ஒன்று
(Picture by cc licence, Thanks Travelmeasia)
எதிர் வீட்டில்
தேக்கு மரம்.
நம் வீட்டில் வெறும்
டேபிள் ரோஜா.
எதிர் வீடு
விசாலமானது.
நம் வீடு வெறும்
பத்துக்கு பத்து.
எப்பப் பார்த்தாலும்
நம் வீட்டில் மகள் அழுவாள்.
அல்லது மனைவி.
எப்படி பார்த்தாலும்
நம் வீட்டில் மட்டுமே
சத்தம் கேட்கும்.
***
இரண்டு
(Picture by cc licence, Thanks David McKelvey)
நாய்கள் ஜாக்கிரதை
கண்ணைப் பார் சிரி
வீடு விற்பனைக்கு
மாறி மாறி கூவுகின்றன
போர்டுகள்
அதே கதவில்
அவர்களைப் போன்றே
கூசித் தொங்குகிறது
post எழுதிய பெட்டி.
***
Friday, September 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
//கூசித் தொங்குகிறது
post எழுதிய பெட்டி.//
நல்ல கற்பனை. நல்லாயிருக்கு.
இரண்டும், நன்று.
நட்சத்திர வாரத்தை அழகாக்குகின்றன மக்காவின் கவிதைகள்.
நல்லா போய்ட்டு இருக்கு தல.
:-)
இரண்டும் இரண்டு மலர்கள்...
வாசம் அருமை சித்தப்பா.
POST BOX NICE ONE ANNA...
அப்பா நானும் ஆஜர். இரண்டும் கலக்கல்...
அட்டகாசம்:). அதிலும் ரெண்டாவது அபாரம்.
பா.ரா இரண்டும் இரண்டு முத்துக்கள்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ரொம்ப நல்லாயிருக்குங்க
நல்லாயிருக்கு
கூசித் தொங்கும் தபால் பெட்டியோடு கூசித்தான் போகிறது மனமும்...!
நல்லா இருக்கு சித்தப்பா..!
//அதே கதவில்
அவர்களைப் போன்றே
கூசித் தொங்குகிறது
post எழுதிய பெட்டி.// super.
ரெண்டுமே தூக்கலான கவிதைகள். சத்தம் ஓங்காராமாகக்கேட்கட்டும்.
இந்த ஜாக்கிரதையைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு பயமாக இருக்கும்.நாய்கள்பேரிலல்ல.இன்னொன்று எந்த திருடனும் தலைவாசல் வழியே வந்ததாக நான் கேள்விப்படவே இல்லை.
இரண்டாவதின் 'கூச்சம்'
முதல் கவிதையில் வந்தது எனக்கு.
ரசித்தேன் பா ரா அண்ணா
மாமா,
இதெல்லாம் பா.ரா-வின் முத்துக்களா, சொத்துக்களா?
நல்லாருக்கு.
அருமை மாம்ஸ் :)
இரண்டுமே ரொம்ப நல்லா இருக்குப்பா...
சூப்பர்.
அப்புறம் ஒரு பர்சனல் கேள்வி. எனக்கு எல்லா இலக்கிய வடிவமும் வசப்படுது(?!). இந்தக் கவிதையும் கடித இலக்கியமும்தான் வரவே மாட்டேங்குது. நீங்க எப்படி இவ்ளோ நல்லா கவிதை எழுதுறீங்க? தயிர்ல சக்கர போட்டு சாப்பிடுவீங்களா!!:)
அழகுன்னு சொல்றதைத் தவிர வேறென்ன சொல்றது?
அன்பின் பாரா
அருமை அருமை - சத்தம் கேட்கும் வீடு தான் வீடென அழைக்கப்படும்
தபால் பெட்டி கூட கூசும் நிலை - வேண்டாம்
கருத்து கற்பனை எல்லாமே அருமை -
நல்வாழ்த்துகள் பாரா
நட்புடன் சீனா
Nice sir.
நட்சத்திர வார கவிதைகள் அனைத்துமே மெல்லிய சிரிப்பு தருகின்றது...
நலம் பாரா சார்,
நலமறிய ஆவலும்...
இரண்டும் அருமை!!
அருமை பா.ரா. அண்ணா
நல்லா இருக்குங்க...
எப்படி பார்த்தாலும்
நம் வீட்டில் மட்டுமே
சத்தம் கேட்கும்.
