாலவது...ஆற்றாமை.....!
அறிக்கிட்டு - ஹரி கிட்டு தானா
இனிமே சொல்லிட்டே போவோம்
அன்பு பா ரா
குறுகிய மனம் பழகிய பழக்கம் முதல் கவிதையில் , இன்னும் தொடர்கிறது நிஜமாகவே சாவடிக்கிறாங்க..செத்து வருத்தபடறவங்க வீட்டுக்கு போய்ட்டு அவங்கள அம்போன்னு விட்டுவிட்டு போயிடனுமாம் வர்றேன்னு சொன்னா நம்பளோட சாவும் வந்திடுமாம் ஐயோ!!
குறுகிய மனம் போய் குறுகிய பெயர்
இரண்டாம் கவிதை
நன்றி ராஜசுந்தரராஜனின் பின்னூட்டத்திற்க்கு
இரண்டுமே அருமை பா ரா
நன்றி ஜேகே
இரண்டுமே, அட!!
நண்பர்களுக்கு,
'அரிக்கிட்டு' என்று இருந்திருக்க வேணும். ஸ்பெல்லிங் மிஸ்டேக். இனி, தம்பி வந்துதான் மாற்ற வேணும். மாற்றுவான். அண்ணன் சொல்வது போல "ஹரி கிருஷ்ணன்தான்" பெயர். சிவகங்கையில், மிக சுவராசியமான ஒரு கேரக்டர்! அரிக்கிட்டை தெரியாத சிறுவர்கள் இருக்க மாட்டார்கள், பிழைச்சுக் கிடந்தால், பிறகொரு நாள் விரிவாக பார்ப்போம் அரிக்கிட்டை.
சுவராசியம் என்னவெனில், அப்படியே அரிக்கிட்டு போலான ஒரு புகைப் படத்தை தேர்வு செய்திருக்கிறான் கண்ணன். அவனும் அரிக்கிட்டை கடந்தவன்தானே.
.
முதலாவது கடைப்பிடிக்க வேண்டியது,
இரண்டாவது கேள்வி கேட்பதர்க்கு முன்பு யோசிக்கனும்.
நல்லா கேளுங்க!
ரெண்டுமே அசத்தல் மாம்ஸ் :)
ஆகா!
இது கவிதை வாரமா ? கேட்க விட்டது புரிந்தது.
நட்சத்திர வாழ்த்துகள் பா.ரா அண்ணே..
வருஷம் முழுதும் பக்கத்துலயே இருந்துட்டு நட்சத்திரமான நேரத்துல ஒண்ணா சேர்ந்து ஒரு டீ குடிச்சிக்கிட்டே கொண்டாட முடியாத அளவுக்கு ஆயிருச்சி பாருங்கண்ணே. சரி கோல்டன் ஜூஸ் கார்னர்ல இருந்து பேசுறேன்னு நெனைச்சுக்கோங்க மக்கா.
அன்பான அண்ணனுக்கு நிறைய அன்பும் வாழ்த்துகளும்.
ரெண்டு கவிதையுமே அதனதன் போக்கில் அழகு.
ரெண்டு கவிதையுமே அதனதன் போக்கில் அழகு.
இரண்டு கவிதைகளும் நல்லா இருக்கு ப.ரா.
ஆனந்தவிகடனில் உங்கள் ’அழகு’
கவிதை அருமை.’வழுக்கி விழும் வீடு ‘
படித்தேன் நல்லா இருக்கு.
ரசித்தேன்.
//இறந்தவரோடு
சேர்ந்து கொண்டு
வந்தவர்களுமா சாகடிப்பார்கள்?//
!!!! :(
//நல்லவேளை//
கேட்குறதுக்கு முன்னாடியே தெரிஞ்சது :)
இரண்டும் அருமை பா. தலைப்பு மிகப் பொருத்தம்.
ரவி, நன்றி!
சரி, வினோ!
நன்றி மோகன்ஜி!
செய்யது, உங்க அழை எண் தவறவிட்டேன். அழையுங்களேன். நன்றி பாஸ்!
நன்றி வாலு வசந்த்!
