Tuesday, April 19, 2011

சேது உங்களுக்காக

ஒன்று


(Picture by cc licence, Thanks Raphael Quin)

குழந்தை ஊதிய
காற்றைக் குடித்த சோப்புக் குமிழ்
சாஸ்வதத்தை தேடிச் சென்றது.

வாஸ்தவத்தில் அது
குமிழ் பிறப்பித்த
வாயில் அல்லவா இருக்கிறது?

இரண்டு


(Picture by cc licence, Thanks Karthick Makka )

ன்னை மட்டும் தனியாக
பார்க்கத் தெரிந்த அவளுக்கு

வளுக்கு மட்டும் தனியாக
சொல்ல முடிந்த என்னால்

ல்லோரும் கேட்கும்படி
சொல்ல நேர்கிற வார்த்தைகள்-இந்த
'என் தோழி!'

மூன்று


(Picture by cc licence, Thanks Karthick Makka)

லிக்கா வலிக்கா
எனக் கேட்டு கன்னத்தில்
அடித்துக் கொண்டிருந்தாள்
பப்லுக் குட்டி.

ச்சோ..தாத்தாக்கு வலிக்கி என
அவளாகவே முத்துகிறாள்
அடித்த இடத்தில்.

ரண்டுமே ஒரே
மாதிரிதான் வலிக்கிறது.

நான்கு


(Picture by cc licence, Thanks Sn.Ho)

மீனிற்குத்தான் பொரி தூவல்
கோவில் குளத்தில்.
மீனை விட அதிகம் கவ்வுகிறது
இந்த நிலா.


ஐந்து


(Picture by cc licence, Thanks Sn. Ho)

டவுள் தோன்றி
கடவுளான கதையைப் பற்றி
கூறிக் கொண்டிருந்தார்.

'ய்..உய்..உய்'

ழக்க தோஷத்தில்
விசில் பிரித்துக் கொண்டிருந்தேன்.

ந்த திரைக்குள் நுழைந்த கடவுள்
கடவுளர்களிடம் கேட்டார்

'னுஷனா இவன்?'

***

டிஸ்கி:

அடுத்த கவிதை 'எங்களுக்கு அப்புறம்தான் கல்கி, விகடனுக்கெல்லாம்' என்று நண்பர் சேது உரிமையுடன் கேட்டிருந்தார். எனவே, இந்த 'சேது உங்களுக்காக' நம் சேதுவிற்காக.

(பிரசுரத்திற்கு மறுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டு, 'என்னமா வூடு கட்டுறான்' எனக் கேட்பார்கள் நண்பர்கள் சுகுணாவும், கதிர்பாரதியும்...)

கேட்கட்டும்... நல்லதும், கெட்டதும் நண்பர்கள் கேட்டால்தானே அழகு!

***

38 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

'உய்..உய்..உய்'

நேசமித்ரன் said...

முதல் நான்கு கவிதைகளும் இதற்கு முன் நிற்கும் நான்கு இடுகைகளையும் அளந்து கடக்கின்றன கிருஷ்ண ஜெயந்தி பாதம் போன்ற பாதங்களுடன்

ராமலக்ஷ்மி said...

எல்லாமே அருமை. 3,4,ஐந்து மிகப் பிடித்தன:)!

விஜய் said...

நிலவைப்போல் எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ கவிதை பொறிகளை


வாழ்த்துக்கள் பங்கு


விஜய்

Chitra said...

படங்களும் கவிதைகளும் அழகு.

dheva said...

மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டு இருக்கிறேன் சித்தப்பா...

உங்க வரிய படிச்ச உடனே டக்குனு மனசு என்னமோ பண்ணுது..நிலா கவ்வியது போல கவிதையை கவ்விக் கிடக்கிறது மனசு பிரிய மனமில்லாமல்!

ராகவன் said...

அன்பு பாரா,

எப்படி இருக்கீங்க பாரா?

