Tuesday, June 16, 2009

ஞாபகங்கள்

(கல்கியில் பிரசுரமான எனது படைப்பு)




ல்லாம் நாம் மறந்திருப்போம்...

ரு நாள்
உன் தலையில் இருந்த
ரோஜாவை பிடுங்கி
தெருவில் எறிந்தேன்.
நீ அழுது புரண்டாய்.
உன் அம்மாவும் என் அம்மாவும்
அடித்து கொண்டார்கள்.
தெரு ரெண்டுபட்டது.

ல்லாம் நாம் மறந்திருப்போம்...

பிறகொரு நாள்
என் தோட்டத்தில் மலர்ந்த
ரோஜாவை பிடுங்கி
உன் கூந்தலில் சூட்டினேன்.
நீ அழவுமில்லை புரளவுமில்லை.
ஆனாலும்
உன் அப்பாவும்
என் அப்பாவும்
அடித்து கொண்டார்கள்.
தெரு ரெண்டுபட்டது.

ல்லாம் நாம் மறந்திருப்போம்...

நேற்று
என் மகள் வந்து
அழுது புரண்டாள்
உன் மகன் ரோஜாவை
பிடுங்கி தெருவில்
எறிந்ததற்காக.
என் மனைவியும்
உன் கணவனும்
அடித்து கொண்டார்கள்.
தெரு ரெண்டு பட்டது.

நீயும் நானும்
விட்டேத்தியாய் வேடிக்கை
மட்டுமே பார்த்தோம்.

நாம் என்ன
எல்லாமுமா மறந்துவிட்டோம்?...

10 comments:

அண்ணாதுரை சிவசாமி said...

வித்யாசமான கற்பனை.வித்யாசமான நடை.மென்மேலும்
வளர வாழ்த்துக்கள்.

maha said...

chae.......... chae......na murakkettathanama love panna matten....annanna love panna mudiyathulla pa!!!???

தெய்வா said...

ரகசிய நினைவுகள்....
பழைய நிகழ்வுகள்....
மீண்டும் நிழற்படமாய்...
நெஞ்சிலாடும் ஊஞ்சல் கனவுகள்...

பா.ராஜாராம் said...

இங்கு வேறு அப்பா,
வேறு மகள்டா மஹா,
குழந்தைகளுக்கு தன் பால்ய
சிநேதிதம் சொல்ல தவறியிருக்கிறான்,
அல்லது இருக்கிறாள் என ஒரு பொருளும் இருக்கிறது..
(சுந்தரா...மகள்கள் வந்து மறுமொழி இடுகிறார்கள்...கவனம்!)
அன்பு நிறைய மகாம்மா...

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றிடா
தெய்வா பயலே..

Anonymous said...

@பா.ராஜாராம் said...
///(சுந்தரா...மகள்கள் வந்து மறுமொழி இடுகிறார்கள்...கவனம்!)///

நல்ல உள்குத்து ... :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

என்ன சொல்ல? அபாரம்!

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

என்ன சொல்ல... நன்றி சேரல்.

ஹேமா said...

ராஜா,சில தலைமுறைப் பழக்க வழக்கங்களை எப்படி விடமுடியும்-மறக்கமுடியும் !
அப்பிடித்தானே கவிதை?

பா.ராஜாராம் said...

ஹேமா
=======

பழைய கவிதைகளையும் தேடி...பின்னூட்டம் இடும் அன்பு நெகிழ்துகிறது ஹேமா,மிகுந்த அன்பும் நன்றியும்.