நன்றி வேல்கண்ணா! (இன்னும் ஸ்பெல்லிங், ஒற்று பிழைகள் எல்லாம் சரிவர புரியல வேல்கண்ணா) வண்டி ஓடுது.:-)
எப்படி சொல்வேன் சித்ரா, அரி அறியானதை? நன்றி பாஸ்! :-)
தேனூஸ், (ஆமாங்க ஆமா என்பார்களே ஒரு தும்மல் போட்டு) அப்படி. நன்றி மக்கா!
வாங்க வெண்புரவி, நன்றி! ஆம்.
நித்திலம், நன்றி!
நன்றி டி.வி.ஆர். சார்!
நன்றியண்ணே!
குமார் மகன்ஸ், நன்றி!
நன்றி பாலாண்ணா!
நன்றி வேலு.ஜி!
வித்யா நன்றி!
நன்றி தேவா!
பா.ரா ரெண்டுமே அட்டகாசம். வாழ்த்துக்கள்..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
2-me pidichurukku..
vaazhthukal rajaram sir.
பா.ரா.. எப்பொதும் போல் அசத்துறீங்க.. அரிக்கிட்டு பற்றி இரண்டு கதை எழுதி 1983 -ல் ஆனந்தவிகடனுக்கும் குமுதத்திற்கும் அனுப்பியதாக ஞாபகம்.. கையில் பிரதி கூட இல்லை.. ஆனால் என்றாவது எழுதுவேன்..நான் எழுதுவதை விட நீங்கள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
அன்பின் பாரா
துயரம் நிகழ்ந்த வீட்டில் வருபவர்கள் சொல்லிக் கொண்டு போவதில்லை - காலம் காலமாக வந்த நம்பிக்கை - சிதைக்க முயலாதீர்கள்
அரிக்கிட்டு - ம்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள் பாரா
நட்புடன் சீனா
எளிமை + அழகு...
நன்றி ஜமால் மக்கா!
ஜேகே மக்கா, நன்றி!
நன்றி எஸ்.கே.பி!
நன்றி மகன்ஸ்!
நன்றிங்க டீச்சர்!
ஆர்.கே. மாப்ஸ், நன்றி!
நன்றி அப்பாதுரை!
நன்றி மஹிக்கா!
சரவனா, அம்மா, ஹரிணி நலமா? அப்படித்தான் எடுத்துக்கிறேன். மிஸ் யூ மக்கா.நன்றி சரவனா!
நன்றி ரிஷபன்!
அப்படியா? சந்தோசமும் நன்றியும் கோமதி அரசு!
நன்றி ஜெரி!
ராதூஸ், நல்லாருக்கா? சரிடா தாயி.
ரொம்ப நன்றி ஆர்.வி.எஸ்!
எங்கங்க போனீங்க ரசிகை? ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை இதே வேலையா போச்சு உங்களுக்கு. :-) நன்றி ரசிகை!
நன்றி வெற்றி சார்! போன பயணத்தில் அரிக்கிட்டை பார்த்தேன். ரொம்ப தளர்ச்சி. விரலிடுக்கில் லாட்டரி டிக்கட்டும் கையுமாக. வாழனும். இல்லையா?
சரி, சீனா சார். நன்றியும்!
ப்ரியா குட்டி, உன்னை விட்டுட்டேண்டா நன்றி சொல்ல. நன்றி பயலே!
சொல்லாமல் போவது மட்டும் தானா?நொந்தவர்களை நோகடிக்க இங்கே ஆயிரம் உண்டு பா ரா ..அதற்கு செத்தவரோடு செத்தே போயிருக்கலாம் எனத்தோன்றும் ...
இருந்து விட்டு போகட்டும் என்போர் அனுபவித்தால் தெரியும் என கூற கூசுகிறது மனம் ...வேண்டாம் ..
கலங்க அடிக்கீறீங்க
நன்றி பத்மா! நீங்க தனியா கலங்கடிக்கனுமாக்கும்? வாங்க பத்தூஸ்...
அண்ணா, முதல் கவிதையில் கலங்கி போனேன். கடந்த இரண்டு முறையாக ஊருக்கு போகும் போது இரண்டு இடத்தில் இப்படி போய் வந்தது மிகவும் கவலையாக இருந்தது. அதே வீட்டுக்கு போய் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு வரவாயின் இன்னொரு முறை போகலாம் என்றேன் கணவரிடம்.
Post a Comment