Thursday, June 25, 2009

தொட்டிலில் இட்டு உயிரை கிள்ளிய உனக்கு...



காதலுக்கு
அர்த்தம் கேட்டார்
கடவுள்.
என்னை காட்டினேன்.
காரணம் கேட்டார்
உன்னை காட்டினேன்.

நீ அழகாய்
இருக்கிற ரகசியம்
கண்கள்ள்ள்ள்ள்...
சம்பந்தபட்டதன்று
வெறும்
கண்கள்
சம்பந்தப்பட்டது.

ழ்ந்து சுவாசி
உணர முடியும்
முற்பிறவியில்
நீ வாழை மரம்.
நான் பக்ககன்று.

நீ விரும்பி
விளையாடும் பொம்மை
என்பதால்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
என்னை.

னைவி குழந்தைகள்
தூங்கிய பின்பு
விழித்து கொள்வேன்.
கணவன் குழந்தைகள்
தூங்கிய பின்பு
விழித்து கொள்வாய்
சொல்...
பாவமில்லையா
இது மட்டும்?...

நீ நடந்த
தடங்களின்
அடியில்தான்
கிடக்கிறது
நம் மணல்.
மணல் என்றால் மணல்.
மனசென்றால் மனசு.

ன் தூக்கத்தை
திறக்கும் சாவியும்
திறக்காத சாமர்த்தியமும்
உன்னிடமிருந்தது.

காலாகாலத்திற்கும்
சொல்லி சிரிக்கும்தானே
ஆமையின் தூக்கமின்மையை
முயல்கள்.

கும்மிருட்டின் மின்மினி
ஓவியம் நீ.
தூக்கணாங்கூட்டின்
குஞ்சு பறவை நான்.
இணைக்காது போனதேடி
இயற்கை.

ன்னை தேடி அடைய
எனக்கு பிடிக்கிறது.
என்னை தொலைத்து விளையாட
உனக்கு பிடிக்கிறது.

ட்களற்ற திருவிழாவில்
தொலைத்தாய் என்னை
அழுது புலம்புவது
தொலைந்தற்க்கன்று
நீ தேட மறந்தது கண்டு.

னை போன்றே
செய் நேர்த்தியாக
இருந்தது.
என் நெஞ்சு குழியில்
நீ பாய்ச்சிய
நெளி கத்தியின்
கூர்மை.

ன் பிரசவ
வேதனை
எனக்கு என்
கவிதைகள்.

ன் மகனுக்காக
வேண்டுகிறேன்
அவனாவது
கவிதை
கிறுக்காதிருக்கட்டும்.

டைசியின்
முதல் புள்ளியை
தயவுகூர்ந்து
கடைசியாக வை.

12 comments:

மயாதி said...

கடைசியின்
முதல் புள்ளியை
தயவுகூர்ந்து
கடைசியாக வை.
//

ஏதோ வித்யாசமா இருக்கு..

மயாதி said...

வாழ்த்துக்கள்..

பா.ராஜாராம் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி “மயாதி”

Anonymous said...

arumaiya irukku... aana kadhal tholviyai eluthaathingalen pls!! :-))

கவிதாசிவகுமார் said...
This comment has been removed by the author.
கவிதாசிவகுமார் said...

ராஜா சித்தப்பா கவிதைகள் அத்தனையும் அருமையாக இருக்கிறது.விரைவில் அனைத்து கவிதைகளையும் ஒரு புத்தக வெளியீடாக வெளியிட வேண்டுகிறோம்.வாழ்த்துக்கள்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Superb. I enjoyed every line. I am following your blog from today.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த இல...வருகைக்கும் மறுமொழிக்கும் அன்பு நிறைய!காதல் தோல்வியை சேர்த்துதான் காதல்!எழுத,எழுத ...வலி குறைகிறது....

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றி ஜெஸ்...எனக்கும் உங்கள் தளத்தை பின்பற்ற,தொடர..விருப்பம்.இப்பவே நண்பர் ரமேஷை படுத்திகொண்டிருகிறேன்.நானாக கற்றுக்கொள்ளும் வரையில் சற்று பொருத்து கொள்ளுங்கள்.பட்டாம் பூச்சியை நான் ரொம்ப விசாரித்ததாக சொல்லுங்கள்!

பா.ராஜாராம் said...

கவிது...இப்பதான் தொடங்கியிருக்கிறோம்.நிறைய வாசிக்கவும்,எழுதவும் பாக்கி இருக்கு.300 வருடம் வாழ ஆசை இருக்கு!காலம் அனுமதிக்காவிட்டால் என்ன...கவிதை அனுமதிக்கும் தானே..மெதுவாக செய்யலாம்!எனக்கும் சித்தப்பாவிற்கும் தொடர்ந்து,மறுமொழிகளை அனுப்பிவருகிராயே..
சமையல் செய்ய நேரம் வைத்திருக்கிறாய் தானே...

இரசிகை said...

yennanga.. naangallaam yezhutha vendaama?

intha podu potturukkeenga!!!!

aththanaiyum arumai...:)

பா.ராஜாராம் said...

நான் வேறு குஞ்சு..
நீங்கள் வேறு குஞ்சு...
பறவைக்கு எல்லாம்
ஒன்றுதான்!
இல்லையா ரசிகை?...