நேற்று தான் பேசிக்கொண்டிருந்தேன்... பாரா எழுதி ரொம்ப நாளாச்சு என்று மாதவராஜிடம்...

வந்து பார்த்தால் ‘திங்’கென்று வந்து நிற்கிறது... கருக்குவேல் அய்யனார் கணக்கா...

முதல் கவிதை... மற்ற கவிதைகளில் இருந்து வேறுபடுகிறது... ஆனா எனக்கு புரியவில்லை... சாஸ்வதம் என்ன என்பதில் உண்டான குழப்பமாய் இருக்கலாம் பாரா...

இரண்டாவது கவிதை... பழங்கவிதைகளில் சாயலில் இருந்து மாறுபடவே இல்லை. இதில் இருந்து வெளியே வரமுடியாது. கோணங்கி என்னுடன் ஒருமுறை பேசும் போது சொன்னார்... பழசுல இருந்து வரவே முடியாது...அது தான் வரும் கடைசி வரைன்னு... சரியாத்தேன் இருக்கு அது...

மூன்றாவது... கடைசி வரியை கொஞ்சம் மாற்றியிருக்கலாம் என்று தோன்றியது...

நான்காவது கவிதை...
மீனை விட அதிகம் கவ்வுகிறது ‘இந்த’ தேவையில்லை என்று நினைக்கிறேன்... வெறும் நிலா...

ஐந்தாம் கவிதை...
எனக்கு ரொம்ப பிடித்தது... அழகான கவிதை...

அன்புடன்
ராகவன்

சுசி said...

எல்லாமே அருமை.

தோழி மிக அருமை.

படங்கள் உங்க கவிதை பக்கத்தில உயிர்ப்போட இருக்கு.

விக்னேஷ்வரி said...

நீங்க எழுதி ஏதாவது நல்லா இல்லாம நெகிழ்வா இல்லாம இருந்திருக்கா மாம்ஸ்..

அமைதிச்சாரல் said...

எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா..

மணிஜி...... said...

ப.ரா.....என் சிரசில் கால் பதித்து , விமோசனம் அளியுங்கள்..

சுந்தர்ஜி said...

குழந்தை ஊதிய குமிழாய் இருப்பதாலோ குமிழும் குழந்தை போல்.

தனியே பார்க்கத் தெரிந்தவளுக்கு தனியே சொல்ல முடிந்ததையெல்லாம் பொதுவில் சொல்லணுமா பா.ரா.?

குழந்தைகளின் தண்டனையும் இனிமை.வரமும் இனிமைதான்.இன்னுங் கொஞ்சம் என்று ஏங்கவைப்பவை.சபாஷ்.

பொதுவில் மீனோ-நிலாவோ எதுவும் கேட்காதவற்களுக்குத்தான் எல்லாமே கிடைக்கிறதோ?

கடவுள் மனிதனாகி மனிதனைப் பார்த்த பார்வையோ?

எனக்கு மூன்றும் ஐந்தும் மல்கோவா.மத்த மூணும் இமாம்பசந்த்.

sakthi said...

என்னை மட்டும் தனியாக
பார்க்கத் தெரிந்த அவளுக்கு

அவளுக்கு மட்டும் தனியாக
சொல்ல முடிந்த என்னால்

எல்லோரும் கேட்கும்படி
சொல்ல நேர்கிற வார்த்தைகள்-இந்த
'என் தோழி!'


class

sakthi said...

அச்சோ..தாத்தாக்கு வலிக்கி என
அவளாகவே முத்துகிறாள்
அடித்த இடத்தில்.

இரண்டுமே ஒரே
மாதிரிதான் வலிக்கிறது.


சிறு வரிகளில் சில வரிகளில் மனதை சிலிர்க்க செய்யும் வரிகள் உங்களுடையவை :)))

இராமசாமி said...

அசத்தல் அத்தனயும்...

க.பாலாசி said...

