சித்ராகபே வாசலில் வைத்துதான்
தனலச்சுமி சின்னம்மையை பார்த்தேன்.
ஆளே அடையாளம் தெரியவில்லையாம் நான்.
குழந்தைகள் ஆகிவிட்டது கேட்டு அப்படி ஒரு
சிரிப்பு சிரித்தாள்.....
அம்மாவை கேட்டாள்,
அக்கா, தங்கைகளை கேட்டாள்,
வியப்பு ஏற்படுத்தவோ
வேறு எதற்காகவோ
அப்பாவை கேட்கவில்லை.
நான்தான்,
"அப்பா உங்களை ரொம்ப கேட்டுக்கொண்டே
இருந்தார் சித்தி" என்றேன்.
"ஆகட்டும்" என்றாள் மென் சிரிப்பின் ஊடே....
சரிதானே...
தனலச்சுமி சின்னம்மைக்கு மேலா
அப்பாவை எனக்கு தெரிந்துவிட போகிறது?....
(கணையாழில் பிரசுரமான எனது படைப்பு, வருடம் நினைவில் இல்லை)
11 comments:
//"ஆகட்டும்" என்றாள் மென் சிரிப்பின் ஊடே....
சரிதானே...
அப்பாவை எனக்கு தெரிந்துவிட போகிறது?....//
சொல்ல வந்தது புரிகிறது !
:(
மைத்துனனை மகனாகப் பார்க்க வேண்டும் என்று பெண்களுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் ஆண்கள் ?
vithiyaasamaana karu.thotaratum unkal kaviyhaikal
திரு கோவி.கண்ணன் சார்,
எனது கவிதையில் ஒரு வரி தவறி விட்டது.
சரிதானே...
தனலச்சுமி சின்னம்மைக்கு மேலா
அப்பாவை எனக்கு தெரிந்துவிட போகிறது?...
இந்தக் கவிதையைப் படித்த ஞாபகமிருக்கிறது. நல்லா இருக்கு மக்கா!
this one is a real beauty!!!
நிறைய கவிதைகள் நீ முன்பே
வாசித்ததுதான் சுந்தரா,"நுரையற்ற 90 மில்லிக்கான
காசிருந்தது"கவிதையை உன் பதிவில் பார்த்தபிறகுதான்
எனக்கு நினைவு வந்தது.அந்த வரி மட்டும்.பிரசுரமான இன்னும் சில
கவிதைகள் கூட,நினைவிற்கு வரவில்லை.15 வருசத்திற்கு பிறகு நீ
கிடைத்தது போல் எப்பவாவது கிடைக்கலாம்.கிடைக்காமலும் போகலாம்.
திரும்ப கிடைக்காத எவ்வளோவோ உன்னதங்களும் இருக்கு தானே....
நன்றி சுந்தரா!
நன்றியும் அன்பும் நிறைய கார்த்தி!
ஐயோ!
என்னால முடியல சார்....
-ப்ரியமுடன்
சேரல்
பெயர் தெரியாத சின்னம்மைகள் பலருண்டு நம்மூர்களில்......
இதே கருவில் ஒரு சிறுகதை படித்த ஞாபகம்..நல்லாயிருக்கு..
மிகுந்த அன்ம்பும் நன்றியும்..
சேரல்.
துபாய் ராஜா.
தண்டோரா.
Post a Comment