ஒரு சில மரங்கள்
மனிதர்களை போலவே இருக்கிறது.
ஒரு சில மனிதர்கள்
மரங்களை போலவே இருக்கிறார்கள்.
ஒரு சில மரங்கள்
இருக்கிறார்கள் எனவும்
ஒரு சில மனிதர்கள்
இருக்கிறது எனவும்
இருக்கும்படிதான்
இருந்தும் விடுகிறது.
**************
முடிவடையாத
வாசலில் இருந்து
பூசணி பூ
சொல்கிறது...
மார்கழி மாதத்தையும்
பூரணம் பெற்ற
ஒரு கோலத்தையும்.
**************
உடைத்தாய்.
செப்பனிட்டாய்.
செப்பனிட தெரிந்ததால்
உடைத்து விடுவாய்.
செப்பனிட விரும்பியும்
உடைக்க தொடங்குவாய்.
செப்பனிட்டு செப்பனிட்டு
உடைந்து விடுவாய்.
**************
சிட்டிகை காற்று
சிட்டிகை நீர்
சிட்டிகை ஜுவாலை
ஆகாயம் நிலம்
அற்று போகும்படி
தந்து பெருக்குகிறது
தந்த முத்தம்.
**************
28 comments:
ராஜாராம்,
கவிதைகள் அனைத்துமே நன்றாக இருக்கிறது. முதல் கவிதையில் திரும்பத்திரும்ப ‘ஒரு‘ என்று வருவது இடறலாகத் தெரிகிறது. மற்றபடி கவிதைக்கு அவசியமான வார்த்தைதான்.
3-வது கவிதையில் ‘செப்பணிட்டாய்‘ என்பதை என்பதையெல்லாம் ‘ணி‘ என்பதை எல்லா இடத்திலும் ‘னி‘ என்று மாற்றிவிடவும்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
முத்தம்,
ஒரு சிட்டிகை உயிரையும் தான்...
\\அற்று போகும்படி தந்து \\
அழகு..!
கவிதைகள்
கீழிருந்து மேலாக "போகம் - ரோகம் -யோகம் - ஞானம்"
என்று கண்ணதாசனின் தலைப்பு ஒட்டி இருக்கிறது..!
//சிட்டிகை காற்று
சிட்டிகை நீர்
சிட்டிகை ஜுவாலை
ஆகாயம் நிலம்
அற்று போகும்படி
தந்து பெருக்குகிறது
தந்த முத்தம்.//
கவிதையனைத்தும் அருமையாக இருக்கு. நண்பர் வாசு சொல்வதுபோல் முதல் கவிதையில் ஒரு வருவது நெருடல் தெரிகின்றது... மனம் இருந்தால் எடுத்துவிடலாம்
முதல் மற்றும் மூன்றாம் கவிதைகளை ஏற்கனவே படித்துள்ளேன் :)
நல்லாயிருக்கு ராஜாராம்.
கவிதைகள் அனைத்தும் அசத்தல் ரகம்.
வாழ்த்துக்கள் ராஜாராம்.
இரண்டாவது கவிதை வெகுவாக ரசித்தேன்.
கவிதை அத்தனையும் அழகு. படத்துக்குக் கவிதையா? அல்லது கவிதைக்குப் படம் தேடி எடுத்தீர்களா?
ஆகட்டும் வாசு அண்ணா...
கவிதைக்கான சூத்திரம் இன்னும் புலப்படவில்லை.
தோன்றுவதை எழுதி வருகிறேன்.சூத்திரம் புரிகிற வரையில்
எழுதுவதை எழுதிகொண்டிருக்கிறேன்.வர போக இருக்கும் போது,
சொல்லி தாருங்கள்.மற்றபடி நீங்கள் குறிபிட்ட"னி" மாற்றம் செய்திருக்கிறேன்.
வர போக இருக்க வேணும் வாசு அண்ணா..கேட்டிங்களா..
மிகுந்த அன்பும் நன்றியும் ஞானசேகரன்.!
வாசு அண்ணா,சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
"மற்றபடி கவிதைக்கு அவசியமான வார்த்தைதான் அது"
என்பதை,இப்போதைக்கு எடுத்து கொண்டேன்.மேலும்,
பட்டு திருந்தும் ரகம் நான்.மெல்ல,மெல்ல வரட்டுமா
நான் ஞானசேகரன்?..
ப்ரியங்கள் நிறைந்த சுந்தரா,
உன் ஞாபகம்,பிரமிபூட்டுகிறதுடா...
மனிதர்களில், இருந்து கவிதையின்
முதல் வரி,வரையில்...எப்படி நினைவில் கொள்கிறாய்
என்பது,பேராச்சரியம் எனக்கு!...("எனக்கிருப்பதே குருவி மண்டைதான்"...
நன்றி;நான் வளர்கிறேனே மம்மி...)ஒரு சமூக ஆய்வாளனை(மீண்டும்;நான் வளர்கிறேனே
மம்மி..)விட ஆக சிறந்த நண்பன்டா.அல்லது,மனிதன்டா நீ!