தூள்... தட்டிய கைகளையும் ‘முத்து’கிறேன்.

ஓலை said...

அற்புதம். அற்புதம். ஒவ்வொன்றும் கண் குளிருது,

நன்றி நண்பரே! கை கூப்பி வணங்குகிறேன்.

ஓலை said...

பாத்தீங்களா பா.ரா. நேசனின் பின்னூட்டத்தில் கூட எவ்வளவு அற்புதமா வெளி வந்திருக்கு.

அது தான் உண்மையும் கூட. கல்கி விகடன் விட எங்களுக்காக (பதிவுலகுக்காக) வந்துள்ளது ஸ்பெஷல் கல்கண்டு.

நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

ஹா ஹா.. தூள் :-)

thendralsaravanan said...

எல்லாமே அழகான கவிதை...வாழ்த்துக்கள்!

Mahi_Granny said...

மனுஷனா இவன்?' ஆஹா

rajasundararajan said...

வணிகத் தாளிகைகளால் புறக்கணிக்கப்பட்ட கவிதைகளா? என்றால், நன்றாகத்தான் இருக்கும்.

ஒன்று: The creator is the eternal one.

இரண்டு: In a wide angle, particulars tend to become universals.

மூன்று: That pain is called, in other words, Generation Gap (in a positive sense).

நான்கு: Survival Vs Reflection. The distant connection attracts!

ஐந்து: It is in the created world that the problem exists.

என்று நன்றாகத்தான் இருக்கின்றன.

சென்னை வடபழனி ஆவிச்சி பள்ளிக்கு அடுத்து அதே வரிசையில் இருக்கிற 'டாஸ்மாக்' நடையில், மிதிபட்ட அழுக்கோடு ஒரு தாள் கிடந்தது. வண்ண அச்சில் அதன் பக்க எண்; கருப்பு அச்சில் ஒரு கவிதை. குனிந்து பொறுக்கி எடுத்தேன்:

/அழுது கொண்டிருந்த ஆயாவை
கண்ணுற்ற குழந்தை...

அழத் தொடங்கியது./

என்று முடிக்கப்பெற்று, தாழே, பா.ராஜாராம் என்று இட்டிருந்தது.

இந்த ஐந்து கவிதைகளுக்கும் அப்படி நேர வாய்ப்பில்லாமல் போனதற்காக மகிழ்வதா, வருந்துவதா (குப்பைத் தொட்டிக்குள் கழிக்கப்பட்டுக் கிடக்கிற காலண்டர்த் தாள்க் கடவுளைக் கேட்கிறேன்)?

Rathnavel said...

நல்ல கவிதைகள்.
வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அண்ணா...பெரிசா விசில் அடிக்கிறேன்.கேக்குதா !

D.R.Ashok said...

வயசானாலே இப்படிதான் சித்தப்ஸ்... ;) நானும் கண்ணாடி போட்டுட்டேன்... :)

ஐந்தும் அருமை

குழந்தையின் மழலையில் சாஸ்வதம் ஓக்கே...

இரண்டாவது மிக பிடித்துயிருந்தது...ஏற்கனவே... திருமனமண்டபத்தில் தோழியை பற்றி எழுதிருக்கிறீர்கள்..

நெகிழ்ச்சி... :)

D.R.Ashok said...

எங்களுக்காகவும் கவிதைகளை எடுத்து போகிறேன்...

நானும் என் கவிதைகளை எந்த பத்thiரிக்கைகளுக்கும் அனுப்பியதில்லை...பிரசுரிக்கமாட்டாங்கன்னு இல்லை...100% சோம்பேறித்தனம்தான்... :)

(excuse me for spelling mistakes..beocz செம்ம மப்பு while I typing this)

நேசமித்ரன் said...

ரா.சு அண்ணன்

வந்தனங்கள் :)

சி.பி.செந்தில்குமார் said...