அங்கேயுமா?!
தயிர்ல சக்கரையா? அப்படியா பா ரா சார்?:))
எனக்கும்/ எல்லாருக்கும் சத்தமா இருக்கிற வீடு தான் பிடிக்கும் ....
பத்துக்கு பத்தாயினும் சப்தத்தால் உயிர்ப்போடிருப்பது உயர்வே.
இரண்டும் எளிமையான அழகு அவிதை பா.ரா.
//எப்படி பார்த்தாலும்
நம் வீட்டில் மட்டுமே
சத்தம் கேட்கும்//
அப்படிப் போடுங்க!
ம்ம்ம்... ஓக்கே.... ஓக்கே...
//எப்படி பார்த்தாலும்
நம் வீட்டில் மட்டுமே
சத்தம் கேட்கும்.//
ஆமாப்பா... அதெப்படி??
//கூசித் தொங்குகிறது
post எழுதிய பெட்டி.//
:(
ஒரு போஸ்ட் பாக்ஸோட உணர்ச்சியைக் கூட உணர்ந்து எழுதுவீங்களாப்பா???
nice.......
நன்றி ருத்ர வீணை!
எஸ்.கே.பி மிக்க நன்றி!
நன்றி சரவனா!
நன்றி சித்ரா!
குமார் மகன்ஸ், நன்றி!
சரிடா தமிழ். நன்றி!
ஓகே வினோ! :-)
நன்றி பாலாண்ணா!
ஆர்.வி.எஸ். நன்றி!
நன்றி வேலு.ஜி!
ரொம்ப நன்றி டி.வி.ஆர்.சார்!
தேவா மகன்ஸ், நன்றி!
நன்றி, ம.ச! (நெருக்கமா இருக்கு)
நன்றி காமு!
வேல்கண்ணா, நன்றி!
நன்றிடா சக்தி!
சத்து மாப்பூ, நன்றி!
நன்றி, ஆர்.கே!
கமலேஷ், சரிடா.
நன்றி கோபி! இங்கயும் தொடங்கிட்டீரா? நடத்தும்.. :-)
நன்றி விந்தை மனிதன்!
ரொம்ப நன்றி சீனா சார்!
அன்பரசன், மிக்க நன்றி!
நன்றி கீதா!
ரவி, நன்றி!
நன்றி அக்பர்!
நன்றி கலா நேசன்!
நன்றி ரிஷபன். எங்கயும்!
தயிர், சக்கர பார்ட்டி செம கலக்கல். போய் பாருங்களேன். நன்றி பத்தூஸ்!
வாஸ்தவம் நிலாமகள். நன்றி!
நன்றி கோமதி அரசு! (சரி, ரெகுலரா வர தொடங்கிட்டீங்க, ஜின்னு கூப்பிட்டா என்ன பாஸ்?)
ஜனா, நலமா? நன்றி மக்கா!
ராதூஸ் படவா, பிச்சுப் புடுவேன் பிச்சு. :-)
சர்தாங்க முதலாளி! :-)
//எப்படி பார்த்தாலும்
நம் வீட்டில் மட்டுமே
சத்தம் கேட்கும்.//
சத்தங்கள் நிறைந்த வீடுதான் எனக்கும் பிடிக்கும் அண்ணா. ( எப்படி இருக்கீங்கண்ணா?)
//எப்பப் பார்த்தாலும்
நம் வீட்டில் மகள் அழுவாள்.
அல்லது மனைவி.
எப்படி பார்த்தாலும்
நம் வீட்டில் மட்டுமே
சத்தம் கேட்கும்.//
இது ரொம்ப உயிரோட்டமா இருக்கு அண்ணா
நல்லாருக்கேண்டா கல்யாணி. நீ நலமா? நன்றி!
லாவன்ஸ், நன்றிடா! :-)
அருமை பா ரா, சத்தமில்லா வீடு ஒன்று இருந்தால் அது வீடாயிராது இருக்க ஆசை தான் , மனைவி குரல் கேட்காது இருந்தால் ஒரு வெறுமையுந்தான்..
ரொம்ப நல்லா இருக்கு பா ரா
ஜேகே
எல்லாமே அருமை..
அதிலும் அந்தக் கடைசி இரண்டு கவிதைகள் சத்தியமாக நெஞ்சைத் தொட்டன...
super.
Post a Comment