ஆகட்டும்,செய்யது.அன்பு நிறைய..
நான்,கவிதை மட்டும்தான் எழுதுகிறேன் ஜெஸ்..
மற்றதெல்லாம் கவனிக்க,அக்கறை கொண்ட,நண்பர்கள்
இருக்கிறார்கள்.படங்களை தேர்வு செய்து காட்டியபோதே,
கேட்டேன்,நீங்கள் கேட்ட அதே கேள்வியை.நண்பர்களை மீறி
செய்ய இயலாது இருக்கிறது.மற்றபடி எப்பவும் போலான அன்பும்
நன்றியும்...
ஆமாமா நேசா?..இது எதுவும் தெரியாமல் எழுதியதுதான்,
இப்பவரையில்,குண்டக்க மண்டக்கதான்.
நீங்கள் குறிப்பிட்ட,எதுவும்..வேண்டுமானால்
எனை அறியாது நிகழ்ந்திருக்கலாம்.
அன்பு நிறைய நேசா..
வடிவுபெற்ற சிற்பங்கள்போல சிறப்பான கவிதைகள்.அதற்கு மறுமொழிகளும் கவிதைகளாகவே! வாழ்த்துக்கள்.
கடைசி ரெண்டு கவிதைகள் பிடித்திருக்கிறது
டேய் கவிதுமா,
நீயும் எழுதவேணும் என,நண்பர் ரமேஷ்,
அபிப்ராய பட்டிருந்தார்,இ-மெயில் முகவரியை
சித்தப்பாவிற்கு தெரியப்படுத்து.மற்றபடி,
அன்பும்,நன்றியும்!
வீடு போயிருந்தேன் நந்தா,
திடீர் கவிதைகளிலும்,ஹய்க்கூவிலும்
உலுக்கி எடுக்கிறீர்கள்!
"பயந்து பறக்கும் குருவி
படமெடுக்கத்தான் அருகில் போகின்றேன்..."ஐ
கூடவே கூட்டி வந்துவிட்டேன்.இதற்க்கு
சுந்தராவின் பின்னோட்டம் வெகு அற்புதம்.
செப்பனிட்டு,செப்பனிட்டு உடைந்து விடுவாய்....
இதைத்தவிர மற்றவை சுமார்தான்....
nallaayirukku:)
நன்றியும் அன்பும் சித்தப்பா!...
நன்றி ரசிகை..
நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா...
கவிஞ வல்லுனர்கள்முன் நான் எழுதுவதா! இப்பொழுதுதான் பின்னூட்டம் எழுத ஆரம்பித்திருக்கிறேன். அமெரிக்கா வந்தபின் பக்கத்துவீட்டு பேச்சுத்துணை தோழியாக கம்ப்யூட்டர்தான் உதவிக் கொண்டிருக்கிறது.ஓய்வு நேரங்களில் சிறந்த கவிதைகளைப் படிக்கும் வாய்ப்புகிடைத்திருக்கிறது. தங்களின் வாஞ்சையான அன்பிற்கும், பரிவிற்கும் மிக்க நன்றி சித்தப்பா. ஈ-மெயில் முகவரியை தங்களின் ஈ-மெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளேன்.
கவிதும்மா,
என்ன பெரிய பெரிய வார்த்தை எல்லாம்...
கவிஞ வல்லுனர்கள் என்று யாரும் இல்லை.
அவரவர் உணர்வு.சொல்லுகிற தினுசுதான் வேறு.
முதலில் நிறைய வாசி.
தோணும் போது எழுத வா.ஆனால் வரணும்
கேட்டா மக்கா...
ரசித்தேன்.. வாழ்த்துக்கள்!
மிகுந்த அன்பும் நன்றியும் மதன்!..உங்கள் எழுத்தின் தீவிர வாசகன் நானும்.கவிதைகளும்...ஈஷ்வரோ ரக்ச்தும்,..குலுங்க செய்தது என்னை.வாழ்த்துக்களும் மதன்!
உங்கள் இலக்கிய அனுபவத்தின் முன் நான் மிகச்சிறியவன். சரியாக சொன்னால் குழந்தை. நீங்கள் என் வாசகன் என்று சொல்வது உங்கள் அன்பைக் காட்டுகிறது. மிக்க நன்றி.
அனுபவிக்க வேண்டும்...
ஆராயக்கூடாது!
எப்போதும், என்றென்றும்
உங்கள் கவிதைகளை!
நன்றி! பா.ரா!
முதல் கவிதை பிரமாதம்.அதிலும் கடைசி வரிகள் அற்புதம்.வாசு சார் சொன்னதைப்போல் அந்த 'ஒரு' என்கிற வார்த்தையை நீக்கி விட்டாலும் பொருள் மாறாமல் கவிதை அழகு.
Post a Comment