>>அடுத்த கவிதை 'எங்களுக்கு அப்புறம்தான் கல்கி, விகடனுக்கெல்லாம்' என்று நண்பர் சேது உரிமையுடன் கேட்டிருந்தார்.

ஹி ஹி ஹி

சிநேகிதன் அக்பர் said...

//rajasundararajan said...

வணிகத் தாளிகைகளால் புறக்கணிக்கப்பட்ட கவிதைகளா? என்றால், நன்றாகத்தான் இருக்கும்.//

ஹா. ஹா.. ஹா...

வந்த பின்னூட்டங்கள் அனைத்துமே எனது கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளதால். தயை கூர்ந்து அதையே எனது கருத்தாகவும் எடுக்க வேண்டுகிறேன் :)

இரசிகை said...

kavithaikalum pinnoottangalum arumai.....

காமராஜ் said...

அன்பின் பாரா..
எல்லாக்கவிதைகளுமே சுருக் ரகமென்றாலும்.வலி கவிதை அக்மார்க், ’பாரா’ பிராண்ட்.
கவிதைகளையும் இந்த பின்னூட்டக்களத்தில் இன்னும் அழகாக பேசப்படும் பாசமொழிகளையும் பார்த்துக்கொண்டே வாழலாம்.

ஸ்ரீ said...

அருமை அருமை.

Sai Ram said...

நல்லாயிருக்கு!

உயிரோடை said...

நல்லா இருக்கு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//(பிரசுரத்திற்கு மறுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டு, 'என்னமா வூடு கட்டுறான்' எனக் கேட்பார்கள் நண்பர்கள் சுகுணாவும், கதிர்பாரதியும்...)//
ஹா ஹா ஹா.....
எப்படி இருக்கீங்க ?

வானம்பாடிகள் said...

நான் மட்டும் மாத்திச் சொல்லவா போறேன்:)). பிகிலடிச்சா பாந்தமா இருக்காதில்லையா?.

பா.ராஜாராம் said...

நன்றி செந்தில்! :-)

நேசா, நன்றி! :-)

சகா, நன்றி!

நன்றி பங்கு!

சித்ரா, நன்றி!

நன்றி தேவா!

நல்லாருக்கேன் ராகவன். நீங்க? நிறைய வாசிக்க விட்டுக் கிடக்கு. வரணும். நன்றி ராகவன்!

சுசி மக்கா, நன்றி!

மருமகள்ஸ், நன்றி!

நன்றிடா சாரல்!

மணிஜி, உதை படவா. நன்றிஜி!

நன்றி சுந்தர்ஜி! :-)

நன்றிடா சக்தி!

இரா மாப்ஸ், நன்றி!

பாலாசி மாப்ஸ், மிக்க நன்றி!

நானும் வணங்குகிறேன் சேது. நன்றியும்!

பா.ராஜாராம் said...

நவனி, நன்றி!

நன்றி தென்றல்சரவணன்!

நன்றி மஹிக்கா!

நன்றிண்ணே! //குப்பைத் தொட்டிக்குள் கழிக்கப்பட்டுக் கிடக்கிற காலண்டர்த் தாள்க் கடவுளைக் கேட்கிறேன்// சந்தோசம், துக்கம், இருப்பு, இல்லாமை எல்லாம் ஒன்றா ரா.சு அண்ணன்?

நன்றி ரத்னவேல் சார்!

ஹேமா, நன்றிடா!

அசோக், நன்றி மகன்ஸ்!

நேசா, :-)

சி.பி, நன்றி!

நன்றி அக்பர்ஜி!

நன்றி ரசிகை!

காமு மக்கா, நன்றி!

நன்றி ஸ்ரீ!

நன்றிங்க சாய்ராம்!

லாவன்ஸ், நன்றிடா!

நல்லாருக்கேன் ஜெஸ் மக்கா! நலமா? நன்றியும்!

பாலாண்ணா, நன